யூனியன் பிரதேச ஜிஎஸ்டீ (யுடீஜிஎஸ்டீ) என்றால் என்ன?

Last updated on July 13th, 2017 at 04:31 pm

எங்களின் முந்தைய வலைப்பதிவுகளில், ஜிஎஸ்டீ-யின் கீழ் சப்ளை மீது விதிக்கப்படும் வரிகள் பற்றி நாம் விவாதித்துள்ளோம்.

   • மாநிலங்களுக்கு உள்ளேயே மேற்கொள்ளப்படும் சப்ளைகளுக்கு, மத்திய ஜிஎஸ்டீ (CGST) மற்றும் மாநில ஜிஎஸ்டீ (SGST) ஆகிய வரிகள் விதிக்கப்படும்.

 

  • மாநிலங்களுக்கு இடையே மேற்கொள்ளப்படும் சப்ளைகளுக்கு, IGST வரி விதிக்கப்படும்.

ஜிஎஸ்டீ-யின் மற்றொரு கூறு குறித்து இப்பொழுது பேசப்போகிறோம் – UTGST. UTGST என்பது யூனியன் பிரதேசத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி ஆகும்.

யூனியன் பிரதேச ஜிஎஸ்டீ (UTGST)

ஒரு யூனியன் பிரதேசம் என்பது மத்திய அரசின் நேரடி ஆட்சியின்கீழ் உள்ளது. சுயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களைக் கொண்ட மாநிலங்களில் இருந்து இவை வேறுபடுகிறது. தற்பொழுது, இந்தியாவில் 7 யூனியன் பிரதேசங்கள் உள்ளன:

   1. சண்டிகர்

 

   2. இலட்சத்தீவுகள்

 

   3. டாமன் மற்றும் டையூ

 

   4. தாத்ரா மற்றும் நகர் ஹவேலி

 

   5. அந்தமான் நிகோபார் தீவுகள்

 

   6. டெல்லி

 

  7. புதுச்சேரி

இவற்றுள் டெல்லி மற்றும் புதுச்சேரி ஆகியவை தங்களுக்கென சொந்தமாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றம் மற்றும் முதலமைச்சர் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. எனவே, அவர்கள் அரை- மாநிலங்களாகச் செயல்படுகின்றன.
ஜிஎஸ்டீயின் கீழ், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் SGST சட்டம் பொருந்தும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள ‘மாநிலங்கள்’ என்ற வரையறையில், தங்களுக்கென சொந்தமாக சட்டமன்றம் கொண்ட யூனியன் பிரதேசங்களும் அடங்கும். எனவே, SGST சட்டமானது டெல்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும். டெல்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களுக்கு உள்ளே மேற்கொள்ளப்படும் சப்ளைகள் மீது CGST + SGST வரிகள் விதிக்கப்படும், மற்றும் டெல்லி / புதுச்சேரி ஆகியவற்றில் இருந்து மற்றொரு மாநிலம் / யூனியன் பிரதேசத்திற்கு மேற்கொள்ளப்படும் சப்ளைகள் மீது IGST வரி விதிக்கப்படும் என்பது இதன் பொருள் ஆகும்.
தங்களுக்கென சொந்தமாக சட்டமன்றம் கொண்ட யூனியன் பிரதேசங்களில் SGST சட்டத்தைப் பயன்படுத்த முடியாது என்பதால், சண்டிகர், இலட்சத்தீவுகள், டாமன் மற்றும் டையூ, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களில் UTGST என்று அழைக்கப்படும் வரியை விதிக்கும்பொருட்டு, ஜிஎஸ்டீ கவுன்சிலானது யுடீஜிஎஸ்டீ சட்டத்தை அறிமுகப்படுத்தியது.இந்த யூனியன் பிரதேசங்களில் SGST-க்கு பதிலாக UTGST விதிக்கப்படும்.

UTGST is applicable in the union territories of Chandigarh, Lakshadweep, Daman and Diu, Dadra and Nagar Haveli and Andaman and Nicobar Islands. Click To Tweet

வரி விதிப்பு

யூனியன் பிரதேசத்திற்குள் சப்ளை மேற்கொள்ளப்படுதல்

ஒரு யூனியன் பிரதேசத்திற்குள் மேற்கொள்ளப்படும் சப்ளைகள் மீது, CGST + UTGST விதிக்கப்படும்.

உதாரணமாக: சண்டிகரில் உள்ள ஃபர்னிச்சர் சென்டர் என்பது 50 சோஃபா செட்களை ரூ. 10,00,000-க்கு சண்டிகரில் உள்ள வீணா ஃபர்னிச்சர்ஸுக்கு வழங்குகிறது.

