நீங்கள் ஜிஎஸ்டீ-ஐ எதிர்கொள்ள தயாராவதற்கு ஒரு சில வாரங்களே மீதமுள்ளன, மேலும் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளும் பல கேள்விகளில், ‘ஜிஎஸ்டீ-க்கு சிறந்த முறையில் தயாராவதற்கு, என்னென்ன மாற்றங்களை நான் எனது சிஸ்டத்தில், என் வரி ஆலோசகரிடம் இருந்து , அல்லது வியாபாரத்தின் நடைமுறைகளில் எதிர்பார்க்க வேண்டும்? ‘, என்ற கேள்வியே பட்டியலில் முதன்மையானதாக இருக்கும்.

வரவிருக்கும் சட்டத்தின் காரணமாக உங்கள் வணிகத்தில் வெளிப்பட இருக்கும் முக்கிய எதிர்பார்ப்புகள் மற்றும் புதிய கடினமான சூழல்கள் ஆகியவற்றை இந்தக் கட்டுரை முன்னிலைப்படுத்த முயற்சிக்கிறது. ஜிஸ்டீ சட்டத்திற்கு வழிவகுக்கும் அரசியலமைப்பு திருத்தத்திற்குப் பின்னர், நமது முயற்சிகள்மீது கவனம் செலுத்தும்பொழுது இந்த கண்டுபிடிப்புகள் தெரியவந்தன. சந்தையில் எளிமையாகப் பயன்படுத்தக்கூடிய ஜிஎஸ்டீ தீர்வை வழங்குவதற்காக, புதிய வணிக அணுகுமுறை மாற்றங்களை அடையாளம் காணும்வகையில் எங்களின் செயல்பாடு இருந்தது.

உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தபடி, ஜிஎஸ்டீ என்பது விலைப்பட்டியல் பொருத்திப்பார்த்தல் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது ஆகும், மேலும் அது அடிப்படையில் பின்வரும் வழிகளில் உங்கள் வணிகத்தின் அணுகுமுறையை மாற்றும்:

1. ‘விலைப்பட்டியல் பதிவேற்றப்பட்டவுடன் பணம் செலுத்துதல்’ என்ற அணுகுமுறைக்கு நீங்கள் மாறுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்

ஜிஎஸ்டீ-க்கு முந்தைய காலத்தில்; ஒரு விலைப்பட்டியலை பெற்றபின்னர், உங்கள் சப்ளைருக்குக் நிலுவைத் தொகையை செலுத்திய பிறகே, உங்களால் ஒரு பரிவர்த்தனையை நிறைவு செய்ய முடியும். உங்கள் வரி ரிட்டர்களை தாக்கல் செய்வதற்கு முன்பே, விலைப்பட்டியல் மீதான வரி கிரெடிட் பெறும் வசதி உங்களுக்கு கிடைக்கும்.
இப்பொழுது ஜிஎஸ்டீ விதிகளின்படி, விலைப்பட்டியல் பொருத்திப்பார்த்தல் முடிந்தபிறகு மட்டுமே வரி கிரெடிட் உறுதி செய்யப்படுகிறது. வரி கிரெடிட் நிராகரிக்கப்படாது அல்லது தவறான மதிப்பை அது பிரதிபலிக்காது என்பதை எவ்வாறு நம்புவது என்ற கேள்வியை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளலாம்.
எனவே, இந்த செயல்முறை எப்படி நடக்கிறது என்பதை நாம் பார்க்கலாம். முதலாவதாக, உங்களுடைய சப்ளையர் மூலம் ஒரு விலைப்பட்டியலானது ஜிஎஸ்டீ சிஸ்டத்தில் பதிவேற்றப்படும். விலைப்பட்டியலில் உள்ள அனைத்து தரவுகளும் சரியாக உள்ளதா அல்லது உங்கள் பதிவுகளுடன் பொருந்துகிறதா என்பதை நீங்கள் சரிபார்க்கத் தொடங்கலாம் (விலைப்பட்டியல் உங்களுக்குக் கிடைக்கப்பெற்ற உடன்). இது சரிபார்க்கப்பட்டவுடன் மட்டுமே உங்கள் சப்ளையருக்கு நீங்கள் கட்டணம் செலுத்துவதாக இருக்கும். இந்த முறையில் பணிபுரிவது என்பது ஒரு சில சப்ளையர்களுக்கு ஆரம்பத்தில் புதிதாக இருக்கும், ஆனால் உங்கள் சப்ளையர்கள் அனைவருக்கும் சாதாரண செயல்முறையாக மாறும்.
உங்கள் வாடிக்கையாளர்கள் உங்களுக்கு பணம் செலுத்தும் முன்னர், சம்பந்தப்பட்ட விற்பனை விலைப்பட்டியல்களை நீங்கள் பதிவேற்றுவீர்கள் என்று எதிர்பார்க்கலாம். ஆகையால், ‘விலைப்பட்டியல் பதிவேற்றப்பட்டவுடன் பணம் செலுத்துவது’ என்பது ஒரு பொதுவான செயல்பாடாக மாறும் என்று நம்புகிறோம்.

