ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி வரவைப் பெறுவதற்கு உங்களுக்கான சரிபார்ப்புப் பட்டியல்

Last updated on August 3rd, 2017 at 06:42 pm

Language

 • English
 • Hindi
 • Marathi
 • Kannada
 • Telugu
 • Tamil
 • Gujarati

தற்போதைய வரிவிதிப்பு முறையில், உள்ளீட்டு வரி வரவைப் பெறுவதற்குப் பல்வேறு நிபந்தனைகள் பொருந்துகின்றன. அதற்கான சுருக்கமான ஒரு மேலோட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

உள்ளீட்டு வரி வரவு வகை உள்ளீட்டு வரி வரவு (ITC) பெறுவதற்கான நிபந்தனைகள்
வாட்( VAT) ஒரு வாட் ( VAT) முகவராக, ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, மறுவிற்பனை அல்லது சரக்குகளின் உற்பத்திக்காக வியாபாரத்தின் போது கொள்முதல் செய்யப்பட்ட சரக்குகள் மீது செலுத்தப்பட்ட வரியை வரவாகப் பெற இயலும். மா நிலத்திற்குள் உள்ள பதிவு செய்யப்பட்ட முகவர்களிடம் செய்யப்படும் கொள்முதல்கள் மட்டுமே உள்ளீட்டு வரி வரவுக்குத் தகுதி பெறும்.
சென்வாட்/சேவை வரி ஒரு உற்பத்தியாளராக, இறுதித் தயாரிப்பின் உற்பத்திக்காக நேரடியாகவோ, மறைமுகமாகவோ பயன்படுத்தப்பட்ட அனைத்து உள்ளீடுகள் தொடர்பான சென்வாட் முதலீட்டையும் நீங்கள் பெற இயலும். மேலும் எந்தவொரு உள்ளீட்டுச் சேவைக்காகச் செலுத்தப்பட்ட சேவை வரிக்கும் நீங்கள் உள்ளீட்டு வரி வரவு பெற இயலும்.நீங்கள் வரிவிதிக்கத்தக்க சேவை வழங்கும் சேவை வழங்குனராக இருப்பின், வரிவிதிக்கத்தக்க சேவைகளை வழங்கப் பயன்படுத்தப்பட்ட உள்ளீட்டுச் சேவைகளுக்காகச் செலுத்தப்பட்ட சேவை வரி மீது உள்ளீட்டு வரி வரவு பெற இயலும்.

ஜிஎஸ்டி வரி விதிப்புத் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட வரி விதிக்கத்தக்க நபர் ஒவ்வொரு நபரும் வியாபாரத்தின் போதோ, வியாபாரத்தைத் தொடர்ந்து செய்யவோ பயன்படுத்திய அல்லது பயன்படுத்த முனையும் அனைத்து உள்ளீடுகள் மீதும்உள்ளீட்டு வரி வரவைப் பெற இயலும்.

இது உண்மையில் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது. ஜிஎஸ்டி-ன் கீழ் உள்ளீட்டு வரி வரவைப் பெறப் பூர்த்தி செய்யப்படவேண்டிய நிபந்தனைகள் பின்வருமாறு:

 1. பதிவு செய்யப்பட்ட நபரால் வழங்கப்பட்ட டேக்ஸ் இன்வாய்ஸ்/டெபிட் அல்லது கிரெடிட் நோட்டை வைத்திருக்க வேண்டும்.
 2. சரக்கு/சேவைகள் பெறப்பட்டிருக்க வேண்டும்
 3. அந்த மாதத்துக்கான GSTR-3 தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
 4. வழங்குனரானவர் பணமாகவோ, உள்ளீட்டு வரி வரவைப் பயன்படுத்திக்கொள்வது மூலமோ விதிக்கப்பட்ட வரியை அரசாங்கத்துக்கு செலுத்தியிருக்க வேண்டும்.

Your Checklist for Availing GST Input Tax_Credit_Tamil

எந்தெந்தச் சூழ்நிலைகளில் நீங்கள் ஜிஎஸ்டி-ன் கீழ் உள்ளீட்டு வரி வரவைப் பெறத் தகுதியுள்ளவராக இருப்பீர்கள் என்பதை நாம் இப்பொழுது புரிந்துகொள்வோம்.

