ஜிஎஸ்டி-யின்படி பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?

Last updated on April 24th, 2017 at 05:19 pm

Language

 • English
 • Hindi
 • Marathi
 • Kannada
 • Telugu
 • Tamil
 • Gujarati
ஒரு பொருளாதாரத்தில் நுகரப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பானது சில அளவீடுகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இந்தியாவில் உள்ள தற்போதைய வரிவிதிப்பு முறையில், இந்த மதிப்பானது வெவ்வேறு வழிகளில் கணக்கிடப்படுகிறது. ஒரு கண்ணோட்டமானது கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது:
வரி பொருட்கள்/ சேவைகளின் மதிப்பு
கலால் பரிவர்த்தனை மதிப்பு அல்லது பொருட்களின் அளவு அல்லது எம்.ஆர்.பி-யின் அடிப்படையில்
வாட் விற்பனை மதிப்பின் அடிப்படையில்
சேவை வரி அளிக்கப்பட்ட சேவையின் வரிவிதிக்கத்தக்க மதிப்பின் அடிப்படையில்

பொருட்கள் மற்றும் சேவைகளை மதிப்பிடுதல்

தற்போதைய வரிவிதிப்பு முறை

தற்போதைய வரிவிதிப்பு முறையில், பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை ஒரு உதாரணத்துடன் பார்க்கலாம்:
சூப்பர் கார்ஸ் லிமிடெட் என்கிற ஒரு கார் உற்பத்தி நிறுவனமானது, உதிரி பாகங்களை அவர்களின் டீலரான ரவீந்த்ரா ஆட்டோமொபைல்ஸ்க்கு ரூ.6000-க்கு விற்கிறார்கள். உதிரி பாகங்களின் எம்.ஆர்.பி ரூ.10,000 ஆகும். ரவீந்த்ரா ஆட்டோமொபைல்ஸ்க்கு கொடுக்கப்பட்ட விலைப்பட்டியலானது கீழே காட்டப்பட்டுள்ளது:
Value of goods and services for tax

ஜி.எஸ்.டி ஆட்சியின் கீழ்

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில், பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு கணக்கிடப்படும் முறையைக் காண, நாம் மேற்கண்ட அதே உதாரணத்தையே பார்க்கலாம்:
GST Value Calculation
*Assuming GST of 18% on automobile spare parts

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில், பொருட்கள் மற்றும்/அல்லது சேவைகளின் மதிப்பானது அதன் பரிவர்த்தனை மதிப்பாகும்,அதாவது செலுத்தப்பட்ட/ செலுத்தப்பட வேண்டிய விலையாகும். இந்த உதாரணத்தில் அது ரூ.6000 ஆகும்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் – கூடுதல் கட்டணங்கள் மற்றும் செலவுகள்

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில், தள்ளுபடி, பேக்கிங் கட்டணங்கள் போன்ற கூடுதல் கட்டணங்கள் மற்றும் செலவுகள் எவ்வாறு கணக்கில் கொள்ளப்படுகின்றன? அவை பரிவர்த்தனை மதிப்பில் சேர்க்கப்படுமா அல்லது விலக்கப்படுமா?
நாம் இந்த விளக்கத்தைப் பார்க்கலாம்.
சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனமானது, ரவீந்த்ரா ஆட்டோமொபைல்ஸ்க்கு ரூ.4,00,000 மதிப்புள்ள காரை விற்கிறார்கள்.

 • அவர்களுக்கு கார் மீது பேக்கிங் கட்டணமாக ரூ.5000 செலவாகிறது
 • தீபாவளி திட்டத்தின் ஒரு பகுதியாக, அவர்கள் விலையில் 1% தள்ளுபடி வழங்குகிறார்கள்
 • ரவீந்த்ரா ஆட்டோமொபைல்ஸ் நிறுவனமானது அந்த மாதத்தின் 31-ஆம் தேதிக்குள் நெட் பேங்கிங் மூலமாக பணம் செலுத்தினால் மேலும் 0.5% தள்ளுபடி அளிப்பதாக சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனம் ஒப்புக்கொள்கிறது. ரவீந்த்ரா ஆட்டோமொபைல்ஸ் நிறுவனமானது அந்த மாதத்தின் 31-ஆம் தேதிக்குள் நெட் பேங்கிங் மூலமாக பணம் செலுத்திவிடுகிறது.