'Payment on Invoice Upload’ will become a common phenomenon under GST.Click To Tweet
2. அரசாங்க வரி முறைமையுடன் நீங்கள் அடிக்கடி வழக்கமான அடிப்படையில் தொடர்புகொள்வீர்கள்

ஜிஎஸ்டீ-க்கு முந்தைய காலக்கட்டத்தில், பெரும்பாலான வணிக நிறுவனங்களானது அரசாங்க வரி முறைமையுடன் ஒரு மாதத்தில் ஒருமுறை அல்லது ஒரு காலாண்டில் ஒரு முறை தொடர்பு கொண்டிருந்தது.

இருப்பினும், ஜிஎஸ்டீ-ல் ‘விலைப்பட்டியல் பதிவேற்றப்பட்டவுடன் பணம் செலுத்துவது’ என்ற அணுகுமுறையின் காரணமாக இந்த தொடர்புகொள்ளல் என்பது முன்னெப்போதையும் விட அதிகமாக இருக்கும்.

நீங்களோ, உங்களுடைய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி நடைமுறையாளரோ (ஜிஎஸ்டீபி) அல்லது நீங்கள் இருவருமோ, ஒரு விலைப்பட்டியலை பதிவேற்றியவுடன் இது தொடங்குகிறது. நீங்கள் இருவரும் பதிவேற்றும் சூழலில், குழப்பம் ஏற்படுவதற்குப் பதிலாக தரவுகள் திறமையாக நிர்வகிக்கப்பட வேண்டும்.
உங்கள் கொள்முதல்களுக்கான விலைப்பட்டியல்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்குவீர்கள், மேலும் உங்கள் சப்ளையருக்கு பணம் செலுத்துவதற்கு முன்பாக விலைப்பட்டியல்கள் குறித்த ஒரு நிகழ்நேர உண்மை நிலை உங்களுக்குத் தேவைப்படலாம். இவை அனைத்திற்கும் மேலாக, நீங்கள் அரசாங்க வரி முறைமையுடன் அடிக்கடி உங்களை ஈடுபடுத்திக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

Prepare to engage more frequently with the Government Tax System under GST.Click To Tweet
3. கட்-ஆஃப் தேதியின்பொழுது உங்களின் பதட்டத்தின் அளவு அதிகரிப்பதை நீங்கள் கவனிக்கலாம்

ஜிஎஸ்டீ-க்கு முந்தைய காலக்கட்டத்தில், ஒரு வரி வகையின் ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கு ஒரே ஒரு கட்-ஆஃப் தேதி மட்டுமே இருந்தது. உங்கள் ரிட்டர்ன்களை தயாரித்து, பதிவேற்றும், நிலுவை வரிகளை செலுத்தும் மற்றும் அதற்கான ஒப்புகையை உங்களுக்கு வழங்கும் உங்கள் ஜிஎஸ்டீபீ-க்கு நீங்கள் தகவல் வழங்கலாம்.

இப்போது, பதிவேற்றம் செய்தல், பொருத்திப்பார்த்தல், தவறவிட்ட பதிவேற்றங்கள் மற்றும் வரி செலுத்துதல் ஆகிய செயல்முறைக்கு வெவ்வேறு கட்-ஆஃப் தேதிகள், அதாவது 10, 15, 17 மற்றும் 20ஆம் தேதிகளில் உள்ளன. இந்த தேதிகள் ஒவ்வொன்றிலும், உங்கள் ரிட்டர்கள் வெற்றிகரமாக செயலாக்கப்பட்டதா இல்லையா என்பதைப் பொறுத்து, உங்கள் கவலையின் அளவுகள் அதிகரிக்கும்.