ஜிஎஸ்டி-ன் கீழ் உள்ளீட்டு வரவைப் பெறக்கூடிய சூழ்நிலைகள்

நீங்கள் ஜிஎஸ்டி-ன் கீழ் பதிவு செய்ய விண்ணப்பிக்கும்போது

நீங்கள் 2 சூழ்நிலைகளில் ஜிஎஸ்டி-ன் கீழ் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்:

 1. பதிவு செய்யவேண்டிய கடமை உங்களுக்கு இருக்கலாம்
  அல்லது
 2. நீங்களாக முன்வந்து பதிவு செய்யலாம்
 • பதிவு செய்யவேண்டிய கடமை உங்களுக்கு இருந்து, நீங்கள் ஜிஎஸ்டி-ல் பதிவு செய்ய விண்ணப்பிக்கும் போது

பதிவு செய்ய வேண்டிய கடமை உங்களுக்கு இருந்து,நீங்கள்ஜிஎஸ்டி-ல் பதிவு செய்ய விண்ணப்பிக்கும்போது, பின்வருவனவற்றைப் பெற்றிருந்தால் மட்டுமே, வரி செலுத்தும் பொறுப்பு உங்களுக்கு உண்டாகும் நாளுக்கு முந்தைய நாளன்று இருப்பில் உள்ள உற்பத்தி செய்து முடிக்கப்பட்ட சரக்குகள் அல்லது பகுதி உற்பத்தி நிறைவடைந்த சரக்குகள் மீது அல்லது உள்ளீடுகள் மீதான உள்ளீட்டு வரி வரவை நீங்கள் பெற இயலும்:

   • பதிவு செய்யும் பொறுப்பு உங்களுக்கு உண்டான தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் பதிவு செய்திருக்க வேண்டும் மற்றும்
   • பதிவு வழங்கப்பட்டிருக்க வேண்டும்

உதாரணம்: நீங்கள் ஒரு ஆடை உற்பத்தியாளர் மற்றும் 1 அக்டோபர் 2017 அன்று பதிவு செய்வதற்கான வரம்பு எல்லையைத் தாண்டிவிட்டீர்கள். அந்தத் தேதியன்று ரூ.5,00,000 மதிப்புடைய மூலப்பொருடகள் உங்களிடம் இருப்பில் உள்ளது, மேலும் அவற்றின் மீது @18 (ரூ.90,000) ஜிஎஸ்டி செலுத்தியுள்ளீர்கள். 1 அக்டோபர் 2017 முதல் 30 நாட்களுக்குள் நீங்கள் ஜிஎஸ்டி-க்கு விண்ணப்பிப்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லை எனில், இருப்பில் உள்ள மூலப்பொருட்கள் மீது உங்களுக்குத் தகுதியுடைய உள்ளீட்டு வரி வரவு ரூ.90,000-ஐ நீங்கள் இழந்துவிடுவீர்கள்.

 • நீங்களாக முன்வந்து பதிவு செய்யும்போது

பதிவு செய்வதற்கான வரம்பு எல்லையை நீங்கள் தாண்டவில்லை என்றபோதிலும், சட்டத்தின் பிரிவுகள் ‘தானாக முன்வந்து பதிவு’ செய்வதை அனுமதிக்கின்றன.நீங்களாக முன்வந்து <ahref=”http://blogs.tallysolutions.com/apply-new-gst-registration/” target=”_blank”>ஜிஎஸ்டி பதிவுக்கு விண்ணப்பம் , செய்தால் உங்களுக்குப் பதிவு வழங்கப்படும் நாளுக்கு முந்தைய நாளன்று இருப்பில் உள்ள முழுமையாக உற்பத்தி செய்து முடிக்கப்பட்ட சரக்குகள் அல்லது பகுதி உற்பத்தி நிறைவடைந்த சரக்குகள் மீது உள்ளீட்டு வரி வரவைப் பெற இயலும்.

உதாரணம்: நீங்கள் ஒரு மின்னணுப் பொருட்களின் வர்த்தகர், பதிவு செய்வதற்கான வரம்பு எல்லையை நீங்கள் தாண்டவில்லை என்றபோதிலும். உங்கள் தொழிற்செயல்பாடுகளின் காரணமாக நீங்களாக முன்வந்து பதிவுக்கு விண்ணப்பம் செய்கிறீர்கள். 10 செப்டம்பர் 2017 அன்று உங்களுக்கு பதிவு வழங்கப்பட்டு, இருப்பில் உள்ள ரூ.2,00,000 மதிப்புடைய மின்னணுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி@ 18% (ரூ.36,000) செலுத்தப்பட்டுள்ளது. இருப்பிலுள்ள மின்னணுப் பொருட்களுக்கான உள்ளீட்டு வரி வரவான ரூ.36,000-ஐ பெறலாம்.

