இந்தியா முழுவதும் வணிகங்கள் முதன் முறையாக ஜிஎஸ்ஆர் 1-ஐ தாக்கல் செய்யும் நாள் மிக அதிக தொலைவில் இல்லை (செப்டம்பர் 5, 2017). இந்த வலைப்பதிவில், ஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6 ஐப் பயன்படுத்தி ஜிஎஸ்டிஆர்-1 படிவத்தை எவ்வாறு தாக்கல் செய்வது என்பதை நாம் விவாதிப்போம்.

ஜிஎஸ்டி-தயாராக உள்ள டேலி.ஈஆர்பீ 9 வெளியீட்டு 6.1 முன்னோட்ட வெளியீடு இப்போது கிடைக்கின்றது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த வெளியீட்டைப் பயன்படுத்தி, ஜிஎஸ்டி துறையின் தேவைக்கேற்ப படிவம் ஜிஎஸ்டிஆர்-1 ஐ நீங்கள் உருவாக்க முடியும். முன்னோட்ட வெளியீட்டை முயற்சிக்க இங்கே கிளிக் செய்யவும்.

உள்ளடக்கப்பட்ட தலைப்புகள்

    1.
  1. ஜிஎஸ்டிஆர்-1 படிவத்தின் அறிமுகம்
  2. ஜிஎஸ்டியை செயல்படுத்துபவர் எங்கள் வருமான விவரங்களை தாக்கல் செய்கிறார், நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
  3. நாங்கள் சொந்த வருமான விவரங்களை தாக்கல் செய்வதை பார்த்துக்கொள்கிறோம், நாம் எப்படி மேற்கொண்டு செயல்படுவது?
  4. நாங்கள் ஜிஎஸ்டியை செயல்படுத்துபவர் (சிஏ, எஸ்டீபீ அல்லது அக்கவுண்டெண்ட்கள்) ஆவோம், நாங்கள் ஜிஎஸ்டிஆர் 1-ஐ தாக்கல் செய்வதில் நாங்கள் எப்படி செயல்பட வேண்டும்?
  5. ஜிஎஸ்டிஆர்-1ஐ தாக்கல் செய்வதற்கான ஆஃப்லைன் பயன்பாட்டை நாங்கள் எங்கேயிருந்து பெறலாம்?

ஜிஎஸ்டிஆர்-1 படிவத்தின் அறிமுகம்

படிவம் ஜிஎஸ்டிஆர்-1 என்பது வணிகமானது அதன் வெளிநோக்கிய வழங்கல்களின் விவரங்களை அளிக்க வேண்டியஒரு படிவம் ஆகும். வெளிநோக்கிய வழங்கல் என்பது மற்ற வியாபாரங்களுக்கான விற்பனை, நுகர்வோர் விற்பனை, ஏற்றுமதிகள், வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கும் முன்கூட்டிய ரசீதுகள், மற்றும் பலவற்றை உள்ளடக்கிய அனைத்து வழங்கல்களையும் குறிக்கின்றது.
பல அட்டவணைகள் படிவத்தில் உள்ளன, ஒவ்வொரு அட்டவணையும் வணிகங்கள் வெவ்வேறு வடிவங்களில் விவரங்களை அளிக்க வேண்டும், உதாரணமாக,

a) வாங்குபவரின் விவரங்களுடன் “பிற பதிவுசெய்த வணிகத்திற்கு செய்யப்பட்ட விற்பனைகள் (B2B விலைவிவரப் பட்டியல்கள்) ” என்பதன் ஒவ்வொரு ரசீதையும் வணிகங்கள் வழங்க வேண்டும்.
b) “சிறிய அளவிலான நுகர்வோர்களிடம் செய்யப்பட்ட விற்பனைகள் (B2CS விலைவிவரப் பட்டியல்கள்) ” என்பதை ஒவ்வொரு ரசீதாக அல்லாமல், ஒரு சுருக்கமாக வழங்க வேண்டும்.
c) நுகர்வோர் விவரங்களுடன் “பெரிய அளவிலான நுகர்வோர்களுக்கு செய்யப்பட்ட விற்பனைகள் (B2CL விலைவிவரப் பட்டியல்கள்)” என்பதன் ஒவ்வொரு ரசீதையும் வழங்க வேண்டும்.

எங்கள் முந்தைய வலைப்பதிவில், நாங்கள் ஜிஎஸ்டிஆர்-1-ன் ஒரு கண்ணோட்டம் மற்றும் புகாரை தாக்கல் செய்வதை உறுதிசெய்வதற்கு தேவையான விவரங்களை வழங்க முயற்சித்துள்ளோம். அதை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.

