சுரக்குகள் மற்றும் சேவைகளின் வழங்கல்: அதன் பொருள் என்ன என்ற நமது முந்தைய வலைப்பூ பதிவில் நாம் சலுகையுடன் கூடிய வழங்கல் குறித்து விவாதித்தோம், அது பெரும்பாலும் தொழிற் செயல்பாட்டு நடவடிக்கைகளான விற்பனை, பரிமாற்றங்கள் மற்றும் பல குறித்து இருந்தது.

இந்த வலைப்பூ பதிவில், வழங்கலின் ஒரு பகுதியாக இருந்து, வரிவிதிக்கக்கூடியதாக இருக்கும் விதிவிலக்கான சூழ்நிலைகள் குறித்து நாம் விவாதிப்போம்:

  • சலுகைக்காகச் செய்யப்படும் வழங்கல்கள், தொழிலின் போதோ, தொழில் அபிவிருத்திக்காகவோ இருந்தாலும், இல்லாவிடிலும்.
  • பின்வரும் நடவடிக்கைகள் சலுகை இல்லாவிடிலும் வழங்கலாகக் கருதப்படும் மற்றும் வரி விதிக்கத்தக்கவையாகும்.

சலுகை இல்லாத வழங்கல்

GST supply without consideration

பின்வரும் நடவடிக்கைகள் சலுகை இல்லாவிடிலும் வழங்கலாகக் கருதப்படும் மற்றும் வரி விதிக்கத்தக்கவையாகும்.

குறிப்பு: ‘தொடர்புடைய நபர்கள் அல்லது தனிப்பட்ட நபர்களுக்கு இடையில் சலுகையின்றி சரக்குகள் அல்லது சேவைகளின் வழங்கல்’ என்னும் முக்கியச் சூழ்நிலையை நமது அடுத்த வலைப்பூ பதிவில் விரிவாகக் காணலாம். 

1. முதவீட்டு வரி வரவு பெறப்பட்ட வணிகச் சொத்துக்களின் நிலையான பரிமாற்றம் / அகற்றம்

தொழில் சொத்துகள் விற்பனை அல்லது மாற்றம் செய்யப்படும் நிகழ்வில் அதாவது முதலீட்டு வரி வரவு பெறப்பட்டவை – அவை சலுகையில்லாமல் அகற்றப்பட்டிருந்தாலும், பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தாலும் அந்தப் பரிவர்த்தனையானது வழங்கலாகக் கருதப்பட்டு, ஜிஎஸ்டி செலுத்தும் பொறுப்பு அந்த நிறுவனத்துக்கு உண்டு.

உதாரணம்

சூப்பர் கார்ஸ் லிமிடெட் ரூ.3,00,000 மதிப்பிற்கு 15 கணினிகளை வாங்கி, ரூ.54,000 ஜிஎஸ்டி செலுத்தியது. சூப்பர் கார்ஸ் லிமிடெட் முதலீட்டு வரி வரவாக ரூ.54,000 பெற்றது. இந்தக் கணினிகள் அந்த நிறுவனத்தின் பதிவேடுகள் மற்றும் கணக்குகளைப் பராமரிக்கப் பயன்படுத்தப்பட்டது.

சுpல வருடப் பயன் பாட்டுக்குப் பிறகு, இந்தக் கணினிகளை பணியாளர்களுக்கு எவ்விதக் கட்டணமும் இன்றி வழங்க சூப்பர் கார்ஸ் லிமிடெட் தீர்மானித்தது.

இந்தக் கணினிகள் எவ்விதச் சலுகையும் இல்லாமல் அகற்றப்பட்ட போதும், ஜிஎஸ்டி செலுத்தும் பொறுப்பு சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு உண்டு.

குறிப்பு: முழுமையான விதிகள் கிடைக்கச் செய்யப்பட்டவுடன், அத்தகைய வழங்கலின் வரி விதிப்பு மதிப்பைக் கணக்கிடுவது எப்படி என்பது குறித்து மேலும் தெளிவு கிடைக்கும்.

2. முதன்மையானவர் மற்றும் அவரது முகவருக்கு இடையே சரக்குகள் வழங்கல்

பின்வரும் சூழ்நிலைகளில் சரக்குகளின் வழங்கல் சலுகை இல்லாத நிலையிலும் வரி விதிக்கத்தக்க வழங்கலாகக் கருதப்படும்.

  • முதன்மை நபர் தனது முகவருக்கு வழங்குவது: முதன்மையானவர் சார்பில் சரக்குகளை வழங்க முகவர் ஒப்புக்கொள்ளுதல்
  • முகவர், முதன்மை நபருக்கு வழங்குவது: அத்தகைய சரக்குகளை முதல்வர் சார்பாகப் பெற முகவர் ஒப்புக்கொள்ளுதல்

உதாரணம்

சூப்பர் கார்ஸ் லிமிடெட் சர்மா ஏஜென்சியை தனது முகவராக நியமிக்கிறது. அவர்கள் சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் வழங்கப்படும் உதிரி பாகங்களைச் சேமித்து வைப்பார்கள், மேலும் சூப்பர் கார்ஸ் லிமிடெட் தன் முகவர்களிடமிருந்து ஆர்டர்களைப் பெறும் சமயத்தில் அந்தப் பெட்டகத்தை அனுப்புமாறு சர்மா ஏஜென்சிக்கு கூறப்படும்.

