முன்பணம் இல்லாமல் விநியோகம் மற்றும் சேவைகளை இறக்குமதி செய்தல் ஆகியவற்றின் மீது ஜிஎஸ்டீ-ன் தாக்கம் என்ற எங்களின் முந்தைய வலைப்பதிவில் , முன்பணம் இல்லாமல் விநியோகம் மற்றும் சேவைகளை இறக்குமதி செய்தல் ஆகியவை பற்றி நாம் விவாதித்தோம்.

இந்த வலைப்பதிவானது, பின்வரும் நபர்களுக்கு இடையில் முன்பணம் இல்லாமல் மேற்கொள்ளப்படும் சப்ளைகள் குறித்து விரிவாக விவாதிக்கிறது:
• தொடர்புடைய நபர்
• வேறுபட்ட நபர்

தொடர்புடைய நபர்

“தொடர்புடைய நபரின்” வரையறை என்பது தற்போதைய சுங்க மதிப்பீட்டு விதிகள் போலவே உள்ளது. பின்வருபவர்களுக்கு இடையே சரக்குகள் அல்லது சேவைகள் சப்ளை மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே, அந்த சப்ளையானது தொடர்புடைய நபர்களிடையேயானது என்று கருதப்படுகிறது:

1.வேறொரு வணிக நிறுவனத்தின் அலுவலர்கள் அல்லது இயக்குனர்கள்: ஒரு சப்ளையில், சப்ளையர் மற்றும் பெறுநர் என்பது உண்மையில் மற்ற வணிக நிறுவனத்தின் அதிகாரிகள் அல்லது இயக்குனர்கள் ஆகும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ளபடி, திரு. கணேஷ் என்பவர் கணேஷ் டிரேடிங் லிமிட்டெட்-ல் ஒரு இயக்குனர் ஆகும் மற்றும் ராகேஷ் டிரேடிங் லிமிட்டெட்-ல் ஒரு அலுவலர் ஆகும். திரு. ராகேஷ் என்பவர் ராகேஷ் டிரேடிங் லிமிட்டெட்-ல் ஒரு இயக்குனர் ஆகும். மேலும், திரு.ராகேஷ் என்பவர் கணேஷ் டிரேடிங் லிமிட்டெட்-ல் ஒரு அலுவலர் ஆகும். எனவே, அவர்களுக்கு இடையே மேற்கொள்ளப்படும் சப்ளை என்பது தொடர்புடைய நபர்கள் இடையேயான சப்ளை என்று கருதப்படும்.
2. வணிக நிறுவனத்தில் சட்டப்பூர்வமான அங்கீகாரம் பெற்ற பங்குதாரர்கள்: சப்ளையர் மற்றும் பெறுநர் ஆகியோர் ஒரே வணிகத்தில் அல்லது தொடர்புடைய வணிகத்தில் பங்குதாரர்களாக இருக்கின்றனர்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ளபடி, திரு. கணேஷ் மற்றும் திரு. ராகேஷ் ஆகியோர் கணேஷ் டிரேடிங் லிமிட்டெட்-ல் பங்குதாரர்களாக உள்ளனர். திரு. கணேஷ் மற்றும் திரு. ராகேஷ் ஆகியோருக்கு இடையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு சப்ளையும் தொடர்புடைய நபர்களுக்கு இடையேயான சப்ளை என்று கருதப்படும்.

3. பணியமர்த்துபவர் மற்றும் பணியாளர்: பணியமர்த்துபவர் மற்றும் பணியாளருக்கு இடையே ஏதேனும் சரக்குகள் மற்றும் சேவைகள் சப்ளை மேற்கொள்ளப்படுதல்.
திரு. ராகேஷ் என்பவர் கணேஷ் டிரேடிங் லிமிட்டெட்-ல் ஒரு பணியாளர் ஆகும். ராகேஷ் கணேஷ் டிரேடிங் லிமிட்டெட் நிறுவனத்தில் இருந்து திரு.ராகேஷ்-க்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு சப்ளையும் தொடர்புடைய நபர்களுக்கு இடையேயான சப்ளை என்று கருதப்படும்.

4. சப்ளையர் அல்லது பெறுநர் ஆகியோர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, இருபத்தி ஐந்து சதவிகிதம் அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குப்பதிவுக்குரிய பங்கு அல்லது பங்குகளை சொந்தமாக வைத்திருத்தல் அல்லது கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.

எடுத்துக்காட்டாக, பெறுநர் என்பவர் சப்ளையரின் வணிக நிறுவனத்தில் 25% பங்குகளை வைத்திருத்தல்.

