ஜிஎஸ்டி முறையில் வரி பொறுப்புத்தன்மைக்கு எதிராக உள்ளீட்டு வரி கிரெடிட்டை அமைப்பது எப்படி [வீடியோ]

Last updated on July 17th, 2017 at 12:13 am

Language

  • English
  • Hindi
  • Marathi
  • Kannada
  • Telugu
  • Tamil
  • Gujarati

முந்தைய இடுகையில், நாங்கள் உள்ளீட்டு வரி கிரெடிட்டை (ஐடீசி) அறிமுகப்படுத்தினோம்.
ஜிஎஸ்டி முறையில் உங்களின் வரி பொறுப்புத்தன்மைக்கு எதிராக உங்களின் உள்ளீட்டு வரி கிரெடிட்டை அமைப்பது எப்படி என்று நாம் புரிந்துகொள்ளலாம்.
ஜிஎஸ்டி என்பது ஒரு இரட்டைக் கருத்து முறை ஆகும். ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் (ஒரு மாநிலத்திற்குள்), மத்திய ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி) மற்றும் மாநில ஜிஎஸ்டி (எஸ்ஜிஎஸ்டி) ஆகியவற்றின் கூறு இருக்கும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) என்பது மாநிலங்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகளுக்கானது ஆகும். எனவே, சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்டபடியான வரிசையில், இந்த ஒவ்வொரு கூறுகளுக்கும் எதிராக உள்ளீட்டு கிரெடிட்டை அமைப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியமாகும்.
ககிரெடிட் அமைக்கப்பட (ஸெட் ஆஃப்) வேண்டிய வரிசையானது கீழுள்ள அட்டவணையில் விளக்கப்பட்டுள்ளது:

உள்ளீட்டு வரி கிரெடிட் பொறுப்புக்கு எதிராக அமைக்கப்படுவது
சிஜிஎஸ்டி (மத்திய ஜிஎஸ்டி) சிஜிஎஸ்டி மற்றும் ஐஜிஎஸ்டி (அந்த வரிசையில்)
எஸ்ஜிஎஸ்டி (மாநில ஜிஎஸ்டி) எஸ்ஜிஎஸ்டி மற்றும் ஐஜிஎஸ்டி (அந்த வரிசையில்)
ஐஜிஎஸ்டி (ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி) ஐஜிஎஸ்டி, சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி (அந்த வரிசையில்)

 

இது எவ்வாறு வேலை செய்கிறது என்பதை ஒரு உதாரணத்துடன் நாம் விவாதிக்கலாம்.

உதாரணம் 1 – சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டி ஐடீசி-ஐ எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?

சூப்பர் கார்ஸ் லிமிடெட் என்பது கர்நாடகாவில் உள்ள ஒரு கார் உற்பத்தியாளர் ஆகும். சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனம் மேற்கொண்ட பரிவர்த்தனையின் விவரங்களானது வரி கூறுகளுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

நிறுவனத்தின் பெயர் இலக்கு மாநிலம் பரிவர்த்தனை வகை பொருள் உள்ளீட்டு கிரெடிட் வரிப்

பொறுப்பு

சிஜிஎஸ்டி எஸ்ஜிஎஸ்டி சிஜிஎஸ்டி எஸ்ஜிஎஸ்டி
ரத்னா ஸ்டீல்ஸ் கர்நாடகா கொள்முதல் (உள்ளே வருதல்) இரும்பு 1,20,000 1,20,000
ரவீந்த்ரா ஆட்டோமொபைல்ஸ் கர்நாடகா விற்பனை (வெளியே செல்லுதல்) கார் 36,000 36,000
ரவீந்த்ரா ஆட்டோமொபைல்ஸ் கர்நாடகா விற்பனை (வெளியே செல்லுதல்) உதிரி பாகங்கள்  —  — 90,000 90,000

 

மாத இறுதியில், சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனமானது வரிப் பொறுப்புக்கு எதிராக கிடைக்கப்பெறும் உள்ளீட்டு கிரெடிட்டை சரிசெய்கிறது.

