மின்னணு வணிகம் அல்லது ஈ-காமர்ஸ் இந்தியாவில் வியாபாரம் செய்யப்படும் விதத்தை மாற்றியுள்ளது. தற்போது இந்திய ஈ-காமர்ஸ் துறையில் பல்வேறு வரிகள் விதிக்கப்படும் நிலையை எதிர்கொண்டு வருகிறது. ஈ-காமர்ஸ் தொழில்துறையின் மீது ஒவ்வொரு மாநிலமும் தனக்கென உள்ள விதிகளைகளையும், வரிகளையும் விதித்துள்ளன. பல்வேறு வகையான ஈ-காமர்ஸ் பரிவர்த்தனைகள் மீது வரி விதிப்பது குறித்த தெளிவின்மை மற்றும் ஈ-வாலட் மற்றும் கேஷ;பேக் போன்ற புதிய முறைகள் இத்துறையில் விதிக்கப்படும் வரி குறித்த குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

வரி விதிப்பு முறையில் மேலும் தெளிவு கிடைக்கும் என்பதற்காகவும், மாநிலத்துக்கு மாநிலம் விதிக்கப்படும் விதிகள் மற்றும் வரிகள் அகற்றப்படும் என்ற நம்பிக்கையில் ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்நோக்கியுள்ளன. மாதிரி வரைவு ஜிஎஸ்டி சட்டமானது ஈ-காமர்ஸ் தொழில்துறைக்கென குறிப்பிட்ட விதிகள் தேவை என்பதை அங்கீகரிக்கிறது. இந்த வலைப்பூ பதிவில், ஈ-காமர்ஸை பொறுத்து ஜிஎஸ்டி-ல் உள்ள குறிப்பிட்ட ஏற்பாடுகளை நாம் காண உள்ளோம்.

 • ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டர் மற்றும்
 • ஈ-காமர்ஸ் தளங்களில் உள்ள வழங்குனர்கள்

ஜிஎஸ்டி-ன் கீழ் ஈ-காமர்ஸ் நிறுவனம் மற்றும் ஈ-காமர்ஸ் தளங்களில் உள்ள வழங்குனர்களிடமிருந்து தேவைப்படுவனவற்றை விரிவாகக் காண்போம்.

ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டர்

ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டர் என்பவர் மின்னணு வர்த்தகத்துக்கான டிஜிட்டல் அல்லது மின்னணு அமைப்பகம் அல்லது வசதியை சொந்தமாக வைத்திருப்பவர், செயல்படுத்துபவர் அல்லது நிர்வகிப்பவர். ஜிஎஸ்டி-ன் கீழ் ஒரு ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டருக்குத் தேவையானவை பின்வருமாறு –

1. கட்;டாயப் பதிவு
ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டர்கள் அனைவரும் கட்டாயம் ஜிஎஸ்டி-ன் கீழ் பதிவு செய்ய வேண்டும். அவர்களின் விற்றுமுதல் குறித்துக் கணக்கில் கொள்ளாமல், அவர்கள் கட்டாயம் ஜிஎஸ்டி-ன் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்பது இதன் பொருளாகும்.

2. அறிவிக்கப்பட்ட சேவைகள் மீதான வரியை ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டர் செலுத்த வேண்டும்
குறிப்பிட்ட சில சேவைப் பிரிவுகள் அறிவிக்கப்படலாம், அவற்றை வழங்கும் சமயத்தில், ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டர் வரி செலுத்த வேண்டும், வழங்குனர் அல்ல. இதன் அடிப்படையில்இ

  • • ஒரு மாநிலத்தில் ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டர் ஒரு நிறுவனத்தைக் கொண்டிருக்கவில்லை எனில், அந்த மாநிலத்தில் அந்த ஈ-காமர்ஸ் நிறுவனத்துக்கு. ஏதாவது ஒரு வகையில் பிரதிநிதியாக இருக்கும் ஏதாவதொரு நபருக்கு வரியைச் செலுத்தும் பொறுப்பு உண்டு
  • ஒரு மாநிலத்தில் ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டர் ஒரு நிறுவனத்தைக் கொண்டிருக்காத நிலையில், அந்த மாநிலத்தில் பிரதிநிதியும் இல்லை எனில், அந்த மாநிலத்தில் வரி செலுத்தும் நோக்கத்துக்காக ஒரு நபலை ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டர் நியமிக்க வேண்டும், வரி செலுத்தும் பொறுப்பு அந்த நபருக்கு உண்டு.

3. ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டர் வருமான ஆதாரத்;தில் வரிப்பிடித்தம் செய்ய வேண்டும்
ஒவ்வொரு ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டரும் தங்களுடைய தளத்தின் மூலம் வழங்கப்பட்ட வரிவிதிக்கத்தக்க வழங்கல்களின் நிகர மதிப்பில் 2% வரி வசூலிக்க வேண்டும், அதில் வழங்கல்களின் அடிப்படையில் சலுகையானது ஆப்பரேட்டரால் வசூல் செய்யப்பட வேண்டும்.

வரிவிதிக்கத்தக்க வழங்கல்களின் நிகர மதிப்பு ஸ்ரீ பதிவு செய்யப்பட்ட வரிவிதிக்கத்தக்க நபர்கள் அனைவரும் ஆப்பரேட்டர் மூலமாக மேற்கொண்ட வரிவிதிக்கத்க்க வழங்கல்களின் மதிப்பு, ஆப்பரேட்டரால் வரி செலுத்தப்பட்ட அறிவிக்கப்பட்ட வழங்கல்களைத் தவிர்த்து (-) வழங்குனர்களிடம் திருப்பித் தரப்பட்ட வரிவிதிக்கத்தக்க வழங்கல்களின் மதிப்பு

உதாரணம்: ஃபாஸ்ட் டீல்ஸ் ஒரு ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டர் ஆவார். ராகேஷ; பிரைவேட் லிமிடெட் மற்றும் ரோஹன் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் ஃபாஸ்ட் டீல்ஸ்-ல் உள்ள வழங்குனர்கள். பின்வரும் வழங்கல்கள் அக்டோபர் ’17ல் ஃபாஸ்ட் டீல்ஸில் செய்யப்பட்ட வழங்கல்கள் ஆகும்.

ஃபாஸ்ட் டீல்ஸின் வெளிச்செல்லும் வழங்கல்கள் பதிவேடு
வழங்குனர்
வரி விதிக்கத்தக்க வழங்கல்கள் (ரூ.)திரும்பிய வரி விதிக்கத்தக்க வழங்கல்கள் (ரூ.)நிகர வரி விதிக்கத்தக்க வழங்கல்கள் (வரி விதிக்கத்தக்க வழங்கல்கள் கழித்தல் திரும்பிய வரி விதிக்கத்தக்க வழங்கல்கள் (ரூ.)வருமான ஆதாரத்;தில் பிடிக்கப்பட்ட வரி @2% (ரூ.)
ராகேஷ; பிரைவேட் லிமிடெட்1,00,00,00010,00,00090,00,0001,80,000
ரோஹன் பிரைவேட் லிமிடெட்2,00,00,00020,00,0001,80,00,0003,60,000
மொத்தம்3,00,00,00030,00,0002,70,00,0005,40,000

இங்கு பாஸ்ட் டீல்ஸின் நிகர வரிவிதிக்கத்தக்க வழங்கல்கள் ரூ.2,70,00,000 மற்றும் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி ரூ.5,40,000 ஆகும்.

