வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் என்பதே ஒவ்வொரு வணிக நிறுவனத்தின் கனவு ஆகும். ஒருவர் ஒரு வணிக நிறுவனத்தை தொடங்கி, இலாபம் சம்பாதித்து, மீண்டும் முதலீடு செய்து, மேலும் அதிக இலாபம் சம்பாதிக்கிறார் – மேலும் இந்த சுழற்சி தொடந்து நடைபெறுகிறது. உங்கள் முதல் வாடிக்கையாளரை நீங்கள் பெறுகிறீர்கள், பின்னர் 10, பின்னர் 100 என வாடிக்கையாளர்கள் அதிகரித்துக்கொண்டே செல்வார்கள். உங்கள் அருகிலுள்ள இத்தில் நீங்கள் வணிகத்தை தொடங்குங்கள், நீங்கள் வளர்ந்தவுடன், உங்கள் நகரம், உங்கள் மாநிலம், அண்டை மாநிலங்கள் என முழு நாடும் உங்களின் விளையாட்டு களமாக ஆகும் வரை, உங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்திக்கொண்டே இருங்கள் .


இருப்பினும், தற்போதைய வரி விதிப்பு முறையில், இதை செய்வதை விட சொல்வது எளிதாக உள்ளது. பல மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்களுடன் வணிக நிறுவனங்கள் மேற்கொள்ளும் வெளிப்படையான நிதி மற்றும் முதலீட்டு முயற்சிகளோடு மட்டுமல்லாமல், விற்பனையாளருக்கும், வாங்குபவருக்கும் இணக்கத்திற்கான செலவுகள் மற்றும் சிக்கல்கள் ஆகியவையும் உள்ளன.

மற்ற மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சரக்குகளை விற்பனை செய்தல்

தற்போதைய முறை ஜிஎஸ்டீ முறை
மத்திய அரசானது மாநிலங்களுக்கு இடையே மேற்கொள்ளப்படும் விற்பனைகளுக்கு, மத்திய விற்பனை வரி (சி.எஸ்.டீ.) வசூலிக்கிறது. இது விற்பனை நடைபெறும் மாநிலத்தால் வசூலிக்கப்பட்டு, தக்கவைத்துக் கொள்ளப்படுகிறது. மாநிலங்களுக்கு இடையே மேற்கொள்ளப்படும் விற்பனைகளுக்கு IGST விதிக்கப்படும். இங்கே, வரிவிதிப்பு நிகழ்வு என்பது “விற்பனை” என்பதில் இருந்து “சப்ளை” என மாறுகிறது.
சரக்குகள் மாநில எல்லையை கடந்துவிட்டால், அது எல்லையில் உள்ள செக்போஸ்ட்களில் சரிபார்ப்புகள் மற்றும் உறுதிப்படுத்தலுக்கு உட்பட்டது ஆகும்.மேலும், நுழைவு வரிகளானது விதிக்கப்படும், அதை வாங்குபவர், அதாவது உங்கள் வாடிக்கையாளரால் செலுத்தப்பட வேண்டும். சரக்குகள், மாநில எல்லைகளை கடந்துவிட்டால் – ஒப்பீட்டளவில் குறைவான சரிபார்ப்புகள் மற்றும் உறுதிப்படுத்தல்களே இருக்கும், மேலும் நுழைவு வரி எதுவும் விதிக்கப்படாது. இது வாங்குபவர், அதாவது உங்கள் வாடிக்கையாளருக்கான செலவைக் குறைக்கும்.
நீங்கள் உங்கள் B2B வாடிக்கையாளருடன் மாநிலங்களுக்கு இடையேயான விற்பனையை மேற்கொள்ளும்பொழுது, விதிக்கப்படும் சிஎஸ்டீ வரி என்பது அவருக்கு ஒரு செலவாகும். ஏனெனில் – அவர் உள்ளூரில் அதை விற்பனை செய்யும்பொழுது, அவர் செலுத்திய CST வரிக்காக வரி கிரெடிட்டை கோர முடியாது. இதன் விளைவாக, அவர் செலுத்திய CST-ன் மதிப்பை தனது வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கிறார் – இதனால் பொருட்களின் விலை அதிகரிக்கிறது. இதனால், நீங்கள் மற்றும் உங்கள் வாடிக்கையாளர் ஆகிய இருவரும் உள்ளூரில் கொள்முதல் செய்யும் வியாபாரிகளுடன் ஒப்பிடுகையில் விலையில் போட்டியிட முடியாது, இதனால், குறைந்த விலையில் பொருட்களை வழங்க முடியும். சட்டத்தின் விதிமுறைப்படி, உங்கள் B2B வாடிக்கையாளர் என்பவர், மாநிலங்களுக்கு இடையேயான விற்பனைக்கு விதிக்கப்பட்ட IGST-க்கான கிரெடிட்டை கிளைம் செய்ய முடியும், மேலும் மாநிலத்திற்கான தனது ஜி.எஸ்.டீ செலுத்த வேண்டிய பொறுப்புக்கு எதிராக அதைத் தீர்க்க முடியும். இதனால், அவருக்கு எந்தவித கூடுதல் செலவும் ஏற்படாது, இது முடிவில் தனது இறுதி வாடிக்கையாளர்களுக்கான செலவைக் குறைக்கும். எனவே, உள்ளூர் விற்பனையாளர்களுடன் ஒப்பிடுகையில் உங்களுக்கு எந்தவொரு பாதகமான சூழலும் இல்லை, மேலும் அவர்களுடன் எளிதாகப் போட்டியிட முடியும்.
குறைந்த விலைகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, பெரும்பாலான மாநிலங்களுக்கு இடையே விற்பனை செய்யும் விற்பனையாளர்கள், பொதுவாக அவர்கள் செயல்படும் மாநிலங்களில் கிளைகள் / கிடங்குகளை அமைக்கின்றனர் – அதனால் அவர்களிம் வாங்குவோர் சிஎஸ்டீ யின் தாக்குதலை தாங்க வேண்டியதில்லை. இருப்பினும் விற்பனையாளருக்கு, இது கூடுதல் உள்கட்டமைப்பு செலவு என்று பொருள் ஆகும், மேலும், இந்த செலவானது இயக்குவதற்கான செயல்திறனைக் காட்டிலும் இணங்கிச் செல்லும் நடைமுறைக்காக செய்யப்பட்டதாகும். உள்ளீட்டுக் கிரெடிட்கள் தடையின்றி கிடைப்பதன் காரணமாக, மற்றொரு மாநிலத்திலிருந்து விற்கப்படுதல் மற்றும் மாநிலத்திற்குள் விற்பனை செய்யப்படுதல் ஆகிய இரண்டும் வாங்குபவருக்கு சமமானதாகவே இருக்கும். எனவே இணக்கத்திற்காக மட்டுமே, விற்பனையாளர் உள்கட்டமைப்பில் அதிகமாக முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை, – மாறாக, இயக்குவதற்கான செயல்திறனை அதிகரிக்கும் ஒரே நோக்கத்திற்காக கிளைகள் / கிடங்குகளை அமைக்க அவர் இப்பொழுது முடிவு செய்யலாம்.
விளக்கம்

