ஜிஎஸ்டீ-ஐ ஒருவர் பார்த்தால், குறைந்த விலை என்ற வாக்குறுதியுடன் – அது நுகர்வோருக்கான ஒரு வரம் போல தோன்றும்; ஒரு எளிமையாக்கப்பட்ட மறைமுக வரிவிதிப்பு முறை என்ற வாக்குறுதியுடன் – வணிக நிறுவனங்களுக்கு ஒரு வரம் போல தோன்றும்; மேலும், அதிக வரி வருவாய்கள் என்ற வாக்குறுதியுடன் – இந்திய அரசாங்கத்திற்கு ஒரு வரம் போல தோன்றும். இருப்பினும், ஜிஎஸ்டீ அறிமுகப்படுத்தப்படுதல் மற்றும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படுதல் ஆகியவற்றால் வணிகச் சூழலில் மிகுந்த பயன் பெறும் இன்னொரு பங்குதாரர் ஒருவர் இருக்கிறார் – பட்டய கணக்காளர்.

இங்கே, நான் ஜிஎஸ்டீ கொண்டு முக்கிய நன்மைகளை பட்டியலிடப் போகிறேன் – அது நிச்சயமாக ஒரு CA-வின் வாழ்க்கையை வரும் சில மாதங்களிலும் மற்றும் எதிர்காலத்திலும், மிகவும் எளிதாக மற்றும் எளிமையானதாக ஆக்கும்.

வாடிக்கையாளர்கள் அதிகரித்தல்

தற்போதுள்ள மறைமுக வரிவிதிப்பு முறையுடன் ஒப்பிடுகையில் ஜிஎஸ்டீ என்பது ஒரு முழுமையான புதிய வரி விதிப்பு முறையாகும். அது அறிவிக்கப்பட்டதில் இருந்து, வணிக நிறுவனங்கள் நடுக்கம் கொண்டு, CA சமூகத்தினரை உதவிக்காக நாடினர் – தங்கள் வணிகங்களில் ஜிஎஸ்டீ-யின் பயன்பாடு பற்றியும் மற்றும் தற்போது மறைமுக வரி செலுத்தும் சில நிறுவனங்களுக்காக சில மாதங்களுக்கு முன்பே திறக்கப்பட்ட பதிவு செய்யும் செயல்முறை பற்றியும் கேட்டுக்கொண்டனர் .
இத்தகைய சூழ்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதில் மட்டுமல்லாமல், ஜிஎஸ்டீ குறித்து அவர்களுக்குக் கற்பிப்பதிலும் சிஏ-க்கள் முக்கிய பங்காற்றுகிறார்கள்.ஜிஎஸ்டீ இணக்கத்திற்காக ஜிஎஸ்டீ சட்டத்தின் அடிப்படை மற்றும் வணிகங்கள் மீதான அதன் தாக்கம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வது அவசியம் என்பதால், இது முக்கியமானதாகும். இங்கே உள்ள ஒரு இடைவெளியை ஒரு CA-வால் நிரப்ப முடியும். எளிமையான சொற்களில் சொல்வதென்றால், ஜிஎஸ்டீ குறித்த ஆலோசனைகளுக்காக மற்றும் ஜிஎஸ்டீ-ன் கீழ் பதிவு செய்தல், ரிட்டர்ன் தாக்கல் செய்தல் மற்றும் அக்கவுண்டிங் ஆகிய பிற சேவைகளுக்கான CA சமூகத்தினரை இன்னும் அதிகமான வணிக நிறுவனங்கள் நாடுகிறார்கள். இவை அனைத்தும் காரணமாக, தவிர்க்க முடியாமல் CA-களுக்கான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், இதனால் அவர்களின் ஒட்டுமொத்த வணிகமும் அதிகரிக்கும்.

புதிய பட்டயக் கணக்காளர்களுக்கான வரம்

ஜிஎஸ்டீ என்பது புதிய மற்றும் அபார ஆளுமை கொண்ட பட்டயக் கணக்காளர்களுக்கு ஒரு வாழ்வைக் காக்கும் மாத்திரையாகும். ஜிஎஸ்டீ என்பது இந்தியாவில் முதல்முறையாக நடைமுறைப்படுத்தப்படப் போகிறது என்பது இதற்குக் காரணமாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அனுபவம் உள்ள CA-க்களுக்கும் மற்றும் அனுபவமற்ற CA-க்களுக்கும் இது புதிய ஒன்று ஆகும், எனவே இருவரும் ஒரே அளவிலேயே இருக்கிறார்கள். புதிதாக தகுதி பெற்ற பட்டயக் கணக்காளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, ஜிஎஸ்டீ அலையில் தங்கள் தொழில்முறை வாழ்வை எளிதில் உயர்த்திக்கொள்ள முடியும்.

