நாடு முழுவதும் உற்பத்தி பிரிவுகள் அல்லது சேவை ஒழுங்குமுறை பிரிவுகள் விநியோகிக்கப்படும் ஒரு வியாபாரத்தை வணிகமாகக் கொண்டிருப்பது மிகவும் பொதுவானது ஆகும். எளிமையான சொல்வதானால், தலைமை அலுவலகங்கள் (HO) மற்றும் நாடு முழுவதும் பரவக்கூடிய கிளை அலுவலகங்கள் (BO) கொண்ட வணிகங்கள் – ஒரே மாநிலத்தில் அல்லது வேறு மாநிலத்தில் இருக்கலாம். இந்த முறைமையின் கீழ், சிறந்த செயல்பாட்டு திறனைக் கொண்டிருப்பது மற்றும் கட்டுப்பாட்டைப் பெறுவதற்காக, பொதுவாக வர்த்தகர்கள் HO இல் பொதுவான சேவைகளை கொள்முதல் செய்வதற்காக மையப்படுத்தப்பட்ட பில்லிங்கை ஏற்றுக்கொள்கின்றனர். இந்த சூழ்நிலை கிளை பிரிவுகளால் பயன்படுத்தப்படும் பொதுவான உள் விநியோகங்களில் செலுத்தப்படும் உள்ளீட்டு வரிப் பலனை சேகரிக்க வழிவகுக்கிறது.

இந்த சூழ்நிலையைத் தவிர்க்க பொருட்டு, உள்ளீட்டு சேவை விநியோகிப்பாளர் (ஐஎஸ்டி) என்ற கருத்து சென்வேட் (CENVAT) பலன் விதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது, இது HO, வரிச் சலுகைகளை வரிசெலுத்தக்கூடிய சேவைகளை உற்பத்தி செய்தல் அல்லது வழங்குதலில் ஈடுபட்டுள்ள தகுதியுள்ள பிரிவுகளுக்கு விநியோகிக்க அனுமதிக்கிறது. பொதுவான சேவைகளை கொள்முதல் செய்வதற்காக மையப்படுத்தப்பட்ட பில்லிங் செய்யும் HO, ‘உள்ளீடு சேவை விநியோகிப்பாளர்’ என அழைக்கப்படுகிறது.

பலனை விநியோகிக்கும் பொருட்டு, HO ஆனது ஐஎஸ்டியாக தனி பதிவொன்றை பெற்றுக்கொள்ள வேண்டும், மற்றும் அரை வருடாந்திர வருவாயை தாக்கல் செய்ய வேண்டும்.

ஒரு ஐஎஸ்டி ஆக, HO முக்கியமாக பின்வருவனவற்றை செய்கிறது:

  • பொதுவான உள்ளீட்டு சேவைகளைப் பெற சேவை வரி விலைவிவரப்பட்டியலை பெறுகிறது
  • அவசியமாக ஒரு விலைவிவரப்பட்டியல் / சலானை வழங்குவதன் மூலம் தகுதியுள்ள பிரிவுகளுக்கு உள்ளீட்டு வரிப் பலன்களை விநியோகித்தல்.

GST-ன் கீழ் உள்ளீடு சேவை விநியோகிப்பாளர்

உள்ளீடு சேவை விநியோகிப்பாளர் (ஐஎஸ்டி) என்ற கருத்து ஜிஎஸ்டீக்கும் வழங்கப்படுகின்றது இது ’வரி விலைவிவரப்பட்டியலின் உள்ளீட்டு சேவைகளைப் பெறும். சரக்குகள் மற்றும் / அல்லது சேவைகளை வழங்குபவரின் ஒரு அலுவலகம் ஆகும் மேலும் இது நிரந்தர கணக்கு எண்ணின் (PAN) கீழ் பதிவு செய்துள்ள சரக்குகள் மற்றும் / அல்லது சேவைகளின் வழங்குநருக்கு வரிச் சலுகைகளை விநியோகிக்க
அனுமதிக்கப்படுகிறது’ என விவரிக்கப்படுகின்றது. இது ஐஎஸ்டி என்பது இவ்வாறான ஒரு அலுவலகம் என்பதை குறிக்கின்றது:

  • பலனை விநியோகிக்கும் நோக்கத்திலுள்ள ஒரு பதிவுசெய்துள்ள வரிசெலுத்தக்கூடிய நபருக்கு சொந்தமான ஏதேனும் ஒரு தலைமை அலுவலகம், நிர்வாக அலுவலகம், கார்ப்பரேட் அலுவலகம், பிராந்திய அலுவலகம், டெபாட் மற்றும் பல.
  • சேவைகளின் உள்நாட்டு வழங்கலின் இரசீதின்படி வரி விலைவிவரப்பட்டியல்களை பெறும் அலுவலகம்
  • சேவைகளை அனுபவிக்கும் கிளை பிரிவுகளுக்கு சேவைகளின் உள்நோக்கிய பொருட்களை வழங்குவதற்கு வரி பலன்களை விநியோகிப்பவை, மற்றும் பலன் விநியோகிப்புக்காக விலைவிவரப்பட்டியல்களை வெளியிடுபவை
ஜிஎஸ்டீயின் கீழ் பதிவு செய்தல்

ஒரு ஐஎஸ்டி தனி பதிவு பெற வேண்டும். பதிவு கட்டாயமானாதகும் மற்றும் ஒரு ஐஎஸ்டிக்கு பதிவு செய்ய தொடக்க வரம்பு எதுவுமில்லை. தற்போதுள்ள வரிவிதிப்பின் கீழ் (அதாவது சேவை வரிக்கு கீழ்) ஏற்கனவே ஐஎஸ்டி. என பதிவுசெய்யப்பட்ட வணிகங்கள், ஜிஎஸ்டீயின் கீழ் ஒரு புதிய ஐஎஸ்டியாக பதிவு பெற வேண்டும். ஏனென்றால், தற்போதுள்ள ஐஎஸ்டி பதிவு ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு மாற்றப்படாது.

Businesses who are already registered as an Input Service Distributor under the existing regime (i.e. under Service Tax), will be required obtain a new ISD registration under GST.Click To Tweet
விநியோக முறை

ஜிஎஸ்டீயின் கீழ், ஒரு மாநிலங்களுள்ளான பரிமாற்றத்தில், சிஜிஎஸ்டீ மற்றும் எஸ்ஜிஎஸ்டீ ஆகியவை பொருந்தும். ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள பரிவர்த்தனையில், சிஜிஎஸ்டீ மற்றும் யூடீஜிஎஸ்டீ ஆகியவை பொருந்தும். மாநிலங்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகள் மற்றும் இறக்குமதிகளில் ஐஜிஎஸ்டீ பொருந்தும். ஒரு ஐஎஸ்டி மூலம் பலன் வழங்குவதற்கான நிகழ்வுகள் பின்வருமாறு:

  • ஐஎஸ்டி மற்றும் பலன் பெறுபவர் ஒரே மாநிலத்தில் உள்ளனர்
  • ஐஎஸ்டி மற்றும் பலன் பெறுபவர் வெவ்வேறு மாநிலங்களில் அமைந்துள்ளனர்

உள்ளீட்டு வரிப் பலன் விநியோகிக்கப்படும் பிரிவு, ‘பலன் பெறுபவர்’ என குறிப்பிடப்படுகிறது.

ஐஎஸ்டி மற்றும் பலன் பெறுபவர் ஒரே மாநிலத்தில் உள்ளனர்

ஐஎஸ்டி மற்றும் பலன் பெறுபவர் ஒரே மாநிலம் / யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள போது, ஐஜிஎஸ்டீ, சிஜிஎஸ்டீ, எஸ்ஜிஎஸ்டீ மற்றும் யூடீஜிஎஸ்டீ ஆகியவற்றின் உள்ளீட்டு வரிப் பலன் பின்வரும் பெறுநருக்கு விநியோகிக்கப்பட வேண்டும்:
GST Input Service Distributor same state

* ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள பரிவர்த்தனைகளுக்குப்

ஒரு உதாரணத்துடன் புரிந்து கொள்வோம்.

