பண மதிப்பு நீக்க அதிர்ச்சியை அடுத்து, இந்தியாவை மேலும் டிஜிட்டல் மயமாக்கவும், மேலும் இணக்கமாகவும், துடிப்பான பொருளாதார நாடாகவும் ஆக்க வேண்டும் என்னும் இந்திய அரசாங்கத்தின் தீவிர முயற்சி பட்ஜெட் மூலம் தெளிவாகிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 1ம் தேதி அறிவிக்கப்பட்ட பட்ஜெட், இந்தியாவில் மிக அதிக வேலை வாய்ப்புகள் தொடர்ந்து, இந்தப் பிரிவிலேயே இருக்கும் என்னும் வெளிப்படையான கருத்துடன் எம்எஸ்எம்இ பிரிவில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக சில நல்ல சலுகைகளை அறிவித்துள்ளது.

எம்எஸ்எம்இ பிரிவில் வளர்ச்சியையும்;, எம்எஸ்எம்இகள் டிஜிட்டல் மயமாவதை ஊக்குவிக்கவும் இலக்காகக் கொண்டு நிதியமைச்சர் பின்வரும் முன்முயற்சிகளைச் சுட்டிக்காட்டினார்.

கார்ப்பரேட் வரி குறைப்பு

ரூ.50 கோடிக்கும் அதிகமான விற்றுமுதல் உடைய நிறுவனங்களுக்கு 30% ஆக இருந்த வருமான வரி 25% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

வரி குறைப்பு என்னும் இந்த நடவடிக்கைகளால் வரவேற்கப்படுகிறது, ஏனெனில் பெரும்பாலான நிறுவனங்கள் இந்த வரம்புக்குள் வரும். இது அவர்களின் தொழில் வளர்ச்சிக்குக் கூடுதல் பணச்சுழற்சிக்கு வழிவகுக்கும். இந்தச் சலுகை எம்எஸ்எம்இகளுக்கு சிறந்த அடித்தளத்தைக் கொடுத்து, அவர்களுக்கும் பெரிய நிறுவனங்களுக்கும் இடையிலுள்ள இடைவெளியைக் குறைக்கும். கிடைக்கக்கூடிய பல்வேறு சலுகைகள், வரிவிலக்குகள் மற்றும் பலவற்றை சிறந்த அடித்தளம் மற்றும் தொழில்நுட்ப அறிவின் காரணமாக பெரிய நிறுவனங்கள் மெல்லிய அனுகூலத்தைக் கொண்டிருந்தனர்.

இந்த வரிக் குறைப்பானது குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகள் சந்தையில் சிறப்பாகப் போட்டி போடவும், செலவுகளைக் குறைக்கவும் செய்து, தொழில் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும்.

உத்தேசத் திட்டத்தில் டிஜிட்டல் பணப்புழக்கம்

எம்எஸ்எம்இகள் தாங்களாகவே டிஜிட்டல் முறையில் கட்டணங்களை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்க, டிஜிட்டல் பணப்புழக்கம் என்னும் கருத்து உத்தேசத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ரூ.2 கோடிக்கும் குறைவான விற்றுமுதல் உடைய தொழில் நிறுவனங்களுக்கு இது பொருந்தும். இந்த முறையின் கீழ், ஒட்டுமொத்த விற்றுமுதல் அல்லது டிஜிட்டல் முறையில் பெறப்பட்ட கட்டணங்களில் லாபம் 8% எனக் கருதப்;படும் தற்போதைய விகிதம் 6%ஆகக் குறைக்கப்படுகிறது. இருப்பினும் ரொக்கமாகப் பெறப்படும் பணத்திற்கு என்னும் தற்போதைய வரிவிகிதமே தொடர்து நடப்பில் இருக்கும்;.

வௌ;வேறு சூழ்நிலைகளில் தொழில் ரீதியான நன்மைகளை ஆய்வு செய்வோம்.

