(English) Language

  • English
  • Hindi
  • Marathi
  • Kannada
  • Telugu
  • Tamil
  • Gujarati

நமது நிதி அமைச்சர் திரு.அருண் ஜெட்லி அவர்கள் தனது பட்ஜெட் உரையில் ஜிஎஸ்டி-க்கான திட்டத்தை விரிவாக விவரிக்கவில்லை. இருப்பினும், ஜிஎஸ்டி-க்கான அரசியலமைப்புத் திருத்த மசோதா நிறைவேற்றப்படுவதும், அதை நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றமும் ஒரு “அடிப்படைக் கொள்கை முன்முயற்சி” என்பதைக் குறிப்பிட்டுக் காட்டினார்.

ஜிஎஸ்டி-ன் நன்மைகள் குறித்து அவைக்கு விளக்கமளிக்கும் சமயத்தில் “வளர்ச்சியைத் தூண்டுவது, போட்டியிடும் தன்மை, மறைமுக வரி எளிமைப்படுத்தல் மற்றும் அதிகரித்த வெளிப்படைத் தன்மை ஆகியவற்றின் அடிப்படியில் ஜிஎஸ்டி-ன் அனுகூலங்கள் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விரிவாக விவாதிக்கப்பட்டுவிட்டன. அரசியலமைப்புத் திருத்த மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியதற்காக இரு அவைகளின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்” என்று கூறினார். ஜிஎஸ்டி கவுன்சில் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்ததற்காக அனைத்து மாநில அரசுகளுக்கும் அவர் நன்றி கூறினார்.. இது ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்துவதற்கான முக்கியத் தடைகள் அனைத்தும் ஜிஎஸ்டி கவுன்சிலில் இருந்து களையப்பட்டுவிட்டன என்பதற்கான தெளிவான அறிகுறியாகும்.

ஜிஎஸ்டி கட்டண் அமைப்பின் விரிவான வரையறைகள், தொகுப்புத் திட்டத்திற்கான அதிகபட்ச விதிவிலக்கு மற்றும் அளவுருக்கள், ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தலின் காரணமாக மாநிலங்களுக்கான இழப்பீட்டுக்கான விவரங்கள், ஜிஎஸ்டி சட்டத்தின் வரைவுச் சட்டப் பரிசீலனை, வரைவு ஜிஎஸ்டி சட்டம் மற்றும் தொகுப்புச் சட்டம் மற்றும் ஜிஎஸ்டி-க்கான நிர்வாக அமைப்பு உட்பட ஜிஎஸ்டி தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை விவாதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் 9 கூட்டங்களை நடத்தியதாக நிதியமைச்சர் கூறினார். கிட்டத்தட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் தனது பரிந்துரைகளை ஒருமனதாக இறுதி செய்துவிட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

புதிய சட்டத்தின் தயார் தன்மையைப் பொறுத்த வரையில், மாதிரி ஜிஎஸ்டி சட்டம் மற்றும் விதிகள் மற்றும் பிறவிவரங்களுக்கு இறுதி வடிவம் கொடுப்பதற்காக மத்திய மற்றும் மாநில காலல் மற்றும் சுங்கத் துறையின் பல்வேறு குழுக்களின் அதிகாரிகள் சோர்வின்றி உழைத்து வருகிறார்கள். தொழில் மற்றும் வியாபாரத் துறையினர் புதிய வரிவிதிப்பு அமைப்பைப் பற்றி அறிந்துகொள்ளச் செய்வதற்காக, அவர்களைச் சென்றடைவதற்கான விரிவான முயற்சிகள் 1 ஏப்ரல் 2017 முதல் தொடங்கும் என அவர் குறிப்பிட்டார். ஜிஎஸ்டி-க்கான தகவல் தொழில் நுட்ப அமைப்புகளைத் தயாரித்துவரும் ஜிஎஸ்டிஎன்-ன் (ஜிஎஸ்டி-ன் தகவல் தொழில்நுட்ப அலகு) பணிகளும் திட்டமிட்டபடி நடந்துவருவதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.

