Language

  • English
  • Hindi
  • Marathi
  • Kannada
  • Telugu
  • Tamil
  • Gujarati

வரி விதிப்பிற்கு பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு நபரும் வெளி விநியோக விவரங்களை GSTR-1 (GST returns-1) படிவத்தில் அடுத்து வரும் மாதம் 10-ம் நாளுக்குள் அளித்தல் வேண்டும். 11-ம் நாள், உள் விநியோக விவரங்களின் தெரிவு நிலை GSTR-2A சுய விரிவாக்கத்தில் பெறுபவருக்கு கிடைக்கப்பெறும். 11-ம் நாளிலிருந்து 15-ம் நாள் வரை படிவம் GSTR-2A -ல் திருத்தங்கள் செய்ய அனுமதிக்கப்படும். (சேர்க்கை, மாற்றங்கள் மற்றும் நீக்கம்); மற்றும் அடுத்த மாதம் 15 –ம் நாள் படிவம் GSTR-2 –ல் சமர்ப்பிக்க அனுமதிக்கப்படும். படிவம் GSTR-2 –ல் பெறுபவரால் ஏற்படுத்தப்பட்ட இந்த மாற்றங்கள் (சேர்க்கை, மாற்றங்கள் மற்றும் நீக்கம்), விநியோகிஸ்தருக்கு படிவம் GSTR-1A –ல் கிடைக்கப்பெறும். பெறுபவரால் ஏற்படுத்தப்பட்ட இந்த மாற்றங்களை, விநியோகிஸ்தர் ஏற்றுக்கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ வேண்டும். விநியோகிஸ்தரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கேற்றவாறு படிவம் GSTR-1 திருத்தம் செய்யப்படும்.

20-ம் நாள், சமப்பிக்க வேண்டிய கட்டணத்துடன் கூடிய சுய விரிவாக்க தாக்கல் படிவம் GSTR-3 கிடைக்கப்பெறும். படிவம் GSTR-3 மாதாந்திர வரித்தாக்கல் இறுதி நாளுக்குப்பிறகு, உள் பெறப்பட்ட சரக்குகளும், விநியோகிஸ்தரால் அனுப்பப்பட்ட சரக்குகளும் ஒப்பிடப்பட்டு, பின்னர், இறுதி உள்ளீடு வரிக்கடன் ஒப்புகை, படிவம் GST MIS-1 மூலம் தெரிவிக்கப்படும்.

மேலும், அதிகப்படியான கோரிக்கை அல்லது இரண்டாம் முறை கோரிக்கையினால் ஏற்படும் பொருந்தாத உள்ளீடு வரிக்கடன், படிவம் GST MIS-1 மூலம் தெரிவிக்கப்படும். இருப்பினும், குறிப்பிட்ட காலவரையறுக்குள், அது ஏற்றுக்கொள்ளப்படுமெனில், பெறுபவர், அந்த வெளியீடு வரி குறைப்பிற்கு அனுமதிக்கப்படுவார்.

சரக்கு மற்றும் சேவை வரி தாக்கல் செய்வது குறித்த புரிதலை ஒரு உதாரணத்துடன் நாம் காண்போம்.

Process of uploading GSt Returns

 

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6