2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதிக்குள் ஜிஎஸ்டிஆ-3Bஐ தாக்கல் செய்வதன் மூலம், காலக்கெடுவை பூர்த்தி செய்வதற்காக வணிகங்கள் முழு மூச்சில் செயல்பட்டு வருகின்றன. எங்கள் முந்தைய வலைப்பதிவான ‘ஜிஎஸ்டிஆர்-3B படிவத்தை எப்படி தாக்கல் செய்வது’என்பதில் கூறியிருந்தபடி, ஜிஎஸ்டிஆர்-3B படிவம் ஜூலை மற்றும் ஆகஸ்ட், 2017 முதலிய முதல் 2 மாதங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய ஒரு இடைக்கால வருமான விவரமாகும். எனினும், இது வணிகங்கள் ஜிஎஸ்டிஆர்-1, படிவம் ஜிஎஸ்டிஆர்-2 மற்றும் படிவம் ஜிஎஸ்டிஆர்-3 ஆகியவற்றை தாக்கல் செய்ய தேவையில்லை என குறிப்பிடவில்லை. ஜிஎஸ்டிஆர்-1, ஜிஎஸ்டிஆர்-2 மற்றும் ஜிஎஸ்டிஆர்-3 ஆகியவற்றைக் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மட்டுமே நீட்டிக்கப்பட்டுள்ளது, மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள திருத்தப்பட்ட தேதிகளின்படி, இந்த வருமான விவரங்கள் வணிகங்கள் தாக்கல் செய்தே ஆக வேண்டும்:

ஜிஎஸ்டிஆர்-1, ஜிஎஸ்டிஆர்-2 மற்றும் ஜிஎஸ்டிஆர்-3 ஆகியவற்றைக் தாக்கல் செய்வதற்கான இறுதித் தேதி

ஜிஎஸ்டி வருமான விவரங்களை தாக்கல் செய்வதற்கான இறுதித் தேதிகள்
மாதம்ஜிஎஸ்டிஆர்-1ஜிஎஸ்டிஆர்-2ஜிஎஸ்டிஆர்-3
ஜூலை, 20171-5 செப்டம்பர், 20176-10 செப்டம்பர், 201711-15 செப்டம்பர், 2017

மேலே உள்ள தேதிகள் 2017ஆம் ஆண்டின் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான வருமானங்களுக்கானது மட்டுமே. அடுத்துவரும் மாதத்தின் (செப்டம்பர் முதல்) வருமான விவரங்களின் தேதிகள் வருமான விவர முன்னேற்பாடுகளின் படி இருக்கும், அதாவது அடுத்துவரும் மாதத்தின் 10ஆம் தேதிக்குள் ஜிஎஸ்டிஆர்-1, 15ஆம் தேதிக்குள் ஜிஎஸ்டிஆர்-2 மற்றும் 20ஆம் தேதிக்குள் ஜிஎஸ்டிஆர்-3 ஆகியவற்றின் படியே இருக்கும்.

ஜிஎஸ்டிஆர்-1 தாக்கல் செய்வதற்கு முன்கூட்டிய தயாராக இருத்தல் மற்றும் அதை எளிதாக்குவதன் படி, ஜிஎஸ்டிஆர்-1-ன் உருவாக்கம் மற்றும் சேமிப்பிற்கான தேர்வு, 2017ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதியிலிருந்து ஜிஎஸ்டி போர்ட்டலில் கிடைக்கும். அதே போல், சரக்குகள் அல்லது சேவைகளை பெறுபவராக, உங்கள் வழங்குநர்கள் பதிவேற்றிய தரவை பார்வையிடுவதற்கான தேர்வு படிவம் ஜிஎஸ்டிஆர்-2Aல் கிடைக்கிறது. இந்த வலைப்பதிவில், எப்படி ஜிஎஸ்டிஆர்-1ஐ தாக்கல் செய்வது என்பது பற்றி நாம் விவாதிப்போம். செப்டம்பரிலிருந்து, ஜிஎஸ்டிஆர்- ஐ பதிவு செய்ய வேண்டிய இறுதித் தேதி 2017ஆம் ஆண்டு செப்டம்பர் ஆகஸ்ட் 20ஆம் தேதி ஆகும்.

