எங்கள் முந்தைய வலைப்பதிவில், முன்னோக்கு கட்டண முறையின் கீழ் சேவைகளுக்கான வழங்கல் நேரம் பற்றி நாம் விவாதித்தோம். பின்னோக்கு கட்டண முறையின் கீழ், சேவைகளை பெறுபவர் அல்லது வாங்குபவர் அரசுக்கு வரி செலுத்த வேண்டும், முன்னோக்கு கட்டணத்தில் வழங்குபவர் அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும்.

பின்னோக்கு கட்டண முறை என்ன?

பின்னோக்கு கட்டண முறையின் கீழ், சேவைகளை பெறுபவர் அல்லது வாங்குபவர் அரசுக்கு வரி செலுத்த வேண்டும், முன்னோக்கு கட்டணத்தில் வழங்குபவர் அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும். உதாரணமாக, ஒரு போக்குவரத்து சேவையைப் பெறுவதன் மூலம், சேவையை பெறுபவர் அரசாங்கத்திற்கு சேவை வரி செலுத்த வேண்டும்.

ஏன் பின்னோக்கு கட்டண முறை?

பல்வேறு ஒழுங்குபடுத்தப்படாத பிரிவுகளிலிருந்து சரக்குகள் அல்லது சேவைகளின் விற்பனைக்கு வரி சேகரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, அரசாங்கம் பின்னோக்கு கட்டண முறையை அறிமுகப்படுத்தியது. இந்த முறையின் கீழ், வரி செலுத்தும் பொறுப்பு சேவை பெறுபவருக்கு உள்ளது. இதனால் இதுவரை கண்டுபிடிக்கப்படாத வரிகளை கண்காணிக்கவும் வரி விதிக்கவும் அரசாங்கத்திற்கு உதவிகரமாக உள்ளது.

பின்னோக்கு கட்டண முறையின் தாக்கம்

அரசாங்கத்தின் இந்த நோக்கமானது வரி வருவாயை அதிகரித்தாலும், சிறிய சேவை வழங்குனர்களிடமிருந்து பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. வரிக்குரிய சேவையை வழங்கும் ஒரு நபர், வழங்கும் சேவையின் மதிப்பு ரூ.10 லட்சத்தை தாண்டினால் சேவை வரியின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். இருப்பினும், பின்னோக்கு கட்டண முறையின் கீழ் சேவை வரி செலுத்த வேண்டிய ஒருவர் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும். இதன் காரணமாக, சிறிய சேவை வழங்குனர்களுக்கு கிடைக்கக்கூடிய வரி விலக்குக்கு அவர்கள் தகுதி பெற மாட்டார்கள்.
இரண்டாவதாக, பின்னோக்கு கட்டண முறையின் கீழ் சேவை வரி பொறுப்புக்கான பணத்தை செலுத்துதல் ரொக்கமாக / வங்கியில் செலுத்தப்படும். இது உள்ளீடு சேவை வரி கடன் அல்லது சென்வேட் (CENVAT) பலனை வணிகம் பெற்றிருந்தாலும் பொருந்தும், அவர்கள் அப்பலனை பின்னோக்கு கட்டண முறையின் வரி பொறுப்புகளை விடுவிக்க பயன்படுத்த முடியாது, இதனால் வணிகத்தின் ரொக்க ஓட்டம் பாதிக்கப்படுகின்றது.

தற்போதைய வரிவிதிப்பின் கீழ்

தற்போதைய மறைமுக வரி விதிப்பின் கீழ், குறிப்பிட்ட அறிவிக்கப்பட்ட வகை சேவைகளின் மீது, சேவை வரி பின்னோக்க கட்டண அடிப்படையில் செலுத்தப்பட வேண்டும். சேவையின் தன்மையைப் பொறுத்து வரி பொறுப்புகளின் சுமை என்பது சேவையின் தன்மையைப் பொறுத்து, சேவையின் பெறுநரை அல்லது சேவை வழங்குநர் மற்றும் சேவையை பெறுபவர் மீது முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ உள்ளது.

இதை ஒரு உதாரணத்துடன் புரிந்து கொள்ளலாம்:
1. முழுமையான பின்னோக்கு கட்டண முறை

வரிக்குரிய சேவைகளுக்கு வரி செலுத்துவதற்கான முழு பொறுப்பும் சேவை பெறுநருக்கு உள்ளது. சேவை பெறுநர் மத்திய அரசிற்கு வரி செலுத்துவதில் 100% செலுத்த வேண்டும்.

உதாரணமாக, மேக்ஸ் அட்வர்டைஸிக் ஏஜென்சி எஸ்.எல்.வி ட்ரான்ஸ்போர்ட்டிடமிருந்து ரூ.50,000-க்காக போக்குவரத்து சேவைகளைப் பெறுகிறார். சேவை வரியில், ‘சாலை மூலம் சரக்குகளை கொண்டு செல்லுதல் ‘ என்பது பின்னோக்கு கட்டணத்தின் கீழ் உள்ளது மேலும் சேவை பெறுநர் போக்குவரத்து சேவையில் முழு வரி செலுத்த பொறுப்புள்ளவாகிறார். அதன்படி, போக்குவரத்து சேவைகளைப் பெறுவதன் மூலம், மேக்ஸ் விளம்பர நிறுவனம் மத்திய அரசுக்கு ரூ .7,500 (ரூபாய் 50,000-ன் 15%)-க்கான சேவை வரி செலுத்த வேண்டும்.

2. பகுதியான பின்னோக்கு கட்டண முறை
வரி செலுத்த வேண்டிய பொறுப்பு, சேவை வழங்குனரிடமிருந்து ஓரளவு மற்றும் சேவை பெறுநரிடமிருந்து ஓரளவு இருக்கும். சேவை வழங்குநர் மற்றும் சேவை பெறுநருக்கு இடையில் சேவை வரி பகிரப்படுகிறது, மேலும் இருவரும் மத்திய அரசாங்கத்திற்கு சேவை வரி செலுத்த வேண்டியிருக்கும்.

எடுத்துக்காட்டாக, மேக்ஸ் அட்வர்டைஸிங் ஏஜென்சி 24/7 செக்யூரிட்டி ஏஜென்சியிலிருந்து பாதுகாப்பு சேவைகளைப் பயன்படுத்தியது. ஏப்ரல் மாத காலகட்டத்தில் 24/7 செக்யூரிட்டி ஏஜென்சி மேக்ஸ் அட்வர்டைஸிங் ஏஜென்சி ரூ. 1,00,00-க்கான பில்லை அனுப்பியது. சேவை வரி கீழ், ’ஏதேனும் நோக்கத்திற்காகவோ அல்லது பாதுகாப்புச் சேவைக்காகவோ மனிதவளத்தை வழங்குதல்’ என்பது பின்னோக்கு கட்டணத்தின் கீழ் உள்ள சேவையின் பட்டியலின் ஒரு பகுதியாகும், மேலும் சேவை வழங்குநரும் சேவை பெறுநரும் 25: 75% விகிதத்தில் வரி செலுத்த வேண்டும். (25% சேவை வழங்குநருக்கு மற்றும் 75% சேவைகளை பெறுபவருக்கு).
அதன்படி 24/7 செக்யூரிட்டி ஏஜென்சி 25%-ல் சேவை வரியாக ரூ.3750-ஐ அதாவது சேவை மதிப்பு ரூ. 25,000-ல் (1,00,000 * 25/100) 15%-ஐ செலுத்தியது. மீதமுள்ள சேவை வரி ரூ. 11,250-ல் 75%-ஐ அதாவது 75,000 (1,00,000*75 / 100) மீதான சேவை வரி 15%-ஐ மேக்ஸ் அட்வர்டைஸிங் ஏஜென்சி செலுத்தும்.
பின்னோக்கு கட்டணம் மீதான வரிசெலுத்து முனை (பாய்ண்ட் ஆஃப் டேக்சேஷன்) (பீஓடீ)-ஐ புரிந்துகொள்வோம்

பின்வருபவைகளில் முந்தையது
பணம் செலுத்திய தேதி கணக்குகள் புத்தகத்தில் பணம் பெற்றுக்கொண்டதை பதிவு செய்த தேதி அல்லது கணக்கில் பணம் சென்றடைந்த தேதி ஆகியவற்றில் முந்தையது
விலைவிவரப் பட்டியலின் தேதியிலிருந்து 3 மாதங்கள் 3 மாதத்திற்குள் சேவை வழங்குநர்களால் பெறுபவருக்கு பணம் செலுத்தப்படாவிட்டால், வரிசெலுத்து முனை (பாய்ண்ட் ஆஃப் டேக்சேஷன்) 3 மாதங்கள் காலாவதியான உடனே வரும் தேதியாகும்.

எடுத்துக்காட்டுகளுடன் இதை புரிந்துகொள்வோம்.

