நாம் நம் முந்தைய வலைப்பதிவில் சேவைகளின் வழங்கல் (சப்ளை) இடத்தை தீர்மானிப்பதற்கான பொது விதிகள் பற்றி விவாதித்தோம். இப்போது சில குறிப்பிட்ட சேவைகளுக்காக வழங்கல் (சப்ளை) இடத்தை எப்படி தீர்மானிப்பது என புரிந்துகொள்வோம்.

சேவையின் வகை பெறுபவரின் வகை வழங்கல் (சப்ளை) இடம் எடுத்துக்காட்டு
ரெஸ்டாரண்ட் மற்றும் கேட்டரிங் சேவைகள்பொருந்தாதுசேவை அளிக்கப்படும் இடம்மும்பை, மகாராஷ்டிராவில் உள்ள மனிஷ் கேட்டெரெர்ஸ் நிறுவனம் முகேஷ் ஆட்டோமொபைல் நிறுவனத்திற்காக மும்பையில் நடைபெறும் அவர்களின் ஆண்டு விற்பனை நிகழ்வுக்காக கேட்டரிங் சேவைகளை வழங்குகின்றனர்.
வழங்குபவரின் (சப்ளையர்) இடம்: மும்பை, மகாராஷ்டிரா
வழங்கல் (சப்ளை) இடம்: கேட்டரிங் சேவை மும்பை, மகாராஷ்டிராவில் செய்யப்படுகின்றது
இது ஒரு மாநிலத்திற்குள்ளான சப்ளை மேலும் பொருந்தும் வரிகள் சிஜிஎஸ்டீ + எஸ்ஜிஎஸ்டீ
தனிப்பட்ட அலங்காரம், உடல் கட்டுக்கோப்பு, அழகு சிகிச்சை மற்றும் காஸ்மெடிக் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட உடல்நல சேவைகள்பொருந்தாதுபெங்களூர், கர்நாடகாவில் பதிவுசெய்து ஒரு சார்ட்டெர்ட் அக்கவுண்டெண்ட் ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளாவில் உள்ள தேவ் ஆயுர்வேதா செண்டருக்கு கொண்டு செல்லப்படுகிறார்.
வழங்குபவரின் (சப்ளையர்) இடம்: கேரளா
வழங்கல் (சப்ளை) இடம்: ஆயுர்வேதா சிகிச்சை கேரளாவில் செய்யப்படுகின்றது
இது ஒரு மாநிலத்திற்குள்ளான சப்ளை மேலும் பொருந்தும் வரிகள் சிஜிஎஸ்டீ + எஸ்ஜிஎஸ்டீ
ST
பயிற்சி மற்றும் செயல்பாட்டு மதிப்பீடு தொடர்பான சேவைகள்பதிவுசெய்துள்ள நபர்பெறுபவரின் இடம்பெங்களூர், கர்நாடகாவில் உள்ள அமோக்யா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டிசைனிங் நிறுவனம் சென்னை, தமிழ்நாட்டில் பதிவு செய்துள்ள மோகன் அப்பேரல் நிறுவனத்திற்காக ஃபேஷன் டிசைனிங் பயிற்சிகளை வழங்குகின்றது. பயிற்சி அமோக்யா இன்ஸ்டிடியூட்டின் வளாகத்தில் நடத்தப்படுகின்றது.
வழங்குபவரின் (சப்ளையர்) இடம்: பெங்களூர், கர்நாடகா
வழங்கல் (சப்ளை) இடம்: மோகன் அப்பேரலின் இடம் சென்னை, தமிழ்நாடு.
இது ஒரு மாநிலங்களுக்கு இடையிலான சப்ளை மேலும் பொருந்தும் வரிகள் ஐஜிஎஸ்டீ.
பதிவு செய்திருக்காத நபர்சேவை அளிக்கப்படும் இடம்பெங்களூரில் உள்ள அமோக்யா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டிசைனிங் நிறுவனம் சென்னை, தன் வளாகத்தில் மாணவர்களுக்காக ஃபேஷன் டிசைனிங்கில் ஒரு இளநிலை பட்டப்படிப்பை வழங்குகின்றது.
வழங்குபவரின் (சப்ளையர்) இடம்: பெங்களூர், கர்நாடகா
