ஒவ்வொரு பதிவு செய்துள்ள வழக்கமாக வரி செலுத்தும் நபரும் ஒரு மாதாந்திர அடிப்படையில் ஜிஎஸ்டீ ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும், மேலும் மாதத்தின் 20 ஆம் தேதிக்குள் வரி செலுத்த வேண்டும். ஒரு நிலுவை வரியை வரி செலுத்துபவர் செலுத்தவில்லையென்றால், வரி செலுத்த வேண்டிய கெடு தேதியில் இருந்து நிலுவை வரிக்கு வட்டி செலுத்த வேண்டியிருக்கும்.

ஒரு நபர் நிலுவை வரியை செலுத்தாமல் ஒரு மாதாந்திர ரிட்டர்னை தாக்கல் செய்கிறார் என்றால், அவ்வாறு அளிக்கப்பட்ட ரிட்டர்ன் என்பது ஒரு செல்லுப்படியாகாத ரிட்டர்ன் என்று கருதப்படுகிறது. ஒரு மாதத்திற்கான ரிட்டர்னை தாக்கல் செய்யாமல், நிலுவை வரியை செலுத்தாமல் இருந்தால், அடுத்த மாதத்தின் ரிட்டர்னை தாக்கல் செய்ய முடியாது. எனவே, வரி செலுத்தாமல் இருந்தால் பெறக்கூடிய அபராதங்களைத் தவிர்ப்பதற்காக ஜிஎஸ்டீ-யின் கீழ் செலுத்த வேண்டிய வரிகளை எவ்வாறு செலுத்துவது என்பதைப் புரிந்து கொள்வது அவசியமாகும்.

Without furnishing the return for a month and paying the tax due, the subsequent month’s return cannot be furnished.Click To Tweet

வரி செலுத்தும் நோக்கத்திற்காக, ஒவ்வொரு பதிவுசெய்துள்ள டீலரும் ஜிஎஸ்டீ போர்டலில் 3 லெட்ஜர்களை வைத்திருப்பார்:

1.மின்னணு வரிப் பொறுப்பு பதிவேடு வரி, வட்டி, அபராதம், தாமதக் கட்டணம் அல்லது வேறு ஏதாவது தொகை போன்ற ஒரு நபர் செலுத்த வேண்டிய அனைத்து தொகைகளும் இங்கு பற்று வைக்கப்படும்.
2.மின்னணு பண லெட்ஜர்

வரி, வட்டி, அபராதம், தாமதக் கட்டணம் அல்லது வேறு ஏதாவது தொகை போன்ற ஒரு நபர் செலுத்தக்கூடிய அனைத்து வைப்புத்தொகைகளும் இங்கே வரவு வைக்கப்படும்.
3.மின்னணு கிரெடிட் லெட்ஜர் ஒரு நபரால் படிவம் GSTR-2-ல் சுய மதிப்பீடு செய்யப்பட்டு, கிளைம் செய்யப்பட்டுள்ளபடி, உள்ளீடு வரிக் கிரெடிட் என்பது இங்கு வரவு வைக்கப்படும். இது வரி செலுத்துவதற்காக மட்டுமே ஒரு நபரால் பயன்படுத்தப்பட முடியும், மேலும் வட்டி, தாமதக் கட்டணம் மற்றும் பிற தொகைகள் போன்ற இதர தொகைகளுக்குப் பொருந்தாது.

For the purpose of paying tax, every registered dealer will have 3 ledgers in the GST portalClick To Tweetமின்னணு வரிப் பொறுப்பு பதிவேட்டில் காட்டப்படும் பொறுப்புகளின்படி பணம் செலுத்த, மின்னணு பண லெட்ஜர் மற்றும் மின்னணு கிரெடிட் லெட்ஜரில் உள்ள மீதத் தொகையை ஒரு நபரால் பயன்படுத்த முடியும். ஒரு செலுத்தப்பட வேண்டிய தொகை செலுத்தப்பட்டால்,

   • மின்னணு வரி பொறுப்புப் பதிவேடானது செலுத்தப்பட்ட தொகையால் வரவு வைக்கப்படும்.