ராம் எண்டர்பிரைசஸ் என்பவர் கர்நாடகாவில் உள்ள ஒரு டீலருக்கு காலணிகளை விற்பனை செய்யும், உத்திரபிரதேசத்தில் உள்ள ஒரு டீலர் ஆவார்.

ஜிஎஸ்டீ-க்கு முன்னர்
ராம் எண்டர்பிரைசஸ் விலைப்பட்டியலை உருவாக்கும்பொழுது:

  • தயாரிப்புப்பொருளின் விலை = ரூ.5000
  • CST @ 2% = ரூ.100
  • இறுதி விலை = ரூ. 5000 + 100 = ரூ.5100

கூடுதலாக, கர்நாடகாவில் உள்ள ஒரு விற்பனையாளர் 2% @ உள்நுழைவு வரி (கர்நாடகாவில் காலணிகளுக்கான சராசரி விகிதங்கள்) செலுத்த வேண்டும் = ரூ.102
கர்நாடகாவில் உள்ள டீலருக்கான மொத்தச் செலவு = ரூபாய் 5100 + ரூபாய் 102 = ரூபாய் 5202

கர்நாடகாவில் உள்ள டீலர் உள்ளூரில் உள்ள ஒரு வாடிக்கையாளருக்கு விற்கும்பொழுது, அவர் ரூபாய் 5202 + இலாபங்கள் + பொருந்தும் வரிகள் (சிஎஸ்டீ மற்றும் நுழைவு வரி ஆகியவற்றுக்கான கிரெடிட் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால், அது வாடிக்கையாளரிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது) என்ற விலையில் காலணிக்களை விற்பனை செய்வார்.

