Language

  • English
  • Hindi
  • Marathi
  • Kannada
  • Telugu
  • Tamil
  • Gujarati

தற்போதைய மறைமுக வரி அமைப்பு முறையில், ஒரு குறிப்பிட்ட புள்ளியில், உள்ளீட்டு வரி வரவு (Input Tax Credit) சங்கிலியானது உடைந்துவிட்டது. மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகத்திற்கு பொருந்தும் மத்திய விற்பனை வரியானது (CST) வரவுக்குறியது அல்ல, இதனால் உள்ளீட்டு வரி வரவு சங்கிலி உடைவதற்கு வழிவகுக்கிறது. இதேபோல், ஒரு டீலரிடம் விற்பனை செய்யும் பொருளுக்கு ஒரு உற்பத்தியாளரால் விதிக்கப்படும் சுங்கவரியானது சங்கிலியை உடைக்கச் செய்கிறது.  இதனால் தயாரிப்பு செலவின் ஒரு பகுதியாக வரிகள் உருவாக வழிவகுக்கிறது.

2005-ஆம் ஆண்டில், அடுக்குவீழ்ச்சி பாதிப்பை (வரி மீது வரி) சரிசெய்ய வேண்டும் என்ற இதே நோக்கத்திற்காக மதிப்புக் கூட்டு வரி (VAT) அறிமுகப்படுத்தப்பட்டது. அதை நீக்குவதற்காக மதிப்புக் கூட்டு வரி வடிவமைக்கப்பட்டது எனில், அது ஜிஎஸ்டி-(GST) யில் இருந்து எவ்வாறு வேறுபட்டது?

ஆம், மாநிலத்தின் மறைமுக வரியில் உள்ள அடுக்குவீழ்ச்சி வரி பாதிப்பை, மதிப்புக் கூட்டு வரி (VAT) நீக்கியது, ஆனால் பிற மறைமுக வரிகளின் அடுக்குவீழ்ச்சி பாதிப்பு இன்னும் அப்படியே உள்ளன. ஜிஎஸ்டி என்பது வரி வரவயை (Tax credit) இசைவாகப் பாய அனுமதிக்கிறது. மேலும், உற்பத்தியாளர்களில் இருந்து சில்லறை விற்பனையாளர்கள் வரை, மாநில எல்லைகளைக் கடந்து, விநியோக சங்கிலியில் உள்ள அனைத்து மறைமுக வரிகளின் அடுக்குவீழ்ச்சி பாதிப்பையும் நீக்குகிறது.

வரி மீதான வரியை நீக்குவது குறித்து புரிந்துகொள்ள, இப்பொழுது காரை ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டு நாம் ஆராயலாம். கார் என்பது தற்போதுள்ள காலத்தில் மற்றும் ஜிஎஸ்டி காலத்தில் ஒட்டுமொத்த வரிவிகிதமாக @22% கொண்டுள்ள ஒரு பொருளாகக் கருதப்படுகிறது.

5,280-ஐ சேமிப்பது உங்கள் கண்கவரும் வகையில் இருக்கும்! அப்படியா? இது குறித்து ஆராய்வோம்.

உதாரணத்தில், நீங்கள் நெருக்கமாக கண்காணித்தால், டீலரால் (சிஜிஎஸ்டி + எஸ்ஜிஎஸ்டி) (CGST+SGST) உற்பத்தியாளருக்கு செலுத்தப்படும் வரிகளானது விலையில் சேர்க்கப்படவில்லை. ஏனெனில், சிஜிஎஸ்டி + எஸ்ஜிஎஸ்டி வரியைப் பெற்று செலுத்துவது டீலரின் பொறுப்பு என்று ஜிஎஸ்டி கூறுகிறது. உற்பத்தியாளரிடம் இருந்து டீலருக்கு இசைவான கிரெடிட்டை அனுமதித்து, அடுக்குவீழ்ச்சி விளைவை நீக்கும், இது ஜிஎஸ்டி-யின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாகும்.

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6