நமது முந்தைய வலைப்பூ பதிவில் ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி வரவைப் பெறுவதற்கான நிபந்தனைகள் மற்றும் எந்தெந்தச் சூழ்நிலைகளில் உள்ளீட்டு வரி வரவை (ஐடிசி) ( ITC) பெற இயலும் என்பது குறித்து நாம் அறிந்தோம். இந்த வலைப்பூ பதிவில் உள்ளீட்டு வரி வரவை நீங்கள் பெற இயலாத சூழ்நிலைகள் குறித்து நாம் கலந்துரையாடுவோம்.

1.நீங்கள் பதிவு செய்ய வேண்டிய தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் பதிவுக்கு விண்ணப்பிக்காத போது

நீங்கள் பதிவு செய்ய வேண்டிய தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் நீங்கள் பதிவுக்கு விண்ணப்பிக்காமல் இருந்தால், நீங்கள் வரி செலுத்த வேண்டிய தேதிக்கு முந்தைய நாளன்று, உள்ளீடுகள் மற்றும் பகுதி நிறைவடைந்த சரக்குகள் மற்றும் இருப்பில் உள்ள முழுவதும் நிறைவடைந்த சரக்குகளில் உள்ள உள்ளீடுகள் ஆகியவற்றில் உங்களுக்குத் தகுதியான ஐடிசி-ஐ இழந்துவிடுவீர்கள்.

2.உள்ளீட்டு வரி வரவைப் பெறுவதற்கான கால வரம்பைக் கடந்த பிறகு

பின்வரும் தேதிகளில் முன்கூட்டியே ஐடிசி கட்டாயம் பெறப்பட வேண்டும்-
• இரசீது வழங்கப்பட்ட தேதியிலிருந்து 1 வருடம்
அல்லது
• அடுத்த நிதியாண்டின் செப்டம்பர் மாதத்துக்கு ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டிய தேதி
அல்லது
• வருடாந்திர ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டிய தேதி (கடைசி தேதி என்பது அடுத்த நிதியாண்டின் டிசம்பர் 31ம் தேதி)

இதை ஒரு உதாரணத்துடன் புரிந்துகொள்வோம்.

உதாரணம்: ராஜேஷ் அப்பேரல் பிரைவேட் லிமிடெட் ஆண்களுக்கான ஆடைகளின் முகவர் ஆவார். அவர்கள் 15 ஜூலை 2017 அன்று ரூ.1,00,000 மதிப்புக்கு உற்பத்தியாளர்களிடமிருந்து ஆடைகளைக் கொள்முதல் செய்கிறார்கள். அந்தக் கொள்முதலுக்காகச் செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி ரூ.18,000 ஆகும். அவர்கள் 2017-18ம் வருடத்துக்கான வருடாந்திர ரிட்டன்களை 31 ஜூலை 2018 அன்று தாக்கல் செய்தனர், மேலும் செப்டம்பர் 2018க்கான ரிட்டன் 20 அக்டோபர் 2018 அன்று தாக்கல் செய்யப்பட்டது.

இங்கு சரிபார்க்கப்பட வேண்டிய மூன்று தேதிகளாவன-

இரசீது வழங்கப்பட்ட தேதியிலிருந்து 1 வருடம்14 ஜூலை 2018
அடுத்த நிதியாண்டின் செப்டம்பர் மாத்துக்கு ரிட்டன் தாக்கல் செய்யவேண்டிய தேதி20 அக்டோபர் 2018
வருடாந்திர ரிட்டன் தாக்கல் செய்யவேண்டிய தேதி31 ஜூலை 2018

மேலே கூறப்பட்ட தேதிகளில் முன்கூட்டியே வருவது இரசீது வழங்கப்பட்ட தேதியிலிருந்து 1 வருடம் அதாவது 14 ஜூலை 2018 என்பதால் உள்ளீட்டு வரி வரவு 14 ஜூலை 2018க்கு முன் கட்டாயம் பெறப்பட வேண்டு.ம்.

3.தொகுப்பு வரி செலுத்தும் ஒருவரால் உள்ளீடுகளாகப் பயன்படுத்தப்பட்ட சரக்குகள் மற்றும்/அல்லடுஹ் சேவைகள் மீது

தொகுப்பு வரி செலுத்தும் ஒருவர் உள்ளீடுகளாகப் பயன்படுத்திய சரக்குகள் மற்றும்/அல்லது சேவைகளின் மீது உள்ளீட்டு வரி வரவைப் பெற இயலாது.

உதாரணம்: லட்சுமி மளிகைக் கடை ஜிஎஸ்டி-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு தொகுப்பு வரி செலுத்துபவர். அவர்கள் உற்பத்தியாளர்களிடமிருந்து ரூ.20,000க்கு மளிகைப் பொருட்களைக் கொள்முதல் செய்கிறார்கள், அதற்கு 12% என்ற அளவில் விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி ரூ.2400 ஆகும். லட்சுமி மளிகைக் கடை பதிவு செய்யப்பட்ட ஒரு தொகுப்பு வரி செலுத்துபவர் என்பதால் கொள்முதல் மீதான உள்ளீட்டு வரி வரவான ரூ.2400-ஐ அவர்களால் பெற இயலாது. அவர்கள் செலுத்திய ஜிஎஸ்டி அவர்களது பொருட் செலவின் ஒரு பகுதியாகிவிடும்.

