இந்த வலைப்பதிவில், நாம் ஜிஎஸ்டிஆர் 3பி படிவம் மற்றும் ஜிஎஸ்டீஆர் 3பி படிவத்தை நிரப்பும் செயல்முறையை எளிதாக்க டேலியின் ஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள மென்பொருள் வழங்கும் தீர்வு ஆகியவை பற்றி தெரிந்து கொள்ள
போகின்றோம்.

உள்ளடங்கிய தலைப்புகள்

ஜிஎஸ்டீஆர் 3பி படிவத்தின் அறிமுகம்
ஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6 ஆனது படிவம் ஜிஎஸ்டீஆர் 3பி-க்கான முன்னேற்பாட்டைக் கொண்டுள்ளதா?
ஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள டேலி.ஈஆர்பீ 9 வெளியீடுe 6 ஆனது சமீபத்திய வழங்கலுக்கு நான் புதுப்பிக்காவிட்டால் என்ன ஆகும்? ஜிஎஸ்டீஆர் 3பி படிவத்தை அப்போதும் என்னால் நிரப்ப முடியுமா?
டேலி.ஈஆர்பீ 9-ல் ஜிஎஸ்டீஆர்-3பி படிவம ()

ஜிஎஸ்டீஆர் 3பி படிவத்தின் அறிமுகம்

இப்போது, அரசாங்கமானது ஜிஎஸ்டீஆர் 1 மற்றும் ஜிஎஸ்டீஆர் 2 காலக்கெடுவைத் தளர்த்தியுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். முதல் ஜிஎஸ்டீஆர் 1 பதிவேற்றம் 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில், 2017, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்காக நடைபெறும் மேலும் மீதமுள்ள செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள் அதன் பின் நடைபெறும்.

இருப்பினும், அந்த நேரம் வரை ஜிஎஸ்டியின் சேகரிப்பு மற்றும் பணம் செலுத்தப்பட வேண்டியதில்லை என்று அர்த்தமில்லை. ஜிஎஸ்டியின் கீழ் பதிவுசெய்துள்ள வரி செலுத்துவோர், 2017 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்காக, ஜிஎஸ்டீஆர்-3பி என்றழைக்கப்படும் எளிமையான படிவத்தில், தங்களின் வெளிநோக்கிய மற்றும் உள்நோக்கிய வழங்கல்களின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், வருவாய் படிவம் ஒன்றுக்கான ஜிஎஸ்டிக்கான பணத்தை செலுத்த வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

மேலும் வாசிக்க: ஜிஎஸ்டீஆர்-3பி படிவத்தை பூர்த்தி செய்வது எப்படி

ஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6 ஆனது படிவம் ஜிஎஸ்டீஆர் 3பி-க்கான முன்னேற்பாட்டைக் கொண்டுள்ளதா?

நல்ல செய்தி என்னவெனில் ஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6 ஆனது ஜிஎஸ்டீஆர் 3பி படிவத்தை ஆதரிக்கும் ஒரு சிறப்பு வெளியீடு ஆகும். இந்த வெளியீடு 2017 ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
புதுப்பிப்பு: டேலி.ஈஆர்பீ 9 ஆனது இப்பொழுது ஜிஎஸ்டீஆர்-3பி உடன் தயாராக உள்ளது. இந்த வெளியீட்டைப் பெற, நீங்கள் இப்போது அதை பதிவிறக்கலாம் அல்லது டேலி.ஈஆர்பீ 9-ன் தகவல் பகுதியில் உள்ள பதிப்பு மற்றும் புதுப்பிப்புகள் பிரிவில் கிளிக் செய்யலாம்.

எங்கள் வாடிக்கையாளர்களுக்காக, நாங்கள் ஒரு வேர்ட் (Word) டாகுமெண்டை உருவாக்கும், ஜிஎஸ்டீஆர் 3பி படிவத்தை அச்சிடுவதற்கான வசதியை வழங்க திட்டமிட்டுள்ளோம். ஆவணம் ஜிஎஸ்டிஎன் போர்ட்டலில் தேவையாக இருப்பதால், ஜிஎஸ்டிஎன் போர்ட்டில் உள்ள விவரங்களை நிரப்ப பயனருக்கு வசதியாக இருக்கும் வகையில், அந்த ஆவணங்கள் ஒரே விதமான பகுதிகளைக் கொண்டிருக்கும். இது ஜிஎஸ்டீஆர்என் படிவத்திற்கு தேவைப்படுவதற்கேற்ப, 20 ஆகஸ்டுக்குள், போர்ட்டலில், ஜிஎஸ்டீஆர் 3பி படிவத்தைப் பார்க்கவும், அதை மறுபரிசீலனை செய்யவும், பின்னர் மதிப்புகளை நிரப்பவும் உங்களுக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளிக்கும்.

படிவம் ஜிஎஸ்டீஆர் 3பி ஐ நிரப்பவும், தாக்கல் செய்யவும் ஒரு எக்செல் (Excel) டெம்ப்ளேட்டுடன் ஒரு ஆஃப்லைன் வசதியை ஜிஎஸ்டிஎன் வழங்கலாம். அவ்வாறு செய்தால், அதற்கான ஆதரவை வழங்குவோம்.

இன்று வரை, 2017 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்காக படிவம் தாக்கல் செய்யப்படுவதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளதால், செப்டம்பர் 2017 மாதத்திற்குள், ஜிஎஸ்டீஆர்1 பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் மேலும் ஜிஎஸ்டீஆர்2 இல் உள்ளவை விலைவிவரப்பட்டியலுடன் பொருந்தும் படி இருக்க வேண்டும்.

இருப்பினும், மிக முக்கியமானது என்னவென்றால், ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2017-க்காக பதிவு செய்யப்படும் உங்கள் படிவம் ஜிஎஸ்டீஆர் 3பி ஆனது, 2017 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்காக ஜிஎஸ்டிஎன் மூலம் உருவாக்கப்பட்ட ஜிஎஸ்டீஆர்-3 உடன் பொருந்தியிருக்க வேண்டும்.

ஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள டேலி.ஈஆர்பீ வெளியீட்டில் இருந்து இது செய்யப்பட்டால், ஜிஎஸ்டீஆர்-3 உடன் ஜிஎஸ்டீஆர் 3பி படிவத்தை பொருந்தியிருக்கச் செய்வது எளிதாகும், ஏனெனில் தரவின் மூலம் பொதுவானது ஆகும். இல்லையென்றால், ஜிஎஸ்டீஆர் 1 மற்றும் 2 ஐ சமர்ப்பிக்கும் முறையை பூர்த்தி செய்யும் போது, ஜிஎஸ்டீஆர் 3 உருவாக்கப்பட்டவும், அதில் ஏதேனும் பொருத்தமின்மை இருந்தால், வரி செலுத்துபவரால் கூடுதல் வரி செலுத்தப்பட வேண்டும். அல்லது பணத்தை திரும்ப பெறுவதாக இருந்தால், இது ஐடீசியாக கிடைக்கும், இது எதிர்கால பொறுப்புடைக்கு எதிராக மாற்றியமைக்கக் கூடியதாக கோரப்படலாம்.

டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6.0.3-ல் ஜிஎஸ்டீஆர்-3பி பற்றி மேலும் அறிய, தயவுசெய்து டேலிஹெல்ப்பை பார்வையிடவும்.

ஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள டேலி.ஈஆர்பீ 9 வெளியீடுe 6 ஆனது சமீபத்திய வழங்கலுக்கு நான் புதுப்பிக்காவிட்டால் என்ன ஆகும்? ஜிஎஸ்டீஆர் 3பி படிவத்தை அப்போதும் என்னால் நிரப்ப முடியுமா?

ஜிஎஸ்டி-தயாராக டேலி.ஈஆர்பீ 9 –ன் சமீபத்திய வழங்கல் கிடைத்தவுடன் விரைவில் அதற்கு மாறுமாறு நாங்கள் பரிந்துரைக்கின்றோம். ஒரே அறிக்கையிலிருந்து படிவம் ஜிஎஸ்டீஆர் 3பி-ஐ தாக்கல் செய்வதற்கு தேவையான அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்வதை இது உறுதி செய்யும். இருப்பினும், அநேக காரணங்கள் மற்றும் சார்புநிலைகள் இருக்கலாம், இதனால் நீங்கள் உடனடியாக சமீபத்திய வழங்கலுக்கு மாற முடியாமல் போகலாம். அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. உங்கள் படிவம் ஜிஎஸ்டீஆர் 3பி-ஐ தாக்கல் செய்ய தேவைப்படும் தரவுகள் டேலி.ஈஆர்பீ 9-லேயே கிடைக்கின்றன.

நீங்கள் டேலி.ஈஆர்பீ 9 இன் குறைந்த வெளியீட்டைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், ஜிஎஸ்ஆர் 3பி படிவத்தை சமர்ப்பிக்கப் போகிறீர்கள் என்றால், அனைத்து பொருத்தமான தகவல்களும் முந்தைய வெளியீட்டில் வழங்கப்பட்டுள்ள ஜிஎஸ்டீஆர் 1 மற்றும் ஜிஎஸ்டீஆர் 2 இல் கிடைக்கும்.

• சாதாரணமாக திறந்த ஜிஎஸ்டீஆர் 1 / ஜிஎஸ்டீஆர்2 அறிக்கை மற்றும் V: Default View என்பதை கிளிக் செய்யவும்.

• வகைப்படுத்தல் வாரியான தகவல்களைப் பெற F1: Detailed என்பதை கிளிக் செய்யவும்.

மாநில வாரியான அல்லது விலைவிவரப் பட்டியல் வாரியான போன்ற கூடுதல் தகவல்கள் உங்களுக்கு தேவைப்பட்டால், அந்தந்த வகைப்படுத்தலில் Enter என்பதை அழுத்தவும்.

அனைத்து விவரங்கள், பல்வேறு அட்டவணைகள் முழுவதும் பரவி இருந்தாலும், அவை உங்கள் ஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள மென்பொருள் டேலி.ஈஆர்பீ 9-க்குள்ளாகவே கிடைக்கும்.

இதைப் பற்றி கூடுதல் விவரங்கள் விரைவில் help.tallysolutions.com-ல் கிடைக்கும்.

டேலி.ஈஆர்பீ 9-ல் ஜிஎஸ்டீஆர்-3பி

முடிவுரை

நாங்கள் உங்களுடன் ஜிஎஸ்டியின் பயணத்தில் உடன் வந்து, டேலி.ஈஆர்பீ 9 ஆனது ஒவ்வொரு படியிலும் உங்கள் அனைத்து ஜிஎஸ்டி இணக்கத் தேவைகளை ஆதரிப்பதை உறுதி செய்வோம் மேலும் நாங்கள் அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்படும் சமீபத்திய மேம்பாடுகளை உடனுக்குடன் பதிவு செய்வோம்.

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

282,773 total views, 104 views today

Avatar

Author: Shailesh Bhatt