நீங்கள் தொகுப்புத் திட்டத்திலிருந்து வெளியேறி, முறையான முகவர் ஆகும்போது

நீங்கள் தொகுப்புத் திட்டத்தின்கீழ் பதிவு செய்திருந்து, உங்களது மொத்த விற்றுமுதல் ரூ.50 இலட்சத்தைக் கடந்தால், நீங்கள் தொகுப்புத் திட்டத்திலிருந்து வெளியேறி முறையான முகவராக வேண்டும். நீங்கள் தொகுப்புத் திட்டத்திலிருந்து வெளியேறி முறையான முகவராகும்போது, உள்ளீடுகள், இருப்பிலுள்ள உற்பத்தி செய்து முடிக்கப்பட்ட சரக்குகள் அல்லது பகுதி உற்பத்தி நிறைவடைந்த சரக்குகள் மற்றூம் மூலதன சரக்குகள் ஆகியவற்றிலுள்ள உள்ளீடுஅக்ள் ஆகியவற்றின் மீதான உள்ளீடுகளை, வரி செலுத்தும் பொறுப்பு உங்களுக்கு உண்டாகும் நாளுக்கு முந்தைய நாளன்று உள்ளீட்டு வரி வரவைப் பெற இயலும். உள்ளீட்டு சரக்குகள் மீதான வரவு சதவீதப் புள்ளிகளால் குறைக்கப்படும், அது அறிவிக்கப்படும்.

உதாரணம்: நீங்கள் ஜிஎஸ்டி-ன் கீழ் ஒரு தொகுப்புத் திட்ட முகவராகப் பதிவு செய்யப்பட்டுள்ளீர்கள், இப்பொழுது உங்களது விற்றுமுதல் ரூ.50 இலட்சத்தைக் கடந்துள்ளது. எனவே, நீங்கள் தொகுப்புத் திட்டத்திலிருந்து வெளியேறி, முறையான முகவர் ஆகிறீர்கள். உங்களது விற்றுமுதல் 10 அக்டோபர் 2017 அன்று ரூ.50 இலட்சத்தைக் கடந்துள்ளது, மேலும் 9 அக்டோபர் 2017 அன்று உங்களது இருப்பு பின்வரும் உள்ளீடுகளைக் கொண்டுள்ளது-

உள்ளீடு வகைகள் மதிப்பு (ரூ.) @ 18%ல் செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி (ரூ.)
மூலப் பொருட்கள் 1,00,000 18,000
பகுதி நிறைவடைந்த சரக்குகளில் உள்ள உள்ளீடுகள் 50,000 9,000
நிறைவடைந்த சரக்குகளில் உள்ள உள்ளீடுகள் 1,50,000 27,000
செலுத்தப்பட்ட மொத்த உள்ளீட்டு வரி 54,000

நீங்கள் முழுமையான உள்ளீட்டு வரி வரவான ரூ.54,000 மற்றும் மூலதன சரக்குகள் மீதான உள்ளீட்டு வரி வரவைப் பெற இயலும் (அறிவிக்கப்பட்ட சதவீதப் புள்ளிகள் மூலம் குறைக்கப்பட்டது)

விலக்களிக்கப்பட்ட சரக்குகள் அல்லது சேவைகள் வரிவிதிக்கக்கூடியதாகும் சமயத்தில்

ஜிஎஸ்டி-லிருந்து விலக்களிக்கப்பட்ட சரக்குகள் அல்லது சேவைகள் வரிவிதிக்கக்கூடியதாகும் போது, அந்த வழங்கல் வரிவிதிக்கத்தக்கதாகும் நாளுக்கு முந்தைய நாள் பின்வருவனவற்றின் மீது உள்ளீட்டு வரி வரவைப் பெற இயலும்:

 • விலக்களிக்கப்பட்ட வழங்கலுடன் தொடர்புபடுத்தத்தக்க, இருப்பிலுள்ள உள்ளீடுகள் மற்றும் இருப்பில் உள்ள பகுதி நிறைவடைந்த அல்லது முழுமையாக நிறைவடைந்த சரக்குகளில் உள்ள உள்ளீடுகள்.
 • விலக்களிக்கப்பட்ட வழங்கலுக்காகவே தனிப்பட்ட முறையில் பயன்படுத்தப்பட்ட உள்ளீட்டுச் சரக்குகள். உள்ளீட்டுச் சரக்குகள் மீதான வரவு சதவீதப் புள்ளிகளால் குறைக்கப்படும், அது அறிவிக்கப்படும்.

