(English) Language

  • English
  • Hindi
  • Marathi
  • Kannada
  • Telugu
  • Tamil
  • Gujarati

முந்தைய இடுகையில், நாங்கள் உள்ளீட்டு வரி கிரெடிட்டை (ஐடீசி) அறிமுகப்படுத்தினோம்.
ஜிஎஸ்டி முறையில் உங்களின் வரி பொறுப்புத்தன்மைக்கு எதிராக உங்களின் உள்ளீட்டு வரி கிரெடிட்டை அமைப்பது எப்படி என்று நாம் புரிந்துகொள்ளலாம்.
ஜிஎஸ்டி என்பது ஒரு இரட்டைக் கருத்து முறை ஆகும். ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் (ஒரு மாநிலத்திற்குள்), மத்திய ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி) மற்றும் மாநில ஜிஎஸ்டி (எஸ்ஜிஎஸ்டி) ஆகியவற்றின் கூறு இருக்கும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) என்பது மாநிலங்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகளுக்கானது ஆகும். எனவே, சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்டபடியான வரிசையில், இந்த ஒவ்வொரு கூறுகளுக்கும் எதிராக உள்ளீட்டு கிரெடிட்டை அமைப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியமாகும்.
ககிரெடிட் அமைக்கப்பட (ஸெட் ஆஃப்) வேண்டிய வரிசையானது கீழுள்ள அட்டவணையில் விளக்கப்பட்டுள்ளது:

உள்ளீட்டு வரி கிரெடிட்பொறுப்புக்கு எதிராக அமைக்கப்படுவது
சிஜிஎஸ்டி (மத்திய ஜிஎஸ்டி)சிஜிஎஸ்டி மற்றும் ஐஜிஎஸ்டி (அந்த வரிசையில்)
எஸ்ஜிஎஸ்டி (மாநில ஜிஎஸ்டி)எஸ்ஜிஎஸ்டி மற்றும் ஐஜிஎஸ்டி (அந்த வரிசையில்)
ஐஜிஎஸ்டி (ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி)ஐஜிஎஸ்டி, சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி (அந்த வரிசையில்)

 

இது எவ்வாறு வேலை செய்கிறது என்பதை ஒரு உதாரணத்துடன் நாம் விவாதிக்கலாம்.

உதாரணம் 1 – சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டி ஐடீசி-ஐ எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?

சூப்பர் கார்ஸ் லிமிடெட் என்பது கர்நாடகாவில் உள்ள ஒரு கார் உற்பத்தியாளர் ஆகும். சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனம் மேற்கொண்ட பரிவர்த்தனையின் விவரங்களானது வரி கூறுகளுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

நிறுவனத்தின் பெயர்இலக்கு மாநிலம்பரிவர்த்தனை வகைபொருள்உள்ளீட்டு கிரெடிட்வரிப்

பொறுப்பு

சிஜிஎஸ்டிஎஸ்ஜிஎஸ்டிசிஜிஎஸ்டிஎஸ்ஜிஎஸ்டி
ரத்னா ஸ்டீல்ஸ்கர்நாடகாகொள்முதல் (உள்ளே வருதல்)இரும்பு1,20,0001,20,000
ரவீந்த்ரா ஆட்டோமொபைல்ஸ்கர்நாடகாவிற்பனை (வெளியே செல்லுதல்)கார்36,00036,000
ரவீந்த்ரா ஆட்டோமொபைல்ஸ்கர்நாடகாவிற்பனை (வெளியே செல்லுதல்)உதிரி பாகங்கள் — —90,00090,000

 

மாத இறுதியில், சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனமானது வரிப் பொறுப்புக்கு எதிராக கிடைக்கப்பெறும் உள்ளீட்டு கிரெடிட்டை சரிசெய்கிறது.

