விற்பனை செய்யப்பட்ட சரக்குகள், ஏற்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுவது , வணிகத்தில் பொதுவாக நிகழக்கூடிய ஒன்று. தற்போதைய சூழலில் , குறிப்பிட்ட கால வரையறைக்குள் , ஏற்கப்படாத சரக்குகள் திருப்பி அனுப்பபட்டால் , அவ்வாறு திருப்பி அனுப்பபட்ட சரக்குகளின் மதிப்பை மொத்த விற்பனை மதிப்பிலிருந்து குறைத்துக் கொள்ளலாம். வரியிலிருந்து கழிக்கப்பட வேண்டிய தொகையை கழித்துக் கொள்வதற்கு உரிய கால அளவு மாநிலத்திற்கு மாநிலம் வேறுப்பட்டாலும் , அது பொதுவாக விற்பனை தேதியிலிருந்து 6 மாதம் என்று கொள்ளலாம்.

மறைமுக வரிவிதிப்பில் பெரும் மாற்றமும் சீர்திருத்தமுமான சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் GST ஜூலை 1 , 2017 முதல் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரக்குகளை விநியோகிப்பது வரிகளை கவர்ந்து இழுக்க கூடிய ஒரு செயல்பாடு.சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைபடுத்தப்படுவதற்கு முன்பு விற்கப்பட்ட சரக்குகள், அது நடைமுறைபடுத்தப்பட்ட பின்பு ஏற்கப்படாமல் திருப்பி அனுப்பபடும் சூழலில் , சரக்கு மற்றும் சேவை வரி விதிகள் கோடிட்டு காட்டும் அம்சங்களை வணிக நிறுவனங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவற்றையும் படிக்கவும்

சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைபடுத்துவதற்கான வழிமுறைகள் : பதிவு செய்யப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு.

சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைபடுத்துவதற்கான வழிமுறைகள் : வரவு உள் வைப்பு முறையை என்னிடம் இருக்கின்ற இறுதி சரக்கு இருப்பின் மதிப்பில் பயன்படுத்தலாமா?

சரக்கு மற்றும் சேவை வழங்கல் : இதன் பொருள் என்ன?

நீங்கள் கேட்க நினைக்கும் சில கேள்விகள்

 • வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள பதிவு செய்யப்பட்டுள்ள நபர் வரி விதிக்கப்பட்டுள்ள சரக்குகளை ஏற்காமல் திருப்பி அனுப்பினால் நிலை என்னாகும்?
 • பதிவு செய்யப்படாத நபர் வரி விதிக்கப்பட்டுள்ள சரக்குகளை ஏற்காமல் திருப்பி அனுப்பினால் நிலை என்னாகும்?
 • தற்போதைய சூழலில்(சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையில் இல்லாத) வரி விலக்கு பெற்றுள்ள சரக்குகளை ஏற்காமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையில் உள்ள காலத்தில் அதற்கு வரி விதிக்கப்பட்டு இருக்கன்றது.அப்போது நிலை என்னவாகும்?

எளிதாக புரிந்துக் கொள்ள , இவற்றை நாம் கீழ் கானும் முறையில் வகைப்படுத்திக் கொள்வோம்:

 • வரி விதிக்கப்பட்டுள்ள சரக்குகள் ஏற்கப்படாமல் திருப்பி அனுப்ப படுதல்
 • வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள சரக்குகள் ஏற்கப்படாமல் திருப்பி அனுப்ப படுதல்

வரி விதிக்கப்பட்டுள்ள சரக்குகள் ஏற்கப்படாமல் திருப்பி அனுப்ப படுதல்

கீழ் கானும் சூழ்நிலையை புரிந்துக் கொள்ள முயல்வோம்.சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைபடுத்தப்படுவதற்கு முன்பு வரி விதிக்கப்பட்டு உள்ள சரக்குகள் விற்கப்பட்டு உள்ளன.சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைபடுத்தப்பட்ட பின் அவை ஏற்கப்படாமல் திருப்பி அனுப்ப படுகின்றன. சரக்குகளை ஏற்காமல் திருப்பி அனுப்பியவர் பதிவு செய்யப்பட்ட கட்டாயம் வரி செலுத்த வேண்டிய நபராக அல்லது பதிவு செய்யப்படாத நபராக இருக்கலாம்

சூழ்நிலை விளக்கம் எடுத்துக் காட்டு ஆக வரி விதிக்கப்படுதல்
சரக்குகளை ஏற்காமல் திருப்பி அனுப்பியவர் பதிவு செய்யப்பட்டவராகவும் பதிவு செய்யப்பட்ட கட்டாயம் வரி செலுத்த வேண்டிய நபர் வரி விதிக்கப்பட்டு உள்ள சரக்குகள் ஏற்காமல் திருப்பி அனுப்புவது சரக்கு வினியோகமாக கருதப்பட்டு அதன் மீது சரக்கு மற்றும் சேவை வரி போடப்படும்.இது ஏன் என்றால் , சரக்கு கொள்முதல் தேதி அன்று அவர் செலுத்திய வரி, உள் வைப்பு வரி வரவாக ஏற்றுக் கொள்ளப்பட்டு பின்பு பயன் படுத்தவும் பட்டு இருக்கும் அல்லது உள் வைப்பு வரி வரவாக சரக்கு மற்றும் சேவை வரி-க்கு GST-க்கு முன் எடுத்துச் செல்லப்படும்.
GST யின் கீழ் சரக்குகள் திருப்பி அனுப்புதல் என்பது , சரக்குகளை திருப்பி அனுப்பும் அதற்கு GST வரி விதிக்க வேண்டும். விற்பனை சரக்குகள் திரும்பியதற்கு செலுத்தப்பட்ட GST வரி , சரக்குகளை முதலில் விற்பனை செய்தவருக்கு உள் வைப்பு வரி வரவாக அனுமதிக்கப்படும்.
 

ரவிந்த்ரா ஆட்டோமொபைல்ஸ் உதிரி பாகங்களை விற்பனை செய்ய பதிவு செய்யப்பட்ட வணிக நிறுவனம்.கர்நாடகாவில் அமைந்துள்ளது. . ஜூன் 15 , 2017 அன்று ரவிந்த்ரா ஆட்டோமொபைல்ஸ் 30 எண்ணிக்கையிலான உதிரி பாகங்களை கர்நாடகாவில் பதிவு செய்யப்பட்ட இன்னொரு வணிக நிறுவனமான ராஜேஷ் ஆட்டோ பார்ட்ஸிற்கு ரூ 1,00,000 த்திற்கு வாட் வரி 14.5% – உடன் விற்பனை செய்தது. ஜூலை 5 , 2017 அன்று , ராஜேஷ் ஆட்டோ பார்ட்ஸ நிறுவனம் 15 எண்ணிக்கையிலான உதிரி பாகங்களை ஏற்காமல் ரவிந்த்ரா ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பியது.

ராஜேஷ் ஆட்டோ பார்ட்ஸால் திருப்பி அனுப்பட்ட சரக்குகள் , சரக்கு விற்பனையாகவே கருதப்படும்.அதற்கு கட்டாயம் GST வரி வசூல் செய்ய வேண்டும். . எனவே , கொள்முதல் திருப்பத்தால் ராஜேஷ் ஆட்டோ பார்ட்ஸ் GST வரி 18% வசூல் செய்யும்.
வரி விதிக்கப்பட்டுள்ள சரக்குகளை வாங்கிய பதிவு செய்யப்படாத நபர் திருப்பி அனுப்புதல் வரி விதிக்கப்பட்டுள்ள சரக்குகளை வாங்கிய பதிவு செய்யப்படாத நபர் திருப்பி அனுப்பினால் , தற்போதைய சூழலில் , அதை முதலில் விற்பனை செய்தவருக்கு , விற்கும் போது அவர் செலுத்திய வரியை அவர் திரும்ப கேட்டு பெற உரியவராவார்.. செலுத்திய வரியை திரும்ப கேட்டு பெற கீழ் கானும் அவர் அளித்துள்ள கோரிக்கை கீழ் கானும் நிலைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
1. 1.திருப்பி அனுப்பப்பட்டுள்ள சரக்குகள் ஆரம்பத்தில் விற்பனை செய்யப்பட்ட தேதி, GST நடைமுறைபடுத்தப்பட்ட தேதியிலிருந்து முன் 6 மாதங்களுக்கு மேல் இருக்க கூடாது.
2. GST நடைமுறைபடுத்தப்பட்ட தேதியிலிருந்து பின் 6 மாதங்களுக்குள்ளாக சரக்குகள் திருப்பி அனுப்பப்பட்டு இருக்க வேண்டும்.
ரவிந்த்ரா ஆட்டோமொபைல்ஸ் உதிரி பாகங்களை விற்க பதிவு செய்யப்பட்ட வணிக நிறுவனம்.கர்நாடகாவில் அமைந்துள்ளது. ஜூன் 25 , 2017 அன்று ரவிந்த்ரா ஆட்டோமொபைல்ஸ் ஓர் உதிரி பாகத்தை On 25th June, 2017, Ravindra Automobiles sold a spare part worth Rs. அதன் வாடிக்கையாளர் திரு.குமாருக்கு ரூ 10,000 த்திற்கு வாட் வரி @ 14.5% உடன் விற்றது.
ஜூலை 2 , 2017 அன்று திரு.குமார் வாங்கிய உதிரி பாகத்தை திருப்பி அனுப்பினார்.
ரவிந்த்ரா ஆட்டோமொபைல்ஸ்Ravindra Automobiles will be eligible for a refund of Rs. ரூ 1,450 ஐ திரும்ப பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். ஏன் தகுதியுடையவர் ஆகிறார் என்றால் , விற்பனை தேதி , GST நடைமுறை தேதியிலிருந்து முன் 6 மாதங்களுக்குள் இருக்கிறது. சரக்கு திருப்பி அனுப்பப்பட்ட தேதி , GST நடைமுறை தேதியிலிருந்து பின் 6 மாதங்களுக்குள் இருக்கிறது.

வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள சரக்குகள் ஏற்கப்படாமல் திருப்பி அனுப்ப படுதல்

கீழ் கானும் சூழ்நிலையை எண்ணிப்பாருங்கள். வரி விலக்கு பெற்றுள்ள சரக்கு GST நடைமுறைபடுத்தப்படுவதற்கு முன் விற்கப்படுகிறது.ஆனால் GST நடைமுறைக்கு பின் இந்தப் பொருளுக்கு வரி விதிக்கப்பட்டு இருக்கிறது.ஏற்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுகிறது.

சூழ்நிலை விளக்கம எடுத்துக் காட்டு ஆக எடுத்துக் காட்டு ஆக
சரக்குகளை ஏற்காமல் திருப்பி அனுப்பியவர் பதிவு செய்யப்பட்டவராகவும் கட்டாயம் வரி செலுத்த வேண்டிய நபராகவும் இருத்தல் தற்போதைய சூழலில் விற்கப்பட்டு இருக்கும் வரி விலக்கு பெற்றுள்ள சரக்குகள் , GST நடைமுறைக்கு பின் திருப்பி அனுப்பப்பட்டால் அதன் மீது எந்த வரியும் சுமத்தப்படாது.திருப்பி அனுப்பப்படாது. கீழ் கானும் சூழ்நிலைகளுக்கு இது பொருந்தும்:
1. 1.திருப்பி அனுப்பப்பட்டுள்ள சரக்குகள் ஆரம்பத்தில் விற்பனை செய்யப்பட்ட தேதி, GST நடைமுறைபடுத்தப்பட்ட தேதியிலிருந்து முன் 6 மாதங்களுக்கு மேல் இருக்க கூடாது.
2.GST நடைமுறைபடுத்தப்பட்ட தேதியிலிருந்து பின் 6 மாதங்களுக்குள்ளாக சரக்குகள் திருப்பி அனுப்பப்பட்டு இருக்க வேண்டும்.
  1. ஜூன் 15 , 2017 அன்று ரவிந்த்ரா ஆட்டோமொபைல்ஸ் வாட் வரி விலக்கு பெற்ற பொருள் ஒன்றை ரூ 1,00,000, த்திற்கு விற்றது.ஜூலை 20,2017 அன்று அப்பொருட்கள் ரவிந்த்ரா ஆட்டோமொபைல்ஸ்க்கு திருப்பி அனுப்பப்பட்பட்டன.
  2. ஜூன் 15 , 2017 அன்று ரவிந்த்ரா ஆட்டோமொபைல்ஸ் . வாட் வரி விலக்கு பெற்ற பொருள் ஒன்றை ரூ 1,00,000, த்திற்கு விற்றது. ஜனவரி 20,2018 அன்று அப்பொருட்கள் ரவிந்த்ரா ஆட்டோமொபைல்ஸ்க்கு திருப்பி அனுப்பப்பட்பட்டன.

 

1.
  1.இந்த சரக்கு உள் திருப்பத்திற்கு எந்த வரியும் செலுத்த தேவையில்லை. ஏன் செலுத்த தேவையில்லை என்றால் , விற்பனை தேதி , GST நடைமுறை தேதியிலிருந்து முன் 6 மாதங்களுக்குள் இருக்கிறது. சரக்கு திருப்பி அனுப்பப்பட்ட தேதி , GST நடைமுறை தேதியிலிருந்து பின் 6 மாதங்களுக்குள் இருக்கிறது.. 2.இந்த சரக்கு உள் திருப்பத்திற்கு வரி செலுத்தப்பட வேண்டும். ஏன் என்றால் ,இந்த சரக்கு உள் திருப்ப பட்ட தேதி GST நடைமுறை தேதியிலிருந்து பின் 6 மாதங்களுக்குள் இல்லை
வரி விதிக்கப்பட்டு இருக்கும் சரக்குகள் பதிவு செய்யப்படாத நபரால் திருப்பி அனுப்பப்படுகின்றன தற்போதைய சூழலில் விற்கப்பட்டு இருக்கும் வரி விலக்கு பெற்றுள்ள சரக்குகள் ,GST நடைமுறைக்கு பின் பதிவு செய்யப்படாத நபரால் திருப்பி அனுப்ப பட்டால் அந்த சரக்கு உள் திருப்பத்திற்கு எந்த வரியும் செலுத்த தேவையில்லை. ஜூன் 25 , 2017 அன்று ரவிந்த்ரா ஆட்டோமொபைல்ஸ் அதன் வாடிக்கையாளர் திரு.குமாருக்கு. வாட் வரி விலக்கு உடைய சரக்கை ரூ 10,000 த்திற்கு விற்றது.
ஜூலை 2 , 2017 அன்று திரு.குமார் வாங்கிய சரக்கை ரவிந்த்ரா ஆட்டோமொபைல்ஸ்க்குதிருப்பி அனுப்பினார்.
.இந்த சரக்கு உள் திருப்பத்திற்கு எந்த வரியும் செலுத்த தேவையில்லை.

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

69,037 total views, 26 views today