உதாரணம்: நீங்கள் விலக்களிக்கப்பட்ட சரக்கு ஒன்றை உற்பத்தி செய்கிறீர்கள். விலக்களிக்கப்பட்ட இந்தச் சரக்கு 5 டிசம்பர் 2017 அன்று வரி விதிக்கக்தக்கது ஆகிறது. 4 டிசம்பர் 2017 அன்று உங்களிடம் பின்வரும் உள்ளீடுகள் (விலக்களிக்கப்பட்ட சரக்கை உற்பத்தி செய்யப் பயன்பட்டவை) உள்ளன-

இறுதி இருப்பு – 4.12.2017
உள்ளீடுகள் மதிப்பு (ரூ.) @ 18%ல் செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி (ரூ.)
மூலப்பொருள் அ 3,00,000 54,000
மூலப்பொருள் ஆ 30,000   5,400
மொத்தம் 3,30,000 59,400

விலக்களிக்கப்பட்டு, வரி விதிக்கத்தக்கதான சரக்கை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்பட்ட உள்ளீடுகள் மீதான முழுமையான உள்ளீட்டு வரி வரவான ரூ.59,400-ஐ நீங்கள் பெறமுடியும். விலக்களிக்கப்பட்ட வழங்கலுக்காகவே தனிப்பட்ட முறையில் பயன்படுத்தப்பட்ட உள்ளீட்டுச் சரக்குகள் மீதான உள்ளீட்டு வரி வரவைப் பெற இயலும், அது அறிவிக்கப்படவுள்ள உள்ளீட்டுச் சரக்குகள் மீதான வரவு சதவீதப் புள்ளிகளால் குறைக்கப்படும்.

வியாபாரத்தின் விற்பனை/ இணைப்பு/பிரிப்பு/ ஒன்று சேர்த்தல்/ குத்தகை/ மாற்றம் நிகழும் சமயத்தில்

மேற்காண் நிகழ்வுகள் எந்தவொன்றிலும், பொறுப்புகளை மாற்றுவதற்கான குறிப்பட்ட வசதி இருப்பின், பயன்படுத்தப்படாத உள்ளீட்டு வரி வரவானது விற்பனை/இணப்பு/ பிரிப்பு/ ஒன்று சேர்த்தல்/ குத்தகை/ மாற்றம் செய்யப்பட்ட நிறுவனத்திற்கு மாற்ற இயலும்.

உதாரணம்: மோகன் எலக்ட்ரிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட் தனது வியாபாரத்தை ராம் எலக்ட்ரிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு விற்றுவிட்டது. விற்பனையின்போது மோகன் எலக்ட்ரிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் உள்ளீட்டு வரி வரவான ரூ.2,50,000ஐ பயன்படுத்தாமல் வைத்திருந்தது. விற்பனை ஒப்பந்தத்தில் மோகன் எலக்ட்ரிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட்-ன் கடன்கள் மற்றும் சொத்துகள் அனைத்தும் ராம் எலக்ட்ரிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்குச் சென்றுவிடும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் மோகன் எலக்ட்ரிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பயன்படுத்தப்படாத உள்ளீட்டு வரி வரவான ரூ.2,50,000-ஐ ராம் எலக்ட்ரிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு மாற்ற இயலும்.

சரக்குகள் மற்றும்/அல்லது சேவைகள் பகுதியளவு வியாபாரத்துக்கும், பகுதியளவு பிற நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படும்போது

சரக்குகள் மற்றும்/அல்லது சேவைகள் பகுதியளவுக்கு வியாபாரத்துக்கும், பகுதியளவு பிற நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படும்போது வியாபார நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட பகுதிக்கு மட்டுமே உள்ளீட்டு வரி வரவைப் பெற இயலும்.