 

   • மின்னணு கிரெடிட் லெட்ஜெரில் பணம் செலுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கிரெடிட் என்பது பற்று வைக்கப்படும்.

 

  • பணம் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட வைப்புத்தொகையானது மின்னணு பண லெட்ஜரில் பற்று வைக்கப்படும்.

இதை ஒரு விளக்கம் மூலமாகப் புரிந்து கொள்ளலாம்.

விளக்கம்
ரவீந்திரா அப்பேரல் என்பது டிசம்பர் 20,2017 அன்று பின்வரும் மீதத் தொகைகளைக் கொண்டுள்ளன:
GST Tax Payment

1. மின்னணு கிரெடிட் லெட்ஜரில் உள்ள கிரெடிட்டை பயன்படுத்துவதன் மூலம் வரி பொறுப்புகளை அமைத்தல்

<ahref=”http://blogs.tallysolutions.com/how-to-set-off-input-credit-against-liability-in-gst/”>ஜிஎஸ்டீ முறையில் வரிப் பொறுப்புக்கு எதிராக உள்ளீட்டு வரி கிரெடிட்டை எவ்வாறு அமைப்பது என்ற எங்கள் வலைப்பதிவில் விவரித்துள்ளபடி, உள்ளீட்டு வரி கிரெடிட்டைப் பயன்படுத்தி வரி பொறுப்பை அமைக்க முடியும்.

நமது விளக்கத்தில், கீழே காட்டப்பட்டுள்ளபடி, ரவீந்திரா அப்பேரலின் வரி பொறுப்பானது அவர்களின் உள்ளீட்டு வரி கிரெடிட் மூலம் அமைக்கப்பட்டுள்ளது:

Electronic Cash Ledger - GST

எனவே, ரவீந்திரா அப்பேரல் என்பது செலுத்த வேண்டிய மீத பொறுப்பாக ரூ.60,000 (10,000 + 10,000 + 40,000) கொண்டிருக்கிறது.

2. செலுத்த வேண்டிய மீதமுள்ள வரியை செலுத்துவதற்கு மின்னணு பண லெட்ஜரில் உள்ள வைப்புத்தொகை

மீதமுள்ள வரியை செலுத்துவதற்கு, ரவீந்திரா அப்பேரல் நிறுவனமானது செலுத்த வேண்டிய வரியை மின்னணு பண லெட்ஜரில் டெப்பாசிட் செய்ய வேண்டும். இதற்காக, ரவீந்திரா அப்பேரல் பின்வருபவைகளைச் செய்ய வேண்டும்:

அ. பணம் செலுத்துவதற்கான சலானை உருவாக்கவும்

படிவம் ஜிஎஸ்டீ PMT-06-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டீ போர்ட்டலில் பணம் செலுத்துவதற்கான சலானை உருவாக்க முடியும்.வரி, வட்டி, அபராதம், கட்டணம் அல்லது வேறு ஏதாவது தொகை ஆகியவற்றுக்காக டெப்பாசிட் செய்யப்பட வேண்டிய தொகையைப் பற்றிய விவரங்களை சலானில் உள்ளிட வேண்டும். உருவாக்கப்பட்ட சலானானது 15 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
ஆ. கொடுக்கப்பட்டுள்ள முறைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தவும்

பின்வரும் முறைகள் மூலம் பணம் செலுத்தலாம்:

   • அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மூலமாக இண்டர்நெட் பேங்கிங்

 

   • அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மூலம் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு

 

   • எந்த வங்கியிலிருந்தும் தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) அல்லது ரியல் டைம் கிராஸ் செட்டில்மெண்ட் (RTGS) மூலம்

 

   • ஒரு வரி காலத்திற்கு ஒரு சலானுக்கு ரூ.10,000 வரையிலான வைப்புத் தொகைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மூலம் ஓவர் த கவுண்ட்டர் (ஓடீசி) முறையில் பணம் செலுத்துதல், ரொக்கம், காசோலை அல்லது வரைவோலை (டிடி)

 