உதாரணத்தில், சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனமானது 12,000-ஐ வரி பொறுப்பாகக் கொண்டுள்ளது. இது எப்படி ஏற்படுகிறது என்பதை இங்கே காணலாம்:

  1. சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனமானது சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டி-க்கு எதிரான உள்ளீட்டு வரி கிரெடிட்டாக தலா 1,20,000-ஐ கொண்டுள்ளது.
  2. சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனமானது சிஜிஎஸ்டி பொறுப்பான 1,26,000 (36,000+90,000)-ஐ அமைக்க, சிஜிஎஸ்டி 1,20,000-ன் ஐடீசி-ஐ முதலில் பயன்படுத்தியது. இந்த சரிசெய்தலுக்குப் பிறகு, சிஜிஎஸ்டி பொறுப்பு என்பது 6,000 (1,26,000 – 1,20,000) ஆகும்.
  3. பின்னர், எஸ்ஜிஎஸ்டி-யின் உள்ளீட்டு கிரெடிட்டான 1,20,000 என்பது எஸ்ஜிஎஸ்டி பொறுப்பான 1,26,000 (36,000+90,000)-க்கு எதிராக அமைக்கப்படுகிறது. எஸ்ஜிஎஸ்டி-யின் உள்ளீட்டு கிரெடிட்டை அமைத்த பிறகு, 6,000 (1,26,000 – 1,20,000) என்பது எஸ்ஜிஎஸ்டி-யின் பொறுப்பாகும்.
  4. எஸ்ஜிஎஸ்டி மற்றும் சிஜிஎஸ்டி ஆகிய இரண்டின் கிடைக்கப்பெறும் உள்ளீட்டு கிரெடிட்டை அமைத்த பிறகு, சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கடன் பொறுப்பானது 12,000 (சிஜிஎஸ்டி பொறுப்பு 6,000 + எஸ்ஜிஎஸ்டி பொறுப்பு 6,000) ஆகும்.
  5. சிஜிஎஸ்டி-க்கான கடன் பொறுப்பை அமைத்த பிறகு, சிஜிஎஸ்டி-ன் உள்ளீடு கிரெடிட் மீதம் ஏதாவது இருந்தால், அதை எஸ்ஜிஎஸ்டி-க்கு எதிராக அமைக்க பயன்படுத்த முடியாது. சிஜிஎஸ்டி-யின் கீழ் உள்ள ஐடீசி மீதமானது (சிஜிஎஸ்டி பொறுப்பை அமைத்த பிறகு) அடுத்த காலத்திற்கு எடுத்து செல்லப்படும்.
  6. அதேபோல, எஸ்ஜிஎஸ்டி பொறுப்பை அமைத்த பிறகான எஸ்ஜிஎஸ்டி மீதமானது அடுத்த காலத்திற்கு எடுத்து செல்லப்படும்.

உதாரணம் 2 – ஐஜிஎஸ்டி ஐடீசி-ஐ எவ்வாறு பயன்படுத்த முடியும்?

சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மற்றொரு பரிவர்த்தனைகளின் தொகுப்பைப் பார்க்கவும்.

நிறுவனத்தின் பெயர்இலக்கு மாநிலம்பரிவர்த்தனை வகைபொருள்உள்ளீட்டு கிரெடிட்வரிப்

பொறுப்பு

சிஜிஎஸ்டிஎஸ்ஜிஎஸ்டிஐஜிஎஸ்டிசிஜிஎஸ்டிஎஸ்ஜிஎஸ்டிஐஜிஎஸ்டி
ஷைன் அலுமினியம் இண்டஸ்டிரீஸ் லிமிடெட்.தமிழ்நாடுகொள்முதல் (உள்ளே வருதல்)அலுமினியம் பார்கள்30,000 —
லக்ஷ்மி ரப்பர் இண்டஸ்டிரீஸ் லிமிடெட்.தமிழ்நாடுகொள்முதல் (உள்ளே வருதல்)டயர்கள் — —10,000 — — —
ஏ-1 ஸ்பேர்ஸ்மகாராஷ்டிராவிற்பனை (வெளியே செல்லுதல்)உதிரி பாகங்கள் — —12,000
ஜான்சன் ஆட்டோ பார்ட்ஸ்கர்நாடகாவிற்பனை (வெளியே செல்லுதல்)உதிரி பாகங்கள்    24,000    24,000

 

மாத இறுதியில், சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனமானது தங்களின் வரிப் பொறுப்பை அமைக்க ஐஜிஎஸ்டி உள்ளீட்டு வரி கிரெடிட்டை பயன்படுத்தியுள்ளது.

