Language

  • English
  • Hindi
  • Marathi
  • Kannada
  • Telugu
  • Tamil
  • Gujarati

இந்த இடுகையானது சமீபத்திய மாற்றங்களைச் சேர்ப்பதற்காக அக்டோபர் 21, 2016 அன்று மேம்படுத்தப்பட்டுள்ளது.

சங்கிலி தொடர் (பொருட்கள் உற்பத்தியாவதில் இருந்து அது நுகரப்படும்வரை) முழுவதும் மற்றும் நாடு முழுவதும், உள்ளீட்டு வரி வரவயை (Input Tax Credit) இடைவெளி இல்லாமல் பாயச் செய்வது என்பது ஜிஎஸ்டி-யின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாகும். இந்தப் பகுதியில், பொருட்கள் அல்லது சேவைகள் வழங்கல்மீது ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி வரவு பெறுவதற்கு சட்டத்தால் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு நிபந்தனைகள் பற்றி விவாதிக்கலாம்.

ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி வரவயை பெறுவதற்கு பின்வரும் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்திசெய்ய வேண்டும்:
• ஜிஎஸ்டி சட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ள ஒரு சப்ளையரால் வழங்கப்பட்ட வரி விலைப்பட்டியல் (Tax Invoice) / பற்று அல்லது வரவுக் குறிப்பு / (Debit or Credit Note) துணை விலைப்பட்டியல் (Supplementary Invoice) ஆகியவற்றை ஒரு டீலர் வைத்திருக்க வேண்டும்.
• கூறப்பட்டுள்ள பொருட்கள் அல்லது சேவைகள் பெறப்பட்டுறுக்வேன்டும்.
• படிவம் (ஜிஎஸ்டிஆர்-3) தாக்கல் செய்யப்பட்டுக்வேன்டும்.
• வசூலிக்கப்பட்ட வரியானது சப்ளையரால் அரசுக்கு செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

இந்த விதிமுறைகள் எதைக் குறிக்கியது?

படிவம் ஜிஎஸ்டிஆர் -1 (பொருட்கள் வெளிசெல்லும் விவரங்கள்) சப்ளையரால் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, தானியங்கி-பொது படிவமான ஜிஎஸ்டிஆர்-2ஏ (பொருட்கள் உள்வரும் விவரங்கள்) மூலமாக கொள்முதல் குறித்து வாங்குபவர் பார்வையிடலாம். தேவையான மாறுதல்களை செய்தபிறகு, ஜிஎஸ்டிஆர்-2ஏ சேர்க்கைகள் மற்றும் ஏற்புகள் (ஏதாவது இருந்தால்), உள்ளீட்டு வரி வரவனாது பெறுபவரின் மின்னணு கடன் பேரேட்டில் தற்காலிக அடிப்படையில் வரவு வைக்கப்படும்.

பெறுபவரால் படிவம் ஜிஎஸ்டிஆர்-2-ல் மேற்கொள்ளப்படும் சேர்க்கைகள் மற்றும் திருத்தங்களானது, சப்ளையரின் ஒப்புதலுக்காக ஜிஎஸ்டிஆர்-1ஏ-ல் கிடைக்கச் செய்யப்படும்.

மாதாந்திர விவர அறிக்கை (Monthly Return) (படிவம் ஜிஎஸ்டிஆர் -3) மற்றும் வரி கட்டிய விவரத்தையும் சேர்த்து சப்ளையர் தாக்கல் செய்தால் மட்டுமே, உள்ளீட்டு வரி வரவு கிடைக்கும். உள்ளீட்டு வரி வரவு இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது தொடர்பாக படிவம் ஜிஎஸ்டி மீஐஸ்-1 (GST MIS-1) மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்.

இதை ஒரு உதாரணத்துடன் நாம் புரிந்துகொள்ளலாம்

சூப்பர் கார்ஸ் லிமிடெட் என்ற கார்கள் உற்பத்தியாளர், 30 டன்கள் இரும்புகளை ரத்னா ஸ்டீல்ஸில் இருந்து வாங்குகிறார். ரத்னா ஸ்டீல்ஸ் இரும்புகளை விநியோகித்து, ஏப்ரல் 5 அன்று 2,40,000 எனும் ஜிஎஸ்டி தொகையுடன் வரி விலைப்பட்டியலை வழங்கியது (Tax Invoice).

இந்த உதாரணம் மூலமாக, கிடைக்கும் உள்ளீட்டு வரி வரவு பாய்வதைப் புரிந்துகொள்ள நடைமுறையை நாம் ஆய்வு செய்யலாம்.

குறிப்புகள்
ஜிஎஸ்டிஆர்-1: அடுத்த மாதம் 10ஆம் தேதியில் அல்லது அதற்கு முன்னர், பொருட்கள் வெளிசெல்வது குறித்த அனைத்து விவரங்களையும் தருதல்.
ஜிஎஸ்டிஆர் -2ஏ: அடுத்த மாதத்தின் 11ஆம் தேதியன்று சிஸ்டத்தால் தானாக உருவாக்கப்படும். இதில் உள்வரும் பொருட்கள் குறித்த அனைத்து விவரங்களும் உள்ளடங்கும்.
ஜிஎஸ்டிஆர் -3: அடுத்த மாதத்தின் 20ஆம் தேதியன்று சிஸ்டத்தால் தானாக உருவாக்கப்படும் மாதாந்திர விவர அறிக்கை (Return).

மேலும் பல கட்டுரைகள் விரைவில் வரவிருக்கிறது:
• விவர அறிக்கை (Return) பதிவேற்றம் செய்தல்
• உள்ளீட்டு வரி வரவு திருப்புதல் (reversal) மற்றும் மறு-கிளைம் (re-claim) செய்தல்

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6