(English) Language

  • English
  • Hindi
  • Marathi
  • Kannada
  • Telugu
  • Tamil
  • Gujarati

நமது முந்தைய பதிவுகளில், நமது முந்தைய பதிவுகளில், மற்றும் புதிய ஜிஎஸ்டி பதிவுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்துக் கலந்துரையாடினோம்.

பின்வருவதை இப்பொழுது நாம் புரிந்துகொள்வோம்:

  • உங்கள் பதிவு விவரங்களைத் திருத்தம் செய்தல்
  • உங்கள் பதிவு விவரங்களைத் திருத்தம் செய்தல்
  • பதிவு இரத்து செய்யப்பட்டால் அதைத் திரும்பப் பெறுவது எப்படி

உங்கள் பதிவு விவரங்களைத் திருத்தம் செய்தல்

  • பதிவு செய்யப்படும் சமயத்தில் தரப்பட்ட விவரங்களில் ஏதாவது மாற்றம் இருப்பின் அத்தகைய மாற்றம் ஏற்பட்ட 15 நாட்களுக்குள் படிவம் GST REG-11ல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  • தொழிற்பெயர், பங்குதாரர் விவரங்கள், நிர்வாகக் குழு மற்றும் பிற குறித்து படிவம் GST REG-11ல் உள்ள குறிப்பிட்ட விவரங்களுக்கு அதிகாரியின் ஒப்புதல் தேவை. சரிபார்ப்புக்குப் பிறகு விவரங்களைத் திருத்துவதற்கான அதிகாரியின் ஒப்புதல் ஆணையானது படிவம் GST REG-12ல் அனுப்பப்படும்.
  • பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துபவரின் எண் மாற்றம் காரணமாக உண்டாகும் மாற்றங்கள் படிவம் GST REG-01ல் ஒரு முறைபுதிதாகப் பதிவு செய்யத்தேவைப்படும்.

Amending GST Registration

பதிவை இரத்து செய்ய விண்ணப்பித்தல்

  • பதிவு செய்யப்பட்ட ஒரு வரி செலுத்தும் நபர் பதிவை இரத்து செய்ய வேண்டினால், இறுதி இருப்பு மற்றும் பிற பொருத்தமான ஆவணங்களுடன் படிவம் GST REG-14ஐ சமர்ப்பிக்க வேண்டும்.
  • அத்தகைய இரத்துக்கான காரணத்தைச் சொல்லுமாறு கேட்டு, வரி செலுத்தும் நபருக்கு 7 நாட்களுக்குள் படிவம் GST REG-15ல் அவ்வாறு இரத்து செய்யக் காரணம் கேட்டுக் குறிப்பாணை வழங்கப்படும்.
  • அதிகாரி ஒருவரின் சரிபார்ப்பு மற்றும் ஒப்புதலுக்குப் பிறகு, காரணம் கூறியதிலிருந்து அல்லது படிவம் GST REG-15 கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள் படிவம் GST REG-16ல் இரத்து ஆணை வழங்கப்படும.

How to Cancel GST Registration

தானாக முன்வந்து பதிவு செய்துகொண்ட ஒரு வரி செலுத்தும் நபர், பதிவு செய்து 1 வருடம் ஆன பிறகே பதிவை இரத்து செய்ய விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார். அதிகாரி ஒருவர், ஏதாவது வரி பாக்கி மற்றும் ஏதாவது அபராதம் இருப்பின் செலுத்துமாறு அந்த நபரிடம் கூறிய பிறகு, பதிவு இரத்து செயலுக்கு வரும் தேதியைத் தீர்மானிப்பார்.

இரத்து செய்யப்பட்ட பதிவைத் தள்ளுபடி செய்தல்

  • ஒருவேளை அதிகாரி ஒருவர் பதிவை இரத்து செய்திருந்தால், இரத்து ஆணை வழங்கப்பட்ட 30 நாட்களுக்குள் படிவம் GST REG-17ஐ சமர்ப்பிப்பது மூலம் அதைத் தள்ளுபடி செய்யக்கோரி வரிசெலுத்தும் நபர் விண்ணப்பிக்கலாம்.
  • அந்த அதிகாரி கூடுதல் தகவல்கள் அல்லது விளக்கம் கோரினால், 3 வேலை நாட்களுக்குள் படிவம் GST REG-3 வழங்கப்படும்.
  • அதன் பிறகு, தேவையான தகவல்களைப் படிவம் GST REG-4ல் (7 வேலை நாட்களுக்குள்) வழங்குவதன் மூலம் வரி செலுத்தும் நபர் பதிலளிக்க வேண்டும்.
  • அலுவலர் திருப்தியடைந்தால், அந்த விண்ணப்பம் செய்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் படிவம் GST REG-18ல் ஆணை வழங்குவதன் மூலம் இரத்து ஆணை தள்ளுபடி செய்யப்படும்.
  • அலுவலர் திருப்தியடையவில்லை எனில், தள்ளுபடிக்கான விண்ணப்பம் படிவம் REG-5ல் நிராகரிக்கப்படும். இவ்வாறு நிராகரிப்பதற்குமுன் வரி செலுத்தும் நபரிடம் விளக்கம் கேட்டுப் படிவம் GST REG-19ல் காரணம் கேட்டுக் குறிப்பாணை அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்படும்.

Revoke Cancelled GST Registration

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

100,671 total views, 4 views today

Yarab A

Author: Yarab A

Yarab is associated with Tally since 2012. In his 7+ years of experience, he has built his expertise in the field of Accounting, Inventory, Compliance and software product for the diverse industry segment. Being a member of ‘Centre of Excellence’ team, he has conducted several knowledge sharing sessions on GST and has written 200+ blogs and articles on GST, UAE VAT, Saudi VAT, Bahrain VAT, iTax in Kenya and Business efficiency.