கணக்குகள் மற்றும் பதிவேடுகள் என்பது எந்தவொரு நிறுவனத்திற்கும் நிதிசார்ந்த அறிக்கையிடலுக்கான தரவுகளின் முக்கிய ஆதாரமாக இருக்கின்றன. நமது நாட்டில் உள்ள நேரடி மற்றும் மறைமுக வரியின் சட்டப்படி, ஒரு குறிப்பிட்ட முறையில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பாதுகாக்கப்பட வேண்டும்.இந்த கணக்குகள் மற்றும் பதிவுகள் என்பது ஒவ்வொரு சட்டத்தின்கீழ் வரி செலுத்துவோர்களால் தாக்கல் செய்யப்பட ரிட்டர்ன்களுக்கு அடிப்படையாக அமைகின்றன.

தற்போதைய முறை

தற்போதைய மறைமுக வரிவிதிப்பு முறையில், வழக்கமான கணக்குப் புத்தகங்கள் தவிர, ஒவ்வொரு வரிச் சட்டமும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பரிவர்த்தனைகளின் சில கணக்குகள் மற்றும் பதிவுகளை நிர்வகிப்பதை கட்டாயமாக்குகிறது.

கலால் வரியின்கீழ, ஆர்ஜி-1 பதிவேடு (கலால் வரிவிதிப்புக்குள்ளாகும் சரக்குகளின் தினசரி இருப்புக் கணக்கு) படிவம் IV பதிவேடு (மூலப்பொருள் பெறுதல் அல்லது வழங்கல் பதிவேடு), விலைப்பட்டியல் புத்தகம் மற்றும் பணிப் பதிவேடு ஆகியவை பராமரிக்கப்பட வேண்டியப் பொதுவான பதிவேடுகள் ஆகும்.

சேவை வரியின்கீழ் , , பில் பதிவேடு, இரசீது பதிவேடு, பற்று / கடன் குறிப்புகள் பதிவேடு, CENVAT கிரெடிட் பதிவேடு ஆகியவை பரிந்துரைக்கப்பட்ட பதிவேடுகளில் உள்ளடங்கியவை ஆகும்.
வாட் வரியின்கீழ், கொள்முதல் பதிவேடுகள், விற்பனை பதிவேடுகள், ஸ்டாக் பதிவேடுகள், உள்ளீட்டு மற்றும் வெளியீட்டு வரி விவரங்களைக் கொண்ட வாட் கணக்கு, பணி ஒப்பந்தக் கணக்கு ஆகியவை பராமரிக்கப்பட வேண்டியப் பொதுவான பதிவேடுகள் ஆகும்.

இந்த பதிவுகளானது நிதியாண்டின் முடிவிலிருந்து குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு தக்கவைக்கப்பட வேண்டும்.

ஜிஎஸ்டீ முறை

ஜிஎஸ்டீ-யின் கீழ், உற்பத்தி நடவடிக்கைகள், வரிவிதிப்புக்குள்ளாகும் சேவையை வழங்குதல் மற்றும் சரக்குகளின் விற்பனை ஆகியவை ஒரு பொதுவான சட்டத்தைக் கொண்டிருக்கும், எனவே வணிக நிறுவனங்களானது முன்பு தனித்தனியாகப் பராமரித்தத் தகவல்களை, இப்பொழுது ஒருங்கிணைந்த தகவல்களாகப் பராமரிக்க முடியும்.
ஜிஎஸ்டீ-யின் கீழ், பதிவுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள வணிகத்தின் பிரதான இடத்தில், பின்வரும் விவரங்கள் குறித்த சரியான கணக்குகளை ஒவ்வொரு பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்தும் நபரும் பராமரிக்க வேண்டும்:

  1. 1.சரக்குகளின் உற்பத்தி
  2. 2.சரக்குகள் மற்றும் / அல்லது சேவைகள் ஆகியவற்றின் உள்வரும் மற்றும் வெளிசெல்லும் சப்ளை
  3. 3. சரக்குகளின் ஸ்டாக்
  4. 4.உள்ளீட்டு வரி கிரெடிட் பெறுதல்
  5. 5. செலுத்தத்தக்க வெளியீட்டு வரி மற்றும் செலுத்தப்படுதல்

