2017 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி அன்று, ஜிஎஸ்டீ கவுன்சில் என்பது 98 பிரிவுகளில் 1211 சரக்குகளுக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜிஎஸ்டீ விகிதங்களை முடிவு செய்து, இறுதி செய்வதற்காக கூடியது. அடுத்த நாள் அன்று, ஜிஎஸ்டீ கவுன்சிலானது 36 வகையான சேவைகளுக்கு ஜிஎஸ்டீ விகிதங்களை இறுதிசெய்வதற்காக கூடியது.

தொடக்கத்தில், கிட்டத்தட்ட 81% சரக்குகளானது 18 சதவிகிதம் அல்லது அதற்கு குறைவான ஜிஎஸ்டீ விகிதத்தில் வகைப்படுத்தப்படும் என்றும், மீதமுள்ள 19% சரக்குகளானது 28 சதவிகிதம் அல்லது அதற்கு அதிகமான ஜிஎஸ்டீ விகிதத்தில் வகைப்படுத்தப்படும் என்றும் இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் வருவாய்த்துறை செயலாளரான ஹஸ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.

GST Rates

5 ஜிஎஸ்டீ வரி ஸ்லாப்களில் வகைப்படுத்தப்பட்டுள்ள சில முக்கிய சரக்குகளையும் சேவைகளையும் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஜிஎஸ்டீ-யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவை

சரக்குகள்
  • கோழிப்பண்ணை தயாரிப்புப்பொருட்கள் – இறைச்சி, மீன், கோழிக்கறி, முட்டைகள்
  • பால் தயாரிப்புப்பொருட்கள் – பால், தயிர், மோர், வெல்லம் (குர்), லஸ்ஸி, பேக் செய்யப்படாத பன்னீர்
  • புதிய பழங்கள் & காய்கறிகள்
  • உணவு பொருட்கள் – இயற்கையான தேன், மாவு (கோதுமைமாவு மற்றும் மைதா), பயறு வகைகள், பாஸ்மதி அரிசி, கடலை மாவு (கடலை), ரொட்டி, காய்கறி எண்ணெய், பிரசாத இனிப்புகள் (பிரசாத்), உப்பு
  • அழகுசாதனப் பொருட்கள் மற்றும் துணைப் பொருட்கள் – பிண்டி, குங்குமம்(சிந்தூர்), வளையல்கள்
  • எழுதுபொருட்கள் – தபால் தலைகள், நீதித்துறை பேப்பர்ஸ், அச்சிடப்பட்ட புத்தகங்கள், செய்தித்தாள்கள்
  • கைத்தறி தயாரிப்புப்பொருட்கள்
  • ஜவுளி – சணல், பட்டு
  • கருத்தடை சாதனங்கள்
சேவைகள்
  • ரூ.1000க்கும் குறைவாக விலை கொண்ட உணவக சேவைகள்
  • கல்வி (முன்பில் இருந்தே விலக்கு தொடர்கிறது)
  • சுகாதார சேவை (முன்பில் இருந்தே விலக்கு தொடர்கிறது)

5% ஜிஎஸ்டீ

சரக்குகள்
  • பால் தயாரிப்புப்பொருட்கள் – ஆடை நீக்கிய பால் பவுடர், குழந்தைகளுக்கான பால் உணவுகள், கண்டன்ஸ்டு பால், பேக் செய்யப்பட்ட பன்னீர், கிரீம்
  • உறைய வைக்கப்பட்ட காய்கறிகள்
  • உணவுப் பொருட்கள் – சர்க்கரை, வாசனைப் பொருட்கள், சாப்பிடக்கூடிய எண்ணெய், பீட்ஸா ரொட்டி, ரஸ்க், இனிப்புகள், மீன் துண்டுகள், மரவள்ளிக்கிழங்கு (சாபு தானா)
  • பானங்கள் – காபி, தேயிலை, பழச்சாறுகள்
  • ஆடை – 1000 ரூபாய்க்கு குறைவானது
  • காலணி – 500 ரூபாய்க்கு குறைவானது
  • எரிபொருள் – மண்ணெண்ணெய், எல்பிஜி, நிலக்கரி
  • சோலார் மின் தகடுகள்
  • பொதுவான பயன்பாடுகள் – துடைப்பம்
  • மருத்துவப் பொருட்கள் – மருந்துகள், ஸ்டெண்ட்கள்
  • செய்தித்தாள்
  • லைஃப் போட்கள்
  • ஜவுளி – பருத்தி, இயற்கை நார் மற்றும் இழைகள்
  • ஊதுபத்திகள் (அகர்பத்தி)
சேவைகள்
  • ரயில்வே பயணம்
  • பொருளாதார வகுப்பு விமானப் பயணம்
  • கூட்டு கேப்கள் (எ.கா. உபேர் & ஓலா)