உதாரணத்தில், சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனமானது 12,000-ஐ வரி பொறுப்பாகக் கொண்டுள்ளது. இது எப்படி ஏற்படுகிறது என்பதை இங்கே காணலாம்:

  1. சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனமானது சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டி-க்கு எதிரான உள்ளீட்டு வரி கிரெடிட்டாக தலா 1,20,000-ஐ கொண்டுள்ளது.
  2. சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனமானது சிஜிஎஸ்டி பொறுப்பான 1,26,000 (36,000+90,000)-ஐ அமைக்க, சிஜிஎஸ்டி 1,20,000-ன் ஐடீசி-ஐ முதலில் பயன்படுத்தியது. இந்த சரிசெய்தலுக்குப் பிறகு, சிஜிஎஸ்டி பொறுப்பு என்பது 6,000 (1,26,000 – 1,20,000) ஆகும்.
  3. பின்னர், எஸ்ஜிஎஸ்டி-யின் உள்ளீட்டு கிரெடிட்டான 1,20,000 என்பது எஸ்ஜிஎஸ்டி பொறுப்பான 1,26,000 (36,000+90,000)-க்கு எதிராக அமைக்கப்படுகிறது. எஸ்ஜிஎஸ்டி-யின் உள்ளீட்டு கிரெடிட்டை அமைத்த பிறகு, 6,000 (1,26,000 – 1,20,000) என்பது எஸ்ஜிஎஸ்டி-யின் பொறுப்பாகும்.
  4. எஸ்ஜிஎஸ்டி மற்றும் சிஜிஎஸ்டி ஆகிய இரண்டின் கிடைக்கப்பெறும் உள்ளீட்டு கிரெடிட்டை அமைத்த பிறகு, சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கடன் பொறுப்பானது 12,000 (சிஜிஎஸ்டி பொறுப்பு 6,000 + எஸ்ஜிஎஸ்டி பொறுப்பு 6,000) ஆகும்.
  5. சிஜிஎஸ்டி-க்கான கடன் பொறுப்பை அமைத்த பிறகு, சிஜிஎஸ்டி-ன் உள்ளீடு கிரெடிட் மீதம் ஏதாவது இருந்தால், அதை எஸ்ஜிஎஸ்டி-க்கு எதிராக அமைக்க பயன்படுத்த முடியாது. சிஜிஎஸ்டி-யின் கீழ் உள்ள ஐடீசி மீதமானது (சிஜிஎஸ்டி பொறுப்பை அமைத்த பிறகு) அடுத்த காலத்திற்கு எடுத்து செல்லப்படும்.
  6. அதேபோல, எஸ்ஜிஎஸ்டி பொறுப்பை அமைத்த பிறகான எஸ்ஜிஎஸ்டி மீதமானது அடுத்த காலத்திற்கு எடுத்து செல்லப்படும்.

உதாரணம் 2 – ஐஜிஎஸ்டி ஐடீசி-ஐ எவ்வாறு பயன்படுத்த முடியும்?

சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மற்றொரு பரிவர்த்தனைகளின் தொகுப்பைப் பார்க்கவும்.

நிறுவனத்தின் பெயர் இலக்கு மாநிலம் பரிவர்த்தனை வகை பொருள் உள்ளீட்டு கிரெடிட் வரிப்

பொறுப்பு

சிஜிஎஸ்டி எஸ்ஜிஎஸ்டி ஐஜிஎஸ்டி சிஜிஎஸ்டி எஸ்ஜிஎஸ்டி ஐஜிஎஸ்டி
ஷைன் அலுமினியம் இண்டஸ்டிரீஸ் லிமிடெட். தமிழ்நாடு கொள்முதல் (உள்ளே வருதல்) அலுமினியம் பார்கள் 30,000  —
லக்ஷ்மி ரப்பர் இண்டஸ்டிரீஸ் லிமிடெட். தமிழ்நாடு கொள்முதல் (உள்ளே வருதல்) டயர்கள்  —  — 10,000  —  —  —
ஏ-1 ஸ்பேர்ஸ் மகாராஷ்டிரா விற்பனை (வெளியே செல்லுதல்) உதிரி பாகங்கள்  —  — 12,000
ஜான்சன் ஆட்டோ பார்ட்ஸ் கர்நாடகா விற்பனை (வெளியே செல்லுதல்) உதிரி பாகங்கள்     24,000     24,000

 

மாத இறுதியில், சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனமானது தங்களின் வரிப் பொறுப்பை அமைக்க ஐஜிஎஸ்டி உள்ளீட்டு வரி கிரெடிட்டை பயன்படுத்தியுள்ளது.