5. ஒருவர் மற்றொருவரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கட்டுப்படுத்துதல்: எந்தவொரு சப்ளையிலாவது, சப்ளையர் அல்லது பெறுநர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மற்றவரை கட்டுப்படுத்துகிறார் என்றால், அது தொடர்புடைய நபர்களுக்கு இடையேயான சப்ளை என்று கருதப்படும்.
நேரடியாகக் கட்டுப்படுத்துதல்

One of them directly or indirectly controls the other
மேலே குறிப்பிடப்பட்டுள்ளபடி, கணேஷ் டிரேடிங் லிமிட்டெட் நிறுவனமானது ராகேஷ் டிரேடிங் லிமிட்டெட்-ல் பங்குகளை வைத்திருக்கிறது. கணேஷ் டிரேடிங் லிமிட்டெட் நிறுவனமானது ராகேஷ் டிரேடிங் லிமிட்டெட் நிறுவனத்தின் வியாபாரத்தை நேரடியாகக் கட்டுப்படுத்துவதால், கணேஷ் டிரேடிங் மற்றும் ராகேஷ் டிரேடிங் ஆகியோருக்கு இடையில் மேற்கொள்ளப்படும் சப்ளையானது தொடர்புடைய நபர்களுக்கு இடையேயான சப்ளை என்று கருதப்படும்.

மறைமுகமாகக் கட்டுப்படுத்துதல்

One of them directly or indirectly controls the other
மேலே குறிப்பிடப்பட்டுள்ளபடி, கணேஷ் டிரேடிங் லிமிட்டெட் நிறுவனமானது ராகேஷ் டிரேடிங் லிமிட்டெட்-ல் பங்குகளை வைத்திருக்கிறது. ராகேஷ் டிரேடிங் லிமிட்டெட் நிறுவனமானது மேக்ஸ் டிரேடிங் லிமிட்டெட்-ல் பங்குகளை வைத்திருக்கிறது. கணேஷ் டிரேடிங் லிமிட்டெட் மற்றும் மேக்ஸ் டிரேடிங் லிமிட்டெட் ஆகியவற்றிற்கு இடையிலான எந்தவொரு சப்ளையும் தொடர்புடையவை ஆகும். ஏனெனில், கணேஷ் டிரேடிங் லிமிட்டெட் நிறுவனமானது ராகேஷ் டிரேடிங் லிமிட்டெட் நிறுவனத்திற்கு மேக்ஸ் டிரேடிங் லிமிட்டெட்-ல் உள்ள வணிக நலன்களின் மூலமாக, மேக்ஸ் டிரேடிங் லிமிட்டெட்டின் வணிகத்தை மறைமுகமாகக் கட்டுப்படுத்துகிறது.

6. அவர்கள் இருவரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு மூன்றாவது நபரால் கட்டுப்படுத்தப்படுதல்: எந்தவொரு சப்ளையிலும், சப்ளையர் மற்றும் பெறுநர் ஆகியோர் ஒரு மூன்றாவது நபர் மூலம் நேரடியாக அல்லது மறைமுகமாக கட்டுப்படுத்தப்படுகிறார்கள்.
மேலே கூறப்பட்டுள்ளபடி, கணேஷ் டிரேடிங் லிமிட்டெட் நிறுவனமானது ராகேஷ் டிரேடிங் லிமிட்டெட் மற்றும் மேக்ஸ் டிரேடிங்-ல் பங்குகளை வைத்திருக்கிறது. ராகேஷ் டிரேடிங் லிமிட்டெட் மற்றும் மேக்ஸ் டிரேடிங் லிமிட்டெட் ஆகிய இருவரும் நேரடியாக கணேஷ் டிரேடிங் லிமிட்டெட் மூலம் கட்டுப்படுத்தப்படுவதால், அவர்களுக்கு இடையேயான சப்ளை என்பது தொடர்புடையது ஆகும்.

7. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மூன்றாவது நபரால் அவர்கள் ஒன்றாகக் கட்டுப்படுத்தப்படுதல்: எந்தவொரு சப்ளையிலும், சப்ளையர் மற்றும் பெறுநர் ஆகியோர் ஒன்றாக, ஒரு மூன்றாவது நபர் மூலம் நேரடியாக அல்லது மறைமுகமாக கட்டுப்படுத்தப்படுகிறார்கள்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ளபடி, ராகேஷ் டிரேடிங் லிமிட்டெட் என்பது மேக்ஸ் டிரேடிங் லிமிட்டெட்-ல் 80% பங்குகளை வைத்திருக்கிறது மற்றும் கணேஷ் டிரேடிங் லிமிட்டெட்-ல் 30% பங்குகளை வைத்திருக்கிறது.
Together they directly or indirectly control a third person
மேக்ஸ் டிரேடிங் லிமிட்டெட் நிறுவனமானது கணேஷ் டிரேடிங் லிமிட்டெட்-ல் 70% பங்குகளை வைத்திருக்கிறது. இப்பொழுது ஒன்றாகச் சேர்த்துப் பார்த்தால், ராகேஷ் டிரேடிங் லிமிட்டெட் நிறுவனமானது கணேஷ் டிரேடிங் லிமிட்டெட் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது, மேலும் அவற்றுக்கு இடையில் மேற்கொள்ளப்படும் சப்ளையானது தொடர்புடைய நபர்களுக்கு இடையேயான சப்ளை என்று கருதப்படும்.

8. அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு இடையே மேற்கொள்ளப்படும் ஒரு சப்ளையானது தொடர்புடைய நபர்களுக்கு இடையேயான சப்ளை என்று கருதப்படும்.

வேறுபட்ட நபர்

ஒரு வேறுபட்ட நபர் என்பவர் அதே மாநிலத்தில் அல்லது ஒரு வேறு மாநிலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளைப் பெற்றுள்ள அல்லது பெற வேண்டிய ஒரு வரிவிதிப்புக்குரிய நபர் என்று வரையறுக்கப்படுகிறார். அல்லது மற்றொரு மாநிலத்தில் அமைந்துள்ள பதிவுகளைப் பெற்றுள்ள அல்லது பெற வேண்டிய ஒரு நிறுவனம்.
அவரது பதிவு மற்றும் நிறுவனம் ஒவ்வொன்றும் ஒரு வேறுபட்ட நபராகக் கருதப்படும், மேலும் அவற்றுக்கு இடையேயான எந்தவொரு சப்ளையும் வரிவிதிப்புக்கு உட்படுத்தப்படும்.
எனவே, பின்வரும் இரண்டு சூழல்களில், ஏதேனும் பங்கு பரிமாற்றம் அல்லது கிளை இடமாற்றங்கள் ஆகியவை வரிக்கு உட்படுபவை ஆகும்:
1.மாநிலங்களுக்கு இடையேயான பங்கு பரிமாற்றம்: ஒரு நிறுவனமானது ஒரே மாநிலத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை கொண்டிருக்கும்பொழுது மட்டும்.
உதாரணம்
சூப்பர் கார்ஸ் லிமிட்டெட் என்பது கர்நாடகாவில் அமைந்துள்ள ஒரு கார் உற்பத்தி பிரிவு ஆகும். கர்நாடகாவில் ஒரு சேவை பிரிவும் அவர்களுக்கு உள்ளது. சூப்பர் கார்ஸ் லிமிட்டெட் நிறுவனமானது உற்பத்தி மற்றும் சேவை ஆகிய இரு பிரிவுகளுக்கும் தனித்தனியாக பதிவு செய்துள்ளது.
சூப்பர் கார்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் உற்பத்தி பிரிவு மற்றும் சேவை பிரிவு ஆகியவை வேறுபட்ட நபர்களாகக் கருதப்படும், மேலும் அவற்றுக்கு இடையேயான எந்தவொரு சப்ளையும் பரிசீலிக்கப்படாமல், வரிக்கு உட்படுத்தப்படும்.
2. மாநிலங்களுக்கு இடையேயான ஸ்டாக் பரிமாற்றம்: வெவ்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள இரண்டு நிறுவனங்களுக்கு இடையே மேற்கொள்ளப்படும் பரிமாற்றங்களுக்கு வரி செலுத்த வேண்டும்.
உதாரணம்
சூப்பர் கார்ஸ் லிமிட்டெட் என்பது கர்நாடகாவில் அமைந்துள்ள கார் உற்பத்தி பிரிவு ஆகும். அவர்களுக்கு தில்லியில் ஒரு சேவை பிரிவு உள்ளது.
சூப்பர் கார்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் உற்பத்தி பிரிவு மற்றும் டெல்லியில் உள்ள சேவை பிரிவு ஆகியவை வேறுபட்ட நபர்களாகக் கருதப்படும், மேலும் அவற்றுக்கு இடையேயான எந்தவொரு சப்ளையும் பரிசீலிக்கப்படாமல், வரிக்கு உட்படுத்தப்படும்.
குறிப்பு: முழுமையான விதிகள் கிடைக்கப்பெற்றதும், அத்தகைய சப்ளையின் வரிவிதிப்புக்குரிய மதிப்பை எவ்வாறு கணக்கிடுவது என்பது பற்றிய கூடுதல் தெளிவு கிடைக்கும்.

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

27,665 total views, 1 views today