மேலே விளக்கப்பட்டுள்ளது போல்,

  1. சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனமானது ஐஜிஎஸ்டி உள்ளீட்டு வரி கிரெடிட்டாக 40,000 மற்றும் கடன் பொறுப்புகளாக ஐஜிஎஸ்டி 12,000, சிஜிஎஸ்டி 24,000 மற்றும் எஸ்ஜிஎஸ்டி 24,000 ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
  2. சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, ஐஜிஎஸ்டி வரிப் பொறுப்பை அமைக்க ஐஜிஎஸ்டி உள்ளீட்டு வரி கிரெடிட்டை பயன்படுத்த வேண்டும். மீதமுள்ள ஐடீசி-ஐ சிஜிஎஸ்டி பொறுப்பு,பிறகு எஸ்ஜிஎஸ்டி பொறுப்பு என வரிசையாக அமைக்கப் பயன்படுத்தலாம்.
  3. சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனமானது ஐஜிஎஸ்டி பொறுப்பான 12,000 அமைக்க முதலில் ஐஜிஎஸ்டி ஐடீசி-ஐ பயன்படுத்தியது.
  4. மீதமுள்ள ஐஜிஎஸ்டி ஐடீசி கிரெடிட் 28,000 (40,000 – 12,000) என்பது சிஜிஎஸ்டி பொறுப்பான 24,000 அமைக்க பயன்படுத்தப்படும்.
  5. இந்த சரிசெய்தலுக்குப் பிறகு, மீதமுள்ள ஐஜிஎஸ்டி ஐடீசியான 4,000-ஐ 4,000 வரையிலான எஸ்ஜிஎஸ்டி பொறுப்பை செயல்படுத்த பயன்படுத்தப்படும்.
  6. இப்பொழுது, கிடைக்கப்பெறும் உள்ளீட்டு கிரெடிட்டை பயன்படுத்திய பிறகு, சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் எஸ்ஜிஎஸ்டி பொறுப்பு என்பது 20,000 ஆகும்.

உதாரணம் 3 – சிஜிஎஸ்டி ஐடீசி-ஐ எஸ்ஜிஎஸ்டி பொறுப்புக்குப் பயன்படுத்தமுடியாது

சிஜிஎஸ்டி ஐடீசி-ஐ எஸ்ஜிஎஸ்டி பொறுப்புக்குப் பயன்படுத்தமுடியாது என்பதை விளக்க, சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இன்னொரு சூழலை நாம் பார்க்கலாம்.
சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனமானது சிஜிஎஸ்டி உள்ளீட்டு கிரெடிட்டான 15,000-ஐ முன்னோக்கி எடுத்துச் செல்கிறது.

உள்ளீட்டு கிரெடிட் பேலன்ஸ்தொகை
சிஜிஎஸ்டி உள்ளீட்டு கிரெடிட்15,000

ஒரு மாதத்தில், சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் வெளிசெல்லும் பொருட்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
InputCreditSetoff-3_Tamil

விளக்கப்பட்டுள்ளது போல,

  1. சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனமானது முந்தைய காலத்தின் சிஜிஎஸ்டி உள்ளீட்டு கிரெடிட்டான 15000-ஐ தற்போதைய காலத்தின் சிஜிஎஸ்டி பொறுப்பான 11,000-ஐ அமைக்க பயன்படுத்துகிறது.
  2. இவ்வாறு அமைக்க, சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனமானது மீத சிஜிஎஸ்டி உள்ளீட்டு கிரெடிட்டான 4,000 கொண்டுள்ளது.
  3. சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, அந்த காலத்திற்கான அதிகமான சிஜிஎஸ்டி உள்ளீட்டு கிரெடிட்டை தற்போதைய காலத்தின் எஸ்ஜிஎஸ்டி பொறுப்புக்கு எதிராக அமைக்க முடியாது. அதேபோல, எஸ்ஜிஎஸ்டி உள்ளீட்டு கிரெடிட்டை சிஜிஎஸ்டி பொறுப்புக்கு எதிராக அமைக்க முடியாது.
  4. 4. எனவே, மீதமுள்ள சிஜிஎஸ்டி கிரெடிட் பயன்படுத்தப்படவில்லை மற்றும் சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மாதத்திற்கான எஸ்ஜிஎஸ்டி பொறுப்பு என்பது 11,000 ஆகும்.

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

269,946 total views, 12 views today

Yarab A

Author: Yarab A

Yarab is associated with Tally since 2012. In his 7+ years of experience, he has built his expertise in the field of Accounting, Inventory, Compliance and software product for the diverse industry segment. Being a member of ‘Centre of Excellence’ team, he has conducted several knowledge sharing sessions on GST and has written 200+ blogs and articles on GST, UAE VAT, Saudi VAT, Bahrain VAT, iTax in Kenya and Business efficiency.