1. வழங்கலில் சரக்குகளின் இடமாற்றம் இல்லாத நிலையில், பெறுபவருக்கு விநியோகிக்கப்படும் நேரத்தில் சரக்குகளின் இருப்பிடமே வழங்கல் (சப்ளை) இடம் ஆகும்.

எடுத்துக்காட்டாக: சென்னை, தமிழ்நாடு-ல் பதிவு செய்யப்பட்டுள்ள வணிக இடத்தைக் கொண்டுள்ள ரெக்ஸ் கார்ஸ் நிறுவனம், மைசூர், கர்நாடகா-ல் ஒரு ஷோரூமை திறக்கின்றது. அவர்கள் மைசூர், கர்நாடகா-ல் உள்ள ரோஹன் ஜெனரேட்டர்ஸ் நிறுவனத்தில் முன்கூட்டியே நிறுவப்பட்ட ஜெனரேட்டர் ஒன்றை வாங்குகிறார்கள்.

வழங்குபவரின் (சப்ளையர்) இடம்: மைசூர், கர்நாடகா

வழங்கல் (சப்ளை) இடம்: ஜெனரேட்டரின் வழங்கலுக்கு இடமாற்றம் தேவைப்படாது. எனவே வழங்கல் (சப்ளை) இடம் மைசூர், கர்நாடகா ஆகும்.

இது ஒரு மாநிலத்திற்குள்ளான வழங்கல் ஆகும். பொருந்தும் வரிகள் சிஜிஎஸ்டீ மற்றும் எஸ்ஜிஎஸ்டீ ஆகும்.

When supply does not involve movement of goods, the location of the goods at the time of delivery to the recipient is the place of supplyClick To Tweet

GST for transactions involving no movement of goods

2. சரக்குகள் அவ்விடத்தில் இணைக்கப்படும்போது அல்லது நிறுவப்படும்போது, இணைக்கப்படும் அல்லது நிறுவப்படும் இடமே வழங்கல் (சப்ளை) இடம் ஆகும்
When the goods are assembled or installed at site, the place of assembly or installation is the place of supplyClick To Tweet

எடுத்துக்காட்டாக: சென்னை, தமிழ்நாடு-ல் பதிவு செய்யப்பட்டுள்ள வணிக இடத்தைக் கொண்டுள்ள ரெக்ஸ் கார்ஸ் நிறுவனம், ஹைதராபாத், தெலுங்கானா-ல் ஒரு கிளையை திறக்கின்றது. இந்நிறுவனம் சென்னை, தமிழ்நாடு-ல் பதிவு செய்யப்பட்டுள்ள வணிக இடத்தைக் கொண்டுள்ள ரான் லிப்ஃட்ஸ் நிறுவனத்தில் தன் கிளையில் நிறுவப்பட வேண்டிய ஒரு லிஃப்டை வாங்குகின்றது.

வழங்குபவரின் (சப்ளையர்) இடம்: சென்னை, தமிழ்நாடு

வழங்கல் (சப்ளை) இடம்: லிஃப்ட் ஹைதராபாத், தெலுங்கானா-ல் உள்ள ரெக்ஸ் கார்ஸின் இடத்தில் இணைக்கப்பட்டு நிறுவப்படுகின்றது. எனவே, வழங்கல் (சப்ளை) இடம் ஹைதராபாத், தெலுங்கானா ஆகும்.
இது ஒரு மாநிலங்களுக்கு இடையேயான வழங்கல் ஆகும். பொருந்தும் வரிகள் ஐஜிஎஸ்டீ ஆகும்.

Determining GST for goods assembled or installled

3. சரக்குகள் அனுப்பப்படுவதற்காக ஒரு வாகனத்தில் (கப்பல், விமானம், இரயில் அல்லது வேறு ஏதேனும் வாகனம்) வழங்கப்படும்போது, சரக்குகள் வாகனத்தில் ஏற்றப்படும் இடமே வழங்கல் (சப்ளை) இடம் ஆகும்
When the goods are supplied on board a mode of conveyance, the location at which the goods are taken on board is the place of supplyClick To Tweet

எடுத்துக்காட்டாக: ஒரு நபர் கொல்கத்தாவிலிருந்து ஹைதராபாத்திற்கு பயணிக்கும் ஒரு விமானத்தில் அனுப்பப்படும் இன்-ஃப்ளைட் ஷாப்பிங் கேட்டலாக் மூலம் ஒரு பவர் பேங்கை வாங்குகிறார். விமான நிறுவனம் கொல்கத்தாவில் பதிவு செய்யப்பட்டுள்ள வணிக இடத்தைக் கொண்டுள்ளது மேலும் பவர் பேங்க் விமானத்தில் கொல்கத்தாவில் ஏற்றப்படுகின்றது.
வழங்குபவரின் (சப்ளையர்) இடம் கொல்கத்தா, மேற்கு வங்காளம்
வழங்கல் (சப்ளை) இடம்: கொல்கத்தா, மேற்கு வங்காளம்
இது ஒரு மாநிலத்திற்குள்ளான வழங்கல் ஆகும். பொருந்தும் வரிகள் சிஜிஎஸ்டீ மற்றும் எஸ்ஜிஎஸ்டீ ஆகும்.
GST for goods supplied on board a mode of conveyance

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

105,795 total views, 43 views today