வரி செலுத்துபவருக்கு வரித் துறையில் இருந்து திரும்பப்பெறக்கூடிய எந்தவொரு தொகையும் ஒரு வரி ரீஃபண்ட் என்று குறிப்பிடப்படுகிறது. வரிகளை அதிகமாக செலுத்தியிருத்தல், ஏற்றுமதிகளாக மேற்கொள்ளப்பட்ட வெளியீட்டு சப்ளைகளில் பயன்படுத்தப்படாத உள்ளீட்டு வரிக் கிரெடிட், வெளியீடுகள் மீதான வரி விகிதத்தைவிட உள்ளீடுகளின் மீதான வரி விகிதம் அதிகமாக இருத்தல் (தலைகீழ் வரிஅமைப்பு), முதலிய சில குறிப்பிட்ட சூழல்களில் வரி ரீஃபண்ட் என்பது அனுமதிக்கப்படுகிறது, மேலும் டீலர்கள் இந்த சூழல்களில் மட்டுமே வரி ரீஃபண்ட்-ஐ கிளைம் செய்ய முடியும்.
தற்போதைய முறையில் வரி ரீஃபண்ட் அனுமதிக்கப்படும் சூழல்கள் குறித்து நாம் முதலில் சுருக்கமாக பார்ப்போம்.

தற்போதைய முறை

தற்போதைய வரி விதிப்பு முறையில், பின்வரும் சூழல்களில் ரீஃபண்ட் அனுமதிக்கப்படுகிறது:

கலால்
பின்வரும் சூழல்களில் ரீஃபண்ட் அனுமதிக்கப்படுகிறது:

 1. 1.ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களை வாங்குவதற்கு செலுத்திய வரிகள் அல்லது ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்ற உள்ளீடுகள்
 2. 2. வெளியீடுகள் என்பது ஏற்றுமதி அல்லது பூஜ்யம் மதிப்பிடப்பட்ட சப்ளைகளாக மட்டுமே இருப்பதால் உள்ளீட்டு வரிக் கிரெடிட்கள் சேர்ந்திருத்தல்

வாட்
பின்வரும் சூழல்களில் ரீஃபண்ட் அனுமதிக்கப்படுகிறது:

 1. 1.ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களை வாங்குவதற்கு VAT செலுத்தப்படுதல்
 2. 2.அதிகமான உள்ளீட்டு வரி கிரெடிட் – பெரும்பாலான மாநிலங்களில், ஒரு மாதத்தில் விற்பனைக்கு செலுத்தப்பட வேண்டிய வரிக்கு அதிகமாக உள்ளீட்டு வரி கிரெடிட் இருந்தால், அதிகமான கிரெடிட் என்பது நிதி ஆண்டின் இறுதி வரை கொண்டு செல்லப்படும். நிதி ஆண்டின் இறுதியில், பணத்தை ரீஃபண்ட் பெற கிளைம் செய்வதற்கு அல்லது உள்ளீட்டு வரி கிரெடிட்டாக முன்னோக்கிச் எடுத்துச் செல்வதற்கு என டீலருக்கு ஆப்ஷன் உள்ளது

சேவை வரி
பின்வரும் சூழல்களில் ரீஃபண்ட் அனுமதிக்கப்படுகிறது:

 1. 1. அதிகமாக சேவை வரி செலுத்துதல் – இங்கே எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய வரிப் பொறுப்புக்கு எதிராக கூடுதலாக செலுத்தப்பட்ட பணத்தை சரிசெய்ய முடியாது.
 2. 2.சேவை வரி செலுத்தப்படாமல் ஏற்றுமதி செய்யப்பட்ட ஒரு வெளியீட்டு சேவையை வழங்குவதில் பயன்படுத்தப்படும் உள்ளீட்டு வரிக் கடன் சேர்ந்திருத்தல்

இப்போது ஜிஎஸ்டீ-யின் கீழ் வரி ரீஃபண்ட் குறித்து புரிந்து கொள்வோம்.

ஜிஎஸ்டீ முறை

ஜிஎஸ்டி முறையில், வரி ரீஃபண்ட் அனுமதிக்கப்படும் சூழ்நிலைகள் என்பது தற்போதைய முறையைப் போலவே இருக்கின்றன. பின்வருபவை ஜிஎஸ்டீ-யின்கீழ் ரீஃபண்ட் அனுமதிக்கப்பட்ட மிகவும் பொதுவான சூழல்களாகும்:

 • ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்குகள் மற்றும் / அல்லது சேவைகளின் உள்வரும் சப்ளை மீது செலுத்தப்பட்ட வரி அல்லது ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்குகள் மற்றும் / அல்லது சேவைகளில் பயன்படுத்தப்பட்ட உள்ளீடு அல்லது உள்ளீட்டு சேவைகள். சரக்குகளானது ஏற்றுமதி வரிக்கு உட்படுத்தப்பட்டால், பணத்தை திரும்பப் பெற முடியாது.
 • வெளியீடுகள் என்பது ஏற்றுமதி அல்லது பூஜ்யம் மதிப்பிடப்பட்ட சப்ளைகளாக இருப்பதால் பயன்படுத்தப்படாத உள்ளீட்டு வரிக் கிரெடிட்
 • தலைகீழ் வரி அமைப்பின் காரணமாக பயன்படுத்தப்படாத உள்ளீட்டு வரி கிரெடிட். வெளியீட்டு சப்ளைகளின் மீதான வரி விகிதத்தைவிட உள்ளீடுகள் மீதான வரி விகிதம் அதிகமாக இருக்கும்போது இவ்வாறு ஏற்படும்.தற்போதைய வரி விதிப்பு முறையில், இது ரீஃபண்ட்-க்கு அனுமதிக்கப்படாது. இருப்பினும், ஜிஎஸ்டீ முறையில், இந்த சூழலானது வரி ரீஃபண்ட் கிளைம் செய்வதற்கு தகுதியுடையது ஆகும். இந்த சூழலில், சப்ளைகளானது NIL என மதிப்பிடப்பட்டு அல்லது முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டிருக்கும் போது, ரீஃபண்ட் பெற முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.

ஜிஎஸ்டீ ரீஃபண்ட் கிளைம் செய்வதற்கான செயல்முறை

1. ரீஃபண்ட்-க்கான விண்ணப்பம்

வரி அல்லது வட்டி அல்லது வேறு ஏதேனும் செலுத்தப்பட்ட தொகையை ரீஃபண்ட் செய்யுமாறு கிளைம் செய்யும் ஒருவர், ‘உரிய தேதியில்’ இருந்து 2 ஆண்டுகள் காலாவதியாவதற்கு முன்னர், படிவம் ஜிஎஸ்டீ RFD-1-ல் ரீஃபண்ட்-க்காக விண்ணப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு சூழ்நிலையிலும் ரீஃபண்ட்-க்கான ‘உரிய தேதி’ என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

சூழல் உரிய தேதி
கடல்மூலமாக அல்லது விமானம் மூலமாக ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகள் சரக்குகள் ஏற்றப்பட்ட கப்பல் அல்லது விமானம், இந்தியாவில் இருந்து புறப்படும் தேதி
நிலம் மூலமாக ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகள் சரக்குகள் எல்லைகளைக் கடந்த தேதி
அஞ்சல் மூலமாக ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகள் சம்பந்தப்பட்ட தபால் அலுவலகத்தினால் சரக்குகள் அனுப்பப்படும் தேதி
பணம் பெறப்படுவதற்கு முன்னரே சேவை வழங்கல் நிறைவு செய்யப்படும் ஏற்றுமதி செய்யப்பட்ட சேவைகள் பணம் பெறும் தேதி
விலைப்பட்டியல் வழங்கும் தேதிக்கு முன்னர்,முன்கூட்டியே பணம் பெறப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்ட சேவைகள் விலைப்பட்டியல் வழங்கப்படும் தேதி
பயன்படுத்தப்படாத உள்ளீட்டு வரி கிரெடிட் வரி ரீஃபண்ட்-க்கான கிளைம் பெறப்பட்ட நிதி ஆண்டின் இறுதி

குறிப்பு: மின்னணு ரொக்க லெட்ஜரில் உள்ள மீதமுள்ள பணத்தை ரீஃபண்ட் செய்வதற்கான கிளைம் என்பது உரிய மாதாந்திர ரிட்டர்ன் மூலமாக, ஒரு வழக்கமான டீலர் என்றால் படிவம் ஜிஎஸ்டீஆர் -3-லும் மற்றும் ஒரு கலப்பு டீலர் என்றால் படிவம் ஜிஎஸ்டீஆர்-4-லும் இருக்க வேண்டும்.

ஜிஎஸ்டீ-யின் கீழ் ரீஃபண்ட் பெறுவதற்காக கிளைம் செய்வதற்குத் தேவையான ஆவணங்கள்

வரி ரீஃபண்ட் ஆக கிளைம் செய்யப்பட்ட தொகை என்பது ரூ. 5 இலட்சத்திற்கு குறைவாக இருந்தால் – ரீஃபண்ட் ஆக கிளைம் செய்யப்பட்ட வரி அல்லது வட்டி என்பது மற்றொரு நபருக்கு கொண்டு செல்லப்படவில்லை என்று தன்னிடம் உள்ள ஆவணங்கள் அல்லது மற்ற ஆதாரங்களின் அடிப்படையில் சான்றளித்து, ஒரு அறிவிப்பை ஒரு நபர் தாக்கல் செய்ய வேண்டும்.