மேலே விளக்கப்பட்டுள்ளது போல்,

  1. சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனமானது ஐஜிஎஸ்டி உள்ளீட்டு வரி கிரெடிட்டாக 40,000 மற்றும் கடன் பொறுப்புகளாக ஐஜிஎஸ்டி 12,000, சிஜிஎஸ்டி 24,000 மற்றும் எஸ்ஜிஎஸ்டி 24,000 ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
  2. சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, ஐஜிஎஸ்டி வரிப் பொறுப்பை அமைக்க ஐஜிஎஸ்டி உள்ளீட்டு வரி கிரெடிட்டை பயன்படுத்த வேண்டும். மீதமுள்ள ஐடீசி-ஐ சிஜிஎஸ்டி பொறுப்பு,பிறகு எஸ்ஜிஎஸ்டி பொறுப்பு என வரிசையாக அமைக்கப் பயன்படுத்தலாம்.
  3. சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனமானது ஐஜிஎஸ்டி பொறுப்பான 12,000 அமைக்க முதலில் ஐஜிஎஸ்டி ஐடீசி-ஐ பயன்படுத்தியது.
  4. மீதமுள்ள ஐஜிஎஸ்டி ஐடீசி கிரெடிட் 28,000 (40,000 – 12,000) என்பது சிஜிஎஸ்டி பொறுப்பான 24,000 அமைக்க பயன்படுத்தப்படும்.
  5. இந்த சரிசெய்தலுக்குப் பிறகு, மீதமுள்ள ஐஜிஎஸ்டி ஐடீசியான 4,000-ஐ 4,000 வரையிலான எஸ்ஜிஎஸ்டி பொறுப்பை செயல்படுத்த பயன்படுத்தப்படும்.
  6. இப்பொழுது, கிடைக்கப்பெறும் உள்ளீட்டு கிரெடிட்டை பயன்படுத்திய பிறகு, சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் எஸ்ஜிஎஸ்டி பொறுப்பு என்பது 20,000 ஆகும்.

உதாரணம் 3 – சிஜிஎஸ்டி ஐடீசி-ஐ எஸ்ஜிஎஸ்டி பொறுப்புக்குப் பயன்படுத்தமுடியாது

சிஜிஎஸ்டி ஐடீசி-ஐ எஸ்ஜிஎஸ்டி பொறுப்புக்குப் பயன்படுத்தமுடியாது என்பதை விளக்க, சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இன்னொரு சூழலை நாம் பார்க்கலாம்.
சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனமானது சிஜிஎஸ்டி உள்ளீட்டு கிரெடிட்டான 15,000-ஐ முன்னோக்கி எடுத்துச் செல்கிறது.

உள்ளீட்டு கிரெடிட் பேலன்ஸ் தொகை
சிஜிஎஸ்டி உள்ளீட்டு கிரெடிட் 15,000

ஒரு மாதத்தில், சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் வெளிசெல்லும் பொருட்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
InputCreditSetoff-3_Tamil

விளக்கப்பட்டுள்ளது போல,

  1. சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனமானது முந்தைய காலத்தின் சிஜிஎஸ்டி உள்ளீட்டு கிரெடிட்டான 15000-ஐ தற்போதைய காலத்தின் சிஜிஎஸ்டி பொறுப்பான 11,000-ஐ அமைக்க பயன்படுத்துகிறது.
  2. இவ்வாறு அமைக்க, சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனமானது மீத சிஜிஎஸ்டி உள்ளீட்டு கிரெடிட்டான 4,000 கொண்டுள்ளது.
  3. சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, அந்த காலத்திற்கான அதிகமான சிஜிஎஸ்டி உள்ளீட்டு கிரெடிட்டை தற்போதைய காலத்தின் எஸ்ஜிஎஸ்டி பொறுப்புக்கு எதிராக அமைக்க முடியாது. அதேபோல, எஸ்ஜிஎஸ்டி உள்ளீட்டு கிரெடிட்டை சிஜிஎஸ்டி பொறுப்புக்கு எதிராக அமைக்க முடியாது.
  4. 4. எனவே, மீதமுள்ள சிஜிஎஸ்டி கிரெடிட் பயன்படுத்தப்படவில்லை மற்றும் சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மாதத்திற்கான எஸ்ஜிஎஸ்டி பொறுப்பு என்பது 11,000 ஆகும்.