ஜிஎஸ்டிஆர்-1ஐ எப்படி பதிவு செய்வது என்பதைப் பற்றி விவாதிக்கும் முன், படிவம் ஜிஎஸ்டிஆர்-1 என்பது என்ன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஜிஎஸ்டிஆர்-1 என்றால் என்ன

ஜிஎஸ்டிஆர்-1 என்ற படிவம், அந்த மாதத்தின் போது செய்யப்பட்ட அனைத்து வெளிநோக்கிய வழங்கல்களையும் ஒரு வழக்கமான டீலர் குறித்துக்கொள்ள வேண்டியிருக்கும் ஒரு அறிக்கை ஆகும். பெரும்பாலும், பதிவு செய்யப்பட்ட வணிகங்களுக்கு (B2B) செய்யப்படும் அனைத்து வெளிநோக்கிய வழங்கல்களும் விலைவிவரப் பட்டியல் அளவில் குறிப்பிடப்பட வேண்டும் மேலும் பதிவு செய்யப்படாத வணிகத்திற்கோ அல்லது இறுதி நுகர்வோருக்கோ செய்யப்படும் விற்பனைகள் விலை அளவில் குறிப்பிடப்பட வேண்டும் வாடிக்கையாளர்களிடமோ வழங்கப்படும் வழங்கல்கள், வீதம் வாரியாக குறிப்பிடப்பட வேண்டும். இருப்பினும், குறிப்பிட்ட விதிவிலக்கான சூழ்நிலையில், B2C பரிவர்த்தனைகள் விலைவிவரப் பட்டியல் மட்டத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.

வெவ்வேறு வகை வடிவங்களின் பயன்பாட்டினை அறிய, தயவுசெய்து ஜிஎஸ்டியின் கீழ் வருமான வகைகள் யாவை?என்பதை படிக்கவும்.

File 100% accurate Form GSTR-1 using Tally.ERP 9

ஜிஎஸ்டிஆர்-1ஐ எப்படி பதிவு செய்வது?

ஜிஎஸ்டிஆர்-1 வடிவமைப்பில் 13 அட்டவணைகள் உள்ளன, அதில் வெளிநோக்கிய வழங்கல் விவரங்கள் குறிப்பிடப்படட வேண்டும். ஒவ்வொரு வணிகத்திற்கும் எல்லா அட்டவணைகளும் பொருந்தாது என்பதால், நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. வியாபாரத்தின் தன்மை மற்றும் அந்த மாதத்தின் போது வழங்கப்படும் வழங்கல்களின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், ஜிஎஸ்டிஆர்-1 இன் பொருத்தமான அம்சங்கள் மட்டுமே பொருந்தும், அனைத்தும் அல்ல. ஜிஎஸ்டிஆர்-1ன் பகுதிகளைப் பற்றி விவாதிக்கலாம்.

1. முந்தைய வருடத்தின் ஜிடிஸ்டின் மற்றும் மொத்த ஆண்டு வருமானத்தின் விவரங்கள்.
form gstr1

மேலே உள்ள அட்டவணை 1-ல், நீங்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டிஐஎன்-ஐ குறிப்பிட வேண்டும். ஜிஎஸ்டிஐஎன் அடிப்படையில், அட்டவணை 2(a) மற்றும் 2(b) ஆகியவை பதிவு அல்லது சேர்க்கையின்போது வழங்கப்பட்ட விவரங்களுடன் தானாகவே பெறப்படும். அட்டவணை 3(a)-ல் முந்தைய நிதியாண்டின் மொத்த வருவாயை நீங்கள் குறிப்பிட வேண்டும், மற்றும் 3(b)-ல், கடைசி காலாண்டின் (ஏப்ரல் முதல் ஜூன், 2017 வரை) ஒட்டுமொத்த வருவாய் விவரங்கள் மேனுவலாக குறிப்பிட வேண்டும்.

அடுத்தடுத்த வருவாய்கள், காலாண்டு வருவாய் தகவலில் குறிப்பிட வேண்டியதில்லை மேலும், முந்தைய நிதியாண்டின் மொத்த வருவாய் முதல் வருடத்தில் மட்டுமே வரி செலுத்துவோர் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில், அது தானாக எண்ணப்படும்.

