(English) Language

  • English
  • Hindi
  • Marathi
  • Kannada
  • Telugu
  • Tamil
  • Gujarati

2016, நவம்பர் 8ஆம் நாளன்று இந்திய பிரதமர் 500ரூபாய் மற்றும் 1000ரூபாய் நாணயத்தாள்கள் செல்லாது என்று அறிவித்தார். இச்செய்தி நம்மில் பலருக்கு ஆச்சரியத்தை தந்தது! எனினும், வங்கி கணக்குகள் ஆரம்பித்தல், ஆதார் எண்களை இணைத்தல், வரி பண அளவை குறைக்கும் திட்டம் அறிவித்தல், வரிப்பணம் தக்க தருணத்தில் கட்ட தவறியவர்களுக்கு எச்சரிக்கை வழங்குதல், மற்றும் பல, போன்ற அரசின் தொடர் நடவடிக்கைகளை பற்றி கவனமாய் சிந்திக்கும்போது, இது நன்கு திட்டமிடப்பட்டது என்பதை உங்களால் காணமுடியும்.

நாணயத்தாள்கள் செல்லாது என்பதை தொடர்ந்து, நவம்பர் 20ஆம் தேதியன்று, வங்கி கணக்கில் 2.5லட்சத்திற்கு மேல் பணம் செலுத்தியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுமென்று வருமான வரித் துறை அறிவித்துள்ளது.

இது மூலமாக அரசு மிகவும் தீவிரமாக உள்ளதென்றும், இதற்கு கீழ்ப்படுவதை உறுதிசெய்ய எந்த தைரியமான நடவடிக்கையையும் எடுக்கும் என்பதையும் காட்டுகிறது. மேலும் தகவல் தொழில்நுட்பத்துறை ஆற்றலை கொண்டு ஒரு நாளில் பலதரப்பட்ட வங்கி கிளைகளில் எந்த தனிநபர் 2.5 லட்சத்திற்குமேல் செலுத்தியுள்ளார் என்பதை வருமான வரித்துறை கண்டறிய முடியும். மிக முக்கியமாக, இந்த சட்டத்தை செயல்படுத்த அரசு தகவல் தொழில்நுட்பத்தை முதுகெலும்பாய் கொண்டு செயலாற்ற ஆர்வமாயுள்ளதென்பதை இது காட்டுகிறது.

நாணயத்தாள்கள் செல்லாது என்பது சிறு/குறு தொழில்களை எவ்வாறு பாதித்துள்ளது

பாஸ்கர், சென்னை தி.நகரில். மளிகை கடை நடத்தி வருகிறார் அவரது வணிகம் முக்கியமாக ரொக்கப்பணத்தைக்கொண்டு செயலாற்றுகிறது. அவருக்கு தனது வணிக கணக்குகளை பராமரிக்கும் வழக்கமில்லை. தொலைபேசி வாயிலாகவோ அல்லது வாட்ஸ்ஆப் மூலமாகவோ வரும் ஹோம் டெலிவரி முறை ஆர்டர்களுக்கான கட்டணம் பொருட்களை விநியோகித்தபிறகே பெறமுடியும். அவரது வழக்கமான

வாடிக்கையாளர்கள் சிலர் மாதத்திற்கு ஒருமுறை கணக்கிற்கான பணத்தை வழங்குபவர்களாய் இருக்கிறார்கள். வரி செலுத்துவதற்குமுன்னர் அவரது கணக்காளர் வருடாந்திர அடிப்படையில் அவரது வரியை கணக்கிடுவார்.

நவம்பர் 10 ஆம் தேதி சேமிப்பு வைப்பை செலுத்த பாஸ்கர் வங்கிக்கு சென்றபோது, அதற்கான கணக்குகள் குறித்து விளக்கமளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டார். நடைமுறையில் எந்த கணக்குகளையும் பதியாத நிலையில், அவர் தனது வருமானமாக குறிப்பிட்டிருந்த தொகையைக்காட்டிலும் அதிக பணத்தை வைப்பு வைக்க சென்றது அவருக்கு கடினமான சூழலாய் போனது

ஸ்கர் பணம் மற்றும் ரசீதுகள் குறித்த பதிவுகளை ஒழுங்கான முறையில் பராமரித்து வைத்திருந்தால் அவரது சொந்த கணக்கு புத்தகங்களைக்கொண்டே கணக்காளர் அவரது வரியை கணக்கிட்டிருப்பார். பாஸ்கருக்கும் அவரது கணக்கு புத்தகங்கள்கொண்டு விளக்க எளிதாய் இருந்திருக்கும்.

தினசரி வரவு செலவுகளை பதிவு செய்ய தொடங்குவதே compliant ஆக இருப்பதற்கு முதற்படி ஆகும்.
பரிவர்த்தனைகளை பதிவு செய்யும் ஒழுங்கை கொண்டுவருவதன்மூலம், ஒரு வணிகம், வாங்குவோர், விற்போர், செலுத்தவேண்டியவைகள், வரவுகள், கட்டணங்கள், ரசீதுகள் போன்றவற்றை சரிபார்க்கமுடியும் மற்றும் வங்கி அறிக்கைகளில் அவற்றை ஒத்துப்போக செய்யமுடியும். யாருக்கு பணம் செலுத்தவேண்டுமென்ற சந்தேகம் வருவது இயல்புதான், ஒருவேளை யார் பணம் வழங்கவேண்டும், எதற்கு முன்னுரிமை தேவை, வங்கியில் எவ்வளவு பணம் உள்ளது, அடுத்த சில தினங்களில் எத்தனை கடன்கள் கொடுக்கவேண்டியுள்ளது போன்றவை தெரிந்திருந்தால் அது எளிதாகிப்போகும்.

நீங்கள் விரைவாக இதன் விளைவுகளை புரிந்துகொண்டு சரியான நம்பத்தகுந்த முடிவுகளை எடுக்கும்போது, வணிகத்தின் மாறும் நிலைகள் மற்றும் உறுதியின்மை போன்றவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. கணக்கு புத்தகத்தை வைத்துக்கொள்ளத் தொடங்க எளிதானவழி ஒரு கணக்கியல் மென்பொருளை (accounting software) பயன்படுத்த தொடங்குவதேயாகும். ஒருவேளை உங்கள் வணிகம் இன்னும்

தானியங்கியாக்கப்படவில்லையெனில், முதல் படியாக கணக்கியல் மென்பொருளை பயன்படுத்த தொடங்குவது மிகவும் அறிவுறுத்தப்படுகிறது. இது இன்னும் சில மாதங்களில் வரவிருக்கும் ஜிஎஸ்டி GST க்கு நீங்கள் தயாராக இருக்க உதவும்.

தற்போது நடந்து கொண்டிருக்கும் பண நெருக்கடி காரணமாக, பல வணிகங்கள் பிளாஸ்டிக் அட்டைகள், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஆன்லைன் வங்கிப் பரிமாற்றம் மற்றும் மொபைல் பணப்பைகள் போன்றவற்றின் மூலம் கட்டணங்களை ஏற்றுக்கொள்ள தொடங்கியதுள்ளது. வணிகங்களில் இந்த இணையதள-கட்டண பரிமாற்றங்கள் (e-payments) எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது? வணிகங்கள் மாற்றமடைந்து, இணக்கமானதாய் இருக்க ஏதேனும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயம் உள்ளதா? மேலும் தெரிந்துகொள்ள காத்திருங்கள்!

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

211,710 total views, 76 views today

Avatar

Author: Santosh AR