தற்போதைய வரி விதிப்பு முறையில், வரி விதிக்கத்தக்க ஒரு சேவையை வழங்குவது சேவை வரிக்கு உட்பட்டது. சேவை வரி என்பது மத்திய அரசால் விதிக்கப்படுவது, அது ஒரு சேவையானது மாநிலங்களுக்கு இடையிலானதா அல்லது மாநிலத்துக்குள் நடப்பதா என்பதைக் கணக்கில் கொள்ளாமல் அனைத்துக்கும் விதிக்கப்படும்.

இருப்பினும், ஜிஎஸ்டி-ன் கீழ், ஒரு சேவை மீது விதிக்கப்படும் வரியை வழங்கலுக்கான இடமே தீர்மானிக்கும். ஜிஎஸ்டி என்பது ‘சேருமிடம் அடிப்படையிலான நுகர்வு வரி’ என்ற கருத்தின் அடிப்படையில் அமைந்தது, இதில் வழங்கல் எங்கு பயன்படுத்தப்படுகிறதோ அந்த மாநிலமே வரியைப் பெறும். எனவே, சேவைகளின் வழங்கலுக்கான இடத்தைத் தீர்மானிப்பது முக்கியம் ஆகும்.

சேவைகளின் வழங்கலுக்கான இடத்தைத் தீர்மானிப்பதற்கான விதிகள், சரக்குகளின் வழங்கலுக்கான இடத்தைத் தீர்மானிப்பதற்கான விதிகளிலிருந்து மாறுபட்டவை. சரக்குகளைப் பொறுத்தவரை, சரக்குகளின் நகர்வு வழங்கலின் இடத்தைப் பெறுமளவு தீர்மானிக்கிறது. சேவைகள் என்பது உருவமற்றதாக இருப்பதால், இப்படித்தான் வழங்கப்படும் என்று உறுதியாகக் கூற இயலாது. மேலும், குறிப்பிட்ட சில சேவைகளை வழங்கும் நிகழ்வில், வழங்குபவர் மற்றும் / அல்லது பெறுபவரின் அமைவிடம் நிலையாக இருக்காமல் போகலாம், மேலும் அமைவிடத்தைத் தீர்மானிக்க முடியாமல்கூட போகக்கூடும்.

இந்த வலைப்பூ பதிவில், சேவைகளின் வழங்கலுக்கான இடத்தை எவ்வாறு தீர்மானிப்பது என்பது குறித்து நாம் கலந்துரையாடுவோம்.

GST is a ‘destination based consumption tax’, where tax will accrue to the State where the supply is consumed.Click To Tweet

பதிவு செய்யப்பட்ட ஒரு நபருக்கு ஒரு சேவை வழங்கப்படும் போது

தற்போதைய முறையில், வரி விதிக்கத்தக்க ஒரு சேவை அதே மாநிலத்தில் அல்லது மாநிலத்துக்கு வெளியில் உள்ள ஒரு பதிவு செய்யப்பட்ட நபருக்கு வழங்கப்படும் சமயத்தில், சேவை வரி விதிக்கப்படும்.

உதாரணம்: ஒடிசாவில் உள்ள புவனேஷ் வரை பதிவு செய்யப்பட்ட வணிக இடமாகக்; கொண்ட மணிஷ் டிசைனர்ஸ், தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தை பதிவு செய்யப்பட்ட வணிக இடமாகக் கொண்ட ராஜேஷ் அப்பேரல்ஸ் நிறுவனத்துக்கு பேஷன் டிசைனிங் சேவைகளை வழங்குகிறார்கள். இது வரி விதிக்கத்தக்க ஒரு சேவையாக இருப்பதால் இதன் மீது சேவை வரி @15% (ஸ்வச் பாரத் வரி மற்றும் க்ரிஷ கல்யாண் வரி உட்பட) விதிக்கப்படும்.

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில், எவ்வகையான வரி விதிக்கப்பட வேண்டும் என்பதைக் கண்டறிய வழங்கலுக்கான இடம் கட்டாயம் தீர்மானிக்கப்பட வேண்டும். பதிவு செய்யப்பட்ட ஒரு நபருக்கு (வழக்கமானஃதொகுப்பு முகவர்) வரி விதிக்கத்தக்க ஒரு சேவை வழங்கப்படும் சமயத்தில், சேவையைப் பெறும் நபரின் பதிவு செய்யப்பட்ட வணிக இடமே வழங்கலுக்கான இடமாகும்.

When a taxable service is supplied to a registered person, the registered place of business of the recipient will be the place of supply.Click To Tweet
ஒரே மாநிலத்துக்குள் உள்ள பதிவு செய்யப்பட்ட நபருக்கான வழங்கல்

ஒரே மாநிலத்துக்குள் உள்ள ஒரு பதிவு செய்யப்பட்ட நபருக்கு ஒரு சேவை வழங்கப்படும் சமயத்தில், சிஜிஎஸ்டி மற்றம் எஸ்ஜிஎஸ்டி ஆகிய வரிகள் விதிக்கப்படும்.