பதிவுச் சான்றிதழில் வணிக நிறுவனத்தின் இடமாக ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்கள் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தந்த இடம் தொடர்பான கணக்குகளை அந்தந்த இடங்களில் வைத்திருக்க வேண்டும்.
மின்னணு வடிவத்தில் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளைப் பராமரித்தல் என்பது சரியானதாக இருக்கும், மேலும் ஜிஎஸ்டீ-யின்கீழ் துல்லியமானதாக மற்றும் உரிய நேரத்தில் இணங்குவதற்கு வசதியாக இருக்கும்.

நிதியாண்டின் வருடாந்திர வருமானம் என்பது ரூ. 1 கோடிக்கும் அதிகமாக இருக்கும் நபர்கள்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள கணக்குகளை பராமரிப்பதுடன், ஒரு பதிவு செய்துள்ள நபரின் நிதியாண்டின் வருடாந்திர வருமானம் ரூ. 1 கோடிக்கு அதிகமாக இருந்தால், அவர் கூடுதலாகப் பின்வருபவைகளைச் செய்ய வேண்டும்,

  • ஒரு சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் அல்லது காஸ்ட் அக்கவுண்டண்ட் மூலம் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும் மற்றும்
  • படிவம் GSTR-9 –ல் வருடாந்திர வருமான வரித் தாக்கல் செய்யும்பொழுது, படிவம் GSTR-9B -ல் தணிக்கை செய்யப்பட்ட வருடாந்திர கணக்குகள் மற்றும் ஒரு நல்லிணக்க அறிக்கை ஆகியவற்றின் ஒரு பிரதியை சமர்ப்பிக்கவும்.

நல்லிணக்க அறிக்கையில், வருடாந்திர வருமான வரித் தாக்கலில் தெரிவிக்கப்பட்டுள்ள சப்ளைகளின் மதிப்பானது தணிக்கை செய்யப்பட்ட வருடாந்திர நிதி அறிக்கைக்கு இணக்கமாக இருப்பதாக ஒரு சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் அல்லது காஸ்ட் அக்கவுண்டண்ட் சான்றளிக்க வேண்டும்.

ஒரு கிடங்கு அல்லது குடோன் ஆகியவற்றை சொந்தமாக வைத்திருக்கும் அல்லது இயக்கும் நபர்கள்

ஒரு கிடங்கு அல்லது குடோன் அல்லது சரக்குகளை சேமிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஏதாவது இடம் ஆகியவற்றின் உரிமையாளர் அல்லது இயக்கும் நபர், அவர் பதிவு செய்துள்ளாரா அல்லது இல்லையா என்பதை பொருட்படுத்தாமல், சட்டத்தில் பரிந்துரைக்கப்படும் சரக்கு அனுப்புபவர் குறித்த விவரங்கள், சரக்கு பெறுபவர் குறித்த விவரங்கள் மற்றும் இதர விபரங்களைப் பராமரிக்க வேண்டும்.

கணக்குகள் மற்றும் பதிவேடுகளை எவ்வளவு காலம் வைத்திருக்க வேண்டும்?

ஒவ்வொரு பதிவுசெய்த நபரும், கணக்குகள் மற்றும் பதிவேடுகள் தொடர்புடைய ஆண்டின் வருடாந்திர வருமான வரித் தாக்கல் செய்யும் கெடு தேதியிலிருந்து 5 ஆண்டுகளுக்கு கணக்குகள் மற்றும் பதிவேடுகளை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக: ’17 -’18 நிதியாண்டு தொடர்பான கணக்குகள் மற்றும் பதிவேடுகளுக்கு, வருடாந்திர வருமான வரித் தாக்கல் என்பது 2018-ஆம் ஆண்டின் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் செய்யப்பட வேண்டும். இந்தக் கணக்குகள் மற்றும் பதிவேடுகளானது 2023-ஆம் ஆண்டின் டிசம்பர் 31 ஆம் தேதி வரை தக்கவைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

144,705 total views, 107 views today