ஒரு அசையா சொத்து என்பது அழிக்கவோ மாற்றவோ இல்லாமல் நகர்த்த முடியாத அசையாத பொருள் ஆகும். சொத்து பூமியில் நிலையாக இருக்கும், உதாரணமாக, ஒரு நிலம் அல்லது ஒரு வீடு.
தற்போதைய வரிச் சட்டத்தின்படி, அசையாச் சொத்தினைக் கொண்டு வழங்கப்படும் வரிக்குட்பட்ட சேவைகளை சேவை வரிக்கு உட்பட்டது.
சேவையின் வரி, ஒரு மத்திய காலல் வரியாக, சேவை மாநிலத்திற்குள்ளாகஅல்லது மாநிலங்களுக்கு இடையே வழங்கப்படுகிறது என்பதை பொருட்படுத்தாமல் பொருந்தும்.

மாநிலங்களுக்குள்ளான அல்லது மாநிலங்களுகு இடையே வழங்கல் வழங்கப்படுவதை அறிவது அவசியமாகும்.

ஒரு அசையாச் சொத்து தொடர்பாக வழங்கப்பட்ட சேவைகளின் போது, குறிப்பிட்ட விதிகள் வழங்கப்பட்ட இடத்தை நிர்ணயிக்க வேண்டும். இந்த விதிகள் சேவைகள் வழங்கல் இடங்களை நிர்ணயிக்க பொது விதிகளை மீறுகின்றன.

Place of supply of services provided in relation to an immovable property will be the location at which the immovable property is located or intended to be located.Click To Tweetஇதற்கு நான்கு நிகழ்வுகள் இருக்கலாம்:

1. சேவைகள் நேரடியாக ஒரு அசையா சொத்து தொடர்பாக வழ்னக்கப்படுதல்

ஆர்க்கிடெக்ஸ்ட், இண்டீரியர் டெகரேட்டர்கள், சர்வேயர்கள், எஞ்சினியர்கல் போன்றவர்களால் வழங்கப்படும் சேவைகளை உள்ளடக்கும்.
எடுத்துக்காட்டாக: சிம்லா, ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பதிவு செய்துள்ள ராஜ் ஹோட்டல்ஸ், டேராடூன், உத்தர்கண்டில் ஒரு ஹோட்டலை கட்டுகின்றது. இண்டீரியர் டெகோரேஷனை டேராடூன், உத்தர்கண்டில் பதிவு செய்துள்ள வணிக இடத்தைக் கொண்டுள்ள ரவி இண்டீரியர்ஸால் செய்யப்படுகின்றது.
இண்டீரியர் டெகோரேஷன் சேவையின் வழங்கலுக்காக,

வழங்குநரின் (சப்ளையர்) இடம்: டேராடூன், உத்தர்கண்ட்

வழங்கல் இடம்: பெறுநர் ராஜ் ஹோட்டல்ஸின் பதிவு செய்துள்ல இடம் சிம்லா, ஹிமாச்சலப் பிரதேசத்தில் இருந்தாலும், வழங்கல் இடம் ஹோட்டலின் இருப்பிடமாகும் அதாவது டேராடூன், உத்தர்கண்ட் ஆகும்.

இது ஒரு மாநிலங்களுள்ளான வழங்கல் மேலும் பொருந்தும் வரிகள் சிஜிஎஸ்டீ மற்றும் எஸ்ஜிஎஸ்டீ ஆகும்.

Place of Supply of Services_9

2. ஒரு அசையாச் சொத்தில் தங்குதல்

இது ஒரு ஹோட்டல், விடுதி, கெஸ்ட் ஹவுஸ், வீடு, கிளப், கேம்ப்சைட், ஹவுஸ் போட் போன்றவற்றால் அளிக்கப்படும் தங்கும் வசதியை உள்ளடக்கும்.

எடுத்துக்காட்டாக: சிம்லா, ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ராஜ் ஹோட்டல்ஸ் ஒரு அலுவலக செமினாருக்காக, ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் உள்ள ஒரு பதிவு செஉதுள்ள டீலர் திரு. தாரிக்கிற்கு தங்கும் வசதியை அளிக்கின்றது.
வழங்குநரின் (சப்ளையர்) இடம்: சிம்லா, ஹிமாச்சலப் பிரதேசம்
வழங்கல் இடம்: சிம்லா, ஹிமாச்சலப் பிரதேசம்.
இது ஒரு மாநிலங்களுள்ளான வழங்கல் மேலும் பொருந்தும் வரிகள் சிஜிஎஸ்டீ மற்றும் எஸ்ஜிஎஸ்டீ ஆகும்.