உதாரணம்: ஒடிசாவில் உள்ள புவனேஷ் வரை பதிவு செய்யப்பட்ட வணிக இடமாகக்; கொண்ட மணிஷ் டிசைனர்ஸ், ஒடிசாவில் உள்ள கட்டாக்கை பதிவு செய்யப்பட்ட வணிக இடமாகக் கொண்ட முரளி பேஷன்ஸ் நிறுவனத்துக்கு பேஷன் டிசைனிங் சேவைகளை வழங்குகிறார்கள்.

வழங்குனரின் அமைவிடம்: புவனேஷ் வர், ஒடிசா

வழங்கும் இடம்: கட்டாக், ஒடிசா

இது ஒரே மாநிலத்துக்குள் செய்யப்படும் ஒரு வழங்கல் ஆகும், சிஜிஎஸ்டி மற்றம் எஸ்ஜிஎஸ்டி ஆகிய வரிகள் விதிக்கப்படும்.

Intraste supply of services under GST

வேறு மாநிலத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட நபருக்கான வழங்கல்

வேறு மாநிலத்துக்குள் உள்ள ஒரு பதிவு செய்யப்பட்ட நபருக்கு ஒரு சேவை வழங்கப்படும் போது, ஐஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.

உதாரணம்: ஒடிசாவில் உள்ள புவனேஷ் வரை பதிவு செய்யப்பட்ட வணிக இடமாகக்; கொண்ட மணிஷ் டிசைனர்ஸ், தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தை பதிவு செய்யப்பட்ட வணிக இடமாகக் கொண்ட ராஜேஷ் அப்பேரல்ஸ் நிறுவனத்துக்கு பேஷன் டிசைனிங் சேவைகளை வழங்குகிறார்கள்.

வழங்குனரின் அமைவிடம்: புவனேஷ் வர், ஒடிசா

வழங்கும் இடம்: ஹைதராபாத், தெலுங்கானா

இது மாநிலங்களுக்கு இடையிலான வழங்கல் ஆகும், ஐஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.

Services place of supply gst

பதிவு செய்யப்படாத ஒரு நபருக்கு சேவை வழங்கப்படும் சமயத்தில்

தற்போதைய வரி விதிப்பு முறையில், பதிவு செய்யப்படாத ஒரு நபருக்கு சேவை வழங்கப்படும் சமயத்தில், சேவை வரி விதிக்கப்படும். சேவையைப் பெறும் நபர் பதிவு செய்யப்பட்டவரா, பதிவு செய்யப்படாதவரா என்பதைப் பொறுத்து வரி விதிப்பில் மாற்றம் எதுவும் இல்லை.

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில், பதிவு செய்யப்படாத ஒரு சேவை வழங்கப்படும் சமயத்தில், 2 சூழ்நிலைகளுக்கு வாய்ப்பு உள்ளது:

சூழ்நிலை-1: சேவையைப் பெறும் நபரின் முகவரி வழங்குனரின் பதிவேடுகளில் உள்ளது.

சூழ்நிலை-2: சேவையைப் பெறும் நபரின் முகவரி வழங்குனரின் பதிவேடுகளில் காணப்படவில்லை

சூழ்நிலை 1: பதிவு செய்யப்படாத ஒரு நபருக்கு சேவை வழங்கப்படும் சமயத்தில், சேவையைப் பெறுபவரின் முகவரி வழங்குனரின் பதிவேடுகளில் காணப்பட்டால், வழங்குனரின் பதிவேடுகளில் உள்ள பெறுபவரின் அமைவிடமே வழங்கலுக்கான இடமாகும்.

When a service is supplied to an unregistered person whose address exists in the supplier’s records, the place of supply will be the location of the recipient in the supplier’s recordsClick To Tweet
அதே மாநிலத்துக்குள் வழங்கல்

பதிவு செய்யப்படாத ஒரு நபருக்கு சேவை வழங்கப்படும் சமயத்தில், வழங்குனரின் பதிவேடுகளில் காணப்படும் சேவையைப் பெறுபவரின் முகவரி அதே மாநிலத்துக்குள் இருப்பின், விதிக்கப்படும் வரிகள் சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டி ஆகும்.

உதாரணம்:ஒடிசாவில் உள்ள புவனேஷ் வரை பதிவு செய்யப்பட்ட வணிக இடமாகக்; கொண்ட மணிஷ் டிசைனர்ஸ், பதிவு செய்யப்படாத ஒரு முகவரான ரமேஷ் கிளாத்திங் நிறுவனத்துக்கு பேஷன் டிசைனிங் சேவைகளை வழங்குகிறார். மணிஷ் டிசைனர்ஸ் அவர்களின் பதிவேடுகளின்படி ரமேஷ் கிளாத்திங் நிறுவனத்தின் முகவரி ஒடிஷhவில் உள்ள பூரி ஆகும்.