4. சொந்த உபயோகத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட சரக்குகள் மற்றும்/அல்லது சேவைகள் மீது

உதாரணம்: ராஜேஷ் அப்பேரல் பிரைவேட் லிமிடெட் உற்பத்தியாளரிடமிருந்து ரூ.50,000க்கு ஆடைகளைக் கொள்முதல் செய்தனர். கொள்முதல் மீது செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி ரூ.9,000 ஆகும். கொள்முதல் செய்யப்பட்ட ஆடைகளில் ரூ.2,000 மதிப்புள்ள ஆடைகளை உரிமையாளர் தனது சொந்த உபயோகத்துக்காக எடுத்துக்கொண்டார். மீதியுள்ள ஆடைகள் வாடிக்கையாளருக்கு விற்பனை செய்யப்பட்டது. இங்கு, கொள்முதல் மீது பெறப்படவேண்டிய உள்ளீட்டு வரி வரவு ரூ.8,640 (48,000*18%) ஆகும்.

5.விலக்களிக்கப்பட்ட வழங்கல்களைச் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட சரக்குகள் மற்றும்/அல்லது சேவைகள் மீது

விலக்களிக்கப்பட்ட வழங்கல்களைச் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட சரக்குகள் மற்றும்/அல்லது சேவைகள் மீதும், சரக்கைப் பெறுபவர் தலைகீழ் கட்டண் அடிப்படையில் வரி செலுத்தும் வழங்கல்களிலும் உள்ளீட்டு வரி வரவைப் பெற இயலாது.

உதாரணம்: நீங்கள் விலக்களிக்கப்பட்ட ஒரு சரக்கை உற்பத்தி செய்கிறீர்கள். 4 செப்டம்பர் 2017 அன்று நீங்கள் பின்வரும் உள்ளீடுகளை (விலக்களிக்கப்பட்ட் சரக்கை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்பட்டது) கொள்முதல் செய்கிறீர்கள்-

உள்வரும் வழங்கல்கள்- 4.9.2017
உள்ளீடுகள்மதிப்பு (ரூ.)@ 18%ல் (ரூ.) உள்ளீடுகள் மீது செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி
மூலப்பொருள் A3,00,00054,000
மூலப்பொருள் B30,000 5,400
மொத்தம்3,30,00059,400

இங்கு இந்த உள்ளீடுகள் விலக்களிக்கப்பட்ட ஒரு சரக்கை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்பட்டதால் உள்ளீட்டு வரி வரவான ரூ.59,400-ஐ நீங்கள் பெற இயலாது.

6. இரசீது தேதியிலிருந்து 3 மாதங்களுக்குள் கட்டணம் செலுத்தப்படாமல் இருக்கும் சேவைகள் மீது

ஒரு சேவையைப் பெற்றவர், அந்தச் சேவையைப் பெற்றதற்காக, இரசீது தேதியிலிருந்து 3 மாதங்களுக்குள் அந்தச் சேவைக்கான கட்டணத்தை, செலுத்த வேண்டிய வரியுடன் செலுத்தவில்லை எனில், பெறப்பட்ட உள்ளீட்டு வரி வரவானது, செலுத்த வேண்டிய வட்டியுடன் சேர்த்து பெறுபவரின் கணக்கில் சேர்க்கப்படும்.

உதாரணம்: நீங்கள் பட்டயக் கணக்காளர் ஒருவரிடமிருந்து தணிக்கை மற்றும் ஆலோசனை சேவைகளைப் பெற்றீர்கள். அந்தச் சேவையின் மதிப்பு ரூ.50,000 ஆகும் மற்றும் விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி ரூ.9,000 (@18%) ஆகும். இரசீது தேதியிலிருந்து 3 மாதங்களுக்குள் நீங்கள் கட்டணமான ரூ59,000-ஐ செலுத்தவில்லை எனில், நீங்கள் பெற்ற உள்ளீட்டு வரி வரவான ரூ.9,000 செலுத்தவேண்டிய வட்டியுடன் சேர்த்து உங்கள் கணக்கில் சேர்க்கப்படும்.

7.தொலைந்துபோன, திருட்டு போன, அழிக்கப்பட்ட, தள்ளுபடி செய்யப்பட்ட அல்லது பரிசாக வழ்ங்கப்பட்ட அல்லது இலவசப் பரிசுகளாக வழங்கப்பட்ட சரக்குகள் மீது

உதாரணம்: நீங்கள் ஒரு மின்னணு சரக்கு முகவர். 1 நவம்பர் 2017 அன்று ஒவ்வொன்று ரூ.25,000 என்ற விலையில் 20 கணினிகளை தயாரிப்பாளரிடமிருந்து கொள்முதல் செய்கிறீர்கள். விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி ரூ.90,000 (@18%) ஆகும். 2 நவம்பர் 2017 அன்று அந்தக் கணினிகளில் ஒன்று முற்றிலும் சேதமடைந்து பயன்படுத்தப்படாத நிலையை அடைகிறது. அந்தக் கணினி மீதான உள்ளீட்டு வரி வரவை அதாவது ரூ.4,500-ஐ நீங்கள் பெற இயