இப்பொழுதில் இருந்து இன்னும் சில வாரங்களில், மறைமுக விதிப்பில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது. சட்டத்தை உருவாக்குபவர்கள் என்பவர்கள் குறிப்பிட்ட உட்பிரிவுகள் மற்றும் வரையறைகளைப் பற்றி விவாதிக்கின்றனர் – இதனால் பொருத்தமான சட்டங்கள் இயற்றப்படலாம்.

இது சந்தையில் மிகப்பெரிய சமப்படுத்திகளில் ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகம்இல்லை, மேலும் இது வணிகர்களுக்கு இந்திய சந்தையைத் திறக்கிறது. மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகத்தில் உள்ள தடைகள் மறைந்துவிடும், மேலும் ஒருவர் தற்போது இருப்பதைவிட அதிகமான வாடிக்கையாளர்கள் மற்றும் அதிகமான சப்ளையர்களைக் கண்டுபிடிக்க முடியும். குறைவான நபர்களே சட்ட விதிகளை மீறுதல், அல்லது வரி ஏய்ப்பு செய்தல் போன்றவற்றில் ஈடுபட முடியும், எனவே போட்டிகள் சமமாக இருப்பதால், தொழில் நிறுவனங்கள் மேலும் செழிக்கும். பல்வேறு வரிகளானது ஒற்றை வரியாக வசூலிக்கப்படுவதால், நேரம் மற்றும் செலவினத்தை குறைக்கலாம்.

இது உண்மையில் கொண்டாட்டத்திற்கான நேரம் ஆகும். சிறு வணிகர்களைத் தவிர

It is indeed time for celebration. Except for the Small Businessman.Click To Tweet

இது உண்மையில் கொண்டாட்டத்திற்கான நேரம் ஆகும். சிறு வணிகர்களைத் தவிர.

பொதுவாக, சிறு வணிக நிறுவனங்கள் என்பது பொதுவாக ‘மிகவும் நேர்மையானவையாக’ இருக்கும், மேலும் பொதுவாக ‘அதிக பணப் புழக்கச் சிக்கல்களால்’ பாதிக்கப்படுகின்றன.

சமுதாயக் களங்கம் பற்றிய பயம் காரணமாகவோ அல்லது பிரச்சினைகள் கண்டறியப்பட்டபோது ‘தீர்த்துவிட’ முடியாமல் இருப்பதாலோ அல்லது நேர்மையின்மையாக இருப்பதன் நன்மை போதுமானதாக அளவு சலனப்படுத்தாமல் இருப்பதாலோ, அல்லது போதுமானதாக அளவு சலனப்படுத்தும்பொழுது அடிப்படை தார்மீக நெறி குறித்து சோதித்துப் பார்க்கமால் இருப்பதாலோ, ஒப்பீட்டு நேர்மை அதிகரித்துள்ளதா என்பது உண்மையில் ஒரு முக்கிய விஷயமாகும். மைக்ரோ கடன் வழங்கும் இடமே வேறு எந்த கடன் வழங்கும் வணிகத்தை விடவும் அதிகபட்ச கடன் திரும்பச்செலுத்தும் விகிதங்களைக் காண்கிறது என்பதை நன்கு அறியமுடிகிறது.

அதே சமயம், சிறிய வணிக நிறுவனங்களுக்கு பணப்பரிமாற்றத்தில் அடிக்கடி முரண்பாடுகள் ஏற்படுகின்றன. விற்கப்பட்ட பொருட்களுக்கு பணம் பெறுவதில் ஒரே ஒரு வாரம் தாமதம் ஏற்பட்டால்கூட அவர்களின் வழக்கமான செயல்பாடுகள் பாதிக்கப்படும். குடும்பத்தில் ஒரு திருமணம்? இந்த சுழற்சி பழைய நிலைக்கு வருவதற்கு பல வாரங்கள் எடுக்கும். அவர்களுக்கு அதிக லாபம் தரும் பொருட்களை வழங்கும் ஒரு ஏலம் அல்லது சலுகை ஆகியவற்றைப் பயன்படுத்தி, ஒரு சில வாரங்களில் தங்கள் பண சுழற்சிகளை சரிசெய்துகொள்ள வேண்டும். பணியாளரின் குடும்பத்தில் ஒரு திருமணம்? உதவி செய்வதற்கான அவர்களின் விருப்பமானது அவர்களுடைய பணப்புழக்க மேலாண்மை செலவில் வருகிறது.

