(English) Language

  • English
  • Hindi
  • Marathi
  • Kannada
  • Telugu
  • Tamil
  • Gujarati
8ipதற்போதைய சட்டத்தின் கீழ் ஒரு பதிவு செய்துள்ள வணிகமாக, நீங்கள் செய்ய வேண்டிய முதல் மற்றும் முக்கியமான வேலை, சரக்கு மற்றும் சேவை வரிக்கு (ஜிஎஸ்டிக்கு) மாறுவதாகும். நீங்கள் ஜிஎஸ்டியின் அடிப்படைகளைஅடிப்படைகளை அறிந்துகொள்வது முக்கியமாகும், அதேசமயம், ஜிஎஸ்டிக்கு மாறுவதற்கான முன்னேற்பாடுகளை புரிந்துகொண்டு, ஜிஎஸ்டிக்கு ஒரு சீரான முறையில் மாறுவதை உறுதி செய்வதற்கான அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதும், மாறுதலின் பலன்களை பயன்படுத்துதல் போன்றவையும் மிக முக்கியமானவை ஆகும். நீங்கள் தகுந்தஜிஎஸ்டி உள்ளீட்டு வரி வரவைகிடைக்கச் செய்வதில் உங்கள் கணக்குப் பதிவு மற்றும் அறிக்கையிடுதல் நடைமுறைகள், கொள்முதல் லாஜிஸ்டிக் முடிவுகள் மற்றும் பலவற்றை ஆராய வேண்டும்..

இன்று, உற்பத்தி, விற்பனை மற்றும் சேவை செயல்பாடு ஆகியவை ஒரு தனிப்பட்ட மறைமுக வரி அமைப்பால் நிர்வகிக்கப்படுகின்றன. உற்பத்தி செயல்பாடு மத்திய கலால் வரியால் உள்ளடக்கப்படுகின்றது, விற்பனையானது மாநில வேட்/சிஎஸ்டி-ன் கீழ் உள்ளடக்கப்படுகின்றது, மற்றும் சேவை செயல்பாடு சேவை வரிச் சட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படுகின்றது.
எளிதாக மற்றும் நன்றாகப் புரிந்துகொள்வதற்கு, நாம் கீழேயுள்ள வரி வகைகள் ஒவ்வொன்றுக்கான மாறுதல் முன்னேற்பாடுகளை வகைப்படுத்தியுள்ளோம்:

  • மத்திய கலால் வரி
  • வேட்
  • சேவை வரி

உங்களுக்கு இருக்கக்கூடிய சில கேள்விகள்:

  • ஜிஎஸ்டி செயல்படுத்தப்படும் முன், கடைசி நாளில் இருக்கும் கையிருப்பு உள்ளீட்டு வரி வரவுக்கு என்ன ஆகும்?
  • இன்னும் கிடைத்திராத முதலீட்டுச் சரக்குகளின் மீதான உள்ளீட்டு வரி வரவுக்கு என்ன ஆகும்?

நாம் இந்த கேள்விகளுக்கு நிகழ்வுகள் அடிப்படையில் பதிலளிப்போம்.

நிகழ்வு 1: கிடைக்கும் சென்வேட் மற்றும் உள்ளீட்டு வேட் கிரெடிட்

மத்திய கலால் வரி

central excise

உற்பத்தியாளர்

ஒரு உற்பத்தியாளர் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் தேதிக்கு முன்னால், கடைசி நாளன்று, இருக்கும் கையிருப்பு செண்ட்வேட் வரவுகளை, உள்ளீட்டு வரி வரவாக முன்னோக்கி கொண்டு போக முடியும்.
இதற்கு என்ன அர்த்தம்?

  • சென்வேட் வரவின் இறுதிக் கையிருப்பு நீங்கள் கடைசியாக தாக்கல் செய்த படிவத்தில் பிரதிபலித்திருக்க வேண்டும், மேலும்
  • இது ஜிஎஸ்டி-ன் கீழ் உள்ளீட்டு வரி வரவாகஅனுமதிக்கப்பட வேண்டும்.

இன்று, சிறுதொழில் தொழிற்துறைகளை (எஸ்எஸ்ஐ- இதன் ஆண்டு வருமானம் 4 கோடிகளுக்கு மிகக் கூடாது) தவிர்த்த மற்றொரு உற்பத்தியாளர் தங்கள் மாதாந்திர ரிடர்ன்களை படிவம் ER-1-ல் தாக்கல் செய்யப்பட வேண்டும், மேலும் எஸ்எஸ்ஐ காலாண்டு ரிடர்ன்கள் படிவம் ER-3-ல் தாக்கல் செய்யப்பட வேண்டும். படிவம் ER-1 அல்லது படிவ ER-3-ல் முன்னோக்கி கொண்டு செல்லப்படும் சென்வேட் தொகையானது, கடைசி நாளன்று அதாவது ஜிஎஸ்டி அமலாக்கப்படும் நாளுக்கு முன்னால், சிஜிஎஸ்டி உள்ளீட்டு வரி வரவாக முன்னோக்கி கொண்டு செல்லப்பட அனுமதிக்கப்படும்.
நன்றாக புரிந்துகொள்ள ஒரு எடுத்துக்காட்டு மூலம் விவாதிப்போம்:

கர்நாடகாவில் இருக்கும் ஒரு கார் உற்பத்தியாளரான, சூப்பர் கார்ஸ் பிரைவேட் லிமிட்டெட், தீர்வை மற்றும் கர்நாடகா வேட்-ன் கீழ் பதிவு செய்துள்ளது. 31 மார்ச், 2017 அன்றைய சூப்பர் கார்ஸ் பிரைவேட் லிமிட்டெட்-ன் படிவம் ER-1 கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

படிவம் E.R.-1

தீர்வைக்குரிய சரக்குகளின் ரிடர்ன் மற்றும் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான சென்வேட் கிரெடிட் கிடைத்தல்
வரவின் விவரங்கள்
சென்வேட்
AED_TTA
NCCD
ADE_LVD_CL_85
ADC_LVD_CT_75
EDU_CESS
SEC_EDU_CESS
SERVICE_TAX
EDU_CESSST
SEC_EDU_CESS_ST
Closing Balance25,000.000.000.000.000.000.000.000.000.000.00

மார்ச் 2017-ன் படிவம் ER-1-ன் படி, சூப்பர் கார்ஸ் பிரைவேட் லிமிட்டெட் ரூ. 25,000 மதிப்புள்ள ஒரு இறுதி சென்வேட் கையிருப்பை வைத்துள்ளது.
சூப்பர் கார்ஸ் பிரைவேட் லிமிட்டெட்-ஆல் உள்ளீட்டு வேட் வரவை முன்னோக்கி கொண்டு செல்ல முடியுமா?

ஆம், சூப்பர் கார்ஸ் பிரைவேட் லிமிட்டெட்டின் ரூ. 25,000 மதிப்பிலான இறுதி சென்வேட் கையிருப்பை முன்னோக்கி கொண்டு செல்ல முழுமையான தகுதியைப் பெற்றுள்ளது. இதற்குக் காரணம் சூப்பர் கார்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் கீழே விளக்கப்பட்டுள்ளவாறு எல்லா நிபந்தனைகளையும் பூர்த்தி செய்கின்றது:

  • ரூ. 25,000 மதிப்புள்ள சென்வேட், ரிடர்னில் பிரதிபலிக்க வேண்டும்.
  • ஜிஎஸ்டியில், இதுவே உள்ளீட்டு வரி கிரெடிட்டாக அனுமதிக்கப்படும்.

இப்போது சூப்பர் கார்ஸ் பிரைவேட் லிமிட்டெட்டுக்காக, சென்வேட், ஒரு சிஜிஎஸ்டி கிரெடிட் ஆக இருக்கும். இதை பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆணையில் உள்ள பொறுப்புகளை செட்-ஆஃப் செய்யப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எக்சைஸ் டீலர்

ஒரு டீலராக, நீங்கள் தீர்வை செலுத்தக்கூடிய சரக்குகளில் வர்த்தகம் செய்தால், மத்திய கலால் வரியின் கீழ் பதிவு செய்ய நீங்கள் பொறுப்புள்ளவர் ஆவீர்கள். இன்று, நீங்கள் செலுத்தும் ஆயத்தீர்வை கிரெடிட்டாக கிடைக்காது. ஒரு முதல் நிலை அல்லது இரண்டாம் நிலை டீலராக, செலுத்தப்பட்ட ஆயத்தீர்வை தயாரிப்புப் பொருளின் விலையில் சேர்க்கப்படும். அது ஒரு உற்பத்தியாளரிடம் விற்கப்பட்டால், ஆயத்தீர்வை பரிமாற்றப்பட்டு அது வாங்கப்படும் உற்பத்தியாளரால் சென்வேட் கிரெடிட்டாக கிளைம் செய்யப்படும்.
ஜிஎஸ்டிக்கு மாறும் தேதியன்று, நீங்கள் வைத்திருக்கும் இறுதிக் கையிருப்பு தொடர்பாக செலுத்தப்பட்ட ஆயத்தீர்வை, சிஜிஎஸ்டி உள்ளீட்டு வரி கிரெடிட்டாக முன்னோக்கி கொண்டு செல்லப்பட அனுமதிக்கப்படும்.