உதாரணம்: நீங்கள் மின்னணுப் பொருட்களின் முகவர், நீங்கள் தயாரிப்பாளர் ஒருவரிடமிருந்து ரூ.3,00,000க்கு கணினிகளைக் கொள்முதல் செய்தீர்கள், அதற்கான ஜிஎஸ்டி ரூ.54,000 செலுத்தப்பட்டுவிட்டது. கொள்முதல் செய்யப்பட்ட கணினியில் ரூ.1,00,000 மதிப்புள்ள கணினியை உங்களின் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. மீதமுள்ள கணினிகள் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் வியாபாரத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட பகுதிக்கு மட்டுமே, அதாவது ரூ.2,00,000க்கு மட்டும் உள்ளீட்டு வரி வரவு பெறப்பட இயலும். எனவே, இங்கு தகுதியுடைய உள்ளீட்டு வரி வரவு என்பது ரூ.36,000 (2,00,000*18%) ஆகும்.

சரக்குகள் மற்றும்/அல்லது சேவைகள் பகுதியளவுக்கு வரிவிதிக்கத்தக்க வழங்கல்களுக்கும், பகுதியளவு வரிவிலக்கு பெற்ற வழங்கல்களுக்கும் பயன்படுத்தப்படும் போது

சரக்குகள் மற்றும்/அல்லது சேவைகள் பகுதியளவுக்கு வரிவிதிக்கத்தக்க வழங்கல்களுக்கும் பகுதியளவு வரிவிலக்கு பெற்ற வழங்கல்களுக்கும் பயன்படுத்தப்படும்போது, வரிவிதிக்கத்தக்க வழங்கல்கள் மற்றும் பூச்சியம் மதிப்பிடப்பட்ட வழங்கல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட பகுதிக்கு மட்டுமே உள்ளீட்டு வரி வரவைப் பெற இயலும். வரிவிலக்கு பெற்ற வழங்கல்களைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட பகுதிக்கும், தலைகீழ் கட்டண அடிப்படையில், பெறுபவர் வரி செலுத்தும் வழங்கல்களுக்கு உள்ளீட்டு வரி வரவு அனுமதிக்கப்படாது.

உதாரணம்: நீங்கள் ஒரு உற்பத்தியாளர். நீங்கள் ரூ.1,00,000 மதிப்புடைய மூலப் பொருட்களைக் கொள்முதல் செய்தீர்கள், அதற்கு ஜிஎஸ்டி ரூ.18,000 (@18%) செலுத்தப்பட்டது. இந்த மூலப் பொருட்களின் ஒரு பகுதி, வரி விதிக்கத்தக்க பொருள் அ உற்பத்தி செய்யவும், மற்றொரு பகுதி வரி விலக்களிக்கப்பட்ட பொருள் ஆ உற்பத்தி செய்யவும் பயன்பட்டது. அதன் விவரங்கள் பின்வருமாறு காட்டப்பட்டுள்ளது-

உள்ளீடு மதிப்பு (ரூ.) பொருள் அ உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்பட்ட பகுதி (வரி விதிக்கத்தக்கது)ரூ பொருள் ஆ உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்பட்ட பகுதி (வரி விலக்களிக்கப்பட்டது) (ரூ.) உள்ளீடு மீது செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி (ரூ.) பொருள் அ உற்பத்திக்காகப் பயன்படுத்தப்பட்ட பகுதியின் அளவுக்காகச் செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி (வரி விதிக்கத்தக்கது) (ரூ.) பொருள் ஆ உற்பத்திக்காகப் பயன்படுத்தப்பட்ட பகுதியின் அளவுக்காகச் செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி (வரி விதிக்கத்தக்கது) (ரூ.)
மூலப்பொருள் 1,00,000 60,000 40,000 18,000 10,800 7,200

வரிவிதிக்கத்தக்க பொருள் அ உற்பத்திக்காகப் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களின் பகுதிக்கு நீங்கள் ரூ.10,800 உள்ளீட்டு வரி வரவு பெற இயலும். வரி விலக்களிக்கப்பட்ட பொருள் ஆ உற்பத்திக்காகப் பயன்படுத்தப்பட்ட மூலப் பொருட்களின் பகுதிக்கான உள்ளீட்டு வரி வரவு ரூ.7,200ஐ நீங்கள் பெற இயலாது, ஏனெனில் பொருள் ஆ வரி விலக்களிக்கப்பட்டது.

விதிவிலக்கான சூழ்நிலைகள்

விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு உள்ளீட்டு வரி வரவைப் பெறக்கூடிய சில விதிவிலக்கான சூழ்நிலைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

சரக்குகள் பெட்டகங்களாகவோ, தவணைகளாகவோ பெறப்படும்போது

சரக்குகள் பெட்டகங்களாகவோ, தவணைகளாகவோ பெறப்படும்போது கடைசிப் பெட்டகம் அல்லது தவணை பெறப்படும்போது மட்டுமே உள்ளீட்டு வரி வரவைப் பெற இயலும்.

