பில்-டூ-ஷிப்-டூ மாதிரியில், சரக்குகளுக்கான பில்லிங் மற்றும் ஷிப்பிங் ஆகியவை இரண்டு மாநிலங்களுக்கும், நிறுவனங்களுக்கும் செய்யப்படுகின்றன. ஒரு பரிவர்த்தனையின்பொழுது பல்வேறு வரிகள் சேர்வதை தவிர்ப்பதற்காக, முதல் விற்பனை என்பது வரிக்கு உட்பட்டது ஆகும், மேலும் பொருட்கள் கொண்டுசெல்லப்படும் போது மேற்கொள்ளப்படும் அடுத்தடுத்த விற்பனைகளுக்கு வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இன்று, பில்-டூ-ஷிப்-டூ பரிவர்த்தனைகள் என்பது ஒரு பொதுவான நிகழ்வு ஆகும்.

பில்-டூ-ஷிப்-டூ பரிவர்த்தனைகளை ஒரு உதாரணத்துடன் புரிந்து கொள்வோம்.

கர்நாடகாவில் உள்ள மாருதி டிரேடர்ஸில் இருந்து மகாராஷ்டிராவில் உள்ள வன்பொருள் பொருட்களின் விற்பனையாளரான கணேஷ் டிரேடர்ஸ் ஒரு ஆர்டரைப் பெறுகிறார். 100 அலுமினிய ஏணிகளை தமிழ்நாட்டில் அமைந்துள்ள பிரைம் ஹார்ட்வேர்ஸுக்கு அனுப்ப வேண்டும் என்ற உத்தரவுடன் ஆர்டர் கொடுக்கப்படுகிறது. பிரைம் ஹார்ட்வேர்ஸ் என்பது மாருதி டிரேடர்ஸின் ஒரு வாடிக்கையாளர் ஆகும்.
இந்த பரிவர்த்தனைக்கு இரண்டு பகுதிகள் உள்ளன:

    • <பரிவர்த்தனையின் முதல் பகுதி – கணேஷ் டிரேடர்ஸ் மற்றும் மாருதி டிரேடர்ஸ் இடையே : கணேஷ் டிரேடர்ஸ் என்பது ஏணிகளின் சப்ளையர் ஆகும் மற்றும் மாருதி டிரேடர்ஸ் என்பவர் வாங்குபவர் ஆகும். அதன்படி, கணேஷ் டிரேடர்ஸ் என்பவர் மாருதி டிரேடர்ஸ்க்கு பரிவர்த்தனைக்காக பில்கள் அளிக்கிறார், மேலும் ஆர்டரின்படி, தமிழ்நாட்டில் அமைந்துள்ள பிரைம் ஹார்ட்வேர்ஸுக்கு பொருட்களை அனுப்புகிறார்.
    • பரிவர்த்தனையின் இரண்டாம் பகுதி – மாருதி டிரேடர்ஸ் மற்றும் பிரைம் ஹார்ட்வேர்ஸ் இடையே:மாருதி டிரேடர்ஸ் என்பது சப்ளையர் ஆகும் மற்றும் பிரைம் ஹார்ட்வேர்ஸ் என்பது வாங்குபவர் ஆகும். மாருதி டிரேடர்ஸ் என்பவர் பிரைம் ஹார்ட்வேர்ஸுக்கு பரிவர்த்தனைக்காக பில்கள் அளிக்கிறார் மற்றும் பிரைம் ஹார்ட்வேர்ஸுக்கு அனுப்பிய லாரி இரசீது (கணேஷ் டிரேடர்ஸால் ஒரு லாரியில் சரக்கேற்றப்படுதல்) அளிக்கிறார். இந்த லாரி இரசீது (எல்ஆர்) என்பது பிரைம் ஹார்ட்வேர்ஸ் பொருட்களை டெலிவரி எடுக்க உதவும்.

ஜிஎஸ்டீ-ல் பில்-டூ-ஷிப்-டூ பரிவர்த்தனையை புரிந்துகொள்வதற்கு முன்னர், இந்தப் பரிவர்த்தனைகளுக்கு தற்போதைய முறைப்படி எவ்வாறு வரி விதிக்கப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வோம்.
.

தற்போதைய முறை: பில்-டூ-ஷிப்-டூ பரிவர்த்தனைகளுக்கு எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது

பில்-டூ-ஷிப்-டூ பரிவர்த்தனைகளில், ஒரு முதல் விற்பனை மற்றும் ஒரு அடுத்தடுத்த விற்பனை ஆகியவை உள்ளது. தற்போதைய முறையில், பரிவர்த்தனையின் இரு பகுதிகளுக்கும் வரி விதிக்கப்பட வேண்டும் – கணேஷ் டிரேடர்ஸில் இருந்து மாருதி டிரேடர்ஸுக்கான முதல் விற்பனையிலும், மாருதி டிரேடர்ஸில் இருந்து பிரைம் ஹார்ட்வேர்ஸுக்கான அடுத்த அடுத்த விற்பனையிலும்.
இருப்பினும், பரிவர்த்தனையின்பொழுது பல முறைகள் வரி கணக்கிடப்படுவதைத் தவிர்க்க, அடுத்தடுத்த விற்பனைக்கு விலக்குகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், இந்த விதிவிலக்குகளானது, பரிந்துரைக்கப்பட்ட படிவங்களை வழங்குவதற்கு உட்பட்டவை ஆகும். அடுத்தடுத்த விற்பனைக்கு விலக்கு பெற, ஒரு அறிவிப்பு படிவம் E1 என்பது முதல் விற்பனையாளரால் வழங்கப்பட வேண்டும், மற்றும் 2% என்ற குறைவான வட்டி வீதத்தில் CST விதிக்கப்பட C- படிவமானது வாங்குபவரால் வழங்கப்பட வேண்டும்.
இதை ஒரு விளக்கத்துடன் புரிந்து கொள்வோம்.

Bill to ship to transactions in GST

மேலே கூறப்பட்டுள்ள விளக்கத்தில், கணேஷ் டிரேடர்ஸ் என்பது மாருதி டிரேடர்ஸுக்கு பில்கள் அளிக்கிறது மற்றும் பிரைம் ஹார்ட்வேர்ஸுக்கு பொருட்களை அனுப்புகிறது. கணேஷ் டிரேடர்ஸ் என்பது மாருதி டிரேடர்ஸுக்கு படிவம் E1-ஐ வழங்குகிறது, மேலும் 2% @ CST பெறுவதற்கான C படிவத்தை மாருதி டிரேடர்ஸ் சமர்ப்பிக்கிறது. பின்னர், மாருதி டிரேடர்ஸ் என்பது வரி எதுவும் வசூலிக்காமல் C படிவத்தின்படி பிரைம் ஹார்ட்வேர்ஸுக்கு பில்கள் அளிக்கிறது மற்றும் பிரைம் ஹார்ட்வேர்ஸுக்கு லாரி ரெசிப்ட்டை அளிக்கிறது.

ஜிஎஸ்டீ-யின்கீழ் பில்-டூ-ஷிப்-டூ பரிவர்த்தனைகள்

ஜிஎஸ்டீ-யின்கீழ், சரக்குகள் சப்ளை செய்யப்படும் இடம் என்பது, பரிவர்த்தனையானது மாநிலங்களுக்கு உள்ளேயா அல்லது மாநிலங்களுக்கு இடையிலா என்பதைத் தீர்மானிக்க மிகவும் முக்கியமானது ஆகும். அதன்படி, பொருந்தும் வரிகளை விதிக்கலாம் . ஜிஎஸ்டீ-ல் சப்ளைக்கான இடம் என்னஎன்ற எங்களின் வலைப்பதிவில் சப்ளைக்கான இடம் பற்றி விரிவாக விவாதித்துள்ளோம்.

Under GST, the place of supply of goods is very critical to determine the transaction as interstate or intrastate. Click To Tweetஜிஎஸ்டீ-யின்கீழ், சரக்குகள் சப்ளை செய்யப்படும் இடம் என்பது, பரிவர்த்தனையானது மாநிலங்களுக்கு உள்ளேயா அல்லது மாநிலங்களுக்கு இடையிலா என்பதைத் தீர்மானிக்க மிகவும் முக்கியமானது ஆகும்.
ஜிஎஸ்டீ-ல், சரக்குகளானது ஒரு மூன்றாவது நபர் மூலமாக பெறுநருக்கு சப்ளையரால் சப்ளை செய்யப்பட்டால், அந்த மூன்றாவது நபர் சரக்குகளைப் பெற்றுள்ளதாகவும், மற்றும் சப்ளையின் இடம் என்பது அத்தகைய மூன்றாம் நபர் வணிகம் செய்யும் இடமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. இதை ஒரு உதாரணத்துடன் புரிந்து கொள்வோம்.

Managing bill to ship to transactions under GST

கணேஷ் டிரேடர்ஸ் என்பது மகாராஷ்டிராவில் உள்ள ஒரு வன்பொருள் பொருட்கள் டீலர் ஆகும். அவர்கள், கர்நாடகாவில் அமைந்துள்ள மாருதி டிரேடர்ஸில் இருந்து ஒரு ஆர்டரைப் பெறுகின்றனர். 100 அலுமினிய ஏணிகளை தமிழ்நாட்டில் அமைந்துள்ள பிரைம் ஹார்ட்வேர்ஸுக்கு அனுப்ப வேண்டும் என்ற உத்தரவுடன் ஆர்டர் கொடுக்கப்படுகிறது.
உதாரணத்தில், மாருதி டிரேடர்ஸில் இருந்து பெற்ற ஆர்டரின்படி, கணேஷ் டிரேடர்ஸ் என்பவர் தமிழ்நாட்டில் அமைந்துள்ள பிரைம் ஹார்ட்வேர்ஸுக்கு அலுமினிய ஏணிகளை அனுப்புகிறார். இங்கே, மாருதி டிரேடர்ஸ் என்பது மூன்றாவது நபராக கருதப்படுகிறார்கள். ஆகையால், சப்ளையின் இடம் என்பது மூன்றாவது நபரின் வணிகத்தின் முக்கிய இடமாக இருக்கும் கர்நாடகா ஆகும். அதன்படி, கணேஷ் டிரேடர்ஸ் என்பது மாருதி டிரேடர்ஸ் நிறுவனத்திற்கான பில்லிங் மீது IGST-ஐ வசூலிக்கிறது. மாருதி டிரேடர்ஸ் மற்றும் பிரைம் ஹார்ட்வேர்ஸ் இடையேயான பரிவர்த்தனைகளின் இரண்டாவது பகுதியானது மாநிலங்களுக்கு இடையே இருக்கிறது, எனவே அதற்கும் IGST வரி விதிக்கப்படும்.