மதிப்பு கூட்டு வரி (வேட்)

vat

மதிப்பு கூட்டு வரியின்-ன் கீழ் பதிவு செய்துள்ள ஒரு வணிகம் அவற்றின் தகுந்த மாநிலங்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, மாதந்தோறுமான அல்லது காலாண்டுதோறுமான வேட் ரிடர்ன் படிவங்களை தாக்கல் செய்ய வேண்டும். வேட் ரிடர்ன் படிவங்களில் உள்ள உள்ளீட்டு வேட் கிரெடிட் ஆனது, எஸ்ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி கிரெடிட்டாக முன்னோக்கி கொண்டு செல்லப்படும்.

நன்றாக புரிந்துகொள்ள ஒரு எடுத்துக்காட்டு மூலம் விவாதிப்போம்

கர்நாடகாவில் இருக்கும் ஒரு கார் உற்பத்தியாளரான, சூப்பர் கார்ஸ் பிரைவேட் லிமிட்டெட், கர்நாடகா வேட்-ன் கீழ் பதிவு செய்துள்ளது. 31 மார்ச், 2017 அன்றைய சூப்பர் கார்ஸ் பிரைவேட் லிமிட்டெட்-ன் படிவம் 100 (கர்நாடகாவுக்கான மாதாந்திர ரிடர்ன் படிவம்) கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

படிவம் வேட் 100 (விதி 138-ஐ பார்க்கவும்)

ரிடர்ன்

வரி கால அளவு (மாதம்/காலாண்டு)

மார்ச், 2017
முன்னோக்கி கொண்டு செல்லப்படும் கிரெடிட்/எக்செஸ் பேமெண்ட்5,000.00

மார்ச் 2017 அன்றைய வேட் படிவம் 100-ன்படி, சூப்பர் கார்ஸ் பிரைவேட் லிமிட்டெட் ரூ. 5,000 மதிப்புள்ள ஒரு உள்ளீட்டு வேட் கிரெடிட் கையிருப்பை வைத்துள்ளது.

சூப்பர் கார்ஸ் பிரைவேட் லிமிட்டெட்-ஆல் உள்ளீட்டு வேட் கிரெடிட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியுமா?

ஆம், சூப்பர் கார்ஸ் பிரைவேட் லிமிட்டெட்டின் ரூ. 5,000 மதிப்பிலான இறுதி உள்ளீட்டு வேட்-ஐ முன்னோக்கி கொண்டு செல்ல முழுமையான தகுதியைப் பெற்றுள்ளது. இதற்குக் காரணம் சூப்பர் கார்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் கீழே விளக்கப்பட்டுள்ளவாறு எல்லா நிபந்தனைகளையும் பூர்த்தி செய்கின்றது:

  • ரூ. 5,000 மதிப்பிலான சென்வேட், ரிடர்னில் பிரதிபலிக்கின்றது மற்றும்
  • ஜிஎஸ்டியில், அது உள்ளீட்டு வரி கிரெடிட்டாக அனுமதிக்கப்படுகிறது.

இப்போது சூப்பர் கார்ஸ் பிரைவேட் லிமிட்டெட்டுக்காக, உள்ளீட்டு வேட் ஆனது, ஒரு சிஜிஎஸ்டி கிரெடிட் ஆக முன்னோக்கி கொண்டு செல்லப்படும். இதை பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆணையில் உள்ள பொறுப்புகளை செட்-ஆஃப் செய்யப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சேவை வரி

service tax

இன்று, ஒரு சேவை வழங்குநரின் வரி செலுத்தக்கூடிய சேவைகளின் மொத்த மதிப்பு 10 லட்சங்களை தாண்டினால், அவர் பதிவு செய்யும் பொறுப்பில் இருக்கிறார். பின்வருபவை வரி செலுத்தக்கூடிய சேவைகளின் மீது விதிக்கப்படக்கூடிய சேவை வரியின் வகைகளாகும்:

வரிவரி வீதம்உள்ளீட்டு கிரெடிட் உள்ளதா?எதற்கு எதிராக அமைக்கப்பட்டுள்ளது?
சேவை வரி

14%

ஆம்சேவை வரி மற்றும் தீர்வைக்கான பொறுப்பு
ஸ்வச் பாரத் வரி

0.5%

இல்லை

கிரிஷி கல்யாண் வரி

0.5%

இல்லை

கிரிஷி கல்யாண் வரி பொறுப்புக்கு எதிராக மட்டும்.