இது சண்டிகர் என்ற யூனியன் பிரதேசத்திற்கு உள்ளேயே மேற்கொள்ளப்படும் சப்ளை ஆகும். சோஃபா செட்டிற்கு 12% என ஜிஎஸ்டீ வரி விகிதமாக எடுத்துக்கொண்டால், இந்த சூழலில் வரிக் கணக்கீடு என்பது பின்வருமாறு இருக்கும்:

விவரங்கள் தொகை (ரூ.)
சோபா செட்கள் 10,00,000
UTGST @ 6% 60,000
CGST @ 6% 60,000
மொத்த 11,20,000

எனவே, இங்கே ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், யூனியன் பிரதேசத்திற்கு உள்ளேயே மேற்கொள்ளப்படும் சப்ளைக்கு, SGST-க்கு பதிலாக UTGST விதிக்கப்படும்.

On supplies within a union territory, CGST and UTGST will be levied. Click To Tweet
யூனியன் பிரதேசத்திற்கு வெளியே மேற்கொள்ளப்படும் சப்ளை

ஒரு யூனியன் பிரதேசத்திலிருந்து மற்றொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திற்கு மேற்கொள்ளப்படும் சப்ளைகள் மீது IGST விதிக்கப்படும்.

உதாரணமாக: இது சண்டிகர் யூனியன் பிரதேசத்திற்கு வெளியே மேற்கொள்ளப்படும் ஒரு சப்ளை ஆகும். சோஃபா செட்டிற்கு 12% என ஜிஎஸ்டீ வரி விகிதமாக எடுத்துக்கொண்டால், இந்த சூழலில் வரிக் கணக்கீடு என்பது பின்வருமாறு இருக்கும்:

விவரங்கள் தொகை (ரூ.)
சோபா செட்கள் 10,00,000
IGST @ 12% 1,20,000
மொத்த 11,20,000

எனவே, ஒரு மாநிலத்திற்கு வெளியே மேற்கொள்ளப்படும் சப்ளைகளுக்கு விதிக்கப்படும் வரிகளைப் போலவே, யூனியன் பிரதேசத்திற்கு வெளியே மேற்கொள்ளப்படும் சப்ளைகளுக்கு IGST பொருந்தும்.

IGST will be applicable on supplies outside a union territory.Click To Tweet
பயன்பாட்டு வரிசை

SGST கிரெடிட்டைப் பயன்படுத்துவது போலவே UTGST கிரெடிட்டை செலுத்தப்பட வேண்டிய வரியை தீர்க்க பயன்படுத்திக் கொள்ளலாம், அதாவது:

உள்ளீட்டு வரி கிரெடிட் பொறுப்புக்கு எதிராக அமைத்தல்
UTGST UTGST மற்றும் IGST (இந்த வரிசையில்)

மேலும், CGST செலுத்த வேண்டிய பொறுப்புகளை தீர்க்க UTGST கிரெடிட்டை பயன்படுத்த முடியாது.

உதாரணம்: ஆகஸ்ட் ’17 முடிவில், சண்டிகரில் உள்ள ஃபர்னிச்சர் சென்டர் என்பது உள்ளீட்டு வரி கிரெடிட் மற்றும் வரி செலுத்த வேண்டிய பொறுப்பு ஆகியவற்றை கீழே காட்டப்பட்டுள்ளது போல் கொண்டுள்ளது:

உள்ளீட்டு வரி கடன் (ரூ.) வரிப் பொறுப்பு (ரூ.)
CGST 1,00,000 CGST 80,000
UTGST 1,00,000 UTGST 80,000
IGST 2,00,000 IGST 2,50,000

இங்கு, ஃபர்னிச்சர் சென்டர் என்பது UTGST கிரெடிட்டான ரூ.1,00,000-ஐ பின்வருமாறு பயன்படுத்தலாம்:

விவரங்கள் தொகை (ரூ.)
UTGST கிரெடிட் 1,00,000
(-) UTGST பொறுப்புக்கு எதிராக தீர்த்தல் (-) 80,000
மீதத் தொகை 20,000
(-) IGST பொறுப்புக்கு எதிராக தீர்த்தல் (-) 20,000
மீதத் தொகை எதுவுமில்லை

தங்களுக்கென சொந்தமாக சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்களில் SGST-க்கு பதிலாக UTGST விதிக்கப்படும். CGST மற்றும் IGST மசோதாக்களுடன் இணைத்து, மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் UTGST மசோதாவும் ஏப்ரல் 6, 2017 அன்று நிறைவேற்றப்பட்டது..

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

About the author

Pugal T & Anisha K Jose

57 Comments

© Tally Solutions Pvt. Ltd. All rights reserved - 2017