டாப்-இன்-டவுன் ஹோம் அப்ளையன்ஸ் லிமிட்டெட், கர்நாடகா, பெங்களூரில் அமைந்துள்ளது. மைசூர், சென்னை மற்றும் மும்பையில் உள்ள பிரிவுகள் உள்ளன. பெங்களூரில் உள்ள பிரிவு தலைமையகம் மற்றும் ஐஎஸ்டி ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற பிரிவுகளால் பயன்படுத்தப்படுகிற பொதுவான சேவைகளின் பெரும்பகுதியை அவர்கள் செய்கிறார்கள்.

மைசூர் பிரிவுக்கு பிரத்தியேகமாக வழங்கப்படும் விளம்பர சேவைகளுக்கு மேல் 18,000 ரூபாய் (சிஜிஎஸ்டி ரூ. 9,000 + எஸ்ஜிஎஸ்டி ரூ .9,000) ஜிஎஸ்டீ உடன் ரூ.1,00,000-க்கான ஒரு விலைவிவரப்பட்டியலை டாப்-இன்-டவுன் ஹோம் அப்ளையன்ஸ் லிமிட்டெட் (HO) பெறும்.
பலன் சிஜிஎஸ்டி ரூ .9,000 மற்றும் எஸ்ஜிஎஸ்டி ரூ .9,000 ஆக விநியோகிக்கப்படும்.


பலன் பெறுபவர் மற்றும் ஐஎஸ்டி வெவ்வேறு மாநிலங்களில் உள்ளனர்

ஐஎஸ்டி மற்றும் பலன் பெற்றவர்கள் பல்வேறு மாநிலங்களில் / யூனியன் பிரதேசங்களில் அமைந்துள்ள போது, ஐஜிஎஸ்டி, சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி, மற்றும் யூடீஜிஎஸ்டி ஆகியவற்றின் உள்ளீட்டு வரி பலன் பின்வருமாறு பலன் பெறுபவருக்கு வழங்கப்பட வேண்டும்:
GST ISD

எடுத்துக்காட்டாக, டாப்-இன்-டவுன் ஹோம் அப்ளிகேஷன்ஸ் லிமிட்டெட் (HO), சென்னை பிரிவுக்கு பிரத்தியேகமாக வழங்கப்படும் விளம்பர சேவைகளுக்கு ரூ.18,000 (சிஜிஎஸ்டி 9,000 + எஸ்ஜிஎஸ்டி 9,000) ஜிஎஸ்டீக்கான ஒரு விலைவிவரப்பட்டியலைப் பெறுவார்கள்.

சிஜிஎஸ்டி 9,000 மற்றும் எஸ்ஜிஎஸ்டி ரூ. 9,000 ஆகியவற்றின் பலன் சென்னைப் பிரிவுக்கு ரூ. 18,000-க்கான ஐஜிஎஸ்டீ-ஆக விநியோகிக்கப்படும்.

ஜிஎஸ்டீயின் கீழ் வரி செலுத்துப் படிவங்கள்

வகை காலம் இறுதித் தேதி வழங்க வேண்டிய விவரம்
படிவம் GSTR-6A மாதந்தோறும் அடுத்த மாதத்தின் 11ஆம் தேதி உள்நோக்கிய வழங்குதலின் (சப்ளைகள்) விவரங்கள் வழங்குநரால் அளிக்கப்படிம் படிவம் GSTR-1 –ன் அடிப்படையில் பெறுவருக்கு கிடைக்கச் செய்யப்படும்
படிவம் GSTR-6 மாதந்தோறும் அடுத்த மாதத்தின் 13ஆம் தேதி விநியோகிக்கப்படும் பலனின் விவரங்களை வழங்க வேண்டும்

ஜிஎஸ்டியில் ஐஎஸ்டி என்ற கருத்து சென்வேட் (CENVAT) பலன் விதிமுறைகள் மற்றும் சேவை வரி ஆகியவற்றின் கீழ் இருக்கும் விதிகளுக்கு ஒத்ததாகும். இந்த வலைப்பதிவில், ஜிஎஸ்டியில் ஒரு ஐஎஸ்டி யின் அடிப்படைகளைப் பற்றி நாங்கள் விவாதித்தோம். பலன் பெறுநருக்கு பலன் வழங்குவது எப்படி என்பதை அறிய அடுத்த அடுத்த வலைப்பதிவுக்காக காத்திருக்கவும்.

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

79,893 total views, 25 views today