ஜிஎஸ்டி-யின்படி ரவீந்த்ரா ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட விலைப்பட்டியல் பின்வருமாறு இருக்கும்:
discounts in GST
*Assuming GST of 18% on car

விலைப்பட்டியலில்,

 • பேக்கிங் கட்டணமான ரூ.5,000 பரிவர்த்தனை மதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. பொருட்கள் அல்லது சேவைகள் வழங்குவதற்கு முன்னர் அல்லது வழங்கும் நேரத்தில் வசூலிக்கப்படும் பேக்கிங் கட்டணம் அல்லது ஏதாவது இடைச் செலவுகள் ஆகியவை பரிவர்த்தனை மதிப்பில் சேர்க்கப்பட வேண்டும்.
 • 1% தள்ளுபடியானது பரிவர்த்தனை மதிப்பில் இருந்து கழிக்கப்படும். வழங்குவதற்கு முன்னர் அல்லது வழங்கும் நேரத்தில் அளிக்கப்பட்ட தள்ளுபடியை, விலைப்பட்டியலில் பதிவுசெய்து, பரிவர்த்தனை மதிப்பில் இருந்து கழித்துக்கொள்ளலாம்.
 • • 0.5% தள்ளுபடியானது விலைப்பட்டியலில் கழிக்கப்படவில்லை. 0.5% தள்ளுபடியானது பொருளை வழங்கிய பிறகு அளிக்கப்பட்டதால், அது விலைப்பட்டியலில் காண்பிக்கப்படாது. எனினும், பொருள் வழங்கும்பொழுதே தள்ளுபடி தெரிந்திருந்தால், குறிப்பிட்ட விலைப்பட்டியலில் அதை இணைக்க முடியும். அந்த தள்ளுபடி தொகையை பரிவர்த்தனை மதிப்பில் இருந்து கழித்துக்கொள்ளலாம். இந்த உதாரணத்தில், சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனமானது, ரவீந்த்ரா ஆட்டோமொபைல்ஸ்க்கு ரூ.2,360-க்கு (ரூ.4,00,000-ல் 0.5% = Rs 2,000+ ஜிஎஸ்டி@ 18% on Rs 2,000 = Rs 360)ஒரு கிரெடிட் குறிப்பை வழங்கும். இந்தத் தொகையை உரிய வரி விலைப்பட்டியலில் இணைக்க வேண்டும்.
  பொருள் வழங்கும் முன்னர் அல்லது வழங்கும் நேரத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டு, பொருள் வழங்கிய பின்னர் அளிக்கப்பட்ட தள்ளுபடியை, உரிய விலைப்பட்டியலில் குறிப்பாக இணைத்து, பரிவர்த்தனை மதிப்பில் இருந்து கழித்துக்கொள்ளலாம்.

இந்த விதிக்கான விலக்குகள் என்ன?