File the most accurate GST Returns using Tally.ERP 9

ஜிஎஸ்டியை செயல்படுத்துபவர் எங்கள் வருமான விவரங்களை தாக்கல் செய்கிறார், நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் உள்ள பெரும்பாலான வணிகங்கள், தங்கள் வரி வருமானங்களில் உதவி பெற ஜிஎஸ்டியை செயல்படுத்துபவர்களையே சார்ந்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம். ஆனால் எதிர்பார்ப்பு அதே அளவில்தான் தொடர்கின்றது.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஜிஎஸ்டி வருமான விவரங்களை தாக்கல் செய்யவும் புகாரை செய்யவும் உங்களுக்கு உதவும் அனைத்து தகுந்த தகவல்களையும் உங்களுக்கு வழங்க, ஜிஎஸ்டியை செயல்படுத்துபவர்கள் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் மென்பொருள் இரண்டின் உதவியே உங்கள் வணிகங்களுக்கு கண்டிப்பாக தேவைப்படும்.

உங்களின் வேலை செய்யும் முறையை அடிப்படையாகக் கொண்ட ஒன்றை நீங்கள் கடைபிடிக்கலாம்:

a) உங்கள் நிறுவனத்தின் தரவை ஒரு காப்புப் பிரதி எடுத்து அதை உங்கள் ஜிஎஸ்டியை செயல்படுத்துபவரிடம் பகிர்ந்து கொள்ளவும். ஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள டேலி.ஈஆர்பீ 9-ஐப் பயன்படுத்தி உங்கள் தரவை எப்படி காப்புப் பிரதி எடுக்க வேண்டும் என்பது பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
b) நீங்கள் படிவம் ஜிஎஸ்டிஆர்-1 அறிக்கைக்கு சென்று, முழுமையடையாத / பொருந்தாத தகவல்கள் தோன்றும் வவுச்சர்களில் திருத்தங்களை செய்து, அதை MS Excel டெம்ப்ளேட்டுக்கு ஏற்றுமதி செய்யலாம், இவற்றை பின்னர் உங்கள் ஜிஎஸ்டியை செயல்படுத்துபவருடன் பகிர்ந்து கொள்ளலாம். டேலி.ஈஆர்பீ 9-லிருந்து படிவம் ஜிஎஸ்டிஆர்-1 உருவாக்குவது பற்றி மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

நாங்கள் சொந்த வருமான விவரங்களை தாக்கல் செய்வதை பார்த்துக்கொள்கிறோம், நாம் எப்படி மேற்கொண்டு செயல்படுவது?

தங்கள் ஜிஎஸ்டியை செயல்படுத்துபவர்களின் வேண்டுகோளின்படி தங்களே ஜிஎஸ்டிஆர்-1 ஐ தாக்கல் செய்ய விரும்பும் வணிகங்களும் உள்ளன. அத்தகைய தொழில்களுக்கு, அவர்கள் பயன்படுத்தும் ஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள மென்பொருள்கள், ஜிஎஸ்டிஆர்-1 ஐ உருவாக்க அவர்களுக்கு அனுமதிக்க வேண்டும்.

ஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள டேலி.ஈஆர்பீ 9 ஆனது தயாரிப்புக்குள்ளேயே ஜிஎஸ்டிஆர்-1 ஐ உருவாக்க அனுமதிக்கின்றது. நீங்கள் படிவம் ஜிஎஸ்டிஆர்-1 அறிக்கைக்கு சென்று, முழுமையடையாத / பொருந்தாத தகவல்கள் தோன்றும் வவுச்சர்களில் திருத்தங்களை செய்து, அதை MS Excel டெம்ப்ளேட்டுக்கு ஏற்றுமதி செய்யலாம். இது ஜிஎஸ்டிஎன் ஆஃப்லைன் டூலை பயன்படுத்தி சரிபார்க்கப்பட்டு, ஜிஎஸ்டிஎன் போர்ட்டில் பதிவேற்றப்படலாம். டேலி.ஈஆர்பீ 9-லிருந்து படிவம் ஜிஎஸ்டிஆர்-1ஐ உருவாக்குவது பற்றி மேலும் விவரங்களுக்கு இந்த இடத்தை பார்க்கவும்.

நாங்கள் ஜிஎஸ்டியை செயல்படுத்துபவர் (சிஏ, எஸ்டீபீ அல்லது அக்கவுண்டெண்ட்கள்) ஆவோம், நாங்கள் ஜிஎஸ்டிஆர் 1-ஐ தாக்கல் செய்வதில் நாங்கள் எப்படி செயல்பட வேண்டும்?