ஜிஎஸ்டீ 12%

சரக்குகள்
  • பால் தயாரிப்புப்பொருட்கள் – வெண்ணெய், பாலாடைக்கட்டி, நெய்
  • பேக் செய்யப்பட்ட உலர் பழங்கள்
  • உணவுப் பொருட்கள் – ஸ்நாக்ஸ் (நாம்கீன் & புஜியா), பேக் செய்யப்பட்ட சிக்கன், சாசேஜ்கள், ஜாம்கள், சுவையூட்டிகள்
  • பானங்கள் – பழச்சாறுகள், பேக் செய்யப்பட்ட இளநீர்
  • ஆடை – 1000 ரூபாய்க்கு மேல்
  • தனிநபர் சுகாதாரம் – பற்பொடி
  • எழுதுபொருள் – பயிற்சி புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள்
  • பொதுவான பயன்பாடுகள் – தையல் இயந்திரம், குடை
  • ஆயுர்வேத மருந்துகள்
  • மொபைல் தொலைபேசிகள்
சேவைகள்
  • ஏசி அல்லாத விடுதிகள் & உணவகங்கள்
  • பிசினஸ் வகுப்பு விமானப் பயணம்

18% ஜிஎஸ்டீ

சரக்குகள்
  • பால் தயாரிப்புப்பொருட்கள் – ஐஸ் கிரீம்
  • பாதுகாக்கப்பட்ட காய்கறிகள்
  • உணவுப் பொருட்கள் – நறுமணமூட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, பாஸ்தா, கார்ன் ஃப்ளேக்ஸ், பாஸ்ட்ரீஸ், கேக்குகள், சூப்கள், உடனடி உணவு கலவைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள்
  • பானங்கள் – மினரல் வாட்டர்
  • பிராண்டட் ஆடைகள்
  • காலணி – 500 ரூபாய்க்கு மேல்
  • தனிநபர் சுகாதாரம் – திசுக்கள், கழிவறை பேப்பர், கூந்தல் எண்ணெய், சோப் பார்கள், பற்பசை
  • எழுதுபொருட்கள் – மேலுறைகள், ஃபவுண்டைன் பேனா
  • மின்னணு உபகரணம் – பிரிண்டட் சர்க்யூட்கள், மானிட்டர்கள்
  • இரும்பு & எஃகு தயாரிப்புப்பொருட்கள்
  • பிரி மேல் இலைகள் (டெண்டு பட்டா)
  • பிஸ்கட்டுகள்
  • ஜவுளி – மனிதனால் செய்யப்பட்ட இழை மற்றும் நூல்
சேவைகள்
  • ஏசி விடுதிகள் மற்றும் மதுபானம் வழங்கும் உணவகங்கள்
  • தொலைத்தொடர்பு சேவைகள்
  • தகவல் தொழில்நுட்ப சேவைகள்
  • நிதிசார்ந்த சேவைகள்
  • ஒப்பந்த பணிகள்
  • 100 ரூபாய் அல்லது அதற்கு குறைவான சினிமா டிக்கெட்