 

ஒரு சேவை வழங்குபவராக, நீங்கள் அரையாண்டுதோறும் ரிடர்னை படிவம் ST-3-ல் தாக்கல் செய்ய வேண்டும். சேவை வரி உள்ளீட்டு கிரெடிட்டின் இறுதிக் கையிருப்பை, சிஜிஎஸ்டி உள்ளீட்டு வரி கிரெடிட்டாக முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும்.

நன்றாக புரிந்துகொள்ள ஒரு எடுத்துக்காட்டு மூலம் விவாதிப்போம்

சூப்பர் கார்ஸ் லிமிட்டெட் கர்நாடகாவில் உள்ள ஒரு கார் உற்பத்தி நிறுவனம் ஆகும். அவர்களிடம் கர்நாடகாவில் அமைந்துள்ள சர்வீஸ் யூனிட்களும் உள்ளன. 31 மார்ச், 2017 அன்றைய, சூப்பர் கார்ஸ் லிமிட்டெட்டின் ST-3 ரிடர்ன் படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

service_tax

மார்ச் 2017-ன் படிவம் ST-3-ன்படி, சூப்பர் கார்ஸ் பிரைவேட் லிமிட்டெட் ரூ. 30,000 மதிப்பிலான ஒரு இறுதி சென்வேட் (CENVAT) (சேவை வரி உள்ளீட்டு கிரெடிட்) கையிருப்பை வைத்துள்ளது.

சூப்பர் கார்ஸ் பிரைவேட் லிமிட்டெட்டால் சென்வேட் கிரெடிட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியுமா?

ஆம், சூப்பர் கார்ஸ் பிரைவேட் லிமிட்டெட்டின் ரூ. 30,000 மதிப்பிலான இறுதி சென்வேட் கையிருப்பு முன்னோக்கி கொண்டு செல்ல முழுமையான தகுதியைப் பெற்றுள்ளது. இதற்குக் காரணம் சூப்பர் கார்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் கீழே விளக்கப்பட்டுள்ளவாறு எல்லா நிபந்தனைகளையும் பூர்த்தி செய்கின்றது:

  • ரூ. 30,000 மதிப்பிலான சென்வேட், ரிடர்னில் பிரதிபலிக்கின்றது மற்றும்
  • ஜிஎஸ்டியில், அது உள்ளீட்டு வரி கிரெடிட்டாக அனுமதிக்கப்படுகிறது.

இப்போது சூப்பர் கார்ஸ் பிரைவேட் லிமிட்டெட்டுக்கு, சென்வேட் ஆனது ஒரு சிஜிஎஸ்டி கிரெடிட் ஆக இருக்கும். இதை பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆணையில் உள்ள பொறுப்புகளை செட்-ஆஃப் செய்யப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நிகழ்வு 2: முதலீட்டுச் சரக்குகள் மீது கிடைக்கப்பெறாத சென்வேட் கிரெடிட் மற்றும் உள்ளீட்டு வேட்

தற்போது, மத்திய கலால் வரியின் கீழ், சென்வேட் கிரெடிட் ஆனது தற்போதைய வருடத்தில் 50% வரை கிடைக்கப்பெற வேண்டும், மேலும் மீதியுள்ளவை அடுத்த ஆண்டில் கிடைக்கப்பெற வேண்டும். அதேபோல், முதலீட்டுச் சரக்குகளை வாங்கும்போது செலுத்தப்படும் வேட் வரி ஆனது உடனடியாக உள்ளீட்டு வேட் ஆக முழுமையாக கிடைக்காது. மாநில வேட் சட்டங்கள் மற்றும் வாங்கப்பட்ட முதலீட்டுச் சரக்குகளின் வகையைப் பொறுத்து, உள்ளீட்டு வேட் இவ்வாறு கிடைக்கலாம்,

  • நான்கு நிதியாண்டுகளில் தவணைகளாக
  • வர்த்தரீதியான தயாரிப்பை தொடங்கி, செயல்பட்ட பிறகு கிரெடிட்டாக.