ஜிஎஸ்டீ-க்கான தங்களது வரைவு மாதிரி சட்டத்தில் அரசாங்கத்தின் தற்போதைய அறிக்கையானது, மெதுவாக ஆனால் உறுதியுடன், கிட்டத்தட்ட அனைத்து சிறு வணிக நிறுவனங்களையும் மூடச் செய்யும் வகையிலான ஒரு சில திட்டங்களைக் கொண்டுள்ளது. இது அரசாங்கத்தின் உள்நோக்கம் அல்ல, இது மற்ற நல்ல நோக்கங்களின் ஒரு எதிர்பாராத விளைவாகும். இது காரணங்கள், மற்றும் விளைவுகளை வழங்குவதால், இவற்றை சரிசெய்ய முடியும்.
‘சப்ளையர் ஒரு கொடுக்கப்பட்ட சாளரத்திற்குள் வரி செலுத்தியிருந்தால் மட்டுமே உள்ளீட்டு வரிக் கிரெடிட்டானது வாங்குபவர்களுக்கு கிடைக்கும்’ என்ற வழிமுறையானது, ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்திலான சிறு வணிக நிறுவனங்கள் தங்களின் காலச்-சுழற்சியில் எதிர்கொள்ளும் ஒரு சிக்கலாகும். பெரும்பாலானோர் (ஆனால் அனைவரும் அல்ல), ஏய்ப்பு செய்ய வேண்டும் அல்லது பணம் செலுத்தாமல் இருக்க வேண்டும் என்ற மோசமான ‘நோக்கம்’ கொண்டிருக்கமாட்டார்கள். மேலும், அவர்கள் அரசாங்கத்தை தங்கள் வசதிக்கேற்ப பயன்படுத்திக்கொள்ள மாட்டார்கள். வழங்கப்பட்டது. மேலே நான் குறிப்பிட்டுள்ள சிலவற்றைப் போல, பிற நெருக்கடிகளின் காரணமாக சில நேரங்களில் பணம் செலுத்துவதை தாமதப்படுத்தவேண்டிய அவசியம் ஏற்படலாம். சிலநேரங்களில், ‘எனது தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உரிய நேரத்தில் செலுத்துவது’ மற்றும் ‘தாமதமாக பணம் செலுத்தியதற்காக அரசாங்கத்திற்கு அபராதம் செலுத்துவது’ போன்ற செய்கைகளின் காரணமாக அவ்வாறு ஏற்படலாம், இல்லையெனில் அவர்கள் தங்களின் பணியாளர்களை இழக்க வேண்டியிருக்கும். சில நேரங்களில், தங்களின் சப்ளையருக்கு பணம் செலுத்த வேண்டிய அவர்களின் பொருட்கள் சுழற்சி உடைபடலாம், மற்றும் அவர்கள் நிரந்தரமாக தங்கள் வாடிக்கையாளர்களின் வியாபாரத்தை இழக்கக்கூடும் – எனவே ‘தாமதமாக பணம் செலுத்தியதற்காக அரசாங்கத்திற்கு அபராதம் செலுத்துவது’ என்பது மீண்டும் ஏற்கத்தக்கது ஆகும். மேலும், இறுதியில் அவர்கள் செலுத்திவிடுவார்கள்.

அரசானது ஒரு ‘இணக்க மதிப்பீட்டை’ வெளிப்படையாக வெளிப்படுத்தும் நோக்கத்துடன் உள்ளது என்பது ஒரு தொடர்புடைய மற்றும் இன்னும் அச்சுறுத்தலான வழிமுறை ஆகும்- எனவே உங்கள் சப்ளையர் ஒரு ‘நல்ல அல்லது மோசமான’ தரமதிப்பீட்டைக் கொண்டிருக்கிறாரா என்பதை நீங்கள் வாங்குவதற்கு முன்னரே அறிந்து கொள்ளலாம். உங்கள் உள்ளீட்டு வரிக் கிரெடிட் என்பது சப்ளையரின் இந்த ‘தரம்’ சார்ந்துள்ளது என்பதால், ‘மோசமான’ தரமதிப்பீட்டை கொண்டுள்ள நபர்களிடமிருந்து கொள்முதல் செய்வதைத் தவிர்ப்பதற்கு நீங்கள் முயற்சிக்க வேண்டும் – மக்கள் ஒரு மோசமான தரமதிப்பீட்டை தவிர்ப்பார்கள் என்பது இதன் அர்த்தம் ஆகும்.
மதிப்பீடு என்பது ‘மோசம்’ என்று ஆவது உங்கள் தரவுகளைத் தாக்கல் செய்வதைத் தாமதப்படுத்துவதால் அல்ல, நீங்கள் பணம் செலுத்துவதைத் தாமதப்படுத்துவதால் ஆகும்.
சாராம்சத்தில், இந்த விதிமுறைகளை நீங்கள் ஒன்றாக எடுத்துக் கொண்டால், ஒரு சிறு வணிக நிறுவனம் எதிர்கொள்ள நேரிடும் எந்தவொரு சிக்கலையும், இப்பொழுது ‘காணக்கூடியதாக மற்றும் வெளிப்படையாக’ அறிய முடியும் மற்றும் தொடர்புடைய பனிப்பந்து தாக்கத்தைக் கொண்டிருக்கும். எனவே, ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும் தருணத்தில், உங்கள் வாங்குவோர் ‘பாதுகாப்பாக செயல்பட்டு’, மற்றவர்களிடமிருந்து வாங்குவார்கள் என்பதால், பிரச்சனையானது அடுத்த மாதங்களில் பெரிதாகிறது (சந்தை என்பது இப்போது ஒரு ‘திறந்த சந்தையாக’ இருப்பது ஒரு வரம் ஆகும்). இது உங்கள் சிக்கலை மேலும் அதிகரிக்கும், மேலும் பணம் செலுத்துவதில் தாமதங்கள் ஏற்படும் மற்றும் / அல்லது உங்கள் தரமதிப்பீட்டை மேலும் குறைப்பதற்கு வழிவகுக்கும், இன்னும் அதிக வாடிக்கையாளர்களை இழப்பதற்கு வழிவகுக்கும் – இறுதியாக நீங்கள் நிறுவனத்தை மூடும் நிலை வரை போக நேரிடலாம்.

And the paradox is, GST was expected to REDUCE compliance costs!Click To Tweet

எப்படியாவது ஜிஎஸ்டீ செலுத்தி, மோசம் என்ற தரமதிப்பீட்டைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக அவசரமாக பணத்திற்கு ஏற்பாடு செய்தல்’ என்பது சிறு வணிக நிறுவனங்களை தேவையற்ற சூழல்களுக்கு இட்டுச்செல்லும், மேலும் அவ்வாறு செய்வது சுமக்க முடியாத செலவு சுமைகளுக்கு வழிவகுக்கும். இருப்பினும், அவர்களால் பொருளாதாரத்தின் அளவைக் கொண்டு செலவுகளை நிர்வகிக்க இயலாது. இப்போது, ஒரு ஜிஎஸ்டீ நடைமுறையில் தங்கள் ‘வணிகத்தை தற்காத்துக்கொள்ள’ முயற்சிப்பதே பாதுகாப்பானதாக இருக்கும்.
GST என்பது இணக்கம் தொடர்பான செலவுகளைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது ஒரு முரண்பாடு!

தவறான பில்கள் மீதான மோசடியான கிளைம்களுக்கு உள்ளீட்டுக் கடன் மறுக்கப்படுவதற்கு அரசுக்கு உரிமை இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தற்போதைய விதிமுறைகளின்படி, ஜிஎஸ்டீஎன் உடன் சப்ளையர்கள் தங்கள் சரக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் மேலும் உள்ளீட்டுக் கிரெடிட் என்பது அத்தகைய விலைப்பட்டியல்களுக்கு மட்டுமே கிடைக்கும், இது ஏற்கனவே ஒரு செருகப்பட்ட சிக்கலாகும். அனைத்து வணிக நிறுவனங்களும் அவர்களின் வரிப்பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றும்வகையில் தங்கள் விலைப்பட்டியல்களை, மற்றும் அவற்றின் கட்டணம் செலுத்தலை (அல்லது பணம் செலுத்தக் கோரும் / சேகரிக்கும் அரசாங்கத்தின் உரிமை) முழுமையாக பதிவேற்றியிருக்க வேண்டும்.
குறிப்பாக ஒரு குறிப்பிட்ட வணிக நிறுவனம் பணம் செலுத்தத் தவறியபோது, பல்வேறு மாநிலங்களுக்கு இடையேயான IGST விநியோகத்தின் பிரச்சினை காரணமாகவே, சட்டத்தில் இது போன்ற ஒரு நிலையில்லாத விதிமுறை இருப்பதற்கான முக்கிய காரணம் என்று வதந்திகள் பரவி வருகின்றன. இதை சமாளிப்பதற்கான மாற்று வழிமுறைகள் அனைத்தும் அரசாங்கத்தால் பரிசீலிக்கப்படுகின்றன, ஆனால் தற்போதுள்ள வரைவு சட்டமானது மேலே உள்ள விதிகளைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது – ஆனால் இந்த பிரச்சினையைப் பின்னர் தீர்க்க முடியும் என்பது ஒரு அதிகாரப்பூர்வமற்ற உணர்வு ஆகும், மேலும் தற்போதைய வரைவு சட்டத்தின்படி முதலில் நடைமுறைப்படுத்தப்படும்.
இது பின்னர் தீர்க்கக்கூடிய ஒரு பிரச்சனை இல்லை. தற்காலிக மரணம் போன்ற ஒன்றும் இல்லை. ‘ஏன் அவர்களுடன் டீலிங் செய்து ரிஸ்க் எடுக்க வேண்டும்’ என்று சிறிய வணிக நிறுவனங்கள் மீது தவறாக ‘முத்திரை குத்தப்பட்டுள்ளன’, மேலும் சட்டத்தைப் பின்னர் மாற்றினால் கூட அவர்களால் மீண்டுவர முடியாது. இதன் தலைகீழ் என்பது உண்மையாகும். இந்த விதிமுறை இல்லாமலும் வரி மோசடி வியத்தகு அளவில் குறைவதை அரசாங்கம் கண்டுபிடிக்கவில்லை என்றால், அவர்கள் அதை ‘கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி’ என்று எப்பொழுதும் அறிமுகப்படுத்தலாம்.
‘செல்லுபடியாகும் ரிட்டன்’ என்ற அறிக்கைக்கு ஏற்ப ‘பணம் செலுத்துவதை’ இணைக்க வேண்டாம் என்பது – கோரப்பட்ட மாற்றம் ஆகும். ஒரு ‘செல்லுபடியாகும் ரிட்டர்ன்’ என்பது அதன் கணக்கீட்டில் சரியாக இருக்கும், மேலும் அது வரி செலுத்துவோரின் பொறுப்புகளை வரையறுக்கிறது. ஒரு சப்ளையரின் ஒரு ‘செல்லுபடியாகும் ரிட்டர்ன்’ என்பது மட்டுமே ஒரு வாடிக்கையாளர் ‘உள்ளீட்டுக் கிரெடிட்டை’ கிளைம் செய்வதற்கான அடிப்படையாக இருக்கும். (இது ஏற்கனவே உள்ள சட்டத்தின் தற்போதைய விதிமுறை ஆகும், ‘செலுத்த வேண்டும்’ என்ற கட்டாயம் இருக்கும்பொழுது தவிர இது ‘செல்லுபடியாகும்’ எனக் கருதப்படுகிறது). இந்த எளிய மாற்றமானது எப்படியாவது வணிக நிறுவனங்களைத் திறக்கிறது, இணக்கத்தை மேம்படுத்துகிறது, ஜிஎஸ்டீ-ன் முக்கோண இயல்பு காரணமாக வியத்தகு முறையில் மோசடிகளை குறைக்கிறது.
வரிக் கிரெடிட் உடன் பணம் செலுத்துதல்களை இணைப்பது ஒரு ‘குறைபாடு’ அல்ல, ஆனால் ஒரு பெரிய ‘ஒழுங்கின்மை’ ஆகும்.
3 வணிக நிறுவனங்களின் ஒரு எளிய சங்கிலிப் பிணைப்பை எடுத்துக்கொள்ளலாம், நிறுவனம் A என்பது நிறுவம் B என்பதன் மீது 1 கோடி + 20 இலட்சங்கள் ஜிஎஸ்டீ (மொத்தம் மதிப்பு 1.2 கோடி)-க்கு ஒரு விலைப்பட்டியலை உருவாக்குகிறது என்று வைத்துக்கொள்ளவும். மேலும் நிறுவனம் A என்பது அரசாங்கத்திற்கு 20 இலட்சங்களை வரியாக செலுத்துகிறது.
இப்பொழுது நிறுவனம் B என்பது நிறுவனம் C என்பதன் மீது 1.2 கோடி + 24 இலட்சங்கள் ஜிஎஸ்டீ (மொத்தம் மதிப்பு 1.44 கோடி)-க்கு ஒரு விலைப்பட்டியலை உருவாக்குகிறது. நிறுவனம் B என்பது 24 இலட்சங்கள் செலுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது, மேலும் அது 20 இலட்சங்களைக் கிரெடிட்டாக எடுத்துக்கொள்கிறது. எனவே, அது அரசாங்கத்திற்கு 4 இலட்சங்கள் செலுத்த வேண்டும். எனினும், சில சூழ்நிலைகள் காரணமாக, அது செலுத்தத் தவறுகிறது.
இப்பொழுது நிறுவனம் C என்பது 1.3 கோடி + 30 இலட்சங்கள் ஜிஎஸ்டீ (மொத்தம் மதிப்பு 1.8 கோடி)-க்கு ஒரு விலைப்பட்டியலை உருவாக்குகிறது – மேலும் இது சங்கிலியின் இறுதி என்று யூகித்துக்கொள்ளவும் (அதாவது, இது ஒரு நுகர்வோருக்கு விற்கப்படுகிறது).
நிறுவனம் C என்பது 24 இலட்சங்கள் என்ற உள்ளீட்டுக் கிரெடிட்டை எடுத்துக் கொண்ட பிறகு 30 இலட்சங்களை செலுத்த வேண்டியிருக்கும் – அல்லது 6 இலட்சத்தை நிகரத் தொகையாக செலுத்த வேண்டியிருக்கும். இருப்பினும், நிறுவனத்தின் B உரிய நேரத்தில் வரி செலுத்த முடியாததன் காரணமாக, இந்த உள்ளீட்டு வரிக் கிரெடிட் மறுக்கப்படுகிறது, நிறுவனம் C என்பது முழுமையாக 30 இலட்சத்தை செலுத்த வேண்டும்.
இப்போது, நிறுவனம் B என்பது வரி செலுத்தியிருந்தால், அரசாங்கத்தால் வசூலிக்கப்பட வேண்டிய மொத்த வரி என்பது நிறுவனம் A மூலம் 20, நிறுவனம் B மூலம் 4, மற்றும் நிறுவனம் C மூலம் 20 – அல்லது மொத்தமாக 30 இலட்சங்களாக இருந்திருக்கும்.