உதாரணம்:நீங்கள் ஒரு மொபைல் போன் டீலராக இருக்கிறீர்கள். 01 ஆகஸ்டு 2017 அன்று தயாரிப்பாளர் ஒருவரிடமிருந்து ஒவ்வொன்றும் ரூ.5,000 மதிப்புடைய 50 மொபைல் போன்களைக் கொள்முதல் செய்கிறீர்கள். அடுத்துவரும் இரண்டு மாதங்களிலும் 1ம் தேதியன்று 25 மொபைல் போன்களாக இரண்டு பொதிகளில் அனுப்பப்படும் என ஒப்புக்கொள்ளப்படுகிறது. உங்களது உள்வரும் பொருட்களுக்கான பதிவேடு கீழே காட்டியுள்ளது போல் இருக்கிறது-

உள்வரும் பொருட்களுக்கான பதிவேடு

தேதி சரக்குகளின் விவரம் எண்ணிக்கை விலை மொத்தம் சிஜிஎஸ்டி எஸ்ஜிஎஸ்டி

எஸ்ஜிஎஸ்டி

விலை தொகை விலை தொகை விலை தொகை
01 செப்-17 மொபைல் போன்கள் 50 5,000 2,50,000 9% 22,500 9% 22,500  –  –
 01 அக்;-17 மொபைல் போன்கள்  50  5,000  2,50,000  9% 22,500 9% 22,500  –  –
மொத்தம் 100 5,00,000 45,000 45,000  –

இங்கு மொபைல் போன்களின் ஒரு பகுதியானது 01-செப்டம்பர் 2017 அன்று பெறப்பட்டாலும், 01-அக்டோபர் 2017 அன்று கடைசிப் பெட்டகம் பெறப்பட்டால் மட்டுமே உள்ளீட்டு வரி வரவான ரூ.90,000-ஐ பெற இயலும்.

பைப் லைன்கள் மற்றும் தொலைத் தொடர்பு கோபுரங்கள் மீதான உள்ளீட்டு வரி வரவு

பைப் லைன்கள் மற்றும் தொலைத் தொடர்பு கோபுரங்கள் மீதான உள்ளீட்டு வரி வரவைப் பின்வரும் முறையில் பெற இயலும்:

வருடம் பெறவேண்டிய அதிகபட்ச உள்ளீட்டு வரி வரவு
பைப் லைன்கள் மற்று/அல்லது தொலைத் தொடர்பு கோபுரம் பெறப்பட்ட நிதியாண்டு செலுத்தப்பட்ட மொத்த உள்ளீட்டு வரியின் 1/3 பகுதி
அடுத்து வரும் ஆண்டு மொத்த உள்ளீட்டு வரியின் 2/3 பகுதி, சென்ற வருடத்தில் பெறப்பட்ட வரவையும் சேர்த்து
அடுத்து வரும் ஏதாவது நிதியாண்டு மீதமுள்ள உள்ளீட்டு வரி

உதாரணம்: ஏபிசி டெலிகாம் பிரைவேட் லிமிடெட் ரூ.30 இலட்சங்கள் மதிப்புள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தை ஏப்ரல் 2017ல் கொள்முதல் செய்கிறது. கோபுரம் மீதான உள்ளீட்டு வரி வரவை அவர்கள் பின்வரும் முறையில் பெற இயலும்:

வருடம் பெறவேண்டிய அதிகபட்ச உள்ளீட்டு வரி வரவு
2017 10 இலட்சங்கள்
2018 10 இலட்சங்கள்
2019 10 இலட்சங்கள்

இந்தக் கட்டுரையில் எந்தெந்தச் சூழ்நிலைகளில் உள்ளீட்டு வரி வரவைப் பெற இயலுமோ, இந்தச் சூழ்நிலைகள் ஒவ்வொன்றுக்கும் பொருந்தக்கூடிய நிபந்தனைகள் குறித்து அறிந்தோம். நமது அடுத்த வலைப்பூவில், உள்ளீட்டு வரி வரவைப் பெற இயலாத சூழ்நிலைகள் குறித்து நாம் காண்போம்.

விரைவில் வருகிறது:

உள்ளீட்டு வரி வரவுக்கான உரிமையின்மை

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

About the author

Pugal T & Anisha K Jose

76 Comments

© Tally Solutions Pvt. Ltd. All rights reserved - 2017