தற்போதுள்ள மறைமுக வரி வசூலிக்கப்படும் அனைத்து பதிவுசெய்யப்பட்ட நபர்களும் ஜிஎஸ்டீக்கு தானாக மாற்றப்பட்டு ஒரு தற்காலிக பதிவு அடையாள அட்டை வழங்கப்படும். பதிவு செய்யும் போது சமர்ப்பிக்கப்பட்ட விவரங்களை உறுதிப்படுத்திய பிறகு, இறுதி பதிவு அடையாள அட்டைகள் வழங்கப்படும். இதேபோல், காம்போசிஷன் வரியை தேர்வு செய்த அந்த வர்த்தகர்கள், ஜிஎஸ்டிக்கு தானாக மாற்றப்படுவார்கள்.

ஜிஎஸ்டின் கீழ், பதிவு செய்யப்பட்ட வரி விலக்கு பெற்ற நபர், அதன் மொத்த வருவாய், 50 லட்சம் ரூபாய்க்கான நிதி ஆண்டில், காம்போசிஷன் வரிக்கு விண்ணப்பிக்கலாம். இது மீண்டும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டுள்ளது. அதன்படி, ஜிஎஸ்டிக்கு மாற்றுவதில், ஒரு காம்போசிஷன் டீலர் ஒரு வழக்கமான விற்பனையாளராக மாறலாம்.

GST இன் கீழ் ஒரு வழக்கமான டீலர் ஒரு காம்போசிஷன் டீலரிலிருந்து மாறுவதற்கு, நீங்கள் ஒரு வழக்கமான டீலர் இணக்கம் தேவைகளுடன் இணங்க வேண்டும். உங்களுடைய உள்ளார்ந்த பொருட்கள் மீது உள்ளீட்டு வரிப் பலன்களைப் பெறுவதற்கு அனுமதிக்கப்படுவீர்கள், வெளிச்செல்லும் பொருட்களில் ஜிஎஸ்டீ வசூலிக்கப்படும்.

இது எல்லாம் நல்லது என்றாலும், ‘ஜிஎஸ்டீயின் கீழ் ஒரு காம்போசிஷன் டீலர் ஒரு சாதாரண டீலராக மாறினால், இறுதி இருப்புகள் மீதான வரிக்கு என்ன ஆகும்’ என்று நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பலாம்.
இதை விவரிப்போம்.

ஒரு காம்போசிஷன் டீலர் கீழ்க்கண்ட காரணங்களினால் ஒரு வழக்கமான வர்த்தகர் ஆக மாறலாம்:

  • ஒரு வழக்கமான வியாபாரி ஆக தானாகவே விருப்பம் கொண்டிருத்தல்
  • சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம்: மொத்த வருவாய் 50 லட்சம் ரூபாய்க்கு விதிக்கப்பட்ட வரம்பை மீறுகிறது, அல்லது விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு இணங்க, ஜிஎஸ்டியின் கீழ் காம்போசிஷன் வரிக்கு தகுதி பெறாமல் போயிருக்கலாம்.

ஒரு சாதாரண டீலர் ஆகும்போது, இறுதி இருப்புகளின் (மூலப்பொருட்கள்), பாதி முடிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் முடிக்கப்பட்ட பொருட்களில் உள்ள வரிப் பலன்களைப் பெற அனுமதிக்கப்படும். இருப்பினும், உங்களுடைய இறுதி இருப்புகளில் உள்ள உள்ளீட்டு வரிப் பலன் பெற தகுதியுடையதாக இருக்க நீங்கள் சந்திக்க வேண்டிய நிலைகள் உள்ளன.

உங்களுடைய இறுதி இருப்புகளில் உள்ளீட்டு வரிப் பலன் பெறும் தகுதி நிலைமைகள்

கீழ்க்கண்ட நிபந்தனைகளின் கீழ் உங்கள் இறுதி இருப்புகளில் உள்ள உள்ளீட்டு வரிப் பலனை பெறலாம்:

  • மூலப்பொருட்கள், பாதி முடிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் முடிக்கப்பட்ட பொருட்களின் வடிவில் உள்ள இறுதி இருப்புக, வரிசெலுத்தக்கூடிய வழங்கல்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் அல்லது பயன்படுத்தப்படும் நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்.Conditions for availing GST ITC on closing stock
  • இறுதி இருப்புகளில் உள்ள உள்ளீடுகளுக்கு செலுத்தப்படும் VAT முந்தைய சட்டத்தின் கீழ் பலன் பெற அனுமதிக்கப்பட வேண்டும். இது VAT பலன் பெறுவதற்கு மட்டுமே பொருந்தும்.
  • உள்ளீடுகளின் இறுதி இருப்பு (பாதி முடிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் முடிக்கப்பட்ட பொருட்கள் உட்பட) தொடர்பாக நீங்கள் விலைவிவரப்பட்டியல்கள் அல்லது வேறு ஏதேனும் பரிந்துரைக்கப்பட்ட தீர்வை/வரி செலுத்தும் ஆவணங்களை வைத்திருத்தல்.
    Tax documents needed for claiming GST Input tax credit
  • விலைவிவரப்பட்டியல்கள் அல்லது வேறு ஏதேனும் பரிந்துரைக்கப்பட்ட தீர்வை/வரி செலுத்தும் ஆவணங்களின் தேதி ஜிஎஸ்டீக்கு மாறும் தேதியிலிருந்து 12 மாதங்களுள் இருக்க வேண்டும் Carry forward Input tax credit to GST
    மேற்கண்ட நிபந்தனைகள் பூர்த்தியானால் பலன் தொகை இன்னும் பரிந்துரைக்கப்படாத ஒரு முறையில் கணக்கிடப்பட அனுமதிக்கப்படும்.

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

163,582 total views, 21 views today

Yarab A

Author: Yarab A

Yarab is associated with Tally since 2012. In his 7+ years of experience, he has built his expertise in the field of Accounting, Inventory, Compliance and software product for the diverse industry segment. Being a member of ‘Centre of Excellence’ team, he has conducted several knowledge sharing sessions on GST and has written 200+ blogs and articles on GST, UAE VAT, Saudi VAT, Bahrain VAT, iTax in Kenya and Business efficiency.