இந்தியா ஒரு கூட்டாட்சி நாடாக இருப்பதால், உற்பத்தி மற்றும் சேவைகள் வழங்குதல் ஆகியவற்றின்மீது வரி மற்றும் தீர்வைகள் ஆகியவற்றை விதிக்க அரசியலமைப்பின் மூலம், மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு உள்ளேயே மேற்கோள்ளப்படும் சரக்குகள் விற்பனைக்கு வரிவிதிக்க மாநிலங்களில் உள்ள அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது, இதில் சரக்குகளின் இயக்கம் என்பது மாநில அதிகார எல்லைக்குள் நடைபெறுகிறது. சரக்குகளை விற்பனை செய்யும்பொழுது பல்வேறு மாநிலங்களுக்கிடையில் சரக்குகள் கொண்டுசெல்லப்பட்டால், அத்தகைய விற்பனை மீது வரிவிதிப்பதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது, மேலும் அவ்வாறு சேகரிக்கப்பட்ட வருவாய்களானது மத்திய மற்றும் மாநில அரசுகளால் பகிர்ந்து கொள்ளப்படும்.
மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் அதிகாரங்களை அரசியலமைப்பு தெளிவாக வரையறுத்துள்ளது என்றாலும், மாநிலங்களுக்கு உள்ளேயே மற்றும் மாநிலங்களுக்கிடையில் சரக்குகளின் இயக்கத்தை கண்காணிப்பது என்பது மாநில அரசுகளுக்கான மிகப்பெரிய சவாலாக உள்ளது.
வரி ஏய்ப்புகள் மற்றும் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு என்பது பரவலாக ஏற்பட்டது. எனவே, வரி ஏய்ப்பை சமாளிப்பதற்கும் மற்றும் முறையை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கவும், பெரும்பாலான மாநிலங்களானது தங்களின் தேசிய நெடுஞ்சாலைகளிலும் எல்லைகளிலும் பல சோதனைச் சாவடிகளை வைத்திருக்கின்றன. இந்த சோதனைச் சாவடிகளானது முக்கியமாக சரக்குகளின் இயக்கத்தை கண்காணிக்கிறது மற்றும் சரக்குகளுக்கு உரிய தீர்வைகள் / வரிகள் செலுத்தப்பட்டிருப்பதை உறுதிப்படுத்துகிறது
சரக்குகளை கொண்டுசெல்லும் நபர் என்பவர் விலைப்பட்டியல், சலான், ரோடு பெர்மிட்கள், வே பில் போன்ற பல ஆவணங்களைக் கொண்டிருக்க வேண்டும், மேலும் ஆய்வு செய்யப்படும்பொழுது சோதனைச் சாவடியில் அவற்றைக் காண்பிக்க வேண்டும்.

தற்போதைய முறை

இன்றைய காலகட்டத்தில், பல்வேறு மாநில அரசுகள், தங்கள் எல்லைகளுக்குள்ளாகவும், வெளியிலும் மேற்கொள்ளப்படும் சரக்குகளின் இயக்கத்தைக் கண்காணிக்க தங்கள் சொந்த முறையை அமைத்துள்ளன. உதாரணமாக, சில மாநிலங்களானது சரக்குகளை கொண்டுசெல்லும்பொழுது, பதிவு செய்த டீலரிடம், சரக்குகளின் மதிப்பு மற்றும்/அல்லது குறிப்பிடப்பட்ட சரக்குகள் ஆகியவற்றின் அடிப்படையில் சரக்குகளின் விவரங்களை அறிவிக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியுள்ளது. அனுமதிப் படிவம், வே பில் போன்ற ஆவணங்களையும் பெற வேண்டும். இதைத் தவிர, சில மாநிலங்களானது டிரான்ஸிட் பாஸ் அல்லது அறிவிப்பு வடிவம் ஆகியவற்றை சரக்குகளை கொண்டுசெல்பவர் பெற வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியுள்ளது.
தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியின் காரணமாக, கர்நாடக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இ-சுகம் போன்று, சரக்குகளின் இயக்கம் சம்பந்தப்பட்ட நடைமுறைகளை டிஜிட்டல்மயமாக்குவதற்கு பல்வேறு மாநிலங்களில் கணிசமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இ-சுகம் என்பதின்கீழ், ரூ.20,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள சரக்குகளை கொண்டுசெல்லும் ஒரு பதிவுசெய்த டீலர், சரக்குகளின் விவரங்களை பதிவேற்றி, ஒரு தனிப்பட்ட குறிப்பு எண்ணைப் பெற வேண்டும். இது டிரான்ஸ்போர்ட்டருடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது, மேலும் அவர் சோதனைச் சாவடியில் உள்ள அதிகாரியிடம் வெறுமனே அந்த எண்ணை மேற்கோள் காட்டலாம்.
மற்ற மாநிலங்களிலும் கூட, இதே போன்ற ஒரு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதன்மூலம் ஒரு பதிவுசெய்த டீலர் மின்னணு முறையில் சரக்குகள் பற்றிய விவரங்களை அறிவித்து, சரக்குகளின் இயக்கத்திற்குத் தேவையான படிவங்களைப் பெற முடியும்.

ஜிஎஸ்டீ-யின் கீழ்

ஜிஎஸ்டீ-யின் கீழ், சரக்குகளின் இயக்கத்திற்கான செயல்முறை மற்றும் நடைமுறை அம்சங்கள் ஆகியவை இ-வே பில் விதிகளில் பரிந்துரைக்கப்படுகின்றன. இ-வே பில் என்றால் மின்னணு வே பில் என்று அர்த்தமாகும். இது பொதுவாக சரக்குகளின் இயக்கம் சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட சரக்குக்காக உருவாக்கப்படும் ஒரு பிரத்தியேக பில் எண் ஆகும். ஜிஎஸ்டீ-யின் கீழ், 50,000 ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட சரக்குகள் இயக்கத்தை மேற்கொள்ள நினைக்கும் ஒரு பதிவு செய்த நபர் ஒரு இ-வே பில்-ஐ உருவாக்க வேண்டும்.
ஜிஎஸ்டீ-யின் கீழ், 50,000 ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட சரக்குகள் இயக்கத்தை மேற்கொள்ள நினைக்கும் ஒரு பதிவு செய்த நபர் ஒரு இ-வே பில்-ஐ உருவாக்க வேண்டும்

Under GST, a registered person who intends to initiate a movement of goods of value exceeding Rs 50,000 should generate an e-Way bill. Click To Tweet
இ-வே பில்-ன் பயன்பாடு மற்றும் உருவாக்குதல்
கேள்விகள் பதில்கள்
இ-வே பில் எப்பொழுது பொருந்தும்? இது ரூ.50,000-க்கு அதிகமான மதிப்பு கொண்ட எந்தவொரு சரக்குகளுக்கும் பொருந்தும். பதிவு செய்யப்படாதவர்களிடமிருந்து சரக்குகள் உள்ளே பெறப்பட்டாலும்கூட, இ-வே பில் பொருந்தும்..
எப்பொழுது நான் இ-வே பில்-ஐ உருவாக்க வேண்டும்?சரக்குகளின் இயக்கம் தொடங்குவதற்கு முன்னர் இ-வே பில் உருவாக்கப்பட வேண்டும்.
இ-வே பில்-ஐ யார் உருவாக்க வேண்டும்?ஒரு பதிவு செய்யப்பட்ட நபரால், சரக்கு பெறுபவராக அல்லது சரக்கு அனுப்புபவராக, தனது சொந்த வாகனத்திலோ அல்லது வாடகை வாகனத்திலோ, சரக்குகள் எடுத்துச் செல்லப்படும்போது, சப்ளையர் அல்லது சரக்குகளை வாங்கியவர் இ-வே பில்-ஐ உருவாக்க வேண்டும்.
சரக்குகளானது ஒரு டிரான்ஸ்போர்ட்டரிடம் ஒப்படைக்கப்படும்போது, இ-வே பில் என்பது டிரான்ஸ்போர்ட்டரால் உருவாக்கப்பட வேண்டும்.இந்த சூழலில், பதிவு செய்த நபரானவர் சரக்குகள் குறித்த விவரங்களை ஒரு பொதுவான போர்ட்டலில் அறிவிக்க வேண்டும்.
ஒரு பதிவு செய்யப்படாத நபரிடம் இருந்து சரக்குகள் உள்ளே பெறப்பட்டால், விநியோகத்தை பெறுபவர் அல்லது டிரான்ஸ்போர்ட்டர் ஆகியோரால் இ-வே பில் உருவாக்கப்பட வேண்டும்.

இ-வே பில்-ஐ உருவாக்குவதற்கான படிவம் என்ன?
படிவம் ஜிஎஸ்டீ ஐஎன்எஸ்-1 என்பது ஒரு இ-வே பில் படிவமாகும். இதில் சரக்குகள் குறித்த விவரங்கள் அளிக்கப்பட வேண்டிய பகுதி ஏ உள்ளது மற்றும் டிரான்ஸ்போர்ட்டர் குறித்த தகவல்களைக் கொண்ட பகுதி-பி இருக்கிறது.
50,000 ரூபாய்க்கும் குறைவான மதிப்புகள் கொண்ட சரக்குகளுக்கு இ-வே பில் உருவாக்கப்படலாமா?
50,000 ரூபாய்க்கும் குறைவான மதிப்புகள் கொண்ட சரக்குகளுக்கு இ-வே பில் உருவாக்கப்படலாமா? ஆமாம், ஒரு பதிவு செய்த நபரோ அல்லது ஒரு டிரான்ஸ்போர்ட்டரோ ஒரு இ-வே பில்-ஐ உருவாக்க முடியும், ஆனால் அது கட்டாயமில்லை.
பல சரக்குகளை ஒரே வாகனத்தில் கொண்டு செல்லும்போது என்ன நடக்கிறது?டிரான்ஸ்போர்ட்டர் என்பவர் படிவம் ஜிஎஸ்டீ ஐஎன்எஸ் 02-ல் இ-வே பில்-ஐ உருவாக்க முடியும், மேலும் ஒவ்வொரு சரக்குக்கும் இ-வே பில்களின் வரிசை எண் என்பது தனித்தனியாக குறிப்பிடப்படுகிறது.
இ-வே பில்-ஐ உருவாக்கும்பொழுது, ஏதேனும் ஒரு குறிப்பு எண் உருவாக்கப்படுமா? இ-வே பில்-ஐ உருவாக்கியவுடன், பொதுவான போர்டலில், ‘EBN’ எனப்படும் ஒரு பிரத்தியேக இ-வே பில் எண் என்பது சப்ளையர், பெறுநர் மற்றும் டிரான்ஸ்போர்ட்டர் ஆகியோருக்குக் கிடைக்கும்.
போக்குவரத்தின்பொழுது, ஒரு வாகனத்திலிருந்து சரக்குகளை வேறு வாகனத்திற்கு மாற்றினால் என்ன நடக்கும்? மற்றொரு வாகனத்திற்கு சரக்குகளை மாற்றி, அத்தகைய சரக்குகளை மேற்கொண்டு கொண்டுசெல்லும் முன்னர், ஒரு டிரான்ஸ்போர்ட்டர் என்பவர் போக்குவரத்து முறையின் விவரங்களைக் குறிப்பிட்டு படிவம் ஜிஎஸ்டீ ஐஎன்எஸ் 01 -ல் புதிய இ-வே பில்-ஐ உருவாக்க வேண்டும்.
சரக்குகளின் மதிப்பு ரூ .50,000-க்கும் அதிகமாக இருந்தாலும், சரக்கு அனுப்புபவர் இ-வே பில்-ஐ உருவாக்கவில்லை என்றால் என்ன நடக்கிறது?டிரான்ஸ்போர்ட்டர் என்பவர் விலைப்பட்டியல், விநியோக பில் அல்லது டெலிவரி சலான் ஆகியவற்றின் அடிப்படையில் படிவம் ஜிஎஸ்டீ ஐஎன்எஸ் 01-ல் இ-வே பில்-ஐ உருவாக்க வேண்டும்.


இ-வே பில்கள் உருவாக்கப்படுவதில் உள்ள ஒரு நடைமுறையை உதாரணத்துடன் நாம் புரிந்து கொள்ளலாம்.

ராணா டிரேடர்ஸ் என்ற மகாராஷ்டிராவில் உள்ள பதிவுசெய்த ஒரு டீலர், கர்நாடகாவில் உள்ள பதிவுசெய்த ஒரு டீலரான ஷிவா டிரேடர்ஸ்-க்கு ரூ. 75,000 மதிப்புள்ள சரக்குகளை அனுப்புவதற்கு ஒப்புக்கொண்டார். ஷிவா டிரேடர்ஸ்-க்கு சரக்குகளை வழங்குவதற்காக, ராணா டிரேடர்ஸ் என்பவர் சரக்குகளை ஸ்பீடு டிரான்ஸ்போர்ட்ஸ் என்பவரிடம் ஒப்படைத்தார்.

GST e-way bill generarion

இ-வே பில்லின் செல்லுபடியாகும்தன்மை
தூரம் செல்லுபடியாகும் காலம்
100 கி.மீ-க்கு குறைவானது 3 நாட்கள்
100 கி.மீ. அல்லது அதற்கு மேற்பட்டது ஆனால் 300 கி.மீ-க்கு குறைவானது 3 Days
300 கிமீ அல்லது அதற்கு மேற்பட்டது ஆனால் 500 கி.மீ-க்கு குறைவானது5 நாட்கள்
500 கிமீ அல்லது அதற்கு மேற்பட்டது, ஆனால் 1000 கி.மீ-க்கு குறைவானது 10 நாட்கள்
1000 கி.மீ அல்லது அதற்கு மேற்பட்டது 15 நாட்கள்

செல்லுபடியாகும் காலம் என்பது இ-வே பில் உருவாக்கப்பட்டதில் இருந்து கணக்கிடப்படும். இந்த விஷயம் தொடர்பான அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி, குறிப்பிட்ட சில வகை சரக்குகளுக்கான இ-வே பில்லின் செல்லுபடியாகும் காலமானது கமிஷனரால் நீட்டிக்கப்படலாம்.

