ஜிஸ்டிக்கு மாறும் சட்ட வாசகங்கள் 26 நவம்பர் 2016 அன்று வெளியிடப்பட்டு திருத்தப்பட்ட வரைவு மாதிரி ஜிஎஸ்டி சட்டம் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கின்றன.இந்த பதிவு திருத்தப்பட்ட வரைவுச் சட்டத்தில் உள்ள மாற்றங்களை தெரிவிக்குறது.

 

ஜிஸ்டிக்கு மாறும் தேதியன்று, பரவலாக பின்வரும் வகைகளின் கீழ்வரும் எல்லா வணிகங்களும் கவனிக்க வேண்டியிருக்கின்றது:

 1. தற்போதைய சட்டத்தின் பதிவு செய்ய வேண்டிய பொறுப்பு இல்லாத, ஆனால் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய பொறுப்புள்ள வணிகங்கள்
 2. நீக்கப்பட்ட சரக்குகள் அல்லது சேவைகளின் உற்பத்தி அல்லது விற்பனையில் ஈடுபட்டுள்ள வணிகங்கள்
 3. ஒரு முதல் நிலை டீலர் அல்லது இரண்டாம் நிலை டீலர் அல்லது ஒரு பதிவு செய்துள்ள இறக்குமதியாளர்

1. தற்போதைய சட்டத்தின் பதிவு செய்ய வேண்டிய பொறுப்பு இல்லாத, ஆனால் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய பொறுப்புள்ள வணிகங்கள்:-

மத்திய கலால் வரிச் சட்டம் மற்றும் விதிகளின்படி, ஒரு உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைப்பின் மொத்த கிளியரன்ஸ் மதிப்பு ரூ. 1.5 கோடியை தாண்டினால், அது ஜிஎஸ்டிக்காக பதிவு செய்ய வேண்டும், அதேபோல், வேட் (VAT) (மதிப்புக் கூட்டு வரி) வரியின் கீழ், நிதியாண்டின்போது உங்கள் மொத்த வருவாய் தொடக்க வரம்பை தாண்டினால் நீங்கள் பதிவு செய்யும் பொறுப்புள்ளவர் ஆவீர்கள். இந்த தொடக்க வரம்பு மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.

இன்று, உங்கள் தொடக்க வரம்பு பரிந்துரைக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இல்லாமல் இருப்பதால், நீங்கள் பதிவு செய்யும் பொறுப்பு இல்லாதவராக இருக்கலாம். இருப்பினும், உங்கள் தொடக்க வரம்பு சிறப்புப் பிரிவு மாநிலங்களுக்கு (அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், திரிபுரா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தர்காண்ட்) ரூ. 10 லட்சத்தை தாண்டினாலும், இந்தியாவின் மீதியுள்ள பகுதிகளில் ரூ. 20 லட்சத்தை தாண்டினாலும், நீங்கள் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய பொறுப்புள்ளவராக ஆவீர்கள்.

2. நீக்கப்பட்ட சரக்குகள் அல்லது சேவைகளின் உற்பத்தி அல்லது விற்பனையில் ஈடுபட்டுள்ள வணிகங்கள்:-

நீங்கள் தற்போது விலக்கீடு செய்யப்பட்ட சரக்குகளின் உற்பத்தி, விற்பனை அல்லது விலக்கீடு செய்யப்பட்ட சேவையின் முன்னேற்பாட்டில் ஈடுபட்டிருக்கலாம், ஆனால் ஜிஎஸ்டீக்கு மாறும்போது, இவை வரிவிதிப்புக்கு உட்படும்.