Place of Supply of Services_10

3. ஒரு நிகழ்ச்சியை நடத்துவதற்காக ஒரு அசையாச் சொத்தில் தங்குதல்

இது ஏதேனும் அலுவலகப்பூர்வ, சமூக, கலாச்சார, மதரீதியான அல்லது வணிக நிழ்ச்சியை நடத்துவதற்காக தங்குவதை உள்ளடக்கும்.
எடுத்துக்காட்டாக: குருகிராம், ஹரியானாவில் உள்ள ஒரு பதிவுசெய்துள்ள டீலரான முகேஷ் ஆட்டோமொபைல்ஸ் பிரைவேட் லிமிட்டெட் ஆனது சிம்லா, ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள ராஜ் ஹோட்டல்ஸின் கான்ஃபரன்ஸ் ஹாலை ஒரு அலுவலகப்பூர்வமான சந்திப்பிற்காக 3 நாட்களுக்கு முன்பதிவு செய்கின்றது
வழங்குநரின் (சப்ளையர்) இடம்: சிம்லா, ஹிமாச்சலப் பிரதேசம்
வழங்கல் இடம்: சிம்லா, ஹிமாச்சலப் பிரதேசம்
இது ஒரு மாநிலங்களுள்ளான வழங்கல் மேலும் பொருந்தும் வரிகள் சிஜிஎஸ்டீ மற்றும் எஸ்ஜிஎஸ்டீ ஆகும்.

Place of Supply of Services_11

4. மேலே குறிப்பிட்டுள்ள சேவைகளுடன் துணையாக வழங்கப்படும் சேவைகள்

எடுத்துக்காட்டாக: முகேஷ் ஆட்டோமொபைல்ஸ் பிரைவேட் லிமிட்டெட் ஆனது சிம்லா, ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள ராஜ் ஹோட்டல்ஸின் கான்ஃபரன்ஸ் ஹாலை ஒரு அலுவலகப்பூர்வமான சந்திப்பிற்காக முன்பதிவு செய்கின்றது மேலும் தன் விருந்தினர்களுக்காக உணவு மற்றும் பானங்களை ஆர்டர் செய்கின்றது.
வழங்குநரின் (சப்ளையர்) இடம்: சிம்லா, ஹிமாச்சலப் பிரதேசம்
வழங்கல் இடம்: சிம்லா, ஹிமாச்சலப் பிரதேசம்
இது ஒரு மாநிலங்களுள்ளான வழங்கல் மேலும் பொருந்தும் வரிகள் சிஜிஎஸ்டீ மற்றும் எஸ்ஜிஎஸ்டீ ஆகும்.

Place of Supply of Services_12

மேலே விவாதிக்கப்பட்டுள்ளபடி, தற்போதைய வரிவிதிப்பில், அசையாச் சொத்துகளுடன் தொடர்புபட்ட சேவைகளில் சேவை வரி விதிக்கப்படுகிறது. சேவை வரி என்பது ஒரு மத்திய தீர்வை என்பதால், பெறப்பட்ட சேவைகளின் மீது உள்ளீட்டு பலன் வழங்கப்பட்ட சேவைகளின் பொறுப்பிற்கு எதிராக அமைக்கப்படலாம்.
மேலேயுள்ள உதாரணம், தற்போதைய வரிவிதிப்பில், ஹரியானாவில் உள்ள முகேஷ் ஆட்டோமொபைல்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆனது, இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஹோட்டலின் கட்டணங்கள் மீது செலுத்திய வரிக்கு உள்ளீட்டு பலனை பெறலாம். இருப்பினும், ஜிஎஸ்டீ சகாப்தத்தில், அசையாச் சொத்துகளுடன் தொடர்புபடுத்தப்பட்ட சேவைகளின் வழங்கல் இடம் என்பது அசையாச் சொத்தின் இடம். இந்த சூழல்களில் வரி செலுத்துவது சிஜிஎஸ்டீ மற்றும் எஸ்ஜிஎஸ்டீ ஆக இருக்கும் என்பதை இது குறிக்கிறது.
ஒரு மாநிலத்தின் சிஜிஎஸ்டீ மற்றும் எஸ்ஜிஎஸ்டீ பலன் ஆகியவை மற்றொரு மாநிலத்தின் பொறுப்புகளை அமைக்க பயன்படுத்த முடியாது. அத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு பதிவு செய்யப்பட்ட நபர் வேறொரு மாநிலத்தில் ஒரு அசையாச் சொத்தின் சேவையை பெறும்போது மற்றொரு நபரிடமிருந்து எடுக்கப்பட்ட சேவைக்கு உள்ளீடு பலனை பெற முடியாது. எனவே, ஜிஎஸ்டீ வரிவிதிப்பில், ஹரியானாவில் பதிவு செய்யப்பட்டுள்ள முகேஷ் ஆட்டோமொபைல்ஸ் பிரைவேட் லிமிடெட், ஹிமாச்சல பிரதேசத்தில் செலுத்திய சிஜிஎஸ்டீ மற்றும் எஸ்ஜிஎஸ்டீ ஆகியவற்றிற்கான உள்ளீட்டு பலனை பெற முடியாது.

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

90,100 total views, 33 views today