ஜிஎஸ்டி இங்கே உள்ளது. சுதந்திரம் பெற்ற பிறகு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பொருளாதார மற்றும் வரி சீர்திருத்தத்தை நாடு முழுவதும் வரவேற்கும் சமயம், இங்கே உங்களுக்கான சரிபார்ப்பு பட்டியல் – இதனால் நீங்கள் எளிதாக ஜிஎஸ்டிக்கு மாறலாம்.

இங்கே ஒரு தடையற்ற மற்றும் பயனுள்ள மாறுதலை பெற நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கியமான விஷயங்களை இங்கே காணலாம் ஜிஎஸ்டிக்கு

1. பதிவு மாற்றம்

தற்போதைய வரிவிதிப்பு முறையில் மாநில வேட் வரி, மத்திய கலால் வரி, சேவை வரி போன்றவற்றின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள மற்றும் ஒரு செல்லுபடியாகும் பேனை (PAN) கொண்டுள்ள, எந்தவொரு டீலரும் – படிவம் ஜிஎஸ்டி ஆஈஜி-25 இல் ஜிஎஸ்டியில் பதிவின் ஒரு தற்காலிக சான்றிதழ் வழங்கப்படும். தற்காலிக பதிவு சான்றிதழின் பிரகடனத்தை வெளியிடுவதன் மூலம், டீலருக்கு 90 நாட்களுக்குள் பதிவு செய்யப்படும். இக்காலத்திற்குள் பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்கள் படிவம் ஜிஎஸ்டி ஆர்ஈஜி-24 இல் சமர்ப்பிக்கப்பட வேண்டும். வழங்கப்பட்ட தகவல்கள் முழுமையானதாகவும் திருப்திகரமாகவும் இருந்தால், இறுதி பதிவு சான்றிதழ் படிவம் ஜிஎஸ்டி ஆர்ஈஜி-06 இல் வழங்கப்படும். மாறுதலின்போது ஒரு வரிசெலுத்தக்கூடிய நபர் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டியதில்லை, ஆனால் இதற்கு முன்னால் பதிவு செய்யப்பட்டிருந்தால் (மத்திய மற்றும் மாநிலச் சட்டம்), அவர் ஜிஎஸ்டி ஆர்ஈஜி-28 படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம் தற்காலிக பதிவுகளை ரத்து செய்ய ஒரு வாய்ப்புள்ளது – இது ஜிஎஸ்டியின் அமலாக்கத்தின் 30 நாட்களுக்குள் அதாவது 31 ஜூலை, 2017 ஆம் ஆண்டுக்குள் செய்யப்பட வேண்டும்.

மேலும் வாசிக்க: ஜிஎஸ்டிக்கு மாறுதல்: பதிவுசெய்த வணிகங்களுக்கு

2. கடைசி வருவாயின் ஐடிசி தற்போதைய வரிவிதிப்பு முறையில் தாக்கல் செய்யப்படுதல்

ஜூன் மாதம் 30 ஆம் தேதி முடிவடைந்த மாதம் / காலாண்டில், பதிவு செய்யப்பட்டுள்ள வரிசெலுத்தும் நபர், தனது மின்னணு பலன் பதிவேட்டில், முந்தைய காலாண்டில் வழங்கப்பட்ட, திரும்ப பெறப்பட்ட சென்வாட், வேட் வரி மற்றும் நுழைவு வரிகளின் தொகையின் பலனை பெற தகுதி பெறுவார். இருப்பினும், 2017 ஆம் ஆண்டின் ஜூலை 1 ஆம் தேதி, அதாவது ஜிஎஸ்டி யின் செயல்பாட்டின் தேதிக்கு முந்தைய 6 மாத காலத்திற்குள்ளேயே உள்ள அனைத்து சட்டங்களின் தேவைப்படும் அனைத்து வரிகளையும் டீலர் செலுத்தியிருந்தால் மட்டுமே அவரால் ஐடிசியை பெற முடியும்.

மேலும் படிக்க: ஜிஎஸ்டிக்கு மாறுதல்: நான் இறுதி கையிருப்பு மீதான உள்ளீட்டு பலனை நான் பெற முடியுமா?

3. மூலதன சரக்குகள் மீது செலுத்தப்படும் வேட் வரி/தீர்வை மீதான் ஐடிசி

தற்போது, மூலதன சரக்குகள் வாங்குவதற்கு எதிரான ஐடிசி, உடனடியாக கிடைக்கவில்லை, அதுவும் குறிப்பிட்ட சில மூலதனச் சரக்குகளுக்கு மட்டுமே கிடைக்கிறது. 2004 ஆம் ஆண்டின் சென்வாட் பலன் விதிகளின் படி, முதல் வருடத்தில் 50% பலன் மட்டுமே பெற முடியும், எஞ்சியுள்ள 50% பலன் அடுத்த நிதி ஆண்டுகளில் எதிலாவது கிடைக்கலாம். இதேபோல், பெரும்பாலான மாநிலங்களில், பல மாதங்களுக்குள் வழங்கப்படும் தவணை வடிவில் மூலதன சரக்குகளுக்கான ஐடிசி கிடைக்கிறது; மற்றவற்றில், ஐடிசி மூலதன சரக்குகள் வணிக பயன்பாட்டிற்கு வரும்போது மட்டும் கிடைக்கும். ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் உள்ள முக்கிய மாற்றங்களில் ஒன்று, ஐடீசி ஆக மூலதனப் சரக்குகள் மீதான வாட் / தீர்வை பலனின் முழு இருப்பை பெற ஒரு டீலர்களின் திறமையாகும்.