இந்த முதலீட்டுச் சரக்குகள் மீது சென்வேட் கிரெடிட் கிடைப்பதற்கான நடைமுறையிலுள்ள வரம்பின் காரணமாக, ஜிஸ்டிக்கு மாறும் தேதியில் கொஞ்சம் கிடைக்கப்பெறாத சென்வேட் மற்றும் உள்ளீட்டு வேட் இருக்கக்கூடும்.

நன்றாக புரிந்துகொள்ள ஒரு எடுத்துக்காட்டு மூலம் விவாதிப்போம்

சூப்பர் கார்ஸ் பிரைவேட் லிமிட்டெட் 1 பிப்ரவரி, 2017 அன்று இயந்திரங்கள் வாங்கியுள்ளது. அந்த பரிவர்த்தனையின் விவரங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன:

பொருட்கள்தொகை (ரூ)
இயந்திரங்கள்1,00,000
ஆயத்தீர்வை@12.5%12,500
வேட் 14.5%16,313
மொத்தம்1,28,813

தற்போதைய சென்வேட் சட்ட வாசகங்களின்படி, சூப்பர் கார்ஸ் பிரைவேட் லிமிட்டெட்டுக்கு, சென்வேட் ஆனது தற்போதைய வருடத்தில் 50% வரையும், மேலும் மீதியுள்ளவை அடுத்த ஆண்டிலும் கிடைக்கப்பெற வேண்டும். கர்நாடகாவின் வேட் முன்னேற்பாடுகளின்படி, உள்ளீட்டு வேட் கிரெடிட் ஆனது வர்த்தகரீதியான தயாரிப்பை தொடங்கிய பிறகு மட்டுமே கிடைக்கும். வர்த்தகரீதியான தயாரிப்பு ஜூன் 2017 மாதத்தில் தொடங்குவதாக கருத்தில் எடுத்துக்கொள்வோம்..
நிகழ்வை பரிசீலனை செய்யும்போது – சூப்பர் கார்ஸ் பிரைவேட் லிமிட்டெடுக்கு இவை கிடைக்கும்

  • 50% சென்வேட் அதாவது தற்போதைய வருடத்தில் (2016-17) ரூ. 6,250.
  • ரூ. 6,250 மதிப்புள்ள மீதி சென்வேட் அடுத்த ஆண்டு (2017-18 கிடைக்கும்
  • வர்த்தகரீதியான தயாரிப்பை தொடங்கிய பிறகு உள்ளீட்டு வேட் கிரெடிட் 2017-18-ல் கிடைக்கும்

ஜிஎஸ்டிக்கு மாறும்போது சூப்பர் கார்ஸ் லிமிட்டெட் ரூ. 6,250 மதிப்புள்ள இருப்பில் இல்லாத சென்வேட் மற்றும் உள்ளீட்டு வேட் கிரெடிட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அனுமதிக்கப்படுமா?

ஆம், இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், முதலீட்டுச் சரக்குகளின் மீது கிடைக்கப்பெறாத சென்வேட் கிரெடிட்டை முன்னோக்கி கொண்டு செல்ல சூப்பர் கார்ஸ் லிமிட்டெட் அனுமதிக்கப்படும்:

  • தற்போதைய சட்ட விதியின்படி, சென்வேட் மற்றும் உள்ளீட்டு வேட் ஆகியவை உள்ளீட்டு வரி கிரெடிட்டாக அனுமதிக்கப்படும்.
  • இது ஜிஎஸ்டியில் உள்ளீட்டு வரி வரவை அனுமதிக்கப்படக்கூடியதாகும்.

சூப்பர் கார்ஸ் பிரைவேட் லிமிட்டெட், எல்லா நிபந்தனைகளையும் பூர்த்தி செய்கின்றது, மேலும் அவர்கள் சென்வேட் மற்றும் உள்ளீட்டு வேட் வரவை முன்னோக்கி கொண்டு செல்ல தகுதியானவர்கள் ஆவார்கள்.

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

33,076 total views, 1 views today

Yarab A

Author: Yarab A

Yarab is associated with Tally since 2012. In his 7+ years of experience, he has built his expertise in the field of Accounting, Inventory, Compliance and software product for the diverse industry segment. Being a member of ‘Centre of Excellence’ team, he has conducted several knowledge sharing sessions on GST and has written 200+ blogs and articles on GST, UAE VAT, Saudi VAT, Bahrain VAT, iTax in Kenya and Business efficiency.