2. பூச்சிய கட்டண வழங்குநர்கள் மற்றும் கருதப்பட்ட ஏற்றுமதிகல் தர்வித்து பதிவுசெய்துள்ள நபர்களுக்கு (யூஐஎன்-தாரர்கள் உள்ளிட்டு) செய்யப்படும் வரிக்குரிய வெளிநோக்கிய வழங்கல்கள்.

taxable-outward-supply

மேலுள்ள அட்டவணையில், விலைவிவரப்பட்டியல் மதிப்பு ரூ. 2,50,000-க்கு அதிகமாக இருக்கும், அனைத்து மாநிலங்களுக்கு இடையிலான B2C வழங்கல்களை (பதிவுசெய்திருக்கான டீலர் அல்லது இறுதி நுகர்வோருக்கு செய்யப்படும் வழங்கல்கள்), நீங்கள் விலைவிவரப் பட்டியல் வாரியாக மற்றும் விலை வாரியாக விவரங்களை பதிவேற்ற வேண்டும். அட்டவணை 4ஐப் போலவே, 5B இல் தனித்தனியாக மின்-வர்த்தக ஆபரேட்டரால் மேற்கொள்ளப்பட்ட வழங்கல்களை குறிப்பிட வேண்டும் மேலும் விலைவிவரப் பட்டியல் மதிப்பு ரூ. 2,50,000-க்கு அதிகமான அனைத்து பிற மாநிலங்களுக்கு இடையிலான வழங்கல்களும் 5A-இல் குறிப்பிடப்பட வேண்டும். இந்த வகையான வழங்கல்கள் B2C லார்ஜ் என குறிப்பிடப்படுகின்றன.

3. விலைவிவரப் பட்டியல் மதிப்பு ரூ. 2.5 லட்சத்திற்கு அதிகமாக இருந்தால் பதிவு செய்யப்படாத நபர்களுக்கு செய்யப்படும் வரிக்குரிய வெளிநோக்கிய மாநிலங்களுக்கு இடையேயான வழங்கல்கள்.

taxable-outward-inter-state-supply
மேலுள்ள அட்டவணையில், விலைவிவரப் பட்டியல் மதிப்பு ரூ. 2,50,000-க்கும் அதிகமான அனைத்து மாநிலங்களுக்கு இடையிலான B2C வழங்கல்களை (பதிவுசெய்திருக்கான டீலர் அல்லது இறுதி நுகர்வோருக்கு செய்யப்படும் வழங்கல்கள்), நீங்கள் விலைவிவரப் பட்டியல் வாரியாக மற்றும் விலை வாரியாக விவரங்களை பதிவேற்ற வேண்டும். அட்டவணை 4ஐப் போலவே, 5B இல் தனித்தனியாக மின்-வர்த்தக ஆபரேட்டரால் மேற்கொள்ளப்பட்ட வழங்கல்களை குறிப்பிட வேண்டும் மற்றும் விலைவிவரப் பட்டியல் மதிப்பு ரூ. 2,50,000-க்கு அதிகமான அனைத்து பிற மாநிலங்களுக்கு இடையிலான வழங்கல்களும் 5A இல் குறிப்பிடப்பட வேண்டும். இந்த வகையான வழங்கல்கள் B2C லார்ஜ் குறிப்பிடப்படுகின்றன.

GSTR-1 filing is easy and accurate with Tally.ERP 9
4. பூச்சிய கட்டண வழங்கல்கள் மற்றும் கருதப்பட்ட ஏற்றுமதிகளின் விவரங்கள்

zero-rated-supply

மேலே உள்ள அட்டவணை 6-ல், இந்தியாவிற்கு வெளியே செய்யப்படும் ஏற்றுமதி தொடர்பான செய்யப்படும் தகவல்கள் 6A-ல் குறிப்பிடப்பட வேண்டும், SEZ யூனிட் அல்லது SEZ வடிவமைப்பாளருக்கான வழங்கல்கள் 6B-ல் குறிப்பிடப்பட வேண்டும். மேலும் கருதப்படும் ஏற்றுமதிகள் 6C-ல் குறிப்பிடப்பட வேண்டும். இந்த வழங்கல்களின் விவரங்கள் விலைவிவரப் பட்டியல் வாரியாகவும் விலை வாரியாகவும் குறிப்பிடப்பட வேண்டும். இந்த விவரங்களை அறிவிப்பதில், பின்வரும் குறிப்புகளை கவனித்தில் கொள்ள வேண்டும்:

  1. ஷிப்பில் (அனுப்புதல்) பில் மற்றும் அதன் தேதி. ஷிப்பிங் பில் விவரங்கள் 13 இலக்க எண்ணாக குறிப்பிடும் போர்ட் குறியீடு (ஆறு இலக்கங்கள்) அதனைத் தொடர்ந்து ஷிப்பிங் பில் மற்றும் அதன் தேதியின் தனிப்பட்ட குறிப்பு எண் உடன் வழங்கப்படும். ஷிப்பிங் பில் விவரங்கள் ஜிஎஸ்டிஆர்-1ஐ தாக்கல் செய்யும் நேரத்தில் கிடைக்கவில்லை என்றால், அது காலியாக விடப்படலாம் மேலும் அடுத்த வரி காலகட்டத்தில் கிடைக்கும் விவரங்கள், குறிப்பிட்டுள்ள விலைவிவரப்பட்டில் தொடர்பான ஏதேனும் திரும்ப் பெறுதல்/கழிவை கோரும் முன்பாக, அட்டவணை 9—ல் ஒரு திருத்தமாக புதுப்பிக்கப்படலாம்.
  1. ஒரு பில் பதிவை உள்ளடக்காமல், SEZ-ஆல், உள்நாட்டு கட்டண பகுதிக்கு (டிடீஏ) செய்யப்பட்ட ஏதேனும் வழங்கல்கள் ஜிஎஸ்டிஆர்-1ல் உள்ள SEZ-ஆல் குறிப்பிட வேண்டியுள்ளது. ஒரு பில் பதிவை உள்ளடக்கும் SEZ-ஆல் செய்யப்பட்ட ஏதேனும் வழங்கல்கள் ஜிஎஸ்டிஆர்-2ல் இறக்குமதிகளாக அதன் ஜிஎஸ்டிஆர்-2ல் டிடீஏ-ஆல் அறிக்கை செய்யப்பட வேண்டும்.
  1. ஏற்றுமதி பரிவர்த்தனைகள் எனில், பெறுநரின் ஜிஎஸ்டிஐஎன் பொருந்தாது, அது காலியாக விடப்பட வேண்டும்.
  1. ஐஜிஎஸ்டி-ன் (பாண்ட்/லெட்டர் ஆஃப் அண்டர்நேக்கிங் (LUT)) பணம் செலுத்துதல் அல்லாத ஏற்றுமதி பரிவர்த்தனைகள், அட்டவணை 6A மற்றும் 6B-ல் வரித் தொகை என்ற தலைப்பில் “0”-ஆக அறிக்கை செய்யப்பட வேண்டும்.
5. அட்டவணை 5-ல் உள்ளடக்கப்பட்ட வழங்கல் தவிர்த்து பதிவுசெய்திருக்காத நபர்களுக்கு செய்யப்படும் வரிக்குரிய வழங்கல்களின் (வரவுக் குறிப்புகள் மற்றும் பற்று குறிப்புகள் ஆகியவற்றின் நிகரம்) விவரங்கள்

taxable-supplies

முந்தைய அட்டவணையில், அதாவது. எண் 5-ல், வரிசெலுத்தும் நபர் ரூ. 2.5 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள விலைவிவரப்பட்டியலை கொண்ட பதிவு செய்யப்படாத நபருக்கு செய்யப்படும் மாநிலங்களுக்கு உள்ளேயான வெளிநோக்கிய வழங்கல்களை (B2C லார்ஜ்) மட்டும் அறிவித்திருந்தார். இந்த அட்டவணையில், அதாவது அட்டவணை 7-ல், நீங்கள் பதிவு செய்யப்படாத நபருக்கு செய்யப்பட்ட மாநிலங்களுக்கு இடையிலான அனைத்து வழங்கல்களையும் நீங்கள் 7A-ல் குறிப்பிட வேண்டும் மேலும் ரூ. 2.5 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள விலைவிவரப்பட்டியலை கொண்ட, பதிவு செய்யப்படாத நபருக்கு செய்யப்பட்ட மாநிலங்களுக்கு இடையிலான அனைத்து பிற வழங்கல்களையும் 7B-ல் குறிப்பிட வேண்டும். அட்டவணை 7A(1)-ல், மின்-வர்த்தக ஆபரேட்டரால் வழங்கப்பட்ட வழங்கல்கள் உட்பட, பதிவு செய்யப்படாத நபர்களுக்கு செய்யப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கு உள்ளேயான வெளிநோக்கிய வழங்கல்களின் ஒன்றிணைந்த விலைவாரியான விவரங்களை நீங்கள் குறிப்பிட வேண்டும். 7A(2)-ல், நீங்கள் 7A(1)-ல் அறிக்கை செய்யப்பட்டுள்ள மொத்த வழங்கல்களிலிருந்து வரி-மூல ஆதாரத்தை ஈர்க்கும் மின்-வர்த்தக ஆபரேட்டர் மூலம் செய்யப்படும் வழங்கல்களின் விவரங்களை நீங்கள் தனித்தனியாக காட்ட வேண்டும்.