வரி ரீஃபண்ட் ஆக கிளைம் செய்யப்பட்ட தொகை என்பது ரூ. 5 இலட்சத்திற்கு அதிகமாக இருந்தால் – ரீஃபண்ட் பெறுவதற்கான விண்ணப்பம் என்பது பின்வருபவைகளுடன் சேர்ந்து இருக்க வேண்டும்:

 1. 1.அந்த நபரின் காரணமாக ரீஃபண்ட் பெறப்படுகிறது என்பதை உறுதிசெய்யும் ஆவணச் சான்று.
 2. 2.அவரால் பணம் வழங்கப்பட்டுள்ளதையும் மற்றும் வரி அல்லது வட்டி என்பது மற்றொரு நபருக்கு கொண்டு செல்லப்படவில்லை என்பதையும் உறுதி செய்வதற்கான ஆவணம் அல்லது சான்று.
2. திருப்பிச் செலுத்துவதற்கான ஆணை

ஏற்றுமதி தொடர்பான ரீஃபண்ட்
சரக்குகள் மற்றும் / அல்லது சேவைகளை ஏற்றுமதி செய்வது தொடர்பான ரீஃபண்ட் என்றால், அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி என்பவர் படிவம் ஜிஎஸ்டீ RFD-4-ல் ஒரு தற்காலிக அடிப்படையிலான ரீஃபண்ட்-ஆக கிளைம் செய்யப்பட்ட மொத்தத் தொகையில் 90%-ஐ ரீஃபண்ட் வழங்குவார். அதன் பின்னர், சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், ரீஃபண்ட் கிளைமை செட்டில் செய்வதற்கான இறுதி ஆணையை அதிகாரி வழங்குவார்.
தற்காலிக ரீஃபண்ட் என்பது பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும்:

 • ரீஃபண்ட்-ஐ கிளைம் செய்யும் நபர் என்பவர் முந்தைய 5 ஆண்டுகளில் ரூ. 250 இலட்சத்திற்கு அதிகமான வரி ஏய்ப்பு குற்றத்தில் தண்டிக்கப்பட்டிருக்கக்கூடாது.

 • ஒரு நபரின் ஜிஎஸ்டீ இணக்கத்திற்கான மதிப்பீடு என்பது 10 என்ற அளவுகோலில் 5-க்கு குறைவாக இருக்கக்கூடாது.

 • ரீஃபண்ட் தொகை குறித்து நிலுவையிலுள்ள மேல்முறையீடு, மதிப்பாய்வு அல்லது திருத்தம் ஆகிய எதுவும் இருக்கக்கூடாது.

மற்ற சூழல்களில் ரீஃபண்ட்

ரீஃபண்ட் கிளைம் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ரீஃபண்ட் தொகையானது மொத்தமாகவோ அல்லது பகுதியாகவோ, அதிகாரிக்கு திருப்தியளிக்கும் வகையில் இருந்தால், படிவம் ஜிஎஸ்டீ RFD-5-ல் ரீஃபண்ட் செலுத்துவதற்கான ஒரு ஆணையை அவர் வழங்குவார். இது விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்ட தேதியில் இருந்து 60 நாட்களுக்குள் செய்யப்பட வேண்டும். 60 நாட்களுக்குள் ரீஃபண்ட் செலுத்தப்படாதபட்சத்தில், 60 நாட்கள் முடிவதில் இருந்து ரீஃபண்ட் செய்யப்படும் உண்மையான தேதி வரை, ரீஃபண்ட் தொகையின் மீதான வட்டி அளிக்கப்படும்.

குறிப்பு: ரீஃபண்ட் ஆக கிளைம் செய்யப்பட்ட தொகை என்பது ரூ.1000-க்கு குறைவாக இருந்தால், ரீஃபண்ட் எதுவும் செய்யப்படாது.

ஜிஎஸ்டீ ரீஃபண்ட்-க்கான விதிவிலக்கான சூழல்கள்

பின்வருபவை ஜிஎஸ்டீ-யின்கீழ் ரீஃபண்ட் அனுமதிக்கப்பட்டுள்ள சில விதிவிலக்கான சூழல்கள் ஆகும்:

 1. 1. ஏற்றுமதியாக கருதப்படும் சரக்குகளின் மீதான வரி. உதாரணமாக: ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் (SEZ) அல்லது EOU (ஏற்றுமதி சார்ந்த யூனிட்) ஆகியவற்றுக்கு சரக்குகளை அல்லது சேவைகளை வழங்குதல்.
 2. 2. மேல்முறையீட்டு ஆணையம், மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அல்லது ஏதாவது நீதிமன்றம் ஆகியவற்றின் தீர்ப்பு, கட்டளை, ஆணை ஆகியவற்றின் காரணமாக வரி ரீஃபண்ட் செய்யப்படுதல்.
 3. 3. முழுமையாக அல்லது பகுதியளவில் வழங்கப்படாத ஒரு சப்ளை மீது வரி செலுத்தப்படுதல், மற்றும் அதற்கு ஒரு விலைப்பட்டியல் அளிக்கப்படாமல் இருத்தல். உதாரணமாக: டிசம்பர் 20, 2017 அன்று மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு சப்ளைக்காக நவம்பர் 28,2017 அன்று ஒரு சப்ளையர் முன்பணமாக பெற்றுள்ளார், ஆனால் இறுதியில் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சப்ளை நடைபெறவில்லை. நவம்பர் ’17 –க்கான ரிட்டர்ன் தாக்கல் செய்தபோது, முன்கூட்டியே பெறப்பட்ட பணத்திற்காக சப்ளையர் வரி செலுத்த வேண்டும். இந்த வரி என்பது ரீஃபண்ட்-க்கு தகுதியுடையது ஆகும்.
 4. 4. வரி தவறாக வசூலிக்கப்பட்டு மத்திய அல்லது மாநில அரசாங்கத்தில் டெப்பாசிட் செய்யப்படுதல்- ஒரு நபர்மாநிலங்களுக்கு இடையே மேற்கொள்ளப்படும் சப்ளைகளுக்கு சிஜிஎஸ்டீ மற்றும் எஸ்ஜிஎஸ்டீ செலுத்தியிருந்தால் அல்லது மாநிலத்திற்குள் மேற்கொள்ளப்படும் சப்ளைக்கு ஐஜிஎஸ்டீ செலுத்தியிருந்தால், வரி சரியாக செலுத்தப்பட்டவுடன், அந்த நபர் தொகையை ரீஃபண்ட் பெற தகுதியுடையவர் ஆவார்.
 5. 5. இந்தியாவில் இருந்து சரக்குகள் எடுத்துச் செல்லப்பட்டால், இந்தியாவிற்கு வெளியே பயணிக்கும் சுற்றுலாப்பயணிகள் சரக்குகளுக்கு செலுத்தும் ஐஜிஎஸ்டீ.

இந்த சூழலில், ரீஃபண்ட்-க்கான ‘உரிய தேதி’ என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

சூழல் உரிய தேதி
ஏற்றுமதிகள் என கருதப்படும் சரக்குகள் ஏற்றுமதிகள் என கருதப்படுவது சம்பந்தப்பட்ட ரிட்டர்ன் தாக்கல் செய்யப்படும் தேதி
மேல்முறையீட்டு ஆணையம், மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அல்லது ஏதாவது நீதிமன்றம் ஆகியவற்றின் தீர்ப்பு, கட்டளை, ஆணை ஆகியவற்றின் காரணமாக வரி ரீஃபண்ட் செய்யப்படுதல் தீர்ப்பு, கட்டளை, ஆணை அல்லது வழிகாட்டுதல் ஆகியவை தெரிவிக்கப்பட்ட தேதி
தற்காலிகமாக செலுத்தப்பட்ட வரி இறுதி மதிப்பீட்டிற்குப் பிறகு வரி சரிசெய்யப்பட்ட தேதி
சப்ளையர் தவிர,பிற நபர் என்ற சூழலில் ஒரு நபரால் சரக்குகள் அல்லது சேவைகள் பெறப்படும் தேதி
வேறு ஏதாவது சூழல் வரி செலுத்தும் தேதி

இந்த விதிவிலக்கான சூழல்களில் பணத்தை ரீஃபண்ட் பெறுவது குறித்த நடைமுறை என்பது, மேலே விவாதிக்கப்பட்ட ரீஃபண்ட் கிளைம் செய்வதற்கான நடைமுறை என்ற பிரிவில் இருப்பது போலவே உள்ளது.

உங்களின் உதவி எங்களுக்கு தேவை

கீழே உள்ள கமெண்ட்கள் என்பதைப் பயன்படுத்தி இந்த வலைப்பதிவு இடுகையில் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும். மேலும், ஜிஎஸ்டீ தொடர்பான தலைப்புகளில் எது குறித்து நீங்கள் மேலும் அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்கள் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள், அதை எங்கள் உள்ளடக்க திட்டத்தில் சேர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இது பயனுள்ளதாக இருந்ததா? கீழே உள்ள சமூகப் பகிர்வு பொத்தான்களைப் பயன்படுத்தி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

135,757 total views, 318 views today