தற்போதைய மறைமுக வரி விதிப்பு முறையில், வரி விதிக்கத்தக்க நபர்களின் சார்பாக தாக்கல் செய்ய கணக்கியல் மற்றும் வரி விதிப்பு நிபுணர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பட்டயக் கணக்காளர்கள் (சிஏ), விற்பனை வரி பயிற்சியாளர்கள் (எஸ்டிபி) மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் இந்தப் பணியைச் செய்கிறார்கள். வரி செலுத்துபவர் மற்றும் தாக்கலை தயார் செய்பவர் ஆகியோரிடையிலான இந்தத் தொடர்பை முறைப்படுத்தி வரி செலுத்துபவர், தாக்கலை தயார் செய்பவர் மற்றும் ஜிஎஸ்டிஎன் ஆகியோர் இடையிலான மும்முனைத் தொடர்பை வெளிப்படையானதாக்க மாதிரி ஜிஎஸ்டி சட்ட வரைவு முனைகிறது.

ஜிஎஸ்டி-ன் கீழ் வரி தாக்கல் தயார் செய்வது யார் என்பதை நாம் புரிந்துகொள்வோம்.

வரி தாக்கல் தயார் செய்பவர் என்பவர், வரி விதிக்கத்தக்க நபரின் சார்பாக, பின்வரும் செயல்களில் ஏதாவது அல்லது அனைத்தையும் மேற்கொள்ள மைய அல்லது மாநில அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டவர்:

 • புதிதாகப் பதிவு செய்ய விண்ணப்பித்தல்
 • பதிவில் திருத்தம் செய்ய அல்லது பதிவை இரத்து செய்ய விண்ணப்பித்தல்
 • வெளிச்செல்லும் மற்றும் உள்வரும் வழங்கல்களின் விவரங்களை அளித்தல்
 • மாதாந்திர, காலாண்டு, வருடாந்திர அல்லது இறுதியான ஜிஎஸ்டி தாக்கல் செய்தல்
 • மின்னணு பணப் பேரேட்டில் பற்றுக்காகக் கட்டணம் செலுத்தல் அதாவது, வரி, வட்டி, அபராதம், கட்டணம் அல்லது வேறு ஏதாவது தொகைக்கான கட்டணங்கள்
 • பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையைத் தாக்கல் செய்தல்
 • Represent the taxable person in any proceeding under the Act, other than inspection, search, seizure and arrest
 • முதல் மேல் முறையீட்டு ஆணையத்திடம் முறையீடு தாக்கல் செய்தல்
 • மேல் முறையீட்டு தீர்ப்பாயத்திடம் முறையீடு தாக்கல் செய்தல் (சிஏ/சிஎஸ்/ ஐசிடபிள்யுஏ /வழக்கறிஞர் ஆகியோரால் மட்டுமே செய்ய இயலும்)

யார் வரி தாக்கல் தயார் செய்பவர் ஆகலாம்?

ஒருவர் பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் அவர் ஜிஎஸ்டி-ன் கீழ் வரி தாக்கல் தயாரிப்பவர் ஆக இயலும்:

 1. இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்
 2. தெளிவான சிந்தனை உடையவராக இருக்க வேண்டும்
 3. திவாலானவராக அறிவிக்கப்பட்டிருக்கக் கூடாது
 4. குற்றத்திற்காகத் தண்டனை வழங்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கும் அதிகமான சிறைத் தண்டனை பெற்றிருக்கக்கூடாது
 5. கீழே வழங்கப்பட்டுள்ள கல்வித் தகுதி அல்லது பணி அனுபவத்தைப் பெற்றிருக்க வேண்டும்:
ஏதாவது ஒரு மாநில அரசின் வணிக வரித்துறையில் அல்லது மத்திய கலால் மற்றும் சுங்கத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரியாக, இரண்டு வருடங்களுக்குக் குறைவில்லாத காலத்திற்கு குரூப்-பி அரசிதழ் பதிவுபெற்ற அலுவலர் தகுதிக்குக் குறையாத பணியிடத்தில் பணியாற்றியிருக்க வேண்டும்
அல்லது
பின்வருவனவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
அ. பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு அல்லது அதற்கு இணையான தேர்வு, தற்போதைக்கு அமுலில் உள்ள ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஏதாவது ஒரு இந்தியப் பல்கலைக்கழகத்திடமிருந்து பெறப்பட்ட வணிகவியல், சட்டம், மேல்நிலை கணக்குத் தணிக்கை உள்ளிட்ட வங்கிப் பணி, அல்லது வணிக நிர்வாகம் அல்லது வணிக மேலாண்மை ஆகியவற்றில் ஒரு பட்டம்
அல்லது
ஆ. மேலே கூறப்பட்ட பட்டத் தேர்வுக்கு இணையானது என ஏதாவது ஒரு இந்தியப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது வெளிநாட்டு பல்கலைக்கழகத்தின் பட்டத்தேர்வு
அல்லது
இ. இந்த நோக்கத்துக்காக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட வேறு ஏதாவது தேர்வு
அல்லது
ஈ. ஏதாவது இந்தியப் பல்கலைக்கழகம் அல்லது பட்டத் தேர்வுக்கு இணையான தேர்வு என ஏதாவது இந்தியப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தின் பட்டத் தேர்வு, மேலும் பின்வரும் தேர்வுகள் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்-

 • இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் இறுதித் தேர்வு அல்லது
 • இந்திய செலவு மற்றும் பணிகள் கணக்காளர்கள் நிறுவனத்தின் இறுதித் தேர்வு அல்லது
 • இந்திய நிறுவனச் செயலாளர்கள் கல்வி நிறுவனத்தின் இறுதித் தேர்வு

வரி தாக்கல் தயாரிப்பவர் தொடர்பான படிவங்கள்

படிவம் GST PCT-1வரி தாக்கல் தயார் செய்பவராகப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம்
படிவம் GST PCT-2வரி தாக்கல் தயார் செய்பவராகப் பதிவு செய்ததற்கான சான்றிதழ், அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்டது
படிவம் GST PCT-3பதிவு செய்வதற்கான விண்ணப்பம் குறித்த கூடுதல் தகவல்கள் கோரும் அறிவிக்கை அல்லது தவறான நடத்தைக்காக விளக்கம் கேட்டு வரி தாக்கல் தயார் செய்பவருக்கு வழங்கப்பட்ட குறிப்பாணை
படிவம் GST PCT-4பதிவு செய்வதற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான அல்லது தவறான நடத்தைக்காக குற்றவாளியாக அறியப்பட்ட வரி தாக்கல் தயார் செய்பவரின் தகுதி நீக்க ஆணை
படிவம் GST PCT -5பொதுவான போர்ட்டலில் பராமரிக்கப்படும் பதிவு செய்யப்பட்ட வரி தாக்கல் தயார் செய்பவர்களின் பட்டியல்
படிவம் GST PCT-6பொதுவான போர்ட்டலில் வரி தாக்கல் தயார் செய்பவருக்கு வரி விதிக்கத்தக்க நபரின் அங்கீகாரம்
படிவம் GST PCT-7வரி தாக்கல் தயார் செய்பவருக்கு வரி விதிக்கத்தக்க நபரின் அங்கீகாரத்தைத் திரும்பப் பெறுதல்

வரி தாக்கல் தயார் செய்பவர் வரி தாக்கல் செய்தல்

வரி விதிக்கத்தக்க நபர் ஜிஎஸ்டி தாக்கல் செய்ய வரி தாக்கல் தயார் செய்பவருக்கு; அங்கீகாரம் வழங்கலாம். அங்கீகாரம் வழங்கியவுடன் வரி தாக்கல் தயார் செய்பவர் அறிக்கையைத் தயார் செய்து வழங்குகிறார், அதை வரி விதிக்கத்தக்க நபர் உறுதிப்படுத்த வேண்டும்.

இதற்கான செயல்முறை கீழே காட்டப்பட்டுள்ளது-

GST Practiotioner
At any time, a taxable person can withdraw the authorisation given to a GST practitioner using Form GST PCT -7.

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

190,702 total views, 120 views today