விடை: பொருள் வழங்கிய பின்னர் அளிக்கப்பட்ட தள்ளுபடி, மற்றும் பொருளை வழங்கும் நேரத்தில் தெரியாத தள்ளுபடி.
இதை ஒரு விளக்கத்துடன் நாம் புரிந்துகொள்ளலாம்.
சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனமானது, ரவீந்த்ரா ஆட்டோமொபைல்ஸ்க்கு ரூ.4,00,000-க்கு ஒரு காரை விற்கிறார்கள். நிலையான ஒப்பந்த்த்தின்படி, பணம் செலுத்துவதற்கு 30 நாட்கள் என்ற கிரெடிட் காலம் அனுமதிக்கப்படுகிறது. எனினும், கடுமையான பணப் பற்றாக்குறை காரணமாக, சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனமானது, 2 நாட்களில் பணம் செலுத்துமாறு ரவீந்த்ரா ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்திடம் தெரிவிக்கிறது. 2 நாட்களில் அவ்வாறு பணம் செலுத்தினால், 2% தள்ளுபடி அளிப்பதாகவும் உறுதியளிக்கிறது. ரவீந்த்ரா ஆட்டோமொபைல்ஸ் நிறுவனமானது 2 நாட்களில் பணம் செலுத்துகிறது.
இந்த சூழலில், பொருள் வழங்கப்படும்பொழுது தள்ளுபடி எவ்வளவு என்று தெரியவில்லை என்பதால், ஜிஎஸ்டி கணக்கீட்டுக்காக பரிவர்த்தனை மதிப்பில் இருந்து கழித்து இதை கிளைம் செய்ய முடியாது.
பரிவர்த்தனை மதிப்பில் தள்ளுபடியின் விளைவு பற்றிய ஒரு சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது-

தள்ளுபடியின் வகை பரிவர்த்தனை மதிப்பில் தாக்கம்
வழங்குவதற்கு முன்னர் அல்லது வழங்கும் நேரத்தில் தள்ளுபடி அளிக்கப்பட்டிருந்தால் மற்றும் விலைப்பட்டியலில் பதிவுசெய்திருந்தால் பரிவர்த்தனை மதிப்பில் இருந்து கழித்துக்கொள்ள முடியும்
பொருள் வழங்கும் முன்னர் அல்லது வழங்கும் நேரத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டு, பொருள் வழங்கிய பின்னர் தள்ளுபடி அளிக்கப்பட்டிருந்தால் மற்றும் உரிய விலைப்பட்டியலில் குறிப்பாக இணைக்க முடிந்தால் பரிவர்த்தனை மதிப்பில் இருந்து கழித்துக்கொள்ள முடியும்
பொருளை வழங்கும் நேரத்தில் எவ்வளவு என தெரியாமல், பொருள் வழங்கிய பின்னர் தள்ளுபடி அளிக்கப்பட்டிருந்தால் பரிவர்த்தனை மதிப்பில் இருந்து கழித்துக்கொள்ள முடியாது

 

பரிவர்த்தனை மதிப்பில் வழங்கப்படும் பொருளின் பல்வேறு கட்டணங்கள்/ செலவுகளின் தாக்கம் கீழே காட்டப்பட்டுள்ளன-

பொருள் வழங்கல் தொடர்புடைய கட்டணங்கள்/ செலவுகள் பரிவர்த்தனை மதிப்பில் தாக்கம்
கமிஷன் மற்றும் பேக்கிங் போன்ற இடைச்செலவுகள் பரிவர்த்தனை மதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது
தாமதமாக பணம் செலுத்தியதற்காக சப்ளையரால் வசூலிக்கப்படும் வட்டி/தாமதக்கட்டணம்/அபராதம் பரிவர்த்தனை மதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது
மத்திய மற்றும் மாநில அரசால் வழங்கப்படுபவை தவிர பிற மானியங்கள் பரிவர்த்தனை மதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது
ஜிஎஸ்டி தவிர பிற வரி பரிவர்த்தனை மதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது
சப்ளையரால் செலுத்தப்பட வேண்டிய, ஆனால் வாங்குபவர் செலுத்திய ஏதாவது தொகை பரிவர்த்தனை மதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது

ஜிஎஸ்டி (பொருட்கள் மற்றும் சேவைகள் வரி) என்பது வரி விதிப்பு சூழலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரி முறை எளிதாக்கப்பட்டிருப்பதால், பொருட்களுக்கு விலை நிர்ணயித்தல், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு மதிப்பிடுதல் போன்ற பல்வேறு அம்சங்களானது குறிப்பிடத்தக்க மாறுதலை எதிர்கொள்ளும்.
 

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

About the author

Pugal T & Anisha K Jose

111 Comments

© Tally Solutions Pvt. Ltd. All rights reserved - 2017