ஜிஎஸ்டீ-யின் கீழ்
ராம் எண்டர்பிரைசஸ் விலைப்பட்டியலை உருவாக்கும்பொழுது:

  • தயாரிப்புப்பொருளின் விலை = ரூ. 5000
  • IGST @ 18% = ரூ. 900
  • இறுதி விலை = ரூபாய் 5000 + ரூபாய் 900 = ரூபாய் 5900

வில் உள்ள டீலர் உள்ளூரில் உள்ள ஒரு வாடிக்கையாளருக்கு விற்கும்பொழுது, அவர் ரூபாய் 5000 + இலாபங்கள் + பொருந்தும் வரிகள் (IGST-க்கான கிரெடிட் அனுமதிக்கப்படுகிறது என்பதால், அது வாடிக்கையாளரிடம் இருந்து வசூலிக்கப்படுவதில்லை) என்ற விலையில் காலணிக்களை விற்பனை செய்வார்
எனவே, ஜிஎஸ்டீ என்பது, சரக்குகளை மாநிலங்களுக்கு இடையே விற்பனை செய்வதற்கான இணக்க நடவடிக்கைகளை எளிதாக்குகிறது, மேலும் அதற்கு ஊக்கமளிக்கிறது. முதலாவதாக, உள்ளீட்டு வரி கிரெடிட் சங்கிலி என்பது மாநிலங்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகளில் தடையில்லாமல் இருக்கும், இது அடுக்கு விளைவுகளை அகற்றுவதற்கு வழிவகுக்கும் – இதனால் விற்பனையாளர் மற்றும் வாங்குபவர் ஆகிய இருவரும் பயனடைவார்கள். இருப்பினும், இந்த முழு சுழற்சியும் தடையில்லாமல் செயல்படுகிறது என்பதை உறுதிப்படுத்த, ஜி.எஸ்.டீ சட்டமானது, வரி விதிப்புக்குள்ளாகும் மாநிலங்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகளில் ஈடுபடும் அனைத்து டீலர்களும், அவர்களின் வருமான அளவு என்னவாக இருந்தாலும், கட்டாய ஜி.எஸ்.டீ பதிவை வலியுறுத்துகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மாநிலங்களுக்கு இடையே விற்பனை செய்பவர்களுக்கு கலப்புத் திட்டம் என்பது ஒரு தேர்வாக இருக்காது.

மற்ற மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவைகள் வழங்குதல்

தற்போதைய முறையில், மாநிலங்களுக்கு இடையே வழங்கப்படும் சேவைகளுக்கு சேவை வரிகள் விதிக்கப்படுகிறது. சேவை வரி என்பது மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்படுகிறது, எனவே அதற்காக பதிவு செய்யப்படுவதும் ஒருங்கிணைக்கப்பட்டு, மையப்படுத்தப்பட்டு உள்ளது.
ஜிஎஸ்டீ, சரக்குகள் மற்றும் சேவைகள் ஆகியவை ஒரேமாதிரி கருதப்படுவதால், மாநிலங்களுக்கு இடையே வழங்கப்படும் சேவைகளுக்கு IGST பொருந்தும். எனினும், ஜிஎஸ்டீ முறையில் சிக்கல் வேறு எங்கோ உள்ளது, வரிவிதிப்பு என்பது சேவைகள் வழங்கப்படும் இடத்தைச் சார்ந்து இருக்கிறது. எனவே, நீங்கள் ஒரு சேவை வழங்குநராக இருந்து, உங்கள் மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்தில் உள்ள ஒரு வாடிக்கையாளருக்கு சேவைகளை வழங்கும்பொழுது, IGST பொருந்தும். இருப்பினும், சேவையின் வகையைப் பொறுத்து வாடிக்கையாளரின் இருப்பிடத்தில், அதாவது வாடிக்கையாளரின் மாநிலத்தின் நீங்கள் இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டால், அது மாநிலத்திற்கு உள்ளேயான சேவை விநியோகமாகக் கருதப்படும்; வேறு வார்த்தைகளில் கூறுவதானால் SGST / UTGST மற்றும் CGST ஆகியவை பொருந்தும், IGST பொருந்தாது. அவ்வாறு நடக்க வேண்டுமென்றால், நீங்கள் வாடிக்கையாளரின் மாநிலத்தில் பதிவு செய்ய வேண்டும்.

விளக்கம்

புதுதில்லியில் பதிவு செய்துள்ள ஒரு CA திரு. பிரசாத் என்பவர் குருகிராம் (ஹரியானா) மற்றும் நொய்டா (உத்திரப் பிரதேசம்) ஆகிய இடங்களில் வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறார் – 3 நகரங்களும் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும் மற்றும் அவை ஒன்றுக்கொன்று மிக அருகில் உள்ளன.