ஒரு மாதத்தில் ஒவ்வொருவரும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அல்லது இலட்சக்கணக்கான விலைப்பட்டியல்களைக் கொண்டிருப்பதால், ஜிஎஸ்டீ முறைமையில் ஒட்டுமொத்தமாக, குறிப்பிட்ட ஒரு மாதத்தில் பல பில்லியன்கள் விலைப்பட்டியல்களை பிராசஸ் செய்ய வேண்டியிருக்கும். இந்த முறையானது தகவல்களை சேமிக்கும் மற்றும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இது போன்ற அதிக அளவிலான தரவுகளை பிராசஸ் செய்ய வேண்டியிருக்கும் மற்றும் ஜிஎஸ்டீ விதிகளின் அடிப்படையில் வெற்றி அல்லது தோல்வி முடிவுகளை வழங்க வேண்டியிருக்கும். அத்தகைய ஒரு தீர்வை வடிவமைப்பதற்கு இரண்டு-படிநிலைகள் கொண்ட செயல்முறை தேவைப்படுகிறது; வரி செலுத்துவோரிடம் இருந்து பிராசஸ் செய்ய தரவுகளைப் பெறுவது முதல் படிநிலையாகும், மேலும் பெற்ற தரவுகளுக்கான (ஒத்தியங்கா அணுகுமுறை என்றும் அறியப்படுகிறது) முடிவுகளை வழங்குவது இரண்டாவது படிநிலையாகும்.

ஒரு வங்கி கணக்கில் ஒரு காசோலை டெப்பாசிட் செய்யப்படும்பொழுது, கிளியரிங்கிற்கு உட்பட்டு தொகை வரவு வைக்கப்படும் என்ற ஒரு செய்தியை பெறுவது என்பது, இதை எளிமைப்படுத்துவதற்கான ஒரு ஒப்புமை ஆகும். கிளியரன்ஸ் அனுமதி வெற்றிகரமாக பெறப்பட்டதா அல்லது இல்லையா என்பது பின்னர் உங்களுக்குத் தெரியவரும்.
ஜிஎஸ்டீ அமைப்பில் தகவல்களைப் பதிவேற்றுவது மட்டுமே உங்கள் இணக்க நடவடிக்கைகளை நிறைவு செய்யாது என்பது இந்த ஒத்தியங்கா அணுகுமுறையின் அர்த்தமாகும். பிராசஸிங் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் நிலையில், 4 கட்-ஆஃப் தேதி என்பது பதட்டத்தை அதிகரிக்கும். எந்தவொரு தோல்விகளையும் வெற்றிகளையும் பற்றிய தகவல்களை நீங்கள் எதிர்பார்க்கலாம், நீங்கள் உங்கள் அமைப்பு மூடிவிட்டாலும் கூட உங்களுக்கு அது குறித்து தெரிவிக்கப்படும்.

4. பல்வேறு இடங்களில் இருந்து தடையின்றி செயல்படும் ஒரு அமைப்பு உங்களுக்குத் தேவைப்படும்

கிட்டத்தட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் பல இடங்களிலிருந்து இயங்குகின்றன. இது குறைந்தபட்சம் இரண்டு இடங்களில் தொடங்குகிறது; உங்கள் வணிக அமைவிடம் மற்றும் உங்கள் ஜிஎஸ்டீபீ-ன் அமைவிடம். உங்கள் வணிக நிறுவனமானது பல இடங்களில் இருந்து இயங்கினால், இயங்குவதற்கான சிக்கலானது மேலும் அதிகரிக்கிறது.
உங்கள் அமைவிடங்களில் உள்ள விலைப்பட்டியல்களை நீங்கள் பதிவேற்றி, உங்களின் ஒவ்வொரு அமைவிடங்களில் இருந்தும் விலைப்பட்டியல்களைப் பொருத்திப்பார்ப்பீர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறீர்கள். உங்களுடைய ஜிஎஸ்டீபீ என்பவர் உங்களிடம் இருந்தும், ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட விலைப்பட்டியல்களுக்காக ஜிஎஸ்டீஎன் இடம் இருந்தும் தகவல்களை எடுத்துக்கொள்வார். இந்த சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், உங்கள் ஜிஎஸ்டீபீ என்பவர் ரிட்டர்ன்களை சமர்ப்பிப்பார்.
இது அனைத்துமே ஒரே நேரத்தில் செயல்படலாம். பல்வேறு இடங்களில் இருந்து ஒரே நேரத்தில் செயல்படுவது என்பதற்கு, இணங்குவதற்கான தரவுகளானது ஒரு மிக உயர்ந்த அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் துல்லியம் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். ஆகையால், பல்வேறு வகையிலான முறைகளில் தடையில்லாமல் செயல்படும் உங்கள் திறனானது, உங்கள் பதிவுகள் மற்றும் இணக்கத்தன்மை ஆகியவற்றை உறுதிசெய்வதற்கு மிகவும் முக்கியமாகும்.

