ஜிஎஸ்டீ-ன் கீழ், உற்பத்தி மீதான வரிவிதிப்பு, வரிவிதிப்புக்குரிய சேவைகளை வழங்குதல், மற்றும் சரக்குகளை விற்பனை செய்தல் ஆகிய தற்போதுள்ள முறையானது, ‘சப்ளை’ என்ற கருத்தின் மூலம் மாற்றப்படும். சரக்குகள் அல்லது சேவைகளின் ‘சப்ளை’ என்பதே ஜிஎஸ்டீ-ன் கீழ் வரிக்குட்பட்ட நிகழ்வு ஆகும். ஆகையால், சப்ளைக்கு ஏற்றவாறு வரி விதிக்கப்படுவதை நிர்ணயிப்பதற்காக சப்ளையின் இடத்தை புரிந்து கொள்வது மிகவும் முக்கியம் ஆகும்.மாதிரி ஜிஎஸ்டீ சட்டமானது, சப்ளைக்கான இடத்தை நிர்ணயிப்பதற்கான அளவுகோல்களை கீழே பட்டியலிடுகிறது.இந்த அளவுகோல்களின் அடிப்படையில், நீங்கள் இண்ட்ரா-ஸ்டேட் (மாநிலத்திற்குள்) அல்லது இண்டர்-ஸ்டேட் (மாநிலத்திற்கு வெளியே) என்று சரக்குகள் அல்லது சேவைகளின் சப்ளையைக் கருதலாம்.

ஒரு சப்ளை மீது விதிக்கப்படும் வரியை நிர்ணயிப்பதில், இரண்டு முக்கிய கூறுகள் உள்ளன:
• சப்ளையரின் இருப்பிடம் – சப்ளையர் வணிகம் நடைபெறுவதற்காகப் பதிவுசெய்த இடமாகும்
• சப்ளை செய்யப்படும் இடம் – பெறுபவரின் வணிகம் நடைபெறுவதற்காகப் பதிவுசெய்த இடமாகும்
இதை ஒரு உதாரணத்துடன் புரிந்து கொள்வோம்.

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் என்பது பிராட் கார்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் வணிகம் நடைபெறுவதற்காகப் பதிவு செய்யப்பட்ட இடமாகும். இது வணிகம் நடைபெறுவதற்காகப் பதிவுசெய்த இடத்தை உதய்பூர், ராஜஸ்தானில் கொண்டுள்ள ரவீந்திரா ஆட்டோமொபைல்ஸ்-க்கு கார்களை வழங்குகிறது.

GST Intra state supply

 

இங்கே, பிராட் கார்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனமும் ராஜஸ்தானில் உள்ளது மற்றும் சப்ளை செய்யப்படும் இடமும் ராஜஸ்தான் மாநிலத்திலும் உள்ளது. எனவே, இது ஒரு இண்ட்ரா-ஸ்டேட் சப்ளை ஆகும், அதாவது ஒரு மாநிலத்திற்கு உள்ளேயே மேற்கொள்ளப்படும் சப்ளை ஆகும். மேலும், இண்ட்ரா-ஸ்டேட் சப்ளையில், CGST மற்றும் SGST ஆகியவை விதிக்கப்பட வேண்டிய வரிகள் ஆகும் .
இப்போது மற்றொரு உதாரணத்தை நாம் பார்க்கலாம்.

பிராட் கார்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனமானது வணிகம் நடைபெறுவதற்காகப் பதிவுசெய்த இடத்தை ராஜஸ்தானில் கொண்டுள்ளது. இது வணிகம் நடைபெறுவதற்காகப் பதிவுசெய்த இடத்தை லக்னோ, உத்தரப்பிரதேசத்தில் கொண்டுள்ள ராம் ஆட்டோமொபைல்ஸ்-க்கு கார்களை வழங்குகிறது.

GST Inter state supply

இந்த உதாரணத்தில், பிராட் கார்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் அமைவிடம் ராஜஸ்தானில் உள்ளது மற்றும் சப்ளை செய்யப்படும் உத்தரப்பிரதேசத்தில் உள்ளது. எனவே, இது ஒரு இண்டர்-ஸ்டேட் சப்ளை ஆகும், அதாவது ஒரு மாநிலத்திற்கு வெளியே மேற்கொள்ளப்படும் சப்ளை ஆகும். மேலும், இண்டர்-ஸ்டேட் சப்ளையில், IGST என்பது விதிக்கப்பட வேண்டிய வரி ஆகும் .
பின்வருபவைகள்கூட மாநிலங்களுக்கு இடையேயான சப்ளையாகக் கருதப்படுகிறது:
• சரக்குகள் அல்லது சேவைகளை இறக்குமதி செய்தல்
• சரக்குகள் அல்லது சேவைகளை ஏற்றுமதி செய்தல்
•சப்ளையானது மாநிலத்திற்குள்ளேயே இருந்தாலும் கூட, சரக்குகள் அல்லது சேவைகளின் சப்ளையானது SEZ உருவாக்குபவர் அல்லது SEZ பிரிவு ஆகியவற்றுக்கு அல்லது ஆகியவற்றிலிருந்து மேற்கொள்ளப்படுதல்.
அடுத்து வருவது:
சரக்குகளை வழங்குவதற்கான இடத்தை தீர்மானித்தல்- சரக்குகளின் இயக்கத்தை உள்ளடக்கியது.

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

118,869 total views, 46 views today