28% ஜிஎஸ்டீ

சரக்குகள்
  • உணவுப் பொருட்கள் – சாக்லேட்டுகள், சூயிங் கம், கஸ்டர்டு தூள்
  • பானங்கள் – ஏரேட்டட் வாட்டர்
  • தனிநபர் சுகாதாரம் – டியோட்ரண்டுகள், சவரக் கிரீம், ஆஃப்டர் ஷேவ், கூந்தல் ஷாம்பூ, டை (சாயம்), சன்ஸ்க்ரீன், வாசனை திரவியம், பேஸ் கிரீம்கள், டிட்டர்ஜெண்ட்டுகள்
  • வெள்ளைப் பொருட்கள் – வாக்யூம் க்ளீனர், ஷேவர்கள், முடி க்ளிப்பர்ஸ், சலவை இயந்திரங்கள், டிஷ் வாஷர்ஸ், வாட்டர் ஹீட்டர்கள் & மற்ற வீட்டு உபகரணங்கள்
  • ஒலிப்பெருக்கி
  • கேமராக்கள்
  • ஆட்டோமொபைல்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் *
  • வீட்டுக் கட்டுமானப் பொருட்கள் – பெயிண்ட், வால்பேப்பர், பீங்கான் டைல்ஸ், சிமெண்ட்
  • எடை இயந்திரங்கள், விற்பனை இயந்திரங்கள், ஏடிஎம்
  • பட்டாசுகள்
  • சொகுசு / கேடு விளைவிக்கும் பொருட்கள்* – பான் மசாலா, புகையிலை, பீடி, காற்று ஏற்றப்பட்ட பானங்கள் & மோட்டார் வாகனங்கள்
சேவைகள்
  • 5-நட்சத்திர ஹோட்டல்களின் அறைகள் மற்றும் உணவகங்கள்
  • பந்தயத்தில் பெட் கட்டுதல்
  • 100 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சினிமா டிக்கெட்

* குறிப்பு – மேலே பட்டியலிடப்பட்டுள்ள சொகுசு / கேடு விளைவிக்கும் பொருட்களுக்கு 28% ஜிஎஸ்டீ விகிதத்திற்கு மேல் ஒரு இழப்பீட்டு தீர்வை வசூலிக்கப்படும்

ஜிஎஸ்டீ வரி விகித ஸ்லாப்களுக்கு வெளியே உள்ள பொருட்கள்

  • தங்கம், விலையுயர்ந்த கற்கள், நகைகள் – 3%
  • விலைமதிப்பில்லாத & விலையுயர்ந்த கற்கள் – 0.25%
  சொகுசு / கேடு விளைவிக்கும் பொருட்கள் கருதப்படுதல்

சரக்குகள் மற்றும் சேவைகளின் முக்கிய பிரிவுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விகிதங்களுக்குக் கூடுதலாக, ஜிஎஸ்டீ கவுன்சிலானது 5 ஆடம்பர / கேடு விளைவிக்கும் பொருட்களுக்கான இழப்பீட்டு விகிதங்களை அங்கீகரித்துள்ளது. இந்த தீர்வைகளின் வருமானமானது, ஜிஎஸ்டீ-ன் முதல் ஐந்து ஆண்டுகளில் வரி வருவாய் இடைவெளியால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்காகப் பயன்படுத்தப்படும் இழப்பீட்டு நிதிக்குச் செல்லும்.
ஜிஎஸ்டீ விகிதங்களுக்கு மேல் இழப்பீட்டு தீர்வைகள் விதிக்கப்படும் பொருட்களுக்குப் பொருந்துபவை பின்வருமாறு:

பொருட்கள் ஜிஎஸ்டீ விகிதம் பொருந்தக்கூடியது அங்கீகரிக்கப்பட்ட தீர்வை வரையறை அதிகபட்ச தீர்வை
நிலக்கரி 5%ரூ.400 / டன்ரூ.400 / டன்
பான் மசாலா 28%60%135%
புகையிலை 28%61% – 204% ரூ. 4170/ ஆயிரம்
ஏரேட்டட் பானங்கள்28%12%15%
மோட்டார் வாகனங்கள்**28%1% – 15%15%

** குறிப்பு – 1500 சிசி-க்கும் மேற்பட்ட எஞ்சின் திறன் கொண்ட கார்கள், மற்ற விளையாட்டுரக மற்றும் ஆடம்பர கார்கள் ஆகியவற்றுக்கு தீர்வை என்பது 15% ஆக இருக்கும். சிறியரக கார்களுக்கு தீர்வை என்பது 1% ஆக இருக்கும்.

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

263,758 total views, 11 views today