(English) Language

  • English
  • Hindi
  • Marathi
  • Kannada
  • Telugu
  • Tamil
  • Gujarati

திருத்தப்பட்ட வரைவு மாதிரி ஜிஎஸ்டீ சட்டம் 26 நவம்பர், 2016 அன்று அமலுக்கு வந்ததுள்ளது. திருத்தப்பட்ட வரைவு மாதிரி ஜிஎஸ்டி சட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் பின்வரும் பகுதிகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன:

  • மாற்றங்கள் என்னென்ன?
  • புதிதாக சேர்க்கப்பட்டவைகள் எவை?
  • நீக்கப்பட்டவைகள் என்னென்ன?

மாற்றங்கள் என்னென்ன?

பொருள்தலைப்புவரைவுச் சட்டம்- 14 ஜூன், 2016திருத்தப்பட்ட வரைவுச் சட்டம்- 26 நவம்பர், 2016
பதிவு செய்தல்நுழைவு வரம்புவடகிழகு மாநிலங்களுக்கு ரூ. 5 லட்சங்கள்
மீதியுள்ள இந்தியப் பகுதிகளுக்கு ரூ. 10 லட்சங்கள்
சிறப்புப் பிரிவு மாநிலங்களுக்கு ரூ. 10 லட்சங்கள்*

மற்ற சிறப்புப் பிரிவு மாநிலங்களுக்கு ரூ. 20 லட்சங்கள்

* அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தர்காண்ட்

திரண்ட கொள்முதல்/ விற்றுமுதல்திரண்ட மதிப்புஅனைத்து வரி செலுத்தக்கூடிய சப்ளைகள், வரி செலுத்தவேண்டியில்லாத சப்ளைகள், விலக்கீடு செய்யப்பட்ட சப்ளைகள் மற்றும் ஏற்றுமதி சப்ளைகள் உள்ளடங்கும்.அனைத்து வரி செலுத்தக்கூடிய சப்ளைகள், விலக்கீடு செய்யப்பட்ட சப்ளைகள் மற்றும் ஏற்றுமதி சப்ளைகள் உள்ளடங்கும்.
வழங்கல் (சப்ளை)சேவைகள் இறக்குமதிசேவைகளின் இறக்குமதி, பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டாலும், இல்லாவிட்டாலும் மற்றும் வணிகத்தில் அல்லது அதன் முன்னேற்றத்திற்காக இருந்தாலும், இல்லாவிட்டாலும்.சேவைகளின் இறக்குமதி பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டால் மற்றும் வணிகத்தில் அல்லது அதன் முன்னேற்றத்திற்காக இருந்தாலும், இல்லாவிட்டாலும்.
கம்போஸிஷன் வரிவிதிப்புவரி வீதம்நிதியாண்டின்போது ஒரு மாநிலத்தில் மொத்த வருவாயில் 1%-ஐ விட குறைவாக இல்லாத.நிதியாண்டின்போது ஒரு மாநிலத்தில் உற்பத்தியாளருக்கு * மொத்த வருவாயில் 2,5%-ஐ விட குறைவாக இல்லாத மற்றவர்களுக்கு 1%-ஐ விட குறைவாக இல்லாத

* கவுன்சிலின் பரிந்துரைப்பில் குறிப்பிட்டுள்ளபடி அம்மாதிரியான சரக்குகளின் உற்பத்தியாளர் தவிர்த்து

கம்போஸிஷன் வரிவிதிப்புவரம்புசரக்குகள் மற்றும்/அல்லது சேவைகளின் மாநிலங்களுக்கு இடையேயான அவுட்வேர்ட் சப்ளைகளில் ஈடுபட்டுள்ள ஒரு வரிசெலுத்தக்கூடிய நபர் சேர்க்கை (கம்போஸிஷன்) வரிவிதிப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட முடியாது.ஏற்கனவே உள்ள மாநிலங்களுக்கு இடையேயான அவுட்வேர்ட் சப்ளைகளின் நிபந்தனைகளோடு, பின்வருபவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன :

1) சேவைகளின் சப்ளையில் ஈடுப்பட்டுள்ளவர்கள்
2) ஜிஎஸ்டியின் கீழ் வரி விதிப்புக்கு உட்படாத சரக்குகளை சப்ளை செய்வதில் ஈடுபட்டுள்ளவர்கள்
3) ஒரு எலக்ட்ரானிக் வர்த்தக (இ-காமர்ஸ்) ஆபரேட்டர் மூலம் ஏதேனும் சரக்குகளின் சப்ளையில் ஈடுபட்டுள்ளவர்கள்
4) கவுன்சிலின் பரிந்துரைப்பில் குறிப்பிட்டுள்ளபடியான சரக்குகளின் உற்பத்தியாளர்

சரக்குகளின் வழங்கல் (சப்ளை) நேரம்முன்னோக்கிய கட்டணம்கீழ்க்காண்பவற்றில் முன்கூட்டிய தேதி :

1. சரக்குகள் அகற்றபட்ட தேதி
2. விலைவிவரப் பட்டியலின் தேதி
3. பணம் பெற்றுக்கொண்ட தேதி
4. கணக்குக புத்தகங்களில் பதிவு செய்யப்பட்ட (சரக்குகள் பெற்றுகொண்டது) தேதி

கீழ்க்காண்பவற்றில் முன்கூட்டிய தேதி:

1. விலைவிவரப் பட்டியலின் தேதி
2. பணம் பெற்றுக்கொண்ட தேதி

சரக்குகளின் வழங்கல் (சப்ளை) நேரம்பின்னோக்கிய கட்டணம்கீழ்க்காண்பவற்றில் முன்கூட்டிய தேதி:

1. சரக்குகள் பெற்றுக்கொள்ளப்பட்ட தேதி
2. பணம் செலுத்தப்பட்ட தேதி
3. விலைவிவரப் பட்டியலின் தேதி
4. கணக்குப் புத்தகங்களில் பற்று வைத்த (டெபிட்) தேதி

 

கீழ்க்காண்பவற்றில் முன்கூட்டிய தேதி:

1. சரக்குகள் பெற்றுக்கொள்ளப்பட்ட தேதி
2. பணம் செலுத்தப்பட்ட தேதி
3. விலைவிவரப் பட்டியலின் தேதியிலிருந்து 30 நாட்கள்

மேற்கண்ட நிகழ்வுகளை தீர்மானிக்க முடியாவிட்டால், பெறுபவரின் கணக்குப் புத்தகங்களில் உள்ள பதிவுத் தேதி சப்ளை நேரமாக இருக்கும்

சேவைகளின் வழங்கல் (சப்ளை) நேரம்முன்னோக்கிய கட்டணம்விலைவிவரப் பட்டியல் பரிந்துரைக்கப்பட்ட காலத்திற்குள் வெளியிடப்படாவிட்டால் : : கீழ்க்காண்பவற்றில் முன்கூட்டிய தேதி:

1. விலைவிவரப் பட்டியலின் தேதி
2. பணம் பெற்றுக்கொண்ட தேதி

விலைவிவரப் பட்டியல் பரிந்துரைக்கட்டால்ப்பட்ட காலத்திற்குள் வெளியிடப்படாவி : கீழ்க்காண்பவற்றில் முன்கூட்டிய தேதி :

1. சேவை முடிக்கப்பட்ட தேதி
2. பணம் பெற்றுக்கொண்ட தேதி

 

கீழ்க்காண்பவற்றில் முன்கூட்டிய தேதி:

1. விலைவிவரப் பட்டியலின் தேதி
2. பணம் பெற்றுக்கொண்ட தேதி

சேவைகளின் வழங்கல் (சப்ளை) நேரம்பின்னோக்கிய கட்டணம்கீழ்க்காண்பவற்றில் முன்கூட்டிய தேதி:

1. சேவைகள் பெறப்பட்ட தேதி
2. பணம் செலுத்தப்பட்ட தேதி
3. விலைவிவரப் பட்டியல் பெற்றுக்கொள்ளப்பட்ட தேதி
4. கணக்குப் புத்தகங்களில் பற்று வைத்த (டெபிட்) தேதி

கீழ்க்காண்பவற்றில் முன்கூட்டிய தேதி:

1. பணம் செலுத்தப்பட்ட தேதி
2. விலைவிவரப் பட்டியலின் தேதியிலிருந்து 60 நாட்கள்

மேற்கண்ட நிகழ்வுகளை தீர்மானிக்க முடியாவிட்டால், பெறுபவரின் கணக்குப் புத்தகங்களில் உள்ள பதிவுத் தேதி சப்ளை நேரமாக இருக்கும்

வழங்கல் (சப்ளைகள்) மதிப்புமானியங்கள்சப்ளையுடன் இணைப்பு செய்யப்பட்டுள்ளவாறு, ஏதேனும் வடிவம் அல்லது முறையில் விலை இறக்கங்கள் மதிப்புடன் சேர்க்கப்பட வேண்டும்.மத்திய மற்றும் மாநில அரசுகளால் வழஙப்பட்ட விலை இறக்கங்கள் தவிர்த்து மற்ற விலை இறக்கங்கள் விலையுடன் நேரடியாக இணைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
வேலைப் பணி
(ஜாப் ஒர்கர்)
உள்ளீட்டு வரி கிரெடிட்முதன்மை உற்பத்தியாளர் 180 நாட்களுக்குள் வேலைப் பணிக்காக அனுப்பப்பட்ட உள்ளீடுகளை பெற வேண்டும்.முதன்மை உற்பத்தியாளர் 1 ஆண்டுக்குள் வேலைப் பணிக்காக அனுப்பப்பட்ட உள்ளீடுகளை பெற வேண்டும்.
வேலைப் பணிஉள்ளீட்டு வரி கிரெடிட்முதலீட்டுச் சரக்குகளை திரும்பப் பெறுவதற்கான காலம் 2 வருடங்கள் ஆகும்.முதலீட்டுச் சரக்குகளை திரும்பப் பெறுவதற்கான காலம் 3 வருடங்கள் ஆகும்.
பணத்திருப்பம்தாமதமான பணத்திருப்பம் மீதான வட்டி3 மாதங்களுக்குள் பணம் திரும்ப அளிக்கப்படாவிட்டால், வட்டி செலுத்தப்பட வேண்டும்அறுபது நாட்களுக்குள் பணம் திரும்ப அளிக்கப்படாவிட்டால், வட்டி செலுத்தப்பட வேண்டும்
இடமாற்ற இடைக்கால முன்னேற்பாடு (டிரான்சிஷன் புரோவிஷன்)பதிவுசெய்யப்பட்டுள்ள வணிகம் ( உற்பத்தியாளர், விற்பனையாளர் மற்றும் சேவை சப்ளையர்)உள்ளீட்டு வரி கிரெடிட்டை (ஐடீசி) ஜிஸ்டிக்கு முன்னோக்கி கொண்டு செல்வதற்கான நிபந்தனைகளாவன :
1. ஐடீசியின் இறுதிக் கையிருப்பு கடைசியாக தாக்கல் செய்யப்பட்ட ரிடர்னில் பிரதிபலிக்க வேண்டும்.
2. கிரெடிட் தற்போதைய சட்டத்தில் அனுமதிக்கப்பட வேண்டும் மற்றும்
3. அது ஜிஎஸ்டியின் கீழ் உள்ளீட்டு வரி கிரெடிட்டாக அனுமதிக்கப்படும்.
உள்ளீட்டு வரி கிரெடிட்டை (ஐடீசி) ஜிஸ்டிக்கு முன்னோக்கி கொண்டு செல்வதற்கான நிபந்தனைகளாவன :
1. ஐடீசியின் இறுதிக் கையிருப்பு கடைசியாக தாக்கல் செய்யப்பட்ட ரிடர்னில் பிரதிபலிக்க வேண்டும்.
2. அது ஜிஎஸ்டியின் கீழ் உள்ளீட்டு வரி கிரெடிட்டாக அனுமதிக்கப்படும்.