5. ரிட்டர்ன்களில் கையொப்பமிடுவதற்கு நம்பிக்கையளிப்பதற்கான ஒரு சிஸ்டம் உங்களுக்குத் தேவைப்படும்

ரிட்டர்னை தாக்கல் செய்வதற்கான கடைசி படிநிலையில், தொகுப்புரையை (தனிப்பட்ட பரிவர்த்தனைகளைக் கொண்டிருக்காது) நீங்கள் பதிவிறக்கம் செய்து, ஒரு ரிட்டர்ன்-ல் கையொப்பமிட வேண்டும். நீங்கள் கையெழுத்திடுவதற்கு முன்னர், எதுவுமே நிலுவையில் இல்லை என்பதையும், நீங்கள் சமர்ப்பித்தவைக்கும் ஜிஎஸ்டீஎன் உங்களுக்கு அனுப்பியவற்றுக்கும் இடையில் வித்தியாசம் எதுவும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்துவது முக்கியமாகும் – இது ஒரு சவாலாக இருக்கும்.
நீங்கள், உங்களுடைய சப்ளையர்கள் மற்றும் உங்கள் வாடிக்கையாளர்கள் ஆகியோர் உங்கள் ரிட்டர்னில் உள்ள தகவல்களின் தொடர்புடைய பிரிவுகளைப் புதுப்பிப்பார்கள் என்று நீங்கள் அறிந்து கொள்வது முக்கியமாகும்.ஜிஎஸ்டீஎன் முறை ஒத்திசைவானது அல்ல என்பதால், தொகுக்கப்படுபவைகளில் சில செயலாக்கத்தில் இருக்கும், எனவே சில தகவல்களானது உடனடியாக தொகுப்புரையில் கிடைக்காது.
ரிட்டர்களில் கையொப்பமிடுவதில் நம்பிக்கையை வளர்த்துக்கொள்வதற்காக நீங்கள் மேலே உள்ள அனைத்து தகவல்களையும் ஒரு சிஸ்ட்த்தில் ஒத்திசைக்க வேண்டும்.

வணிகத்தை நடத்துவதில் கவனமாக இருக்க வேண்டுமெனில் இணக்க வசதி உங்களுக்குத் தேவைப்படும்

இந்த வலி ஏற்படுத்தும் அம்சங்களானது உங்கள் வணிகத்தில் நிறைய குழப்பங்களை ஏற்படுத்தும். உண்மையில், சரியாக நிர்வகிக்கப்படாதபட்சத்தில், இது ஒரு குறிப்பிடத்தக்க காலத்திற்கு உங்களை பிஸியாகவே வைத்திருக்கலாம், மேலும் உங்கள் வணிகத்தை மேற்கொள்ளச் செய்வதிலிருந்து உங்களை திசைதிருப்ப முடியும்.
ஜிஎஸ்டீ அமைப்பு தொடர்பான அனைத்து நிலுவையிலுள்ள செயல்பாடுகளையும் நிறைவேற்ற “ஒரு எளிமையான வெளிப்படையான நடவடிக்கை” வேண்டும் என்று நீங்கள் விரும்பலாம். இந்த இணக்க வசதியை கொண்டு வருவதே டேலி-யின் குறிக்கோளாக இருக்கும், இதன் காரணமாக உங்கள் கவனமானது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வணிகம் மீது இருக்கும் மற்றும் அது ஜிஎஸ்டீ-க்கு இணங்கி இருக்கும்.
வணிக அணுகுமுறையில் ஜிஎஸ்டீ கொண்டுவரும் இந்த ஆறு மாற்றங்களைப் பற்றிய உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும்.
எங்கள் அடுத்த கட்டுரையானது, முன்பைவிட உங்கள் வணிகத்திற்கு முக்கியமானவரான், சரக்குகள் மற்றும் சேவை வரி நடைமுறையாளரின் (ஜிஎஸ்டீபீ) பங்களிப்பு குறித்து இருக்கும். இதைத் தொடர்ந்து, எங்கள் டேலி இஆர்பீ 9-ன் ஆறாவது பதிப்பு என்பது எவ்வாறு இந்த ஆறு அணுகுமுறை சார்ந்த மாற்றங்களை உங்களுக்கு எளிதாக்குகிறது என்பது குறித்து மற்றொரு கட்டுரை இருக்கும்.

ஜிஎஸ்டீ சட்டங்களையும், உங்கள் வியாபாரத்தின் மீதான அதன் தாக்கத்தையும் புரிந்து கொள்வதற்கு, எங்கள் ப்ராடக்ட் புதுப்பிப்புகளைப் பெறுவதற்கும்; தயவு செய்து எங்கள் வலைப்பதிவை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

117,491 total views, 352 views today

Avatar

Author: Rakesh Agarwal

Head of Product Management