ஒரு நபரின் வரி செலுத்தும் பொறுப்பை தீர்மானிப்பதே வரியின் மதிப்பீடாகும் ஒரு நபரின் வரி செலுத்தும் பொறுப்பு என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அந்த நபரால் செலுத்தப்பட வேண்டிய தொகையாகும். ஜிஎஸ்டீயின் கீழ் வரியின் மதிப்பீடு தற்போதுள்ள வரி விதிப்பில் உள்ளபடியே இருக்கின்றது. பரவலாக 2 வகை வரி மதிப்பீடுகள் உள்ளன, வரிசெலுத்தும் நபர் தானே செய்துகொள்ளும் மதிப்பீடு, அதாவது சுய மதிப்பீடு, மற்றும் வரி அதிகாரிகளின் மதிப்பீடு.

வரி அதிகாரிகளின் மதிப்பீட்டில் 4 வகைகள் உள்ளன:

    1.தற்காலிக மதிப்பீடு
    2. நுண்ணாய்வு மதிப்பீடு
    3. சிறந்த தீர்மான மதிப்பீடு
    4. சுருக்க மதிப்பீடு

இந்த விவரங்களை புரிந்து கொள்வோம்.

சுயமதிப்பீடு

பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துபவர் ஒருவர் தன்னை தான் செலுத்த வேண்டிய வரிகளை தானே மதிப்பீடு செய்து ஒவ்வொரு வரி காலத்திற்கும் பொருத்தமான வருமானத்தை வழங்க வேண்டும். வரிக்கு உட்பட்டவரின் வகையைச் சார்ந்து, அளிக்கப்படும் வருவாய் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எங்கள் ஜிஎஸ்டீ-ன் கீழ் வருமானத்தின் வகைவலைப்பதிவில் விவரிக்கப்பட்டுள்ளது

உதாரணமாக: பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கமான வியாபாரி ஒவ்வொரு மாதமும் GSTR-3 படிவத்தையும் ஆண்டுதோறும் GSTR-9 படிவத்தையும் அளிக்க வேண்டும். இதுவே வரி செலுத்துவோர் சுய மதிப்பீடு நடத்தும் நிகழ்வு ஆகும்.

வரி அதிகாரிகளின் மதிப்பீடு

1. தற்காலிக மதிப்பீடு

பொருந்தக்கூடிய பொருட்கள் மற்றும் / அல்லது சேவைகளின் மதிப்பை நிர்ணயிக்க முடியாவிட்டால் அல்லது வரிக்கு பொருந்தக்கூடிய வரி விகிதத்தை நிர்ணயிக்க முடியாவிட்டால், ஒரு தற்காலிக அடிப்படையில் வரி செலுத்துவதை அனுமதிக்க ஒரு அதிகாரியை கோரிக்கை செய்யலாம். அதிகாரி ஒரு தற்காலிக அடிப்படையில் வரி செலுத்த அந்நபரை அனுமதிப்பதற்கான உத்தரவை இடுவார். வரி மற்றும் வரிக்குரிய மதிப்பு விகிதம் அதிகாரி மூலம் குறிப்பிடப்படும். அதிகாரி தகுதி வாய்ந்தவர் என்று நினைக்கும்படி ஒரு பத்திரமும், உத்திரவாதம் அல்லது பிணையமும் அளிக்கப்பட வேண்டும். தற்காலிகமாக மதிப்பீடு செய்யப்பட்ட மற்றும் இறுதியாக மதிப்பீடு செய்யப்பட்ட வரிக்கு இடையிலான வித்தியாசத்தை செலுத்துவதற்காக அந்த நபருக்கு பிணைப்பை அப்பத்திரம் கொண்டுள்ளது.
தற்காலிக மதிப்பீட்டு ஆணைத் தேதி முதல் 6 மாதங்களுக்குள், இறுதி மதிப்பீட்டு ஆணையை அதிகாரி அனுப்ப வேண்டும்.
தற்காலிக மதிப்பீட்டின் கீழ் செலுத்த வேண்டிய எந்தவொரு கூடுதல் வரியும் வட்டிக்கு செலுத்த வேண்டிய கட்டாயம் இருக்கும், ஆனால் அந்த தேதிக்குள் செலுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை, அதாவது மாதத்தின் 20ஆம் தேதிக்கும்
செலுத்த வேண்டியதில்லை. இறுதி மதிப்பீட்டு ஆணைவுக்கு முன்னர் அல்லது அதற்கு பின் பணம் செலுத்துபவரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், உண்மையான செலுத்தும் தேதி வரை மாதம் 21 ஆம் தேதி முதல் வட்டி விதிக்கப்படும். இறுதி மதிப்பீட்டு ஆணையின் படி நபர் பணத்தைத் திரும்பப் பெற தகுதியுடையவர் என்றால், பணத்தை திருப்பிச் செலுத்துப்படும் தொகை மீது வட்டி அளிக்கப்படும்.
உதாரணமாக: ஒரு பதிவு செய்யப்பட்ட நபர் ஹெச்எஸ்என் குறியீடு மற்றும் வரி வீதம் கிடைக்காத புதிய தயாரிப்பு ஒன்றை உருவாக்குகிறார். இந்த நிலையில், நபர் அவருக்கு செலுத்த வேண்டிய வரி பற்றிய ஒரு தற்காலிக மதிப்பீட்டை நாடுகிறார்.