சூழ்நிலைகள்100% ரொக்கப் பணப்புழக்கம் உடைய தொழில்நிறுவனங்கள்50% டிஜிட்டல் பணப்புழக்கம் உடைய தொழில்நிறுவனங்கள்100% டிஜிட்டல் பணப்புழக்கம் உடைய தொழில்நிறுவனங்கள்
பணப்புழக்கம்2 கோடி2 கோடி2 கோடி
ரொக்கப் பணப்புழக்கம்2 கோடி1 கோடிஇல்லை
டிஜிட்டல் பணப்புழக்கம்இல்லை1 கோடி2 கோடி
ரொக்கப் பணப்புழக்கத்தில் 8% ஆகக் கருதப்படும் லாபம்16 லட்சம்8 லட்சம்இல்லை
டிஜிட்டல் பணப்புழக்கத்தில் 6% ஆகக் கருதப்படும் லாபம்இல்லை6 லட்சம்12 லட்சம்
மொத்த லாபம் (ரொக்கம் 10 டிஜிட்டல்) 16 லட்சம்14 லட்சம்12 லட்சம்
செலுத்த வேண்டிய வரி*நிறுவனங்கள்; (@ 25%)4 லட்சம்3.5 லட்சம்3 லட்சம்
தனியுரிமை நிறுவனங்கள் வருமான (வரி வரம்புகளின்படி)2,54,9251,93,1251,31,325
வரி சேமிப்பு நிறுவனங்கள்இல்லை50,0001,00,000
தனியுரிமை நிறுவனங்கள்இல்லை61,8001,23,600

*வரிக் கணக்கீடு 2017-18 நிதியாண்டின் அடிப்படையில் அமைந்தது

நாம் இதை மேலும் சிறப்பாகப் புரிந்துகொள்வோம்.

தொழில் முனைவோர் ஒருவர் தனது பரிவர்த்தனை முழுவதையும் ரொக்கத்தில் மேற்கொள்ளும் போது, அவரது லாபமானது 2 கோடிகளில் 8மூ ஆகக் கணக்கிடப்பட்டால் 16 லட்சமாகக் கணக்கில் கொள்ளப்படும். இருப்பினும், தனது பரிவர்த்தனை முழுவதையும் டிஜிட்டல் முறையைப் (காசோலை அல்லது வேறு ஏதாவது டிஜிட்டல் முறை மூலம்) பயன்படுத்தி மேற்கொள்வதைத் தெரிவு செய்தால், அவரது லாபமானது 2 கோடிகளில் 6% ஆகக் கணக்கிடப்பட்டால் 12 லட்சமாகக் கணக்கில் கொள்ளப்படும். இது நிறுவனங்களுக்கு ரூ.1,00,000 வரிச் சலுகையையும், தனியுரிமை நிறுவனங்களுக்கு ரூ.1,23,600 வரிச் சலுகையையும் பெற்றுத்தரும்.

தொழில் நிறுவனங்கள் தங்கள் பணப்புழக்கம் அல்லது வரவுகளில் பாதியை டிஜிட்டல் முறை அல்லது வங்கிகள் மூலம் பெற்றால்கூட அது நிறுவனங்களுக்கு ரூ.50,000 (14,00,000க்கு 25%) மற்றம் தனியுரிமை நிறுவனங்களுக்கு ரூ.61,800 வரிச்சேமிப்பாகப் பெற்றுத்தரும். இது எம்எஸ்எம்இகளுக்கு ஒரு அனுகூலமே. இவ்வாறு சலுகைகள் மூலம் பலனடைய எம்எஸ்எம்இகள் டிஜிட்டல் முறைக்கு மாறவேண்டும்.நாம் இதை மேலும் சிறப்பாகப் புரிந்துகொள்வோம்.

தொழிலை டிஜிட்டல் மயமாக்கத் துணைசெய்யும் முன்முயற்சிகள்

DigiGaon முன்முயற்சியானது 1,50,000க்கும் மேற்பட்ட கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அதிவேக இணைய இணைப்பு தரவும், 2017-18ன் இறுதிக்குள் டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்த கல்வி மற்றும் திறன்களை வழங்கவும் நோக்கம் கொண்டுள்ளது. கிராமப் புறங்களில் உள்ள கள் டிஜிட்டல் மயமாக, அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் திறன் தொகுப்பு கிடைத்தல் ஆகியவற்றுக்கான சவால்களை எதிர்கொள்ள இது மிகவும் உதவிகரமாக இருக்கும். வியாபாரிகளுக்குப் பணத்தைத் திருப்பித்தரும் திட்டங்களை அறிமுகப்படுத்துவது மூலம் டீர்ஐஆ செயலியை பயன்படுத்துவதையும், ஆதார் மூலமான கட்டணத்திட்டத்தின் வியாபாரிகளுக்கான வடிவமான ஆதார் பே ஆகியவற்றையும் ஊக்குவிக்க அரசாங்கம் திட்டமிடுகிறது.