GST is a life-saving pill for new as well as aspiring chartered accountants Click To Tweetஜிஎஸ்டீ வரும்பொழுது, ஆலோசனை மற்றும் இணக்கம் தொடர்புடையது என பணிக்கான வாய்ப்பு என்பது மிகப்பெரியதாக இருக்கும். மிக முக்கியமாக, பழைய வரி விதிப்பு முறையில் இருந்து புதிய முறைக்கு வாடிக்கையாளர்கள் தடையில்லாமல் மாற வேண்டியது அவசியமாகும். ஜிஎஸ்டீ என்பது சரக்குகளின் விலைகளைக் குறைத்து, மார்ஜின்களை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், தடையில்லாமல் மாறுவதன்மூலம் வாடிக்கையாளர்களுக்கு விரைவான முறையில் அதிகமான வர்த்தகத்திற்கு வழிவகுக்கும். எனவே, இளம் சிஏ-க்கள் அதை பெரிய அளவில் செய்ய விரும்புவதால், சிறந்த வாடிக்கையாளர்களை உருவாக்குவதற்கும் ஜிஎஸ்டீ காலத்தில் அவர்களுக்கு வழிகாட்டுவதற்கும் அவர்களுக்கு முன்னால் அவர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பைக் கொண்டுள்ளனர். ஜிஎஸ்டீ குறித்த உதவி தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கான அதிக தேவை காரணமாக, தற்போது CA-க்கள் தேவைப்படும் அளவைவிட அதிகமாக தேவை இருக்கும். புதிய தலைமுறை CA-க்கள் ஆன்லைன் ஃபோரம்களை எடுத்துக்கொள்ளலாம், மேலும் புதிய வாடிக்கையாளர்களைப் பெற இணையத்தைப் பயன்படுத்தலாம்.

சுருக்கமாக, ஜிஎஸ்டீ குறித்த சரியான அறிவுடன், இந்த சூழலில் உள்ள புதிய பட்டயக் கணக்காளர்களின் வாழ்க்கை என்பது நிச்சயமாக அற்புதமாக இருக்கும்.

இணக்கம் காரணமாக வருவாய் அதிகரித்தல்

முன்னதாக விவாதிக்கப்பட்டபடி, ஜிஎஸ்டீ என்பது CA-க்களுக்கான வாடிக்கையாளர்களை அதிகரிக்கச் செய்வதோடு மட்டுமல்லாமல், அவர்களின் வருவாய் அதிகரிப்பதற்கும் வழிவகுக்கிறது. உண்மையில், ஜிஎஸ்டீ-ன் காரணமாக CA-க்கள் அதிகபட்ச நிதிசார்ந்த பலனைப் பெறுவார்கள்.

இதை ஒரு எளிய முறையில் விளக்கலாம் – ஒரு வாடிக்கையாளர் ஜிஎஸ்டீ குறித்த ஆலோசனைக்காக வந்தால், அவர் வேறு தொழில்முறை சார்ந்த தேவைகளையும்கூட கொண்டிருக்கலாம். CA என்பவர்கள் இந்த வாய்ப்பை எடுத்துக் கொண்டு, ஜிஎஸ்டீ உடன் சேர்ந்து பல்வேறு சேவைகளின் தொகுப்பை வழங்க முடியும், உதாரணமாக அக்கவுண்டிங் சேவைகள், ஜிஎஸ்டீ பதிவு, சரியான நேரத்தில் ரிட்டர்ன் தாக்கல்செய்தல், வரி செலுத்துதல் போன்றவை. வருவாய் வந்துகொண்டிருக்கும் வரை, இந்த உத்தியானது கண்டிப்பாக வேலை செய்யும், ஏனென்றால் ஒரு புதிய வாடிக்கையாளரிடம் இருந்து மீண்டும் மீண்டும் வருவாய் பெறுவதை ஒப்பிடும்பொழுது, வெவ்வேறு சேவைகளைப் பயன்படுத்தும் ஒரு தற்போதுள்ள வாடிக்கையாளரிடம் இருந்து மீண்டும் மீண்டும் வருவாய் பெறுவது எளிதானதாகும். மிக முக்கியமாக, ஒரு வாடிக்கையாளர் வெற்றிகரமாக ஜிஎஸ்டீ குறித்துக் கற்பிக்கப்பட்டு, ஜிஎஸ்டீ-க்கு மாறியவுடன், ஜிஎஸ்டீ-க்கு இணங்குவது என்ற பகுதி துவங்கும். ஜிஎஸ்டீ-யின்கீழ் இணக்கத்தன்மை என்பது ஒரு தொடர் செயல்பாடு ஆகும், மேலும் CA சமூகத்திற்கு வருவாய் கணிசமான அளவு அதிகரிப்பதை இது குறிக்கிறது. இந்த அதிகரிக்கும் வருவாயானது புதிய மற்றும் அனுபவம் மிக்க பட்டயக் கணக்காளர்களின் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது

வேலை செய்ய எளிதானது

தற்போதைய வரி விதிப்பு முறையானது, பல்வேறு வரிகள் மற்றும் விதிகளுடன் கலால் வரி, சேவை வரி, வாட், சிஎஸ்டீ போன்ற பல்வேறு மறைமுக வரிகளைக் கொண்டிருக்கிறது. இது போதாதது என்பது போல், ஒவ்வொரு மாநிலத்திலும் தற்போது வெவ்வேறு VAT சட்டங்கள் மற்றும் மின்-வணிகப் பரிமாற்றங்களுக்கான வெவ்வேறு வரிகள் மற்றும் விதிகள் ஆகியவை உள்ளன. இந்த சிக்கலானது பெரும்பாலும் பட்டயக் கணக்காளர்கள் மற்றும் அவர்களது வாடிக்கையாளர்களுக்கு ஒரு பிரச்சினையை ஏற்படுத்துகிறது, இதனால் இணங்குவதில் பிழைகள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. சுருக்கமாக கூறினால், அவர்கள் அறியாமலேயே ஒரு சட்டத்தை மீறும் எண்ணத்தில் இருந்தனர்.
மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளானது ஒரே சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்பதால், ஜிஎஸ்டீ-ன் காரணமாக இந்த சிக்கல் மற்றும் குழப்பம் முற்றிலும் அகற்றப்படும், இதனால் குழப்பங்கள் குறையும் மற்றும் சிறந்த வரி நிர்வாகத்திற்கு வழிவகுக்கும். எனவே, ஜிஎஸ்டீ நடைமுறைக்கு வந்த பிறகு, CA சமூகத்தின் பணிச்சுமை பெருமளவில் குறையும், மேலும் ஆலோசனை மற்றும் இணக்கம் தொடர்பான பணி என்பது மிகவும் எளிதாக இருக்கும்.

முடிவு

இன்று முழு தேசமும் ஜிஎஸ்டீ-ஐ திறந்த மனதுடன் வரவேற்கிறது. அது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது;ஜிஎஸ்டீ-யானது இந்தியா முழுவதும் ஜூலை 1ஆம் தேதிக்குப் பிறகு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்பொழுது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். ஜிஎஸ்டீ உடன் இணைந்து கிடைக்கும் என்று உறுதியளிக்கப்படும் பல நன்மைகளானது நிச்சயமாக இந்தியாவின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கப்போகிறது – ஜிஎஸ்டீ-ஐ யதார்த்தமானதாக உருவாக்குவதில் சி.ஏ-க்கள் முக்கிய பங்காற்றப் போகிறார்கள். கிட்டத்தட்ட அனைத்தும் ஆன்லைன் முறையில் ஆகிக் கொண்டிருக்கும் ஒரு உலகில், எந்தவொரு வணிகத்திலும் பட்டயக் கணக்காளர்கள் முதுகெலும்பாகத் தொடர்கிறார்கள். இதற்கு அவர்களின் நிபுணத்துவமிக்க வழிகாட்டுதல்கள் மட்டுமல்லாமல், முதல் முறையாக, எந்தவொரு வணிகத்திற்கும் இணக்கம் முக்கியமானதாக இருப்பதும் ஒரு காரணமாகும். இறுதியாக, ஜிஎஸ்டீ என்பது பட்டயக் கணக்காளர்களின் வாழ்வை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு புகழ்மிக்கதாக ஆக்குவதற்கு வாக்குறுதி அளிக்கிறது.

GST promises to make the life of chartered accountants more glorious than ever.Click To Tweet

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

46,600 total views, 22 views today