2. நுண்ணாய்வு மதிப்பீடு

கண்காணிப்பு மதிப்பீட்டிற்கு கீழ், ஒரு அதிகாரி ஒரு நபரால் வழங்கப்பட்ட வருவாய் மற்றும் பிற தகவலை பரிசோதிக்கவும், வருவாயின் சரியானத் தன்மையை சரிபார்க்கவும் முடியும்.
எந்தவொரு முரண்பாடும் கவனிக்கப்பட்டல், அதிகாரி அந்த நபரிடம் தெரிவிப்பார் மற்றும் அவரது விளக்கத்தை நாடுவார். விளக்கம் திருப்திகரமாக இருந்தால், எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார். எந்தவொரு திருப்திகரமான விளக்கமும் 30 நாட்களுக்குள் தெரிவிக்கப்படாவிட்டால் அல்லது முரண்பாடுகளை ஏற்றுக் கொண்ட பிறகு வருவாயில் திருத்தங்களை செய்யவில்லை என்றால், அதிகாரி பொருத்தமான நடவடிக்கையைத் தொடங்குகிறார்.
உதாரணமாக: வழக்கமான நுண்ணாய்வு மதிப்பீட்டின் ஒரு பகுதியாக, பதிவு செய்யப்பட்ட ஒரு நபரால் பதிவுசெய்யப்பட்ட GSTR-3 படிவத்தை ஒரு அதிகாரி பரிசோதித்து, பரிவர்த்தனை மதிப்பு மற்றும் வரி தொடர்பான சில சந்தேகங்கள் குறித்து சந்தேகம் உள்ளார். அத்தகைய நிலையில், அதிகாரி டீலரிடமிருந்து ஒரு விளக்கம் பெற வேண்டும்.

3. சிறந்த தீர்மான மதிப்பீடு

சிறந்த தீர்மான மதிப்பீட்டின்கீழ், ஒரு அதிகாரி ஒரு நபரின் வரி செலுத்தும் பொறுப்பை தன் சிறந்த தீர்மானத்தின்படி மதிப்பிடுவாது. இதற்கான சூழ்நிலைகள்:

a. வருவாய் தாக்கல் செய்யாதவர்களின் மதிப்பீடு- ஒரு நபர் ஒரு அறிவிப்பு வழங்கப்பட்ட பின்னரும் வருவாயை வழங்காவிட்டால், ஒரு அதிகாரி தனது சிறந்த தீர்மானத்தின்படி நபரின் வரி பொறுப்புகளை மதிப்பிடுவார். கிடைத்த அல்லது அதிகாரியால் சேகரிக்கப்பட்ட அனைத்து தகவல்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அவர் வரி வருமானம் தாக்கல் செய்யப்படாத ஆண்டிற்கான வருடாந்திர வருமானத்தை தாக்கல் செய்ய வேண்டிய தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் மதிப்பீட்டு ஆணையை வெளியிடுவார்.