அதேபோல், மாநிலங்களுக்கு இடையிலான ரூ. 2.5 லட்சம் வரையான மதிப்புள்ள விலைவிவரப் பட்டியல் வெளிநோக்கிய வழங்கல்கள் மாநில வாரியாக மற்றும் விகிதம் வாரியாக 7B(1)-ல் குறிப்பிடப்பட வேண்டும் . 7B(2)-ல், நீங்கள் 7B(1)-ல் அறிக்கை செய்யப்பட்டுள்ள மொத்த வழங்கல்களிலிருந்து வரி-மூல ஆதாரத்தை ஈர்க்கும் மின்-வர்த்தக ஆபரேட்டர் மூலம் செய்யப்படும் வழங்கல்களின் விவரங்களை நீங்கள் தனித்தனியாக காட்ட வேண்டும்.

தயவு செய்து கவனிக்கவும், மேற்கண்ட அனைத்து மதிப்புகளும் நிகர பற்று குறிப்பு மற்றும் வரவுக் குறிப்பு ஆக இருக்க வேண்டும். மேற்கூறப்பட்ட வழங்கல்கள் சம்பந்தப்பட்ட ஏதேனும் பற்று குறிப்பு அல்லது வரவு குறிப்பு இருந்தால், அத்தகைய மதிப்புகளை சரிசெய்து, நிகர வரி செலுத்துதல் மதிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய வரியை மட்டும் அறிவிப்பதை உறுதி செய்யவும்.

6. கட்டணமிடாத, விலக்கிடப்பட்ட மற்றும் ஜிஎஸ்டி அல்லாத வெளிநோக்கிய வழங்கல்களின் விவரங்கள்

nill-rated

மேலே உள்ள அட்டவணை 8-ல், காலகட்டத்தின்போது செய்யப்பட்ட கட்டணமில்லாத (nil), விலக்கப்பட்ட மற்றும் ஜிஎஸ்டி அல்லாத வெளிநோக்கிய வழங்ககளை குறிப்பிடவேண்டும். இந்த விவரங்கள் மேலே குறிப்பிடப்பட்ட அட்டவணையில் காட்டப்பட்டுள்ளபடி 8A முதல் 8D வரையிலான படிவங்களில் பதிவு செய்யப்பட்ட நபருக்கு செய்யப்பட்ட மாநிலங்களுக்கு உள்ளேயான வழங்கல்கள் மற்றும் பதிவு செய்யப்படாத நபருக்கு செய்யப்பட்ட மாநிலங்களுக்கு இடையிலான வழங்கல்கள் என வகைப்படுத்தப்பட வேண்டும்.

7. அட்டவணை 4, 5 மற்றும் 6-ல் உள்ள முன்கூட்டிய வரிக் காலங்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட ஜிஎஸ்டிஆர்-1க்கான தற்போதையா கால அளவு மற்றும் ஏதேஉம் திருத்தத்திற்காக வழங்கப்பட்ட வரவுக் குறிப்புகள், பற்றுக் குறிப்புகள், திரும்பப் பெறுதல் சீட்டுகள் ஆகியவற்றின் விவரங்கள்.

amendments-taxable-outward-supply

மேலுள்ள அட்டவணையில், ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருக்கும் வழங்கல்களுக்கு எதிராக வழங்கப்பட்ட பற்று குறிப்பு, கடன் குறிப்பு மற்றும் பணத்தை திருப்பிச் செலுத்துதல் (முன்கூட்டியே பெற்றவைகளை திரும்ப செலுத்துதல்) பற்றிய விவரங்களை நீங்கள் குறிப்பிட வேண்டும்:
B2B வழங்கல்கள் அட்டவணை 4-ல் அறிக்கை செய்யப்பட்டுள்ளது,
B2C லார்ஜ் வழங்கல்கள் அட்டவணை 5-ல் அறிக்கை செய்யப்பட்டுள்ளது,
ஏற்றுமதிகள்/SEZ யூனிட் அல்லது SEZ தயாரிப்பாளர்/கருதப்பட்ட ஏற்றுமதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வழங்கல்கள் அட்டவணை 6-ல் அறிக்கை செய்யப்பட்டுள்ளன.
இந்த விவரங்கள் வழங்கப்பட்ட பற்றுக் குறிப்பு அல்லது வரவுக் குறிப்புக்கு எதிராக உண்மையான விலைவிவரப் பட்டியல் எண் உடன் விலை வாரியாக குறிப்பிடப்பட வேண்டும். முதல் மூன்று நெடுவரிசைகளில், நீங்கள் உண்மையான விலைவிவரப் பட்டியலின் விவரங்களையும் அதன் பிறகு வருவாய் காலத்தின்போது வழங்கப்பட்ட பற்றுக் குறிப்பு/வரவுக் குறிப்பு/திரும்பப் பெறுதல் வவுச்சர் ஆகியவற்றின் விலை வாரியான விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.