3. ஒரு முதல் நிலை டீலர் அல்லது ஒரு இரண்டாம் நிலை டீலர் அல்லது ஒரு பதிவு செய்துள்ள இறக்குமதியாளர்: –

ஒரு டீலராக, நீங்கள் ஆயத்தீர்வைக்குரிய சரக்குகளை வர்த்தகம் செய்தால், மத்திய கலால் வரியின் கீழ் பதிவு செய்ய நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள். இன்று, ஒரு முதல் நிலை அல்லது இரண்டாம் நிலை டீலர், செலுத்தப்படும் ஆயத்தீர்வையை தயாரிப்புப் பொருளின் விலையில் சேர்ப்பதால், நீங்கள் செலுத்தும் ஆயத்தீர்வை கிரெடிட்டாக கிடைக்காது. அது ஒரு உற்பத்தியாளரிடம் விற்கப்பட்டிருந்தால், ஆயத்தீர்வை பரிமாற்றப்பட்டு, வாங்கும் உற்பத்தியாளரால் சென்வேட் (CENVAT) கிரெடிட்டாக கிளைம் செய்யப்படும்.
அதேபோல, நீங்கள் சரக்குகளை இறக்குமதி செய்தால், மத்திய கலால் வரியின் கீழ் பதிவு செய்து, பொருந்தும் இறக்குமதி வரியை செலுத்த வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள சூழ்நிலையில், ஒவ்வொரு வணிகத்திலும் எழும் பொதுவான கேள்வி “ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு முன்பாக கடைசி நாளன்று வைத்துள்ள கையிருப்பின் மீது எனக்கு உள்ளீட்டு வரி கிரெடிட் கிடைக்குமா?” என்பதாகும்

ஆம், உள்ளீடுகள் (மூலப் பொருட்கள்), ஓரளவு முழுமையடைந்த சரக்குகள் மற்றும் முழுதாக முழுமையடைந்த சரக்குகள் ஆகியவற்றின் இறுதிக் கையிருப்புக்காக உள்ளீட்டு வரி கிரெடிட் (சென்வேட் (CENVAT), உள்ளீட்டு வேட் (VAT), நுழைவு வரி மற்றும் சேவை வரி) ஆகியவை கிடைக்க நீங்கள் அனுமதிக்கப்படுவீர்கள்.

உங்கள் இறுதிக் கையிருப்பிற்காக உள்ளீட்டு வரி கிரெடிட் கிடைப்பதற்கான தகுதி நிபந்தனைகள்:-

உங்கள் இறுதிக் கையிருப்பு இப்படி இருந்தால் உங்களுக்கு உள்ளீட்டு வரி கிரெடிட் கிடைக்கலாம்,

  • இறுதிக் கையிருப்பு மூலப் பொருட்கள், ஓரளவு முழுமையடைந்த சரக்குகள் அல்லது முழுதாக முழுமையடைந்த சரக்குகளின் வடிவில் இருக்க வேண்டும், மேலும் அவை வரி செலுத்தக்கூடிய சப்ளைகளுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் அல்லது பயன்படுத்தப்படும் நோக்கத்தில் இருக்க வேண்டும்.
   Illustration for Unregistered Manufacturer
  • இம்மாதிரியான கிரெடிட்டுக்கான பலன்கள் குறைக்கப்பட்ட விலைகள் மூலமாக பெறுபவரிடம் பரிமாற்றப்பட வேண்டும். தற்போதைய வரி நடைமுறையின்படி, உள்ளீட்டு வரி கிரெடிட் அனுமதிக்கப்படவில்லை என்பதால் தீர்வை/வரி ஆனது தயாரிப்புச் செலவுடன் சேர்க்கப்படுகின்றது. இப்போது ஜிஸ்டீக்கு மாறும்போது, ஐடீசி அனுமதிக்கப்படும். இதன் விளைவாக இயல்பாக அடிப்படைச் செலவு குறையும், இதனால் வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்கப்படும் இறுதி விலையிலும் குறைப்புPrice Cut Image
  • நீங்கள் ஜிஎஸ்டீயின் கீழ் உள்ளீட்டு வரி கிரெடிட்டுக்கு தகுதியுடைவராக இருக்கிறீர்கள். ஜிஎஸ்டீயில், நீங்கள் ஒரு வழக்கமான (தொடர்ந்து) வரி செலுத்தும் நபராக இருந்தால் மட்டுமே உள்ளீட்டு வரி கிரெடிட்டுக்கு தகுதிபெற முடியும். ஜிஎஸ்டீயின் கீழ், சேர்க்கை வரிவிதிப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வரிசெலுத்தக்கூடிய நபர் உள்ளீட்டு வரி கிரெடிட்டை பெறுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லைIllustration for Unregistered Manufacturer_2
  • நீங்கள் விலைவிவரப் பட்டியல்கள் அல்லது உள்ளீடுகளுக்கான (ஓரளவு முழுமையடைந்த சரக்குகள் மற்றும் முழுதாக முழுமையடைந்த சரக்குகள் உள்ளிட்டவை) ஏதேனும் வேறு பரிந்துரைக்கப்பட்ட தீர்வை/வரி செலுத்தும் ஆவணங்களை வைத்திருக்கிறீர்கள்.Illustration for Unregistered Manufacturer_3
  • விலைவிவரப் பட்டியல்கள் அல்லது உள்ளீடுகளுக்கான ஏதேனும் வேறு பரிந்துரைக்கப்பட்ட தீர்வை/வரி செலுத்தும் ஆவணங்களின் தேதியானது, ஜிஸ்டிக்கு மாறும்தேதியிலிருந்து 12 மாதங்களுக்குள் இருக்க
   வேண்டும்.
   Illustration for Unregistered Manufacturer_2 (3)
  • சேவைகளின் சப்ளையர் இந்த சட்டத்தின் எந்த தொகை குறைப்புக்கும் தகுதி பெற மாட்டார்.

 

இதை ஒரு எடுத்துக்காட்டு மூலம் நாம் புரிந்துகொள்வோம்

ரவிந்த்ரா ஆட்டோமொபைல்ஸ் கார்கள் மற்றும் கார் உதிரிப் பாகங்களுக்கான ஒரு பதிவு செய்யப்பட்ட உள்நாட்டு டீலர் ஆவார்கள். 1 மார்ச், 2017 அன்று, ரவிந்த்ரா ஆட்டோமொபைல்ஸ் உதிரிப் பாகங்களை வாங்கியது, அந்த பரிவர்த்தனைகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தேதிகையிருப்புப் பொருள்அளவுவிலை / அளவுமொத்த மதிப்புவேட் (VAT) வரி @ 14.5%ஆயத்தீர்வை 12.5%
01-03-2017உதிரிப் பாகங்கள்501500 / அளவு எண்ணிக்கை75,00010,8759,375

 

31 மார்ச், 2017 அன்று, ரவிந்த்ரா ஆட்டோமொபைல்ஸிடம் இருந்த உதிரிப் பாகங்களின் இறுதிக் கையிருப்பு 30 ஆகும்.

     • தற்போதைய வரி அமைப்பின்படி, ரவிந்த்ரா ஆட்டோமொபைலுக்கு ரூ. 10,875 மதிப்பிலான உள்ளீட்டு வேட் (VAT) கிரெடிட்டாக கிடைக்கலாம். மேலும் இந்த தொகையை வெளியீட்டு வேட்டுக்கு (VAT) எதிராக அமைக்கலாம். இருப்பினும் ஆயத்தீர்வை உள்ளீடு வரி கிரெடிட்டாக அனுமதிக்கப்படாது. எனவே அது தயாரிப்புச் செலவுடன் சேர்க்கப்படுகின்றது. இப்போது ஜிஸ்டிக்கு மாறும்போது, ரவிந்த்ரா ஆட்டோமொபைல்ஸ்க்கு அவர்கள் வைத்துள்ள இறுதிக் கையிருப்பின் மீது ஆயத்தீர்வையின் உள்ளீட்டு வரி கிரெடிட் கிடைக்க அனுமதிக்கப்படும்.

மேலே உள்ள எடுத்துக்காட்டை கருத்தில் எடுத்துக்கொண்டு உள்ளீட்டு வரி கிரெடிட் கிடைக்கக்கூடிய, இறுதிக் கையிருப்பின் மீதான ஆயத்தீர்வையை கணக்கிடுவோம்.