4. ரிட்டன்கள் மற்றும் வரி செலுத்தும் செயல்முறை

  • ஒரு மாதத்தின் 10ம் தேதியன்று, ஒரு ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டர், திரும்பிய வழங்கல்கள் உட்பட, முந்தைய மாதத்தில் அந்தத் தளத்தின் மூலம் செய்யப்பட்ட வெளிச்செல்லும் வழங்கல்களின் விவரங்களைக் கொண்டிருக்கும் ஜிஎஸ்டிஆர் -8 படிவத்தை அளித்திட வேண்டும். ஜிஎஸ்டிஆர் -8 படிவத்தில் பதிவுசெய்யப்பட்ட வரிவிதிக்கத்தக்க வழங்கல்களின் விலைப்பட்டியல் வாரியான விபரம் மற்றும் பதிவு செய்யப்படாத நபர்களுக்குச் செய்யப்பட்ட வழங்கல்களின் மொத்த மதிப்பு ஆகியவை கட்டாயம் வழங்கப்பட வேண்டும். வழங்குனர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரியையும் ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டர் கட்டாயம் செலுத்த வேண்டும்.
   GST-Ecommerce-Operator
  • அந்தத் தளத்தில் ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டர் மற்றும் வழங்குனர்களின் வழங்கல்களுக்கு இடையில் ஏதாவது முரண்பாடுகள் இருப்பின் ஒரு மாதத்தின் 21ம் தேதியன்று படிவம் GST ITC 1-ல் கிடைக்கச் செய்யப்படும். அந்த முரண்பாடானது தெரிவிக்கப்பட்ட மாதத்தின் ரிட்டனில் கட்டாயம் சரி செய்யப்பட வேண்டும். மேலுள்ள உதாரணத்தில் ஃபாஸ்ட் டீல்ஸ் நிறுவனம் அக்டோபர் மாத வழங்கல்களுக்கான படிவம் ஜிஎஸ்டிஆர் -8–ஐ 10 நவம்பர்’17 அன்று அளிக்கிறது. படிவம் GST ITC -1ல் ஏதாவது முரண்பாடு 21 நவம்பர் ’17 அன்று தெரிவிக்கப்பட்டால், 10 டிசம்பர்’17ல் தாக்கல் செய்யப்படும் நவம்பர்’17க்கான ரிட்டனில் கட்டாயம் சரி செய்யப்பட வேண்டும்.

ஈ-காமர்ஸ் தளங்களில் உள்ள வழங்குனர்கள்

ஈ-காமர்ஸ் தளங்களில் உள்ள வழங்குனர்கள் எனப்படுபவர்கள் ஈ-காமர்ஸ் தளம் ஒன்றில் சரக்குகள் அல்லது சேவைகளை வழங்கும் நபர் ஆவார்கள். ஈ-காமர்ஸ் தளங்களில் உள்ள வழங்குனர்களிடம் தேவைப்படுவன பின்வருமாறு-

1. கட்;டாயப் பதிவு
ஈ-காமர்ஸ் தளங்களில் உள்ள வழங்குனர்கள் அனைவரும் ஜிஎஸ்டி-ன் கீழ் கட்டாயம் பதிவு செய்யத் தேவைப்படும். எனவே பதிவு செய்தலுக்கான அதிகபட்ச விற்றுமுதல் வரம்பைத் தாண்டாத ஈ-காமர்ஸ் வழங்குனர்கள் கூட கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்

2. தொகுப்புத் திட்டத்துக்கான தகுதியின்மை
ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டர் ஒருவர் மூலம் சரக்குகள் அல்லது சேவைகளை வழங்கும் ஒரு நபர் தொகுப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்குத் தகுதி பெற மாட்டார். எனவே, அந்த நபரின் மொத்த விற்றுமுதல் ரூ.50 லட்சத்தைத் தாண்டவில்லை என்றாலும், தொகுப்பு வரி செலுத்துபவராவதற்கான தெரிவு அவருக்கு இல்லை

3. ரிட்டன்ஸ் செயல்முறை
ஈ-காமர்ஸ் தளத்தில் உள்ள ஒரு வழங்குனர் வழக்கமான முகவருக்குப் பொருந்தும் ஜிஎஸ்டி ரிட்டன் செயல்முறையை பின்பற்ற வேண்டும். அத்துடன் ஈ-காமர்ஸ் தளங்கள் மூலம் செய்யப்படும் வழங்கல்களைப் பொறுத்து வழங்கப்பட வேண்டிய விபரவங்கள் பின்வருமாறு –