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

About the author

Pugal T & Yarab A

43 Comments

  • Thanks to Tally India Team for simple, analytical & easy to understand illustrated examples in summarised tabular form, also very helpful for accounting treatment of ICT & Liabilities for CGST, SGST & IGST

  • Local Purchase — Intra State -Hyderabad
    ——————————————————————————-
    Supplier Input Credit CGST Input Credit SGST
    ———————————————————————————
    ABC 10000 10000

    Sales — Inter State Sales to karnataka
    ————————————————————————————————————
    Customer IGST
    ———————————————————————————————————-
    XYZ 6000

    Please explain above example how adjust input tax credit.

    • The entire CGST credit can be utilized to set-off the IGST payable. Balance CGST credit will be Rs. 4,000 and SGST credit will be Rs. 10,000. You can also choose to use the SGST credit to set-off the IGST payable. In that case, balance SGST credit will be Rs. 4,000 and CGST credit will be Rs. 10,000.

  • How to adjustment of Local purchase CGST and SGST Input tax Credit to outward sale CGST.
    Please explain how to do in practical scenario.

  • Please give me a clarification. If I have inward Supply of Services with CGST and SGST in Say Tamil Nadu and I have outward Intra State Supply in Kerala with CGST and SGST, can I set off the same? Example, I have CGST + SGST collected from Intra State supply within Kerala. But I have a hotel accommodation bill (incurred for the purpose of business) from Chennai in which CGST + SGST is charged. Can I set off input tax credit of Chennai bills with output tax of Kerala?

    • No, CGST + SGST of one state cannot be set-off against CGST + SGST of another state.

  • If a business operates in 5 different states, does it need to maintain separate state wise ITC balances for SGST CGST IGST? That is, 15 different tax credits? Or, is it that the ITC can be freely used across India?

    • No, CGST and SGST of one state cannot be adjusted with CGST and SGST of another state. IGST credit can be freely utilized.

  • What happens if the buyer dont pay on time and closes his business , Do we need to shell down the TAX from our pocket.

    • We assume the question is “ What happens if the supplier doesn’t pay on time and closes his business?’
      If supplier doesn’t pay tax on outward supply made to you,  GSTN will communicate the mismatch. This needs to ratified by your supplier, if he fails to ratify and deposit the tax, the ITC claimed by you will be reversed and added to your output tax liability. Please refer this blog post for more information http://blogs.tallysolutions.com/how-to-file-gst-returns/

    • The order in which input tax credit needs to be utilised is discussed in the article. Please let us know if there is any specific query you may have regarding this.

  • Input Tax credit of SGST Rs.6000 Tax Liability of IGST Rs.14000
    Input Tax credit of CGST Rs.6000

    how to set off tax the transaction.

    • First, CGST should be utilised to set off IGST liability (IGST liability Rs.14,000 -CGST ITC Rs.6,000)
      Then, SGST should be utilised to set off IGST liability (IGST liability Rs.8,000 -SGST ITC Rs.6,000)
      Remaining Rs.2000 will be the IGST payable.

  • Excellent. Very well explained with Illustrations & charts.
    Reading Paragraphs after paragraphs of the same concepts were boring & confusing.
    Tally team has presented it very clear for any lay businessman to understand.

  • For Exporters under existing VAT and Central Excise system, the exporter takes input credit for both VAT and C.Excise when purchasing Raw material and consumables. If the local business (Sales) is less there will be remaining large credit in both VAT & C.Excise as both VAT nor C.Excis is applicable for exports. At present the Exporter applies for Vat refund Quarterly/halfyearly/yearly & also similarly for C.Excise rebate by paying Duty while invoicing some export dispatches and later claiming refund.
    Under GST what will be the procedure ?.

    • Under GST, refund will be allowed only in two cases
      1.Export
      2.The credit has accumulated on account of rate of tax on input being higher than the rate of tax on output.

      In case, where the goods are exported out of India and are subject to export duty, no refund can be claimed

    • The transition provision of GST law allows carry forward of eligible Cenvat credit. We will be publishing a detailed blog post on this soon. Stay tuned:)

  • very businessmen should have a proper computer system with networking service and most of all a great accounting software like tally in place.other ways it is going to be a tough time to do business.

© Tally Solutions Pvt. Ltd. All rights reserved - 2017