ஹரியானாவில் உள்ள குருகிராம்-ஐ சேர்ந்த தனது வாடிக்கையாளர் 1-க்கு, தொலைதூர முறையில் அவர் ஆலோசனை சேவைகளை வழங்குகிறார்.
உத்திரபிரதேசத்தின் நொய்டாவைச் சேர்ந்த தனது வாடிக்கையாளர் 2-க்கு, அவர் உள்ளக தணிக்கை சேவைகளை வழங்குகிறார். இதற்காக அவர் வாடிக்கையாளரை சந்திக்கிறார் மற்றும் வாடிக்கையாளரின் இடத்திற்குச் சென்று சேவைகளை வழங்குகிறார்.

ஜிஎஸ்டீ-க்கு முன்னர்
Selling goods to customers across states before GST
இந்த சூழலில், 2 அல்லது 3 மாநிலங்களில் அவர் சேவைகளை வழங்கிக் கொண்டிருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல், சேவை வரிக்கென ஒரே ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட, மையப் பதிவு மட்டுமே உள்ளது. மேலும், தற்போதைய முறையில், திரு. பிரசாத் என்பவர் ஒரு ஆண்டுக்கு 2 முறை மட்டுமே சேவை வரியின்கீழ் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.

ஜிஎஸ்டீ-யின் கீழ்
Selling Goods to Customers in Other States_2
ஜிஎஸ்டீயின் கீழ், திரு.பிரசாத் என்பவர் அவரது பதிவு செய்துள்ள இடமான, அவரது சொந்த மாநிலம் டெல்லியில் ஒரு வருடத்தில் 13 முறைகள் (வருடாந்திர ரிட்டர்ன் உட்பட) ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கு பொறுப்பேற்கிறார். ஆனால் இப்பொழுது, அவர் குருகிராம் மற்றும் நொய்டாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகச் சென்று, சேவை செய்ய விரும்பினால், அவர் தற்பொழுது ஹரியானா மற்றும் உ.பி. ஆகியவற்றின்கீழ் பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், அந்த ஆண்டில் 39 ரிட்டர்ன்கள் தாக்கல் செய்ய வேண்டும்! இதனால், ஜிஎஸ்டீ வருவதால், அனைத்து சேவை வழங்குநர்களும் பல்வேறு மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து வருவாய் ஈட்டுவதுடன், பல்வேறு பதிவுகள் மற்றும் பல்வேறு தாக்கல் செய்தல்கள் ஆகியவை போன்ற இணக்க சுமையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இறுதி அறிக்கை

முடிவில், மற்ற மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சரக்குகளை விற்பனை செய்தல் அல்லது சேவைகளை வழங்குதல் என்பது- ஒரு கலவையான பையை போல் தோன்றுகிறது. மாநிலங்களில் உள்ள தடைகள் வணிகரீதியாக கரைந்து, வணிகங்களுக்கு சுதந்திரமாக கிரெடிட் கிடைப்பதால் – மாநிலங்களுக்கு இடையேயான சரக்குகள் விற்பனைக்கான சூழ்நிலை நிச்சயமாக சிறப்பாக உள்ளது என்றாலும் – சேவைகள் வழங்குவது என்று வரும்பொழுது, அதற்கான சூழ்நிலை நேர்மாறாக உள்ளது. ஜிஎஸ்டீ-யின் கீழ், அனைத்து சேவை வழங்குநர்களும், அவர்களின் வாடிக்கையாளர்கள் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நேரடியாக இருந்து சேவைகளைத் தொடர்ந்து வழங்க விரும்பினால், இப்பொழுது ஒரு மையப்படுத்தப்பட்ட பதிவிலிருந்து மாநில வாரியாக பதிவு செய்ய வேண்டும். ஒரு மாநிலத்தில் சேர்ந்துள்ள CGST + SGST / UTGST கிரெடிட்டை, மற்றொரு மாநிலத்தில் செலுத்த வேண்டிய CGST + SGST / UTGST பொறுப்பிற்கு எதிராகப் பயன்படுத்த முடியாமல் இருப்பது என்பது மற்றொரு தடங்கல் ஆகும் – இது பணப்புழக்கத்தைப் பாதிக்கும்.
எனவே, ஜிஎஸ்டீ என்பது நிச்சயமாக நீண்ட காலத்திற்கு பல நன்மைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது என்றாலும், அது கைநிறைய சவால்களுடன் வருவதால், சவால்களைச் சமாளிப்பதுடன், அதிகபட்ச நன்மைக்காக அதை சகித்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

102,174 total views, 7 views today

Pramit Pratim Ghosh

Author: Pramit Pratim Ghosh

Pramit, who has been with Tally since May 2012, is an integral part of the digital content team. As a member of Tally’s GST centre of excellence, he has written blogs on GST law, impact and opinions - for customer, tax practitioner and student audiences, as well as on generic themes such as - automation, accounting, inventory, business efficiency - for business owners.