  • ஒரு மாதத்தின் 10ம் தேதியன்று, ஈ-காமர்ஸ் தளங்கள் மூலம் செய்யப்பட்ட வெளிச்செல்லும் வழங்கல்கள் குறித்த விபரங்களைக் கொண்டிருக்கும் படிவம் ஜிஎஸ்டிஆர் -1 ஐ அளிக்க வேண்டும். படிவம் ஜிஎஸ்டிஆர் -1ல், பதிவு செய்யப்பட்ட வரி விதிக்கத்தக்க நபர்களுக்குச் செய்யப்பட்ட வழங்கல்களின் விலைப்பட்டியல் ரீதியான விபரங்கள் மற்றும் பதிவு செய்யப்படாத நபர்களுக்கு ஈ-காமர்ஸ் தளத்தின் மூலம் செய்யப்பட்ட வழங்கல்களின் மொத்த மதிப்பு கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.
  • ஒரு மாதத்தின் 11ம் தேதியன்று, படிவம் ஜிஎஸ்டிஆர் -2யு வழங்குனருக்குக் கிடைக்கச் செய்யப்படும். ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டர்களால் தாக்கல் செய்யப்படும் படிவம் ஜிஎஸ்டிஆர் -8 ன் அடிப்படையில் கடந்த மாதத்தில் ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டர்களால் வசூலிக்கப்பட்ட மொத்த வரித் தொகை தானாக நிரப்பப்படும்.

   GST-Ecommerce-Suppliers

  • ஒரு மாதத்தின் 15ம் தேதியன்று, வழங்குனர் ஒருவர் படிவம் ஜிஎஸ்டிஆர் -2இ ஐ அளிக்க வேண்டும், அதில் ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டரால் வசூலிக்கப்பட்ட வரி விவரங்கள் ஏற்கப்பட அல்லது மாற்றப்பட இயலும். வசூலிக்கப்பட்ட வரியானது வழங்குனரின் மின்னணு ரொக்கப் பேரேட்டில் தற்காலிக அடிப்படையில் வரவு வைக்கப்படும், அதை அவர் செலுத்த வேண்டிய வரியிலிருந்து கழித்துக்கொள்ளலாம்.
  • அந்தத் தளத்தில் ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டர் மற்றும் வழங்கல்களுக்கு இடையில் ஏதாவது முரண்பாடுகள் இருப்பின் ஒரு மாதத்தின் 21ம் தேதியன்று படிவம் GSTITC-1; வழங்குனருக்குக் கிடைக்கச் செய்யப்படும். ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டரால் தெரிவிக்கப்பட்ட வழங்கல்களுக்கும், அளிக்கப்பட்ட வழங்கல்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏதும் இருப்பின் காட்டப்படும். அந்த முரண்பாட்டை அது தெரிவிக்கப்பட்ட மாதத்துக்கான ரிட்டனில் கட்டாயம் சரி செய்ய வேண்டும். அது சரி செய்யப்படாத நிலையில், ஆப்பரேட்டரால் செய்யப்பட்ட வழங்கல்களின் மதிப்பானது வழங்குனரால் அளிக்கப்பட்ட வழங்கல்களின் மதிப்பைவிட அதிகமாக இருப்பின், தொகைகளுக்கு இடையிலான் வித்தியாசம், அதற்கான வட்டியுடன் அடுதது வரும் மாதத்துக்குச் செலுத்த வேண்டிய வரியுடன் சேர்க்கப்படும்.
   மேலுள்ள உதாரணத்தில் ராகேஷ; பிரைவேட் லிமிடெட் அக்டோபர் மாத வழங்கல்களுக்கான படிவம் ஜிஎஸ்டிஆர் -1ஐ 10 நவம்பர்’17 அன்று அளிக்கிறது. படிவம் GST ITC-1 ல் ஏதாவது முரண்பாடு 21 நவம்பர் ’17 அன்று தெரிவிக்கப்பட்டால், 10 டிசம்பர்’17ல் தாக்கல் செய்யப்படும் நவம்பர்’17க்கான ரிட்டனில் கட்டாயம் சரி செய்யப்படவேண்டும்.

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

107,084 total views, 4 views today