வழங்குனரின் அமைவிடம்: புவனேஷ் வர், ஒடிசா

வழங்கும் இடம்: பூரி, ஒடிசா

இது அதே மாநிலத்துக்குள் வழங்கல் ஆகும், விதிக்கப்படும் வரிகள் சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டி ஆகும.

GST on services to unregistered person

வேறு மாநிலத்துக்கு வழங்கல்

பதிவு செய்யப்படாத ஒரு நபருக்கு சேவை வழங்கப்படும் சமயத்தில், வழங்குனரின் பதிவேடுகளில் காணப்படும் சேவையைப் பெறுபவரின் முகவரி வேறு மாநிலத்தில் இருப்பின், விதிக்கப்படும் வரிகள் ஐஜிஎஸ்டி ஆகும்.

உதாரணம்: ஒடிசாவில் உள்ள புவனேஷ் வரை பதிவு செய்யப்பட்ட வணிக இடமாகக்; கொண்ட மணிஷ் டிசைனர்ஸ், பதிவு செய்யப்படாத ஒரு முகவரான லட்சுமி அப்பேரல்ஸ் நிறுவனத்துக்கு பேஷன் டிசைனிங் சேவைகளை வழங்குகிறார். மணிஷ் டிசைனர்ஸ் அவர்களின் பதிவேடுகளின்படி லட்சுமி அப்பேரல்ஸ் நிறுவனத்தின் முகவரி மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தா ஆகும்.

வழங்குனரின் அமைவிடம்: புவனேஷ் வர், ஒடிசா

வழங்கும் இடம்: கொல்கத்தா, மேற்கு வங்காளம்

இது மாநிலங்களுக்கு இடையிலான வழங்கல் ஆகும், ஐஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.

Example of GST Interstate Supply of Services

சூழ்நிலை-2: பதிவு செய்யப்படாத ஒரு நபருக்கு சேவை வழங்கப்பட்டு, சேவையைப் பெறுபவரின் முகவரி வழங்குனரின் பதிவேடுகளில் காணப்படவில்லை எனில், வழங்குனரின் அமைவிடம் வழங்கலுக்கான இடமாகும்.

உதாரணம்: ஒடிசாவில் உள்ள புவனேஷ் வரை பதிவு செய்யப்பட்ட வணிக இடமாகக்; கொண்ட மணிஷ் டிசைனர்ஸ், ஒரு வாடிக்கையாளருக்கு பேஷன் டிசைனிங் சேவைகளை வழங்குகிறார்கள், அந்த வாடிக்கையாளரின் முகவரி அவர்களின் பதிவேடுகளில் காணப்படவில்லை.

வழங்குனரின் அமைவிடம்: புவனேஷ் வர், ஒடிசா

வழங்கும் இடம்: புவனேஷ் வர், ஒடிசா

இது அதே மாநிலத்துக்குள் வழங்கல் ஆகும், விதிக்கப்படும் வரிகள் சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டி ஆகும்.

Supply of services in GST

குறிப்பு: ஜிஎஸ்டி-ல், சேவைகள் வழங்கும் ஒரு நபருக்கு தொகுப்பு முகவராகப் பதிவு செய்யத் தகுதி கிடையாது. இருப்பினும், ஜிஎஸ்டி கவுன்சில் 4 மார்ச் ’17 அன்று நடைபெற்ற தனது 11வது கூட்டத்தில், வருடாந்திர விற்றுமுதல் ரூ.50 இலட்சத்துக்கும் குறைவாக உள்ள சிறிய ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றம் தாபாக்கள் தொகுப்பு முகவர்களாகப் பதிவு செய்யலாம் என முடிவெடுத்தது. இது ஜிஎஸ்டி சட்டத்தில் இன்னும் சேர்க்கப்படவில்லை.

வழங்கலுக்கான இடத்தைத் தீர்மானிப்பதற்கான பொதுவான விதிகள் உள்ளன. இருப்பினும், குறிப்பிட்ட சேவைகளின் வழங்கலுக்கான இடத்;தைத் தீர்மானிப்பதற்கான குறிப்பிட்ட விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை குறித்து வரவிருக்கும் வலைப்பூ பதிவுகளில் நாம் கூறவுள்ளோம்.

அடுத்து வர உள்ளது

அசையாச் சொத்து தொடர்பான சேவைகளின் வழங்கலுக்கான இடங்கள்

எங்களுக்கு உங்கள் உதவி தேவை
Pகீழே உள்ள கருத்துரைகளைப் பயன்படுத்தி இந்த வலைப்பூ தொடர்பான உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளவும். மேலும் நீங்கள் மேலும் அறிந்துகொள்ள விரும்பும் ஜிஎஸ்டி தலைப்புகள் குறித்து எங்களுக்குத் தெரியப்படுத்தவும், அதை எங்கள் பொருளடக்கத்தில் சேர்ப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியே.

பயனுள்ளதாக இருந்ததா? கீழேயுள்ள சமூகப் பகிர்வுப் பொத்தான்களைப் பயன்படுத்தி மற்றவர்களுடன் பகிரவும்.

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

104,377 total views, 92 views today