 

 

 

அட்டவணைகள்அட்டவணை Iஇந்த அட்டவணை பரிசீலனை இல்லாமலும் கூட செய்யப்படும் சப்ளையாக கருதப்பட வேண்டிய பரிவர்த்தனைகள் அல்லது செயல்பாடுகளின் பட்டியலை வழங்குகின்றது :

1. வணிகச் சொத்துக்களின் நிரந்தர பரிமாற்றம்/விடுவிப்பு.
2. வணிகச் சொத்துக்களை ஒரு தனியார் அல்லது வணிகமில்லாத பயன்பாட்டாக மாற்றும் தற்காலிக பயன்பாடு.
3. ஒரு தனியார் அல்லது வணிகமில்லாத பயன்பாட்டிற்கு விடப்படும் சேவைகள்.
4. பதிவு நீக்கிய பிறகு தொடர்ந்து வைத்துக்கொள்ளப்படும் சொத்துக்கள்.
5. ஒரு வரி செலுத்தப்படக்கூடிய நபரால் மற்றொரு வரி செலுத்த வேண்டியிருக்காத நபருக்கு வணிகத்திற்காக அல்லது அதன் முன்னேற்றத்திற்காக சரக்குகள் மற்றும் / அல்லது சேவைகளை சப்ளை செய்யப்படுதல்.

திருத்தப்பட்ட மாதிரிச் சட்டத்தின்படி, எண் 2, 3, 4 மற்றும் 5 ஆகியவற்றின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பரிவர்த்தனை அல்லது செயல்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன மேலும் திருத்தப்பட்ட அட்டவணை I இவற்றைக் கொண்டுள்ளது :

1. உள்ளீட்டு வரி கிரெடிட் கிடைத்துள்ள வணிகச் சொத்துக்களின் நிரந்தர பரிமாற்றம்/விடுவிப்பு.
2. வணிகத்திற்காக அல்லது அதன் முன்னேற்றத்திற்காக, பிரிவு 10-ல் குறிப்பிட்டுள்ளவாறு தொடர்புடைய நபர்களுக்கு இடையே அல்லது வேறுபட்ட நபர்களுக்கு இடையே செய்யப்படும் சரக்குகள் அல்லது சேவைகளின் சப்ளை.
3. ஒரு முதன்மையான நபரின் சார்பாக சரக்குகளை சப்ளை செய்ய ஏஜெண்ட் பொறுப்பேற்கும்போது அவருடைய ஏஜெண்டுக்கு முதன்மையாளரால் செய்யப்படும் அல்லது அதற்கு எதிர்மாறாக செய்யப்படும் சரக்குகளின் சப்ளை.
4. ஒரு வரி செலுத்தப்படக்கூடிய நபரால் ஒரு தொடர்புடைய நபருக்கு அல்லது இந்தியாவிற்கு வெளியே உள்ள அவரின் பிற நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து வணிகத்திற்காக அல்லது அதன் முன்னேற்றத்திற்காக செய்யப்படும் சேவைகளின் இறக்குமதி.

 

புதிதாக சேர்க்கப்பட்டவைகள் எவை?

தலைப்புபுதிதாக சேர்க்கப்பட்டவைவிவரங்கள்
வரையறைமுதலீட்டுப் பொருட்கள்மூலதன சரக்குகள் என்பவை வரவுத்தொகை (கிரெடிட்) கோரும் நபரின் கணக்குப் புத்தகங்களில் மூலதனமாக அவற்றின் மதிப்பு குறிக்கப்பட்டுள்ள சரக்குகள் ஆகும் மேலும் இவை வணிகம் செய்யும்போது அல்லது அதை முன்னேற்றும்போது பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்தும் நோக்கில் இருப்பவை ஆகும்.
வழங்கல் (சப்ளை)கலவை அளிப்பு (மிக்ஸ்ட் சப்ளை)ஒரே விலைக்காக ஒரு வரிசெலுத்தக்கூடிய நபரால் வழங்கப்படும் சரக்குகள் அல்லது சேவைகள், அல்லது இரண்டும் இணைந்த இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிப்பட்ட சப்ளைகள்.
வழங்கல் (சப்ளை)கூட்டு அளிப்பு (காம்போசைட் சப்ளை)வணிகத்தில் சாதாரண முறையில் இயல்பாக ஒன்றுசேர்த்து சப்ளை செய்யப்படும் சரக்குகள் அல்லது சேவைகள், அல்லது ஏதேனும் இணைந்த இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சப்ளைகளைக் கொண்டு ஒரு பெறுநருக்கு ஒரு வரிசெலுத்தக்கூடிய நபரால் சப்ளை செய்யப்பட்டு/ அனுப்பப்படும் சப்ளை
வழங்கல் (சப்ளை) நேரம்ரசீது (வவுச்சரின்) வழங்கல் சப்ளை நேரம் பின்வருபவைகளின் முன்கூட்டிய நேரமாக இருக்கும் :
1. சப்ளையர் அடையாளம் கண்டுபிடிக்கக்கூடியவராக இருந்தால், ரசீது (வவுச்சர்) தேதி
2. மற்ற நிலைகளில், ரசீது மீட்பு செய்யப்பட்ட தேதி
வழங்கல் (சப்ளை) மதிப்புவட்டி, தாமதக் கட்டணம் அல்லது அபராதம்ஒரு சப்ளையின் தாமதமான பணம் செலுத்துதல் ஆனது வட்டி அல்லது தாமதக் கட்டணம் அல்லது அபராதம் வரிவிதிப்புக்கு உட்பட்டதாகும்.
வழங்கல் (சப்ளை) மதிப்புவழங்கிய பிறகான தள்ளுபடிவழங்கிய பிறகான தள்ளுபடி இப்படி இருந்தால் மட்டுமே பரிவர்த்தனை மதிப்பிலிருந்து விலக்கீடு செய்யப்படும் :
1. தள்ளுபடி இம்மாதிரியான வழங்கல் நேரத்தில் அல்லது அதற்கு முன் ஏற்படுத்தப்பட்ட ஒரு ஒப்பந்த விதிமுறைகளின்படி இருக்க வேண்டும் மேலும் தகுந்த விலைவிவரப் பட்டியல்களுடன் பிரத்தியேகமாக இணைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும் மற்றும்
2. உள்ளீட்டு வரி கிரெடிட் சப்ளையானது சப்ளையரால் கொடுக்கப்பட்ட ஆவணத்தின் அடிப்படையில் தள்ளுபடிக்கு ஏற்றது என்பதால் சப்ளையை பெறுபவரால் திருப்பித் தரப்பட்டிருக்க வேண்டும்.
விலைவிவரப் பட்டியல்பின்னோக்கிய கட்டண (ரிவர்ஸ் சார்ஜ்) செயல்முறைபின்னோக்கிய கட்டணத்திற்காக ஒரு வரி செலுத்தும் பொறுப்புள்ள ஒரு பதிவுசெய்துள்ள வரி செலுத்தக்கூடிய நபர், பதிவு செய்திருக்காத நபரிடமிருந்து பெறப்படும் ஏதேனும் சரக்குகள் அல்லது சேவைகளின் இன்வார்ட் சப்ளைக்காக ஒரு வரி விலைவிவரப் பட்டியலை வெளியிட வேண்டும்.
மூலதன பொருட்கள் /முதலீட்டுப் பொருட்கள் மீதான ஐடீசிபைப்லைன் மற்றும் டெலிகாம் டவர்களுக்காகமுதல் வருடத்தில் அதிகபட்சமாக 1/3 பங்கு ஐடீசியும், இரண்டாம் நிதியாண்டில் முதல் வருடத்தின் கிளைமையும் சேர்த்து 2/3 பங்கு ஐடீசியும் மேலும் மீதியுள்ளவை அடுத்த நிதியாண்டிலும் இருக்கும்.
ஐடீசிசேவை வழங்கல் மீதான ஐடீசியின் மாறுபாடு (ஐடீசி திரும்புதல்)பெறுபவர் சேவையை வழங்கும் சப்ளையருக்கு விலைவிவரப் பட்டியல் வெளியிட்ட தேதியிலிருந்து மூன்று மாத காலத்திற்குள் செலுத்த வேண்டிய வரியுடன் சேர்த்து பணம் செலுத்தத் தவறினால், பெறுபவருக்கு கிடைக்கும் உள்ளீட்டு வரி கிரெடிட்டுக்கு சமமான ஒரு தொகை வட்டியுடன் அவரிடன் வெளியீட்டு வரி பொறுப்பில் சேர்க்கப்படும்.
கொள்ளை ஆதாயமடைதலுக்கான எதிர்ப்பு உட்பிரிவுகொள்ளை ஆதாயமடைதல் எதிர்ப்புஒரு பதிவு செய்துள்ள வரி செலுத்தக்கூடிய நபருக்கு கிடைக்கும் உள்ளீட்டு வரி கிரெடிட்டின் பலன் அல்லது வரி வீதத்தில் ஏதேனும் குறைப்பு ஆனது உண்மையில் சரக்குகள் அல்லது சேவைகளின் விலைகளின் குறைப்பு மூலமாக வாடிக்கையாளர்களை சென்றடைகிறதா என்று ஆராய்வதற்காக.
மாற்றம் ஒதுக்கீடு இடைக்கால ஏற்பாடுகள் (ட்ரான்சிஷன் புரொவிஷன்)கலால் வரி (ஆயத்தீர்வை)ஒரு முதல் நிலை வியாபாரி (டீலர்) / இரண்டாம் நிலை வியாபாரி (டீலர்) / இறக்குமதியாளருக்கு இறுதிக் கையிருப்பின் மீது உள்ளீட்டு வரி கிரெடிட் கிடைக்க அனுமதிக்கப்படும்.
ஒதுக்கீடு இடைக்கால ஏற்பாடுகள்நுழைவு வரிசெலுத்தப்படும் நுழைவு வரி வைத்துள்ள இறுதிக் கையிருப்பின் மீதான உள்ளீட்டு வரி கிரெடிட்டாக கிடைக்க அனுமதிக்கப்படும்.
மாற்றம் ஒதுக்கீடு இடைக்கால ஏற்பாடுகள்சேவை வரிஜிஎஸ்டியில் வரி செலுத்தக்கூடிய விலக்கீடு செய்யப்பட்ட சேவைகளில் ஈடுப்பட்டிருக்கும் சேவை வழங்குபவருக்கு, உள்ளீடுகளின் மீது உள்ளீட்டு வரி கிரெடிட் கிடைக்கலாம்.
அட்டவணைகள்அட்டவணை IIIஇந்த அட்டவணை சரக்குகளின் சப்ளை என்றோ அல்லது சேவைகளின் சப்ளை என்றோ கருதப்படாத செயல்பாடுகள் அல்லது பரிவர்த்தனைகளின் பட்டியலை அளிக்கின்றது.

