சரக்கு மற்றும் சேவை வழங்கல்: இதன் பொருள் என்ன?

Last updated on July 17th, 2017 at 12:19 am

Language

 • English
 • Hindi
 • Marathi
 • Kannada
 • Telugu
 • Tamil
 • Gujarati

தற்போதைய மறைமுக வரி விதிப்பு அமைப்பின் கீழ், ஒவ்வொரு வகையான வரிக்கும் விதிக்கும் நிகழ்வு மாறுகிறது. தற்போதைய மறைமுக வரி விதிப்பு அமைப்பின்கீழ், வரி விதிப்பு நிகழ்வானது பின்வருமாறு உள்ளது:

வரியின் வகை வரி விதிப்பு முறை
மத்திய கலால் வரி வரி விதிக்கக்கூடிய சரக்குகளை அகற்றல்
வாட் சரக்குகளின் விற்பனையின் போது
சேவை வரி வரி விதிக்கக்கூடிய சேவைகளை வழங்குதல்

ஜிஎஸ்டி-ன் கீழ் வரி விதிக்கும் நிகழ்வானது சரக்கு மற்றும்/சேவை வழங்கல் ஆகும்.மத்தியக் கலால் வரி, சேவை வரி மற்றும் வாட்/சிஎஸ்டி போன்ற வரிகள் அனைத்தும் ஜிஎஸ்டி-ன் கீழ் வகைப்படுத்தப்படும், மேலும் சரக்கு விற்பனை மற்றும் சேவைகள் வழங்கல் போன்ற கருத்துகள் இனிமேலும் பொருந்தாது.

இவ்வாறு ஒவ்வொரு தொழிலுக்கும், வழங்கலின் தொடர்பைப் புரிந்துகொள்வது மிக முக்கியமாகும், அது ஜிஎஸ்டி விதிக்கத்தக்க பரிவர்த்தனைகளுக்கான நோக்கத்தை அமைக்கும்.

ஜிஎஸ்டி-ன் கீழ் வழங்கலுக்கான தொடர்பு

’வழங்கல்’ என்னும் சொல்லானது தொழிலை அபிவிருத்தி செய்யும் சமயத்தில் சலுகையாக வழங்கப்பட்ட அல்லது வழங்கப்பட வேண்டிய சரக்குகள் அல்லது சேவைகளின் அனைத்து வடிவங்களையும் உள்ளடக்கும்

இருப்பினும், சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில வகை வழங்கல்கள் உள்ளன, அவை சலுகையாகக் கருதப்படாமல் வழங்கலாகக் கருதப்பட வேண்டும்.

வழங்கல்களின் பல்வேறு வகைகளைப் பின்வருமாறு வகைப்படுத்திப் புரிந்துகொள்வோம்;

 • தொழிலின்போதோ, அபிவிருத்தி செய்யும் சமயத்திலோ சலுகையாக வழங்கப்பட்ட வழங்கல்கள்
 • சலுகையின்றி வழங்கப்பட்ட வழங்கல்கள்
 • தொழிலின்போதோ, அபிவிருத்தி செய்யும் சமயத்திலோ அல்லது பிற சமயத்திலோ சலுகையாக வழங்கப்பட்ட வழங்கல்கள்

Sதொழிலின்போதோ, அபிவிருத்தியின் போதோ சலுகையாக வழங்கப்பட்ட வழங்கல்கள்

Supply of Goods and Services_Tamil

பின்வருவன சலுகையுடன் கூடிய வழங்கலாகக் கருதப்படும்:

Sale ஏதாவது சரக்குகள் அல்லது சேவைகளின் விற்பனை, அது சரக்குகளாக இருப்பின் பெயர் மாற்றத்தையும், சேவைகளாக இருந்தால் பயன்படுத்துவதற்கான உரிமையின் மாற்றத்தையும் உண்டாக்கும்.
Transfer கிளைகளுக்கு இடையிலான இடமாற்றம் வழங்கலின் ஒரு பகுதியாகவும், வரி விதிக்கக்கூடியதாகவும் இருக்கும். இருப்பினும், கிளைகளுக்கு இடையிலான இடமாற்றத்துக்கு செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி வரவாக முழுமையாகக் கிடைக்கும்.
 Barter ஒரு சலுகையானது பணத்துக்குப் பதிலாக சரக்குகளாக வழங்கபடும்போது. எடுத்துக்காட்டாக: விற்பனையாளர் சரக்குகளை வழங்கியுள்ளார், வாங்குபவர் கட்டணத்தின் அளவுக்கு ஏற்ப சரக்குகளை வழங்குகிறார், அல்லது ஒரு பொருளுக்கு மாற்றாக மற்றொரு பொருள் வழங்கப்படும் சமயத்தில்.
 License பயன்பாட்டுக்கான உரிமம் வழங்குவது வழங்கலின் ஒரு பகுதியாகும். உதாரணத்துக்கு: ஆன்லைன் சந்தா செலுத்தல்
 Rental சொத்து ஒன்றை முழுமையாக அல்லது ஒரு பகுதியை வாடகைக்கு விடுதல் ஜிஎஸ்டி-ன் கீழ் ஒரு வழங்கல் ஆகும்
 Lease கட்டடம் அல்லது சொத்து ஒன்றை குத்தகைக்கு விடுதல் ஜிஎஸ்டி-ன் கீழ் ஒரு வழங்கல் ஆகும்
 Disposal தொழில் ரீதியான சொத்துகளை அகற்றுதல் வழங்கலின் ஒரு பகுதியாகும்

வழங்கலாகக் கருதப்பட்டு, ஜிஎஸ்டி விதிக்கப்படத் தேவைப்படும் விதிவிலக்கான சூழ்நிலைகள் குறித்த நமது அடுத்த வலைப்பூக்களுக்குக் காத்திருக்கவும்.

விரைவில் வருகிறது:

 1. சலுகை இல்லாத வழங்கல்
 2. சலுகையுடன் கூடிய வழங்கல், தொழிலின் போது அல்லது அபிவிருத்தியின் போது இருந்தாலும், இல்லாவிட்டாலும்

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

About the author

Pugal T & Yarab A

24 Comments

© Tally Solutions Pvt. Ltd. All rights reserved - 2017