மதிப்பீட்டு ஆணையின் 30 நாட்களுக்குள் நபர் வரி கட்டுகிறார் என்றால், மதிப்பீட்டு ஆணை கைவிடப்படும்.
உதாரணமாக: ஒரு வழக்கமான வணிகர் வரித் துறையிலிருந்து ஒரு அறிவிப்பைப் பெற்ற பின்னரும் கூட ஒரு வருடத்திற்கான படிவத்தை GSTR-9 க்கு அளிக்கவில்லை,. அத்தகைய ஒரு நிலையில், நபர் மூலம் செலுத்த வேண்டிய வரிகளை மதிப்பிடுவதற்கு ஒரு அதிகாரி சிறந்த தீர்மான மதிப்பீட்டைத் தொடங்குகிறார்.
b. பதிவு செய்யப்படாத நபர்களின் மதிப்பீடு – ஒரு வரி செலுத்தும் பொறுப்புள்ளவர் தனக்க் பதிவு செய்ய வேண்டிய பொறுப்பு இருந்தாலும் பதிவு செய்யாமல் இருந்தால், ஒரு அதிகாரி பொஉத்தமான வரிக் காலகட்டங்களுக்காக தன் சிறந்த தீர்மானத்தின்படி அந்நபரின் வரி பொறுப்புகளை மதிப்பீடு செய்து, வரி வருமானம் தாக்கல் செய்யப்படாத ஆண்டிற்கான வருடாந்திர வருமானத்தை தாக்கல் செய்ய வேண்டிய தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் மதிப்பீட்டு ஆணையை வெளியிடுவார்.
உதாரணமாக: ஒரு ஆய்வின்போது, ஒருவரின் ஆண்டு வருமானம் வரம்பை மீறுகிறது என்றாலும் அவர் ஜிஎஸ்டீயின் கீழ் பதிவு செய்யவில்லை என்று ஒரு அதிகாரி கண்டுபிடித்துவிட்டால்,. அதிகாரி ஒரு சிறந்த தீர்மான மதிப்பீட்டைத் தொடங்குவார் மற்றும் நபரின் வரி பொறுப்புகளை மதிப்பிடுவார்.

4. சுருக்க மதிப்பீடு

சில சிறப்புச் சந்தர்ப்பங்களில், ஒரு அதிகாரி, கூடுதல்/இணை ஆணையரின் அனுமதியுடன், அவருடைய கவனத்திற்கு வரும் நபரின் வரி பொறுப்புகளைக் காட்டும் எந்த ஆதாரத்தையும் கண்டுபிடித்த்தால், வருவாயின் நலன்களை பாதுகாக்க நபரின் வரி பொறுப்புகளை மதிப்பீடு செய்யலாம், மேலும் அவ்வாறு செய்யும் போது எந்த தாமதமும் வருவாயின் வட்டிக்கு தீங்கு விளைவிக்கும் என்று நம்புவதற்கான போதுமான ஆதாரங்கள் இருந்தால் மதிப்பீட்டு ஆணையை வழங்குவார்.
உதாரணமாக: ஒரு பதிவு செய்துள்ள வழக்கமான வியாபாரி மூலம் தாக்கல் செய்யப்பட்ட படி GSTR-3 இன் படி, ஒரு அதிகாரி சுருக்க மதிப்பீடு ஒன்றை தொடங்குகிறார், ஏனெனில் நபர் ஒரு குறிப்பிடத்தக்க இழப்பு வருவாயை மீட்டெடுக்க முடியும் என்று நம்புவதற்கான ஆதாரங்களை அவர் காண்கிறார்.
ஜிஎஸ்டீ-ன் கீழ் பல்வேறு வகை மதிப்பீட்டைப் பற்றி அறிந்து கொள்வதும், இணக்கத் தேவைகளை கடைபிடிப்பது ஒரு வரிசெலுத்தும் நபருக்கு முக்கியம் ஆகும். ஒவ்வொரு பதிவு செய்தவருக்கும் சுய மதிப்பீடு மிக முக்கியமானது. துல்லியமான தகவலை வழங்குவதும், தற்காலிக அடிப்படையிலான வரிகளை செலுத்துவதும் முக்கியம். செய்ய்ப்பட்ட சுய மதிப்பீடு வரி அதிகாரிகளால் ஒரு மதிப்பீடு தொடங்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. வரி அதிகாரிகள் ஒரு மதிப்பீட்டை துவங்கும்போது, ஒரு வியாபாரி கொடுக்கப்பட்ட நேரத்திலிருந்தே கேட்கப்பட்ட தகவலை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஜிஎஸ்டீயின் கீழ் இணக்கமாக இருக்கஇணக்க மற்றும் தொழில்நுட்ப வசதிகளை வணிகங்கள் பயன்படுத்த வேண்டும்.

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

115,318 total views, 280 views today