வழங்கல் (சப்ளை) இடம்: பயிற்சி பெங்களூர், கர்நாடகாவில் வழங்கப்படுகின்றது
எனவே, இது ஒரு மாநிலத்திற்குள்ளான சப்ளை மேலும் பொருந்தும் வரிகள் சிஜிஎஸ்டீ + எஸ்ஜிஎஸ்டீ
ஒரு கலாச்சார, கலை, விளையாட்டு, அறிவியல், கல்வி அல்லது பொழுதுபோக்கு நிகழ்வு அல்லது கேளிக்கை பூங்கா ஆகியவற்றுக்கான நுழைவு அனுமதி மூலம் வழங்கப்படும் சேவைகள்பொருந்தாதுநிகழ்வு நடக்குமிடம்ஹைதராபாத், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு நபர் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நடக்கும் தீவு சுற்றுலா விழாவிற்காக அந்தமான் நிக்கோபார் தீவுகள் துறையிடமிருந்து பயணச்சீட்டுகளை வாங்குகின்றார்.
வழங்குபவரின் (சப்ளையர்) இடம்: அந்தமான் நிக்கோபார் தீவுகள்
வழங்கல் (சப்ளை) இடம்: தீவு சுற்றுலா விழா அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நடக்கின்றது
இது ஒரு யூனியன் பிரதேசத்திற்குள்ளான சப்ளை மேலும் பொருந்தும் வரிகள் சிஜிஎஸ்டீ + யூடீஜிஎஸ்டீ.
ஒரு கலாச்சார, கலை, விளையாட்டு, அறிவியல், கல்வி அல்லது பொழுதுபோக்கு நிகழ்வின் நிறுவனம் மூலமாக வழங்கப்படும் சேவைகள்பதிவுசெய்துள்ள நபர்பெறுபவரின் இடம்மும்பையில் பதிவுசெய்துள்ள மோனிகா ஈவண்ட் ஆர்கனைஸர்ஸ் நிறுவனம் மும்பையில் பதிவுசெய்துள்ள கோமல் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்திற்குகாக, மும்பையில் நடக்கும் அவர்களின் ஆண்டு விற்பனை நிகழ்வில் நிகழ்வு நிர்வாக சேவைகளை (ஈவண்ட் மேனேஜ்மெண்ட் சர்வீஸ்). வழங்குகின்றது.
வழங்குபவரின் (சப்ளையர்) இடம்: மும்பை
வழங்கல் (சப்ளை) இடம்: கோமல் ஆட்டோமொபைல்ஸ் டெல்லியில் அமைந்துள்ளது.
இது ஒரு மாநிலங்களுக்கு இடையிலான சப்ளை மேலும் பொருந்தும் வரிகள் ஐஜிஎஸ்டீ.
பதிவு செய்திருக்காத நபர்நிகழ்வு நடக்குமிடம்மும்பையில் மோனிகா ஈவண்ட் ஆர்கனைஸர்ஸ் நிறுவனம் ராஜஸ்தானில் உள்ளஒரு வாடிக்கையாளருக்காக, மும்பையில் நடக்கும் அவரின் திருமண வரவேற்புக்காக நிகழ்வு நிர்வாக சேவைகளை (ஈவண்ட் மேனேஜ்மெண்ட் சர்வீஸ்) வழங்குகின்றது.
வழங்குபவரின் (சப்ளையர்) இடம்: மும்பை
வழங்கல் (சப்ளை) இடம்: திருமணம் மும்பையில் நடக்கின்றது.
இது ஒரு மாநிலத்திற்குள்ளான சப்ளை மேலும் பொருந்தும் வரிகள் சிஜிஎஸ்டீ + எஸ்ஜிஎஸ்டீ.

வழங்கல் (சப்ளை) இடம் சேவை அளிக்கப்படும் இடத்திலோ அல்லது நிகழ்வு நடக்கும் இடத்திலோ இருப்பதையும் வழங்கலின் வகை எப்போதும் மாநிலத்திற்குள்ளாக இருப்பதையும் நீங்கள் கவனிக்கலாம்.

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

56,712 total views, 2 views today