விலைவிவரப் பட்டியலின் தேதி பணம் செலுத்திய தேதி வரிசெலுத்து முனை (பாய்ண்ட் ஆஃப் டேக்சேஷன்) விளக்கம்
20 ஜூலை, 201610 ஆகஸ்ட், 2016
10 ஆகஸ்ட், 2017 பணம் செலுத்திய தேதியானது விலைவிவரப் பட்டியலின் தேதியிலிருந்து 3 மாதங்கள் முந்தையதாக உள்ளது
1 ஜூலை, 201610 டிசம்பர், 20161 அக்டோபர், 2017 பணம் 3 மாதங்களுக்குள் செலுத்தப்படாததால், பிஓடீ ஆனது விலைவிவரப் பட்டியலின் தேதியிலிருந்து 3 மாதங்கள் காலாவதியான பிறகு தேதி அதாவது, 1 அக்டோபர், 2017 ஆகும்.

ஜிஎஸ்டீயின் கீழ்

ஜிஎஸ்டீயில், வரிசெலுத்து முனை (பாய்ண்ட் ஆஃப் டேக்சேஷன்)-ஐ நிர்ணயிப்பது ‘வழங்கல் நேரம்’-ன் கீழ் குறிப்பிடப்படுகிறது. ஜிஎஸ்டீயில் பின்னோக்கு கட்டணத்தின் கீழ் சேவைகளுக்கான வழங்கல் நேரத்தை தீர்மானிப்பது சேவை வரியின் கீழ் நேரம் குறித்த சேவைக்கான கட்டணம், சேவை வரி கீழ் உள்ள வரி விதிப்பு விதிமுறைகளுக்கு மிகவும் ஒத்ததாக இருக்கிறது, ஆனால் பணம் செலுத்தும் சாளரம் விலைவிவரப் பட்டியல் தேதியிலிருந்து 3 மாதங்கள் வரை என்பதிலிருந்து 60 நாட்கள் வரை என்பதாக குறைக்கப்படுகிறது.

பின்னோக்கு கட்டண முறையின் கீழ் வரி செலுத்த வேண்டிய ஒருவர் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இந்த வணிகம் மீதான பின்னோக்கு கட்டணத்தின் தாக்கமும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிஎஸ்டீக்கான பொறுப்பு (சிஜிஎஸ்டீ மற்றும் எஸ்ஜிஎஸ்டீ அல்லது ஐஜிஎஸ்டீ, பொருந்துமாறு) கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு எழும்:

பின்வருபவைகளில் முந்தையது

பணம் செலுத்திய தேதி

கணக்குகள் புத்தகத்தில் பணம் பெற்றுக்கொண்டதை பதிவு செய்த தேதி அல்லது கணக்கில் பணம் சென்றடைந்த தேதி ஆகியவற்றில் முந்தையது

விலைவிவரப் பட்டியலின் தேதியிலிருந்து 60 நாட்கள்

60 நாட்களுக்குள் சேவை வழங்குநர்களால் பெறுபவருக்கு பணம் செலுத்தப்படாவிட்டால், வரிசெலுத்து முனை (பாய்ண்ட் ஆஃப் டேக்சேஷன்) 60 நாட்கள் காலாவதியான உடனே வரும் தேதியாகும்.

ஏதேனும் காரணத்திற்காக மேற்கண்ட தேதிகள் தீர்மானிக்கப்படாவிட்டால், வழங்கல் நேரம் பெறுபவரின் புத்தகங்களில் வழங்கலை பதிவு செய்த தேதியாக இருக்கும்.

எடுத்துக்காட்டுகளுடன் இதை புரிந்துகொள்வோம்.

விலைவிவரப் பட்டியலின் தேதி பணம் செலுத்திய தேதி சேவைகளின் வழங்கல் நேரம் விளக்கம்
20 ஜூலை, 201720 ஜூலை, 201710 ஆகஸ்ட், 2017 பணம் செலுத்திய தேதியானது விலைவிவரப் பட்டியலின் தேதியிலிருந்து 60 நாட்கள் முந்தையதாக உள்ளது. எனவே வழங்கல் நேரம் 10 ஆகஸ்ட், 2017 ஆகும்.
1 ஜூலை, 201710 செப்டெம்பர், 201730 ஆகஸ்ட், 2017 இங்கே விலைவிவரப் பட்டியலின் தேதியிலிருந்து 60 நாட்கள் என்பது பணம் செலுத்திய தேதியை விட முந்தையதாக இருக்கின்றது. எனவே வழங்கல் நேரம் 30 ஆகஸ்ட், 2017 ஆகும்.

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

103,136 total views, 7 views today

Yarab A

Author: Yarab A

Yarab is associated with Tally since 2012. In his 7+ years of experience, he has built his expertise in the field of Accounting, Inventory, Compliance and software product for the diverse industry segment. Being a member of ‘Centre of Excellence’ team, he has conducted several knowledge sharing sessions on GST and has written 200+ blogs and articles on GST, UAE VAT, Saudi VAT, Bahrain VAT, iTax in Kenya and Business efficiency.