நீங்கள் ஒரு ஜிஎஸ்டியை செயல்படுத்துபவராக இருந்தால். உங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள டேலி.ஈஆர்பீ 9 ஐப் பயன்படுத்தி நீங்கள் புத்தகங்களை டிஜிட்டைஸ் செய்வதன் மூலம் அந்தத் தரவுகளைப் பயன்படுத்தி ஜிஎஸ்டி தாக்கல் செய்யப்படும். ஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள டேலி.ஈஆர்பீ 9 ஆனது தயாரிப்புக்குள்ளேயே ஜிஎஸ்டிஆர்-1 ஐ உருவாக்க அனுமதிக்கின்றது. நீங்கள் படிவம் ஜிஎஸ்டிஆர்-1 அறிக்கைக்கு சென்று, முழுமையடையாத / பொருந்தாத தகவல்கள் தோன்றும் வவுச்சர்களில் திருத்தங்களை செய்து, அதை MS Excel டெம்ப்ளேட்டுக்கு ஏற்றுமதி செய்யலாம். இது ஜிஎஸ்டிஎன் ஆஃப்லைன் டூலை பயன்படுத்தி சரிபார்க்கப்பட்டு, ஜிஎஸ்டிஎன் போர்ட்டில் பதிவேற்றப்படலாம். டேலி.ஈஆர்பீ 9-லிருந்து படிவம் ஜிஎஸ்டிஆர்-1ஐ உருவாக்குவது பற்றி மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

மீதமுள்ள வாடிக்கையாளர்களுக்காக, நீங்கள் பின்வரும் விதத்தில் தரவைப் பெறலாம்:
1) ஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள டேலி.ஈஆர்பீ 9-லிருந்து தரவு காப்புப் பிரதியை எடுத்தல்.
2) ஜிஎஸ்டிஎன்-க்கு தேவைப்படும்படியான ஜிஎஸ்டிஆர்-1 எக்சல் டெம்ப்ளேட்.
3) வேறு எந்தவொரு மென்பொருளிலிருந்தும் தரவைப் பெறுதல் (இந்த வலைப்பதிவில் உள்ளடக்கப்படவில்லை).

ஜிஎஸ்டி-தயாராக டேலி.ஈஆர்பீ 9 இலிருந்து தரவு காப்புப் பிரதியை நீங்கள் பெற்றிருந்தால், நீங்கள் தரவுக் காப்பை மீண்டும் மீட்டமைக்கலாம் மேலும் முன்பு விவாதித்தபடி ஜிஎஸ்டிஆர்-1ஐ உருவாக்கலாம். காப்புப் பிரதி எடுப்பது எப்படி பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
ஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள டேலி.ஈஆர்பீ 9 உடன், நீங்கள் தயாரிப்புக்குள்ளேயே ஜிஎஸ்டிஆர்-1 ஐ உருவாக்க முடியும். நீங்கள் படிவம் ஜிஎஸ்டிஆர்-1 அறிக்கைக்கு சென்று, முழுமையடையாத / பொருந்தாத தகவல்கள் தோன்றும் வவுச்சர்களில் திருத்தங்களை செய்து, அதை MS Excel டெம்ப்ளேட்டுக்கு ஏற்றுமதி செய்யலாம். இது ஜிஎஸ்டிஎன் ஆஃப்லைன் டூலை பயன்படுத்தி சரிபார்க்கப்பட்டு, ஜிஎஸ்டிஎன் போர்ட்டில் பதிவேற்றப்படலாம். டேலி.ஈஆர்பீ 9-லிருந்து படிவம் ஜிஎஸ்டிஆர்-1ஐ உருவாக்குவது பற்றி மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6.1-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டிஆர்-1ஐ தாக்கல் செய்தல் – ஒரு முன்னோட்டம்

ஜிஎஸ்டிஎன்-க்கு தேவைப்படும் படி நீங்கள் ஜிஎஸ்டிஆர்-1 எம்எஸ் எக்சல் (MS Excel) டெம்ப்ளேட்டை பெற்றிருந்தால், நீங்கள் ஆஃப்லைன் டூலில் இறக்குமதி செய்து, JSON கோப்பை உருவாக்கி, அந்த JSON கோப்பை ஜிஎஸ்டிஎன் போர்ட்டில் பதிவேற்றவும்.

ஜிஎஸ்டிஆர்-1ஐ தாக்கல் செய்வதற்கான ஆஃப்லைன் பயன்பாட்டை நாங்கள் எங்கேயிருந்து பெறலாம்?

நீங்கள் ஆஃப்லைன் டூலை இங்கே பதிவிறக்கலாம்.

குறிப்பு: ஜிஎஸ்டி துறையின் பக்கத்தில் உள்ள “கணினி தேவைகள்” பிரிவைப் பார்த்தும் உங்கள் கணினி பரிந்துரைக்கப்பட்ட கணினித் தேவைகளுக்கு பொருந்துவதை உறுதி செய்யவும். கூடுதலாக, ஆஃப்லைன் டூலை நிறுவுவதற்காக வழங்கபட்டுள்ள வழிமுறைகளைப் படிக்கவும்.
சந்தோஷமாக தாக்கல் செய்யுங்கள் மற்றும் இன்னும் பலவற்றுக்காக காத்திருங்கள்!

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

260,607 total views, 17 views today

Avatar

Author: Shailesh Bhatt