நீங்கள் இன்றைய சந்தையைப் பார்த்தால், ஒன்று அல்லது அதிகமான பொருட்கள், அல்லது பொருட்கள் மற்றும் சேவைகள் இணைந்து வழங்கப்படுவதை அடிக்கடி காண்பீர்கள். இதற்குக் காரணம் பின்வருவனவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம்:

  • விற்பனைக்கான யுக்தி – அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக
  • பொருட்கள் அல்லது சேவைகளின் தன்மையின் காரணமாக, அவை இணைந்து வழங்கப்படத் தேவைப்படலாம்

சேவை வரியின் கீழ், இத்தகைய முறை இணைந்த சேவை எனப்படும் – இது ஒரு வகைச் சேவையை மற்றொரு சேவையுடன் இணைந்து வழங்குவதாகும்.

திருத்தப்பட்ட மாதிரி வரைவு ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ், இரண்டு அல்லது அதற்கும் அதிகமான சரக்குகள் அல்லது பொருட்கள் அல்லது சரக்குகள் மற்றும் சேவைகள் இணைந்த வழங்கலுடன் இணைக்கப்பட்ட வழங்கல்கள், இரண்டு தனிப்பட்ட பண்புகளைக் கொண்டிருப்பதாக வகைப்படுத்தப்படுகிறது:

  • கலப்பு வழங்கல்
  • தொகுப்பு வழங்கல்

கலப்பு வழங்கல்

வரி விதிக்கத்தக்க ஒரு நபர், ஒரே விலையில், இரண்டு அல்லது அதிகமான தனிப்பட்ட சரக்குகள் அல்லது சேவைகள், அல்லது ஏதாவது சரக்குகள் அல்லது சேவைகளை இணைந்து வழங்குவது கலப்பு வழங்கல் எனப்படும்.

கலப்பு வழங்கலில் சரக்குகள் மற்றும் அல்லது சேவைகளின் இணைவு இயற்கையான தேவைகளின் காரணமாக இணைக்கப்படவில்லை, வழக்கமான வியாபாரத்தின் போது அவை தனித்தனியாக வழங்கப்படலாம்.

கலப்பு வழங்கலைத் தீர்மானித்தல்

நாம் இதை ஒரு உதாரணத்துடன் புரிந்துகொள்வோம்.

கிட் ஒன்றில் ஒரு டை, கடிகாரம், வாலட் மற்றும் ஒரு பேனா ஆகியவை இணைந்து ரூ.4,500க்குக் கிடைப்பதாகக் கருதிக்கொள்வோம்.

GST Mixed Supply

உதாரணத்தின்படி,

  • ஒரு டை, கடிகாரம், வாலட் மற்றும் பேனா ஆகியவை இணைந்து ஒரு கிட் ஆக இருக்கிறது.
  • டை வழங்குவதால் அதோடு சேர்த்து மற்ற பொருட்களை (கடிகாரம், வாலட், பேனா) அல்லது மாறாக வழங்க வேண்டிய அவசியம் கிடையாது.
  • கிட் ஒரே விலையில் வழங்கப்படுகிறது.

எனவே அந்தக் கிட் வழங்கப்படுவது ஒரு கலப்பு வழங்கல் ஆகும்.

கலப்பு வழங்கலுக்கான வரிச் சுமை

கலப்பு வழங்கல் மீதான வரிச்சுமையைக் கணக்கிட, அதிகபட்ச வரி விகிதத்தை ஈர்க்கும் சரக்குகள் மற்றும் சேவைகளுக்கான வரி, சரக்குகள் மற்றும் சேவைகளுடன் இணைந்து, கருத்தில்கொள்ளப்படும்.

கிட் குறித்த உதாரணத்தை மீண்டும் பார்ப்போம்.

பொருள்வரி விகிதம்*
டை12%
கடிகாரம் 18%
வாலட்12%
பேனா 5%

*குறிப்பான விகிதங்கள்

இந்த நிகழ்வில் கலப்பு வழங்கலில் உள்ள வாலட் அதிகபட்ச வரிவிதிக்கத்தக்கது அதாவது 18% எனவே கலப்பு வழங்கலுக்கு 18% வரி விதிக்கப்படும்.

தொகுப்பு வழங்கல்

சரக்குகள் மற்றும் சேவைகளின் தொகுப்பு வழங்கல் வரிவிதிக்கத்தக்க நபரால், அதைப் பெறுபவர் மீது விதிக்கப்படும், மேலும்:

  • அது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சரக்குகள் அல்லது சேவைகளின் வழங்கலைக் கொண்டிருக்கும் அல்லது
  • வியாபாரத்தின் போது இயல்பாகவே சேர்த்து வழங்கப்படும் சரக்குகள் மற்றும் சேவைகளின் இணைவு ஆகும்

இதன் பொருள் சரக்குள் மற்றும் சேவைகள் இயற்கையான தேவைகளின் காரணமாக சேர்க்கப்பட்டன. சரக்குகள் மற்றும் சேவைகளின் தொகுப்பு வழங்கலில் உள்ள கூறுகள் சரக்குகள் அல்லது சேவைகளின் ‘முதன்மை வழங்கலை’ சார்ந்திருக்கும் கூறுகள் ஆகும்.