31-3-2017 அன்றைய இறுதிக் கையிருப்பு30
யூனிட் ஒன்றுக்கான தீர்வை (மொத்த ஆயத்தீர்வை 9,375 / அளவு 50)187.5 / யூனிட்
இறுதிக் கையிருப்பின் மீது மீதியுள்ள வரி (யூனிட் ஒன்றுக்கான தீர்வை 187.5 * இறுதிக் கையிருப்பு 30)5,625

 

இப்போது, ரவிந்த்ரா ஆட்டோமொபைல்ஸுக்கு தங்களிடம் உள்ள இறுதிக் கையிருப்பின் மீது ரூ. 5,625 மதிப்பிலான ஆயத்தீர்வை கிடைக்கலாம் என தெரியும், ஆனால் அதைப் பெற அவர்கள் தகுதி பெற்றுள்ளார்களா?

அதற்குத் தகுதிபெற, ரவிந்த்ரா ஆட்டோமொபைல்ஸ் பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்:

 1. இறுதிக் கையிருப்பு வரிசெலுத்தக்கூடிய சப்ளைகளுக்காக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் அல்லது பயன்படுத்தப்படும் நோக்கத்துடன் இருக்க வேண்டும்.
  ஆமாம், இறுதிக் கையிருப்பான 30 தை, வரி செலுத்தக்கூடிய சப்ளைகளுக்காக பயன்படுத்தப்படும்.
 2. இம்மாதிரியான கிரெடிட்டுக்கான பலன் குறைக்கப்பட்ட விலைகள் மூலமாக பெறுபவரிடம் பரிமாற்றப்பட வேண்டும்.
  உள்ளீட்டு கடன் கிரெடிட் கிடைப்பதால், ரவிந்த்ரா ஆட்டோமொபல்ஸ் இனிமேல் இதை தயாரிப்புச் செலவில் சேர்க்க வேண்டியதில்லை. இதன் விளைவாக அடிப்படைச் செலவு குறையும், இதனால் விலையிலும் குறைப்பு இருக்கும்.
 3. இவர்கள் ஜிஎஸ்டீயின் கீழ் உள்ளீட்டு கடன் கிரெடிட்டுக்கு தகுதி பெற்றுள்ளார்கள்.
 4. இவர்கள் விலைவிவரப் பட்டியல்கள் அல்லது உள்ளீடுகளுக்கான (ஓரளவு முழுமையடைந்த சரக்குகள் மற்றும் முழுதாக முழுமையடைந்த சரக்குகள் உள்ளிட்டவை) ஏதேனும் வேறு பரிந்துரைக்கப்பட்ட தீர்வை/வரி செலுத்தும் ஆவணங்களை வைத்திருதல்
  ரவிந்த்ரா ஆட்டோமொபைல்ஸ் இறுதிக் கையிருப்பு 30-க்காக தங்கள் சப்ளையரால் (உற்பத்தியாளர்) வழங்கப்பட்ட விதி 11 விலைவிவரப் பட்டியலைப் பெற்றுள்ளார்கள்.
 5. விலைவிவரப் பட்டியல்கள் அல்லது உள்ளீடுகளுக்கான ஏதேனும் வேறு பரிந்துரைக்கப்பட்ட தீர்வை/வரி செலுத்தும் ஆவணங்களின் தேதியானது ஜிஸ்டிக்கு மாறும் தேதியிலிருந்து 12 மாதங்களுக்குள் இருக்க வேண்டும்.
  1-3-2017 தேதியில் வாங்கப்பட்டவைகளுக்கு எதிராக இறுதிக் கையிருப்பு 30 உள்ளது, இந்த தேதி 12 மாதங்களுக்குள் இருக்கின்றது, ஜிஸ்டீ 1-4-2017 அன்று செயல்படுத்தப்படும் என கருதப்படுகின்றது.

ரவிந்த்ரா ஆட்டோமொபைல்ஸ் மேற்கண்ட அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்திச் செய்கின்றது, எனவே அவர்கள் சிஜிஎஸ்டி உள்ளீட்டு வரி கிரெடிட்டாக ரூ. 5,625 மதிப்பிலான ஆயத்தீர்வை கிடைக்க தகுதி பெற்றுள்ளார்கள்.

 

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

287,735 total views, 29 views today