அட்டவணை 9A-ல், ஷிப்பிங் பில் எண் மற்றும் தேதி உங்கள் முந்தைய வருவாயில் கிடைக்காத காரணத்தால், அறிவிக்கப்படவில்லை எனில், திருத்தங்களாக முந்தைய வருவாயில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி பரிவர்த்தனைகள் தொடர்பான அத்தகைய விவரங்களை வழங்கலாம். ஏற்றுமதி பரிவர்த்தனைகள் தற்போதைய மாதத்துடன் தொடர்புடையாத இருந்தால், ஷிப்பிங் விவரங்கள் அட்டவணை 6-ல் உள்ளிடப்பட வேண்டும்.

அட்டவணை 9B-ல், வருவாய்க் காலத்தின்போது வழங்கப்பட்ட வரவுக் குறிப்பு/பற்று குறிப்பு/பணத்தை திருப்பிச் செலுத்துதல் பற்றிய விலை வாரியான விவரங்களை குறிப்பிட வேண்டும் மேலும் அட்டவணை 9C-ல், முந்தைய வரிக் காலம் தொடர்பான வரவு குறிப்பு/பற்று குறிப்பு/திருப்பிச் செலுத்துதல் மூலம் செய்யப்பட்ட திருத்தங்களின் விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும். மேலும் நியமிக்கப்பட்ட நாளுக்கு முன்னால் வழங்கப்பட்ட விலைவிவரப் பட்டியல் தொடர்பான ஏதேனும் பற்று/வரவுக் குறிப்புகளும் இந்த அட்டவணையில் தெரிவிக்கப்பட வேண்டும்.

8. பதிவு செய்திராத நபருக்கு வழங்கப்பட்ட பற்றுக் குறிப்பு மற்றும் கடன் குறிப்பின் விவரங்கள்

amendments-taxable-outward-supply-unregistered
மேலுள்ள அட்டவணையில், பதிவு செய்யப்படாத நபருக்கு செய்யப்பட்ட மாநிலங்களுக்கு உள்ளேயான வழங்கல்களுக்கு எதிராக வழங்கப்பட்ட பற்றுக் குறிப்பு/வரவுக் குறிப்பின் ஒன்றிணைந்த விலைவாரியான விவாங்கள் மற்றும் முந்தய வருவாய் காலத்தில் பதிவு செய்யப்படாத நபருக்கு செய்யப்பட்ட ரூ. 2.5 லட்சத்திற்கு குறைவான மதிப்புடைய விலைவிவரப் பட்டியலைக் கொண்ட மாநிலங்களுக்கு இடையேயான வழங்களின் விவரங்களையும் நீங்கள் குறிப்பிட வேண்டும். இது முந்தைய வருவாயின் அட்டவணை 7-ல் அறிவிக்கப்பட்ட விவரங்களுக்கான ஒரு திருத்தமாகும். அட்டவணையில் 10A மற்றும் 10B-ல் குறிப்பிட்டுள்ள மதிப்புகள் தவிர்த்து, மின்-வர்த்தக ஆப்பரேட்டரால் செய்யப்பட்ட மாநிலங்களுக்கு உள்ளேயான வழங்கல்களின் விவரங்களை 10A(1)-லும், மாநிலங்களுக்கு உள்ளேயான வழங்கல்களின் விவரங்களை 10B(1)-லும் நீங்கள் தனித்தனியாக குறிப்பிட வேண்டும்.