முதன்மை வழங்கல் என்பது என்ன?

சரக்குகள் அல்லது சேவைகளின் வழங்கலில் உள்ள முதன்மையான கூறு தொகுப்பு வழங்கலின் அங்கத்தை உருவாக்கும் முதன்மையான வழங்கல் ஆகும், தொகுப்பு வழங்கலின் அங்கத்தை உருவாக்கும் வேறு ஏதாவது சார்பு வழங்கல்கள் முதன்மை வழங்கலுக்கு அடுத்ததாகும்.

தொகுப்பு வழங்கலைத் தீர்மானித்தல்

நாம் இதை ஒரு உதாரணத்துடன் புரிந்துகொள்வோம்,

  1. மும்பையிலுள்ள ஒரு 5 நட்சத்திர ஓட்டல் காலை உணவுடன் கூடிய 4 பகல் ஃ3 இரவு பேக்கேஜை வழங்குகிறது.GST Composite supply

இது ஒரு தொகுப்பு வழங்கல், ஏனெனில் தங்கும் வசதி வழங்குவது மற்றம் காலை உணவு வழங்குவது ஒரு ஓட்டல் தொழிலில் வழக்கமாக இணைந்து வழங்கப்படும் இயற்கையான இணைவாகும். இந்த நிகழ்வில், ஓட்டலில் இடவசதி வழங்குவது முதன்மை வழங்கல் ஆகும், காலை உணவு தங்கும் இடவசதி வழங்குவதின் துணைச் சேவையாகும்.

2. மும்பையில் உள்ள ஒரு 5 நட்சத்திர ஓட்டல் காலை உணவுடன் கூடிய 4 பகல் ஃ3 இரவு பேக்கேஜ் மற்றும் ஒரு நாள் மும்பை சுற்றுலாவை வழங்குகிறது.
இந்ந பேக்கேஜில் மும்பை சுற்றுலாவைச் சேர்ப்பது ஓட்டலில் தங்கும் வசதி வழங்குவதுடன் இயல்பாக வழங்கப்படுவது இல்லை. எனவே இது தொகுப்பு வழங்கல் ஆகாது. இது ஒரு கலப்பு வழங்கல் ஆகும்.

3. லேப்டாப் உடன் பை விற்பனை ஒரு தொகுப்பு வழங்கல் ஏனெனில் லேப்டாப்பை எடுத்துச் செல்வதற்கு லேப்டாப் பை இயற்கையிலேயே தேவையானது. ஆனால் பேக்பேக் பை போன்ற பன்முக உபயோகத்துக்கான பையை வாடிக்கையாளர் தெரிவு செய்தால், அது இயல்பாகச் சேர்ந்து வராதது என்பதால் தொகுப்பு வழங்கல் ஆகாது.

தொகுப்பு வழங்கலின் வரிச்சுமை

வரிச் சுமையை கணக்கிடும் நோக்கத்துக்கு அத்தகைய சரக்குகள் மற்றும் சேவைகளுக்கான முதன்மை வழங்கல் மீது விதிக்கப்படும் வரி விகிதம் தொகுப்பு வழங்கல் மீது விதிக்கப்படும். அதே உதாரணத்தைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வோம்,

மும்பையிலுள்ள ஒரு 5 நட்சத்திர ஓட்டல் காலை உணவுடன் கூடிய 4 பகல் /3 இரவு பேக்கேஜை வழங்குகிறது. ஓட்டல் தங்கும் வசதிக்கு 18% வரியும், உணவுச் சேவைக்கு 12% வரியும் விதிக்கப்படுவதாகக் கருதிக்கொள்வோம்.

உதாரணத்தின்படி, ஓட்டல் தங்கும் வசதியே முதன்மை வழங்கல் ஆகும், முழுவழங்கலுக்கும் 18% வரி விதிக்கப்படும்.

கலப்பு வழங்கல் மற்றும் தொகுப்பு வழங்கலின் கருத்துகளுக்கு ஏற்ற வகையில், சரக்குகள் மற்றும் சேவைகளை இணைப்பதன் நோக்கங்களை அடைவதற்கு, நிறுவனங்கள் தங்களால் தரப்படும் வழங்கல்களின் வகைகளைப் பார்த்து மறு-ஆய்வு செய்வது முக்கியமாகும்.

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

50,283 total views, 5 views today