பல்வேறு சூழல்களுடன் மேலும் இது குறித்து விவாதிக்கலாம்.

சூழல் 1
விவரங்கள் சப்ளையர் மூன்றாவது நபர் பெறுநர் சப்ளை இடம் பரிவர்த்தனைகளின் வகை
மாநிலம்மகாராஷ்டிராமகாராஷ்டிராகர்நாடகாமகாராஷ்டிராமாநிலத்திற்குள்
நபரின் பெயர்கணேஷ் டிரேடர்ஸ்மாருதி டிரேடர்ஸ்பிரைம் ஹார்ட்வேர்ஸ்

Calculation of GST on bill to ship to transactions

உதாரணத்தில், மாருதி டிரேடர்ஸில் இருந்து பெற்ற ஆர்டரின்படி, கணேஷ் டிரேடர்ஸ் என்பது அலுமினிய ஏணிகளை கர்நாடகாவில் அமைந்துள்ள பிரைம் ஹார்ட்வேர்ஸுக்கு அனுப்புகிறது. இங்கே, மாருதி டிரேடர்ஸ் என்பது மூன்றாவது நபராக கருதப்படுகிறார்கள். எனவே, சப்ளையின் இடம் என்பது மூன்றாவது நபரின் வணிகத்தின் முக்கிய இடமாக இருக்கும் மகாராஷ்டிரா ஆகும். அதன்படி, கணேஷ் டிரேடர்ஸ் என்பது மாருதி டிரேடர்ஸுக்கு பில்லிங் மீது CGST + SGST-ஐ வசூலிக்கிறது. மாருதி டிரேடர்ஸ் மற்றும் பிரைம் ஹார்ட்வேர்ஸுக்கு இடையேயான பரிவர்த்தனைகளின் இரண்டாவது பகுதி என்பது மாநிலங்களுக்கு இடையேயானது ஆகும், அதனால் IGST வரி விதிக்கப்படும்.

சூழல் 2
விவரங்கள் சப்ளையர் மூன்றாவது நபர் பெறுநர் சப்ளை இடம் பரிவர்த்தனைகளின் வகை
மாநிலம் மகாராஷ்டிராகர்நாடகாகர்நாடகாகர்நாடகாமாநிலங்களுக்கு இடையேயான
நபரின் பெயர் கணேஷ் டிரேடர்ஸ்மாருதி டிரேடர்ஸ்பிரைம் ஹார்ட்வேர்ஸ்

Bili to ship to examples

மேற்கண்ட சூழலில், கர்நாடகா மாநிலமானது மூன்றாவது நபரின் வணிகத்தின் முக்கிய இடமாகும். மேலும், சப்ளை செய்யப்படும் இடமும் கர்நாடகா ஆகும். இது ஒரு மாநிலங்களுக்கு இடையேயான பரிவர்த்தனை ஆகும், எனவே IGST-க்கு பொறுப்பாகும். மாருதி டிரேடர்ஸ் மற்றும் பிரைம் ஹார்ட்வேர்ஸுக்கு இடையேயான பரிவர்த்தனைகளின் இரண்டாவது பகுதி என்பது மாநிலத்திற்குள் நடப்பது ஆகும், அதனால் CGST + SGST வரி விதிக்கப்படும்.

<ahref=”http://blogs.tallysolutions.com/how-gst-different-from-current-tax-structure/” target=”_blank”>CGST, SGST மற்றும் IGST குறித்து விரிவாகப் புரிந்துகொள்ள, இந்த வலைப்பதிவைப் படிக்கவும்.

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

198,546 total views, 331 views today

Yarab A

Author: Yarab A

Yarab is associated with Tally since 2012. In his 7+ years of experience, he has built his expertise in the field of Accounting, Inventory, Compliance and software product for the diverse industry segment. Being a member of ‘Centre of Excellence’ team, he has conducted several knowledge sharing sessions on GST and has written 200+ blogs and articles on GST, UAE VAT, Saudi VAT, Bahrain VAT, iTax in Kenya and Business efficiency.