மேலும் சூப்பர் கார்ஸ் லிமிடெட் சார்பாக மூலப் பொருட்களைப் பெறும் பொறுப்பு சர்மா ஏஜென்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

உதாரணத்தின்படி,

  • சூப்பர் கார்ஸ் லிமிடெட் முதன்மை நிறுவனம், சர்மா ஏஜென்சி அதன் முகவராகும்
  • சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனம் சர்மா ஏஜென்சிக்கு உதிரி பாகங்களை வழங்குவது வரி விதிக்கத்தக்க வழங்கல் ஆகும்
  • சூப்பர் கார்ஸ் லிமிடெட் சார்பாக சர்மா ஏஜென்சி மூலப் பொருட்களைப் பெறுவதும், அதன் பிறகு சர்மா ஏஜென்சி சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்குவதும் வரிவிதிக்கத்தக்க வழங்கல் ஆகும்

இதற்கான பொறுப்பை சூப்பர் கார்ஸ் லிமிடெட் மற்றும் சர்மா ஏஜென்சி ஆகிய இருவரும் இணைந்து பகிர்வார்கள் அல்லது இருவரில் யாராவது ஒருவர் தனியாக ஏற்றுக்கொள்வார்கள்.

குறிப்பு: முழுமையான விதிகள் அறிவிக்கப்பட்டவுடன், வரி செலுத்த வேண்டிய பொறுப்பு குறித்து மேலும் தெளிவு கிடைக்கும்.

3. தொழிலின் போது அல்லது தொழில் அபிவிருத்தியின் போது வரி விதிக்கத்தக்க நபர், தொடர்புடைய ஒரு நபர் அல்லது இந்தியாவுக்கு வெளியில் உள்ள அவரது பிற நிறுவனங்கள் ஏதாவதிலிருந்து சேவைகளை இறக்குமதி செய்தல்.

இந்தியாவுக்கு வெளியில் உள்ள தொடர்புடைய நபர்களிடமிருந்து சலுகையின்றி இறக்குமதி செய்யப்படும் சேவைகளுக்கு, அது தொழிலின் போது அல்லது தொழில் அபிவிருத்தியின் போதோ இருந்தால் மட்டுமே ஜிஎஸடி விதிக்கப்படும் என்பது இதன் பொருளாகும்.

உதாரணம் – 1

சிங்கப்பூரில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு கிளையானது உள்புற வடிவமைப்புச் சேவையைப் பெறுதல். உட்புறச் சேவையானது வரிவிதிக்கத்தக்கது மற்றும் தலைகீழ் கட்டண அடிப்படையில் ஜிஎஸ்டி விதிக்கத்தக்கது.

எனவே, தொழில் அபிவிருத்திக்காக தொடர்பற்ற நபர்களிடமிருந்து சலுகையின்றி இறக்குமதி செய்யப்படும் சேவை மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக சலுகையின்றி சேவையை இறக்குமதி செய்வது வழங்கல் ஆகாது, எனவே ஜிஎஸ்டி விதிக்கததக்கது அல்ல.

உதாரணம் – 2

சிங்கப்பூரில் அமைந்துள்ள தனது தலைமை அலுவலகத்திலிருந்து தனது வீட்டுக்காகச் உட்புற வடிவமைப்புச் சேவையை சலுகையின்றிப் பெறுதல். இந்தச் சேவையானது கட்டணமில்லாதது மற்றும் தனிப்பட்ட பயன்பாட்;டுக்கானது என்பதால், அது ஜிஎஸ்டி விதிக்கத்தக்கது அல்ல.

சலுகைக்காகச் செய்யப்பட்ட வழங்கல், தொழிலின் போது அல்லது தொழில் அபிவிருத்திக்காக இருந்தாலும் இல்லாவிடிலும் 

GST supply whether or not in the course or for furtherance of business

சலுகைக்காகச் செய்யப்பட்ட இறக்குமதி, அது தொழிலின் போது அல்லது தொழில் அபிவிருத்திக்காக இருந்தாலும் இல்லாவிடிலும் வரி விதிக்கத்தக்கதாகக் கருதப்படும். ஒரு சேவையானது தொழில் நோக்கத்திற்காகவோ அல்லது தனிப்பட்ட பயன்பாட்டுக்காக சலுகையுடன் செய்யப்பட்டிருந்தால், ஜிஎஸடி செலுத்தும் பொறுப்பு உங்களுக்கு உண்டு.

உதாரணம்

சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனம் வழிகாட்டும் வடிவமைப்புச் சேவைகளை சிங்கப்பூரில் உள்ள ஒரு விற்பனையாளரிமிருந்து 20,000 சிங்கப்பூர் டாலர்கள் சலுகையுடன் இறக்குமதி செய்தது.

இப்பொழுது, மேலே கூறப்பட்டுள்ள சேவை இறக்குமதிக்காக தலைகீழ் கட்டண அடிப்படையில் ஜிஎஸ்டி செலுத்தும் பொறுப்பு சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு இருக்கிறது.

விரைவில் வருகிறது:

  • இந்த வழங்கலை சரக்குகள் அல்லது சேவைகள் என முடிவெடுத்தல்
  • கலப்பு வழங்கல் மற்றும் தொகுப்பு வழங்கலைப் புரிந்துகொள்ளுதல்

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

89,341 total views, 422 views today

Yarab A

Author: Yarab A

Yarab is associated with Tally since 2012. In his 7+ years of experience, he has built his expertise in the field of Accounting, Inventory, Compliance and software product for the diverse industry segment. Being a member of ‘Centre of Excellence’ team, he has conducted several knowledge sharing sessions on GST and has written 200+ blogs and articles on GST, UAE VAT, Saudi VAT, Bahrain VAT, iTax in Kenya and Business efficiency.