நடைமுறைப்படுத்துவதற்கான தேதியைப் பொறுத்தவரை, திட்டமிட்டபடி ஜிஎஸ்டி-ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்னும் இலக்கை அடைய மத்திய அரசானது, மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை மூலம் முயற்சி செய்வதைத் தொடரும் என அமைச்சர் கூறினார். மாண்புமிகு மத்திய அமைச்சர் நடைமுறைப்படுத்துவதற்கான தேதியைக் குறிப்பிடவில்லை என்ற போதிலும், இந்திய அரசின் நிதி அமைச்சகத்துக்கான வருவாய்ச் செயலாளர் திரு.ஹஸ்முக் ஆதியா அவர்கள் ஒரு தனியார் செய்தி சேனலுக்க் அளித்த பேட்டியில் 1 ஜூலை 2017 அன்று ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தினார். 2017-18க்கான வருவாயைக் கணக்கிடும் சமயத்தில் அரசாங்கமானது மறைமுக வரி வளர்ச்சியை 8.8% ஆக நிர்ணயம் செய்துள்ளது என்பதையும் அவர் தெரிவித்தார்.

நிதி அமைச்சரின் உரையின் முக்கிய அம்சமானது, 2017-18க்கான நிதிப்பற்றாக்குறையை அவர் ஜிடிபி-ன் 3.2% என நிர்ணயித்துள்ளார், மேலும் அடுத்து வரும் வருடத்தில் 3% என்ற நிலையை அடைவதற்கான உறுதிப்பாட்டைத் தொடர்கிறார் என்பதாகும். படிப்படியான இந்த அணுகுமுறையின் மூலம், நிதிநிலை உறுதிப்படுத்தல் திட்டத்துக்கான எஃப்ஆர்பிஎம் (FRBM) அறிக்கையில் பரிந்துரைத்தபடி நிதிநிலை உறுதிப்படுத்தலுடன் இணங்குவதை அவர் உறுதிப்படுத்தினார். இந்தத் திட்டம் அடையப்பட வேண்டும் எனில், இலக்கு வைக்கப்பட்ட வருவாயை அடைவது தவிர்க்க இயலாதது, மேலும் இலக்கு வைக்கப்பட்ட நிதிநிலை வருவாயை அடைவது ஜிஎஸ்டி-ஐ நடைமுறைப்படுத்தல் மூலம் மட்டுமே சாத்தியப்படக்கூடும் (ஜிஎஸ்டி- அடிப்படையில் இலக்கிடப்பட்ட மறைமுக வரி வருவாயை அடைவதற்கு). நிதிநிலை ஒழுங்கைப் பராமரிப்பதிலும், சரியான நேரத்தில் ஜிஎஸ்டி-ஐ நடைமுறைப்படுத்துவதிலும் அரசாங்கமானது உறுதியுடன் இருக்கிறது என நாம் ஊகிக்கிறோம்.

மேலும் நடைமுறைபடுத்தும் முதல் வருடத்தில் மறைமுக வரி வருவாய் வளர்ச்சி 8.8 என்ற நிலையை அடைவது அரசாங்கத்துக்கு எளிதானது கிடையாது என்பதை அவர் கணிக்க இயலும், அதுவும் 9 மாதங்களுக்குள். அரசாங்கமானது சரியான நேரத்தில் ஜிஎஸ்டி-ஐ நடைமுறைப்படுத்துவது மட்டுமல்லாமல் அதைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி, தொழில் துறையினரிடமிருந்து உயர்ந்தளவு இணக்கத்தை எதிர்பார்க்கும் என நாங்கள் ஊகிக்கிறோம்.

இவை அனைத்தையும் வைத்துப்பார்க்கும் போது, அரசாங்கமானது 2017 ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி-ஐ நடைமுறைப்படுத்தத் தீவிரமாக இருக்கிறது என்பதற்கான போதிய மற்றும் அதிகளவிலான அறிகுறிகளை அது காட்டுகிறது. தற்போதைய கலால் மற்றும் சேவை வரிக்குப் பதிலாக ஜிஎஸ்டி வர உள்ளதால் அதில் மாற்றம் எதையும் செய்வதற்கு நான் விரும்பவில்லை என்னும் திரு.ஜெட்லி அவர்களின் உரை மேலும் சிறப்பாக அமைந்தது.

எனவே தொழில் துறையினர் ஜிஎஸ்டி-க்கு தயார் ஆவதற்கான நேரம் வந்துவிட்டது, ஏனெனில் மாற்றம் என்பது ஒரே இரவில் நடந்துவிடக்கூடிய ஒரு விஷயம் இல்லை.

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

43,202 total views, 3 views today