மேலும் படிக்க இடமாற்ற இடைக்கால ஏற்பாடுகள் என்பதை கிளிக் செய்யவும்

நீக்கப்பட்டவைகள் என்னென்ன*?

தலைப்புநீக்கப்பட்டவைவிவரங்கள்
சரக்குகளின் வரையறைபிணையங்கள் (செக்யூரிட்டிகள்)வரையறையின்படி, பிணையங்கள் சரக்குகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளன
சப்ளையின் மதிப்புஉரிமை ஊதியங்கள், உரிமக் கட்டணம் மற்றும் கட்டணமில்லாத சரக்குகள் அல்லது சேவைகள்இவை சப்ளைகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளன
சப்ளை மதிப்புமதிப்பிடுதல் விதிகள்மதிப்பிடுதல் விதிகள் (ஒப்பீடு, கணக்கிடப்பட்ட மற்றும் எச்சம் காண் முறை) திருத்தப்பட்ட வரைவு மாதிரியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

 

*இவை 14 ஜூன், 2016 அன்று வெளியிடப்பட்ட வரைவுச் சட்டத்துடன் ஒப்பிடும்போது திருத்தப்பட்ட வரைவுச் சட்டத்தில் நீக்கப்பட்டவைகள் ஆகும். சட்டம் இன்னும் வரைவு நிலையிலேயே இருப்பதால், இவை பின்னர் ஒரு கட்டத்தில் பரிந்துரைக்கப்படலாம்.

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

128,637 total views, 167 views today

Yarab A

Author: Yarab A

Yarab is associated with Tally since 2012. In his 7+ years of experience, he has built his expertise in the field of Accounting, Inventory, Compliance and software product for the diverse industry segment. Being a member of ‘Centre of Excellence’ team, he has conducted several knowledge sharing sessions on GST and has written 200+ blogs and articles on GST, UAE VAT, Saudi VAT, Bahrain VAT, iTax in Kenya and Business efficiency.