இந்தப் பல்வேறு முன்முயற்சிகள், டிஜிட்டல் கட்டமைப்புக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு மற்றும் நகர்ப்புறங்களிலும், கிராமப் புறங்களில் பெருமளவுக்கும் பாதுகாப்பான மற்றும் உறுதியான டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குவதற்குமான முன்னுரிமைகளுடன் சேர்த்து எம்எஸ்எம்இகள் பணமற்ற பொருளாதாரத்தை நோக்கி நகரத்தூண்ட உதவும்.

துவக்க நிலை நிறுவனங்களுக்கு இனிய வரி விடுமுறை

துவக்க நிலை நிறுவனங்கள் தொழிலிருந்து பெறும் லாபம் மற்றும் ஆதாயங்கள் ஆகியவற்றைப் பொறுத்து பிடித்தத்தைக் கோருவதற்கான வரி விடுமுறையானது தற்போதுள்ள 5 வருட வரம்பிலிருந்து 7 வருடங்களில் தொடர்ந்து 3 வருடங்களாக நீடிக்கப்பட்டுள்ளது. இது முதலீட்டை ஊக்குவித்து, அதிக வேலை வாய்ப்புகள் உருவாகவதற்கு வழிவகுக்கும்.

பணம் செலுத்தக் குறைவான வரம்பு

ஒருவர் ரொக்கமாகப் பணம் செலுத்துவதற்கான அதிகபட்ச வரம்பு ஒரு நாளுக்கு ரூ.20,000 என்பதிலிருந்து ரூ.10,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் ஒருவரின் வியாபாரம் அல்லது தொழிலில் இருந்து கிடைக்கும் லாபம் மற்றும் ஆதாயங்களாகக் கணக்கிடப்பட பத்தாயிரம் ரூபாய்க்கும் அதிகமான தொகை கணக்கிடப்பட அனுமதிக்கப்படாது எனப் பொருள்படும். இது எம்எஸ்எம்இகளின் அமைப்பு சாரா மற்றும் முறைசாரா செயல்படும் முறையின் காரணமாக அவற்றின் மீது அதிகபாதிப்பைக் கொண்டிருக்கும், ஏனெனில் அவை தினசரிக் கட்டணங்களுக்கு ரொக்கத்தைப் பெருமளவு சார்ந்துள்ளன.
இரண்டாவதாக, எம்எஸ்எம்இகளால் தரப்படும் ஊதியங்கள் மற்றும் சம்பளங்கள் ரூ.8,000 முதல் ரூ.15,000 வரை உள்ளது. இப்பொழுது, 1 ஏப்ரல் 2017 முதல், இந்தக் கட்டணங்கள் வரவு வைக்கப்பட, இந்தக் கட்டணங்கள் வங்கி மூலமாக அல்லது டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இது ரொக்கப் பரிவர்த்தனைகளைக் குறைக்கவும், எம்எஸ்எம்இகள் டிஜிட்டல் மயமாவதை ஏற்கச் செய்வதை ஊக்கப்படுத்துவதற்குமான ஒரு முயற்சியாகும்.

பணத்துக்கான மேம்பட்ட அணுகுதல்

31 டிசம்பர் 2016 அன்று பிரதம மந்திரியால் அறிவிக்கப்பட்ட களுக்கு ரூ.2 கோடி வரையிலான (முன்பு 1 கோடி) கடன்களுக்கான கடன் உறுதித் திட்ட உயர்வு, தங்கள் தொழில் வளர்ச்சிக்கு அவர்களுக்கு அதிகத் தொகைக்கான அணுகுதலுக்கு வழிவகுக்கும்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பாதிப்பை களுக்கு பட்ஜெட்டில் வழங்கப்பட்ட சலுகைகள் ஓரளவுக்கு நிவர்த்தி செய்து, டிஜிட்டல் மயமாவதற்கான பல்வேறு சலுகைகள் மூலம் எம்எஸ்எம்இகளை மேம்பட்ட இணக்கத்திற்கு ஊக்குவித்து, எம்எஸ்எம்இகளுக்கு சாத்தியமான மற்றும் துடிப்பான வளர்ச்சிப் பாதையை ஏற்படுத்துகின்றன.

பட்ஜெட்டில் வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள டிஜிட்டல் முறைக்கு மாறுக, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துக.

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

74,975 total views, 89 views today

Yarab A

Author: Yarab A

Yarab is associated with Tally since 2012. In his 7+ years of experience, he has built his expertise in the field of Accounting, Inventory, Compliance and software product for the diverse industry segment. Being a member of ‘Centre of Excellence’ team, he has conducted several knowledge sharing sessions on GST and has written 200+ blogs and articles on GST, UAE VAT, Saudi VAT, Bahrain VAT, iTax in Kenya and Business efficiency.