9. முந்தைய வரிக்காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஜிஎஸ்டிஆர்-1ன் தற்போதைய வரிக் காலகட்டத்தில் அல்லது திருத்தத்தில் பெறப்பட்ட முன்தொகைகள்/சரிசெய்யப்பட்ட முன்தொகைகளின் விவரங்கள்.

consolidated-advance-recieved

மேலே உள்ள அட்டவணையில் 11, தற்போதைய காலகட்டத்தில் பெறப்பட்ட முன்தொகைகள் தொடர்பான ஒன்றிணைந்த மாநில வாரியான மற்றும் விலை-வாரியான விவரங்களை நீங்கள் வழங்க வேண்டும், மேலும் முந்தைய காலத்தில் பெறப்பட்ட ஆனால் தற்போதைய காலத்தில் சரிசெய்யப்பட்ட முன்தொகைகள் பற்றிய விவரங்களையும் குறிப்பிட வேண்டும். அட்டவணையில் 11A-ல், விலைவிவரப் பட்டியல் வெளியிடப்படாதவைகளுக்கான பெறப்பட்ட முன்தொகைகளின் விவரங்களை குறிப்பிட வேண்டும். இந்த விவரங்கள் அட்டவணை 11A(1)-ல் மாநிலங்களுக்கு உள்ளேயான வழங்கல்களாகவும் மேலும் அட்டவணை 11A(2)-ல் மாநிலங்களுக்கு இடையேயான வழங்கல்களாகவும் வகைப்படுத்தப்பட வேண்டும்.

தற்போதைய வரிக் காலத்தில் வழங்கப்பட்ட விலைவிவரப் பட்டியல்களுக்கு எதிராக, முந்தைய வரிக் காலங்களில் வழங்கப்பட்ட மற்றும் அறிக்கை செய்யப்பட்ட முன்தொகைகள் மீதான செலுத்தப்பட்ட வரியின் திருத்தம் தொடபான விவரங்களை நீங்கள் அட்டவணையில் 11B-ல் உள்ளடக்க வேண்டும். 11A ஐப் போலவே, அட்டவணை 11B(1)-ல் மாநிலங்களுக்கு உள்ளேயான வழங்கல்களாகவும் மேலும் அட்டவணை 11B(2)-ல் மாநிலங்களுக்கு இடையேயான வழங்கல்களாகவும் வகைப்படுத்தப்பட வேண்டும்.

முந்தைய வருவாயில் அட்டவணை 11A முதல் 11B வரை உள்ளவற்றில் அறிவிக்கப்பட்ட விவரங்கள் தொடர்பான ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், அவை அட்டவணை 11-ன் பகுதி II-ல் மாற்றங்களை வழங்குவதன் மூலம் திருத்தப்படலாம்.

தயவுசெய்து கவனிக்கவும், பெறப்பட்ட முன்தொகைகளின் அதே அதே வரி காலத்தில் விலைவிவரப் பட்டியல் வெளியிடப்படவில்லை என்றால் மட்டுமே பெறப்பட்ட முன்தொகைகள் தொடர்பான விவரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். முன்தொகை மற்றும் விலைவிவரப் பட்டில் ஒரே மாதத்தில் வெளியிடப்பட்டால், விவரங்கள் அட்டவணை 11-ல் குறிப்பிடப்பட வேண்டியதில்லை.

10. வெளிநோக்கிய வழங்கல்களின் எச்எஸ்என்-வாரியான சுருக்கம்

hsn-summary-outward-supplies

மேலே உள்ள அட்டவணையில், அட்டவணை 12-ல், ஒரு குறிப்பிட்ட HSN குறியீட்டிற்கு எதிராக செயல்படுத்தப்படும் வழங்கல்களின் சுருக்கம் அறிக்கை செய்யப்பட வேண்டும். இது ஆண்டு வருவாய் ரூ. 1.50 கோடி வரை கொண்டுள்ள வரி செலுத்துபவர்களுக்கு விருப்பத்தேர்வாகும். இருப்பினும், வழங்கல்களின் விவரம் கட்டாயமானதாகும்.

ரூ. 1.5 கோடிக்கு அதிகமான ஆனால் ரூ. 5 கோடி வரையுள்ள ஆண்டு வருவாயைக் கொண்டுள்ள வரி செலுத்துபவர்களுக்கான இரண்டு இலக்க அளவிலும், ரூ. 5 கோடிக்கு அதிகமான ஆண்டு வருவாயைக் கொண்டுள்ள வரி செலுத்துவோருக்கு நான்கு இலக்க அளவிலும் HSN குறியீடு அறிக்கை செய்யப்படுவது கட்டாயமானதாகும்.

நான்காவது நெடுவரிசை UQCஆனது யூனிட் அளவீட்டு குறியீட்டை குறிக்கிறது மேலும் பரிந்துரை செய்யப்பட்ட அலகு அளவை (UOM) மட்டுமே போர்டல் ஏற்றுக்கொள்ளும். எனவே, வரி செலுத்துவோர் மூலம் நிர்வகிக்கப்படும் UOM-ஐ கருத்தில் கொள்ளாமல், கீழே பட்டியலிடப்பட்டுள்ள பரிந்துரைக்கப்பட்ட UQC-ஐ பயன்படுத்தி அளவு விவரங்கள் வழங்கப்பட வேண்டும்:

யூக்யூசி-ன் பட்டியல்
BAG-பைகள்CTN-கார்ட்டன்கள்MTS-மெட்ரிக் டன்TGM-பத்து மொத்தம் மொத்தம்
BAL-பேல்DOZ-டஜன்கள்NOS-எண்கள்THD-ஆயிரங்கள்
BDL-பண்டல்கள்DRM-டிரம்கள்PAC-பேக்குகள்TUB-TUBES
BKL-பக்கில்கள் GGK-பெரும் மொத்தம்PCS-துண்டுகள்TUB-குழாய்கள்
BOU- பில்லியன் யூனிட்கள்GMS-கிராம்கள்PRS-ஜோடிகள்UGS-யூஎஸ் காலன்கள்
BOX-பெட்டிGRS-மொத்தம்QTL-குவிண்டால்UNT-யூனிட்கள்
BTL-பாட்டில்கள்GYD-மொத்த கெஜங்கள்ROL-ரோல்கள்YDS-கெஜங்கள்
BUN-பஞ்ச்கள்KGS-கிலோகிராம்கள்SET-செட்கள்OTH-மற்றவை
CAN-கேன்கள்KLR-கிலோலிட்டர்கள்SQF-சதுர அடிகள்
CBM-கன மீட்டர்கள்KME-கிலோமீட்டர்SQM-சதுர மீட்டர்கள்
CCM- கன சென்டிமீட்டர்கள்MLT-மில்லிலிட்டர்SQY-சதுர கெஜங்கள்
CMS-சென்டிமீட்டர்கள்MTR-மீட்டர்கள்TBS-டேப்ளெட்கள்ள்
11. வரிக்காலத்தின்போது வழங்கப்பட்ட ஆவணங்கள்

documents-issued-tax-period

மேலே உள்ள அட்டவணையில், ஆவணம், இரத்து செய்யப்பட்ட ஆவணம் மற்றும் வழங்கப்பட்ட நிகரம், தொடக்க மற்றும் இறுதி எண் உடன் வருவாயின் போது வழங்கப்பட்ட ஆவணங்களின் விவரங்களை நீங்கள் குறிப்பிட வேண்டும்.

ஜிஎஸ்டிஆர்-1 படிவத்தைப் பதிவிறக்க,இங்கே கிளிக் செய்யவும்

முடிவுரை

பரவலாக, ஜிஎஸ்டிஆர்-ல் குறிப்பிடப்பட வேண்டிய விவரங்கள் அந்த மாதத்தில் செய்யப்பட்ட வெளிநோக்கிய வழங்கல்களின் விலைவிவரப் பட்டியல் வாரியாகவோ, விகிதம் வாரியாகவோ அல்லது மாநில வாரியாகவோ வகைப்படுத்தப்பட வேண்டும். இப்போது முதல், நீங்கள் ஜிஎஸ்டிஆர்-1ஐ தாக்கல் செய்வதில் ஒருவர் வழங்க வேண்டிய தகவல்களின் அளவு பற்றி கொஞ்சம் நுண்ணறிவை பெற்றிருக்க வேண்டும், மேலும் அவ்வாறு செய்வதற்கு தேவையான முயற்சியையும் நேரத்தையும் அளவிட வேண்டும். சில காரணங்களால், வருமான விவரக்கள் சரியான நேரத்தில் தாக்கல் செய்யப்படாவிட்டால், அது உங்கள் வணிகத்தின் நம்பகத்தன்மையை பாதிக்கும். பின்னர், உங்கள் வாடிக்கையாளர்களை பாதிக்கப்படும், ஏனெனில் ஐடீசி ஆனது வழங்குநர் இணக்கத்தை சார்ந்துள்ளது. இணக்கத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் வணிகங்களை எளிதாக்கும் ஒரு மென்பொருளைப் தேடிப் பெறுவது சாத்தியமே.

மேலும் படிக்க:  டேலி.ஈஆர்பீ 9 ஐப் பயன்படுத்தி ஜிஎஸ்டி வருவாய் (படிவம் ஜிஎஸ்டிஆர்-1) விவரங்களை எப்படி தாக்கல் செய்வது

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

91,818 total views, 41 views today