எனினும், நிறுவனம் B என்பது உரிய நேரத்தில் செலுத்தத் தவறியதால், அரசாங்கமானது உண்மையில் 50 லட்சம் வசூலித்தது! நிறுவனம் A மூலம் 20, மற்றும் நிறுவனம் C மூலம் 30.
நிறுவனம் B என்பது வரி செலுத்தாமல் இருப்பது வருவாய் துறைக்கு ஒரு போனஸ் போல ஆனது! மேலும், நிறுவனம் B என்பது தானாகவோ அல்லது அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட மீட்பு நடவடிக்கையின் மூலமாகவோ, 4 இலட்சத்தின் ஒரு பகுதியை செலுத்துகிறது. எனவே மொத்த வசூல் என்பது 50 இலட்சத்திற்கு அதிகமாக ஆனது!
சட்டத்தின் இந்த அசாதாரணமானது இயல்பாகவே தாங்க முடியாததாக இருக்கும். நாட்டின் வருவாய் அதிகரிக்கும் என்பதால், நிறுவனம் B வரி செலுத்தாமல் இருப்பது என்பது (தவறாக இருந்தாலும்) நாட்டின் நலனுக்கு சரியானதாகும்.
நிறுவனங்கள் வரி செலுத்தாமல் இருப்பது என்பது (தவறாக இருந்தாலும்) நாட்டின் நலனுக்கு சரியானதாகும்.
இது நிச்சயமாக சட்டத்தின் நோக்கமும் அல்ல, இதை ஒரு சரியான முடிவாக கருதவும் முடியாது.
நாம் அனைவருமே, குடிமக்கள் என்ற முறையில், அரசாங்கம் ஒரு சட்டத்தை உருவாக்க உதவுவது என்பது மிகவும் முக்கியமாகும், இது உருவாக்கத் தேவையில்லாத சிக்கல்களை உருவாக்குவதற்கு பதிலாக, முடிந்த அளவு நன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும்.
தற்போதைய சட்டங்களானது ஏற்கனவே வரி ஏய்ப்புக்கு எதிராக மிகப்பெரிய பாதுகாப்பை அளித்துள்ளன. சில சிறிய அளவிலான தொழில்நுட்ப அம்சங்கள் மட்டுமே (உதாரணமாக IGST) தீர்க்கப்பட வேண்டும் – இந்த செயற்கையான மற்றும் நிலையற்ற விதிகளை எளிமையாக, ‘ஜி.எஸ்.டி.என் உடன் பதிவு செய்துள்ள விலைப்பட்டியல்களுக்கு மட்டுமே உள்ளீட்டு வரிக் கிரெடிட் கிடைக்கும்’ என்பதன்மூலம் மாற்ற முடியும். உண்மையில், தற்போதைய சட்டங்களானது, ‘விலைப்பட்டியல் தற்போது பதிவு செய்யப்படவில்லை என்றாலும் கூட, தற்காலிக உள்ளீட்டுக் கிரெடிட்’ என்பதை அனுமதிக்கின்றது, மேலும் ‘பணம் செலுத்துதலை இணைத்தல்’ என்பது அகற்றப்பட்டால், இந்த ‘ஆடம்பரத்தை’ விட்டுக்கொடுப்பதற்கு வணிக நிறுவனங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்.
திறந்த கைகளோடு நம்மை வரவேற்கும், நமக்கு தொந்தரவு அளிக்காத, ஒரு மிகச்சிறந்த ஜிஎஸ்டீ சட்டம் வர வேண்டும் என்று நாம் அனைவருமே பிரார்த்தனை செய்வோம்.
பரத் கோயங்கா
நிர்வாக இயக்குனர், டேலி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

99,899 total views, 31 views today