  குறிப்பு: NEFT அல்லது RTGS மூலம் பணம் செலுத்தப்பட வேண்டியிருந்தால், ஒரு ஆணை படிவமானது ஜிஎஸ்டீ போர்டலில் சலான் உடன் இணைந்து உருவாக்கப்படும். பணம் செலுத்தப்படும் வங்கியிடம் ஆணை படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஆணை வடிவம் என்பது 15 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

இ. சி.ஐ.என் உருவாக்குதல் மற்றும் மின்னணு பண லெட்ஜருக்கு கிரெடிட்
ஒரு வியாபாரி மூலம் செலுத்தப்பட்ட தொகையானது உரிய அரசாங்க கணக்கில் வரவு வைக்கப்பட்டால், ஒரு சலான் அடையாள எண் (CIN) உருவாக்கப்படும், அது ஜிஎஸ்டீ போர்டலில் சலானில் குறிப்பிடப்படும். சி.ஐ.என்-ஐ பெற்றுக்கொண்ட பிறகு, ஒரு நபரின் மின்னணு பண லெட்ஜரில் செலுத்தப்பட்ட தொகை வரவு வைக்கப்படும்.
எங்கள் விளக்கத்தில், ரவீந்திரா அப்பேரல் என்பது டிசம்பர் 20, 2017 அன்று செலுத்த வேண்டிய மீதமுள்ள வரியை செலுத்துவதற்காக ரூ. .60,000 டெப்பாசிட் செய்தது.கட்டணம் செலுத்தப்பட்டவுடன், இந்தத் தொகையானது CGST, SGST மற்றும் IGST பொறுப்புகளை செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படும். வரி நிலுவையை செலுத்திய பிறகு, ரவீந்திரா அப்பேரலின் லெட்ஜர் என்பது கீழே காட்டப்பட்டுள்ளவாறு தோன்றும்:

Tax Payment under GST

ஜிஎஸ்டீ-யின்கீழ் வரி செலுத்துதல் தொடர்பான படிவங்கள்

படிவம் ஜிஎஸ்டீ PMT-01படிவம் ஜிஎஸ்டீ PMT-01-ல் மின்னணு வரி பொறுப்புப் பதிவேடு பராமரிக்கப்படும்
படிவம் ஜிஎஸ்டீ PMT-02மின்னணு கிரெடிட் லெட்ஜர் என்பது படிவம் GST PMT-02-ல் பராமரிக்கப்படும்
படிவம் ஜிஎஸ்டீ PMT-03ஒரு அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்படும், மின்னணு கிரெடிட் லெட்ஜர் / மின்னணு பண லெட்ஜரில் மீதத் தொகையை திரும்பப் பெறும் கிளைமை நிராகரிக்கப்பதற்கான உத்தரவு
படிவம் GST PMT-04ஒரு நபர் தனது மின்னணு கடன் லெட்ஜரில் ஏதாவது முரண்பாட்டைக் கண்டறிந்தால், அதை படிவம் GST PMT-04-ஐ பயன்படுத்தி தெரிவிக்க முடியும்
படிவம் ஜிஎஸ்டீ PMT-05மின்னணு பண லெட்ஜர் என்பது படிவம் GST PMT-05-ல் பராமரிக்கப்படும்
படிவம் ஜிஎஸ்டீ PMT-06வரி, வட்டி, அபராதம், கட்டணம் அல்லது வேறு ஏதாவது தொகையை செலுத்துவதற்கான சலான்
படிவம் ஜிஎஸ்டீ PMT-07ஒரு நபரின் வங்கிக் கணக்கில் டெபிட் செய்யப்பட்டு, சி.ஐ.என் உருவாக்கப்படவில்லை என்றால் அல்லது சி.ஐ.என் உருவாக்கப்பட்டு ஆனால் அது ஜிஎஸ்டீ போர்ட்டலில் தெரிவிக்கப்படாமல் இருந்தால், அதை படிவம் GST PMT-07-ஐ பயன்படுத்தி ஒரு நபரால் தெரிவிக்க முடியும்

 

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

224,717 total views, 472 views today