ஆவணங்கள், ஆய்வு மற்றும் சரிபார்ப்பு

டிரான்ஸ்போர்ட்டர் அல்லது பரிமாற்றும் பொறுப்பில் உள்ள நபர் என்பவர் பின்வரும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்:

    • விலைப்பட்டியல் அல்லது பில் ஆஃப் சப்ளை அல்லது டெலிவரி சலான் மற்றும்
    • இ-வே பில்லின் நகல் அல்லது இ-வே பில் எண்.

சரிபார்ப்பு இடத்தில், மாநிலத்திற்கு உள்ளே மற்றும் மாநிலங்களுக்கு இடையே கொண்டுசெல்லப்படும் அனைத்து சரக்குகளுக்கான, இ-வே பில் அல்லது இ-வே பில் எண்ணை சரிபார்ப்பதற்காக எந்தவொரு வாகனத்தையும் அதிகாரி நிறுத்தலாம்.

இ-வே பில்லின் காகித நகல் சரிபார்க்கப்படுவதைத் தவிர்க்க, ஓரு வாகனத்தில் ரேடியோ அதிர்வெண் அடையாள சாதனம் (ஆர்எஃப்ஐடி) என்ற ஒரு சாதனமானது பொருத்தப்பட்டு, இ-வே பில் அதனுடன் இணைக்கப்படலாம்.சரிபார்ப்பு இடத்தில், இந்த சாதனத்துடன் பொருத்தப்பட்டுள்ள இ-வே பில் என்பது RFID ரீடர்களால் சரிபார்க்கப்படும். குறிப்பிட்ட சில டிரான்ஸ்போர்ட்டர்களுக்கு, வாகனத்தில் RFID சாதனங்களைப் பொருத்துவது மற்றும் இ-வே பில்-ஐ அதனுடன் இணைப்பது ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது ஆணையர் மூலம் அறிவிக்கப்படும்.

வரி ஏய்ப்பு சந்தேகத்தின் அடிப்படையில், ஆணையர் அல்லது இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியிடமிருந்து தேவையான அங்கீகாரத்தைப் பெற்ற பிறகு, ஒரு அதிகாரி என்பவர் வாகனத்தை நேரடியாக ஆய்வு செய்யலாம். வாகனத்தின் நேரடி சரிபார்ப்பு என்பது மாநிலத்திற்குள் அல்லது வேறு ஏதாவது மாநிலத்தில், ஒரு இடத்தில் செய்யப்படுகிறது என்றால் வரி ஏய்ப்பு குறித்த குறிப்பிட்ட தகவல் கிடைக்காத வரையில், டிரான்ஸிட்டின்பொழுது வேறு எந்த சரிபார்ப்பும் மேற்கொள்ளப்படாது.

ஒவ்வொரு ஆய்வுக்குப் பிறகும், ஆய்வுசெய்த 24 மணிநேரத்திற்குள் படிவம் ஜிஎஸ்டீ ஐஎன்எஸ்-03-ன் பகுதி-ஏ-ல் சரக்குகளின் ஆய்வு குறித்த விவரங்களைப் பதிய வேண்டும், மேலும் இறுதி அறிக்கையானது ஆய்வுசெய்த 3 நாட்களுக்குள் படிவம் ஜிஎஸ்டீ ஐஎன்எஸ் 03-ன் பகுதி பி-ல் பதிவு செய்யப்பட வேண்டும். வாகனமானது 30 நிமிடங்களுக்கு மேல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தால், படிவம் ஜிஎஸ்டீ ஐஎன்எஸ் 04-ல் விவரங்களைப் பதிவேற்றுவதன்மூலம் டிரான்ஸ்போர்ட்டர் புகார் தெரிவிக்கும் ஒரு ஆப்ஷன் உள்ளது.

ஜிஎஸ்டீ மூலம், சரக்குகளின் இயக்கத்திற்கு தேவையான மாநில வாரியான தற்போதுள்ள அனைத்து ஆவணங்களும் அகற்றப்படும் மற்றும் உத்தேசிக்கப்பட்டுள்ள இ-வே பில் என்பது நாடு முழுவதும் பரவலாகக் கிடைக்கச்செய்யப்படும்.மேலும், மாநில எல்லைகளிலும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் உள்ள சோதனைச் சாவடிகளின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சரக்குகளின் இயக்கம் எளிதாகலாம்.

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

204,787 total views, 337 views today

Yarab A

Author: Yarab A

Yarab is associated with Tally since 2012. In his 7+ years of experience, he has built his expertise in the field of Accounting, Inventory, Compliance and software product for the diverse industry segment. Being a member of ‘Centre of Excellence’ team, he has conducted several knowledge sharing sessions on GST and has written 200+ blogs and articles on GST, UAE VAT, Saudi VAT, Bahrain VAT, iTax in Kenya and Business efficiency.