இருப்புகளில் சரக்குகளின் மீதான ஊதியம் வழங்கப்படும்

அனைத்து மாறுதல் விதிகளிலும் மிகவும் வலியுறுத்தி கூறப்படுவது இருப்புகளில் உள்ள சரக்குகளுக்காக தீர்வை வரி செலுத்தப்படும் என்பதாகும். இங்கு முதன்மையாக 3 நிகழ்வுகள் உள்ளன:

  • நிகழ்வு 1: தீர்வை விலைவிவரப் பட்டியல் கிடைக்கும் – – உற்பத்தியாளர்கள், 1வது நிலை மற்றும் 2வது நிலை டீலர்களிடம் கொள்முதல் செய்த டீலர்கள் தீர்வை வரி குறிப்பிடப்பட்ட விலைவிவரப் பட்டியலைக் கொண்டிருப்பார்கள், மேலும் செலுத்தப்படும் தீர்வைப் பலனின் 100% எடுத்துக்கொள்ளப்படலாம்..
  • நிகழ்வு 2: பலன் பரிமாற்ற ஆவணம் – சில்லறை விற்பனையாளர்களாக உள்ள டீலர்கள் மற்றும் மேலேயுள்ளவை தவிர்த்த தரப்பினரிடமிருந்து கொள்முதல் செய்துள்ளவர்கள், தீர்வை வரியை குறிப்பிடும் ஏதேனும் விலைவிவரப் பட்டியலை கொண்டிக்க மாட்டர்கள், ஏனெனில் அவை செலவாக அவரால் ஏற்றுக்கொள்ளப்படும். இருப்பினும், உற்பத்தியாளர் வணிகப் பெயரைக் கொண்டுள்ள, உருப்படி ஒன்றுக்கு ரூ. 25000-க்கு அதிகமான மதிப்பைக் கொண்டுள்ள சரக்குகளுக்கு, சரிபார்க்கக்கூடிய சரக்குப்பட்டியல் மற்றும் வழங்கல் சங்கிலிப் பதிவுகள் பராமரிக்கப்பட்டிருந்தால், ஒரு உற்பத்தியாளரால் இம்மாதிரியான ஒரு ஆவணம் வழங்கப்படலாம்.
  • நிகழ்வு 3: தீர்வை விலைவிவரப் பட்டியல் அல்லது சிடீடி கிடைக்கவில்லை – இத்தகைய சூழ்நிலையில், ஒரு டீலர் ஜிஎஸ்டியின் கீழ் வெளிநோக்கிய வழங்கல்கள் மீது 60% சிஜிஎஸ்டி உள்ளீட்டு வரிப் பலனை பெறலாம், இதில் சிஜிஎஸ்டி வீதத்தில் 9% அல்லது அதற்கும் அதிகமான (அதாவது ஜிஎஸ்டி விகிதம் 18% அல்லது அதற்கு அதிகமாக) இருக்கும், மேலும் நிபந்தனையற்ற முறையில் முன்னதாக விலக்கு செய்யப்படாத இருப்புகள் மீது, ஆறு மாத காலத்திற்கு பிற நிலைகளில் ஜிஎஸ்டியின் கீழ் வெளிநோக்கிய வழங்கல்கள் மீது 40% சிஜிஎஸ்டி செலுத்தப்படும். மாநிலங்களுக்கு இடையேயான வழங்கல்கள் எனில், செலுத்தப்படும் ஐஜிஎஸ்டி மீது அனுமதிக்கப்படும் பலன் முறையே 30% மற்றும் 20% ஆகும்..

இந்த நிகழ்வுகளை கணக்கில் கொள்ளாமல், தீர்வை வரியின் பலனை பெற தகுதியுள்ள அனைத்து பதிவுசெய்யப்பட்டுள்ள நபர்களும், தொண்ணூறு நாட்களுக்குள் பொதுவான போர்ட்டலில் முறையாக கையெழுத்திடப்பட்ட, படிவம் ஜிஎஸ்டி ட்ரான்-1-ல் மின்னணுரீதியாக ஒரு அறிவிப்பை சமர்ப்பிக்க வேண்டும்.

5. மாறுதலில் சரக்குகள் மீதான பலன்

ஜிஎஸ்டிக்குப் பின் பெறப்பட்ட சரக்குகள் / சேவைகளில் செலுத்தப்பட்ட மத்திய / மாநில வரிகளின் (தற்போதைய வரிவிதிப்பு முறையில் பொருந்தக்கூடிய) உள்ளீட்டு வரி பானை ஒரு பதிவு செய்துள்ள வரி செலுத்துபவர் கோரலாம். நிபந்தனை என்னவென்றால் ஜிஎஸ்டி செயல்படுத்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் கணக்குகளின் புத்தகங்களில் விலைவிவரப் பட்டியல் பதிவு செய்யப்பட வேண்டும். இருப்பினும், 30 நாட்கள் கொண்ட உண்மையான காலகட்டம், போதுமான காரணங்களின் அடிப்படையில், 30 நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம். பதிவு செய்யப்பட்டுள்ள வரிக்குட்பட்ட நபர், எடுத்துக்கொள்ளப்படும் பலன் தொடர்பான ஒரு அறிக்கை அல்லது சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிப்பார்.

இந்த கட்டுரை, தேஜஸ் கோயங்காவின் நிறைவேற்று இயக்குனரான Tally Solutions எழுதியது

வெளியிடப்பட்ட
தி எகனாமிக் டைம்ஸ்

 

பங்களிப்பாளர்கள்: Pugal T மற்றும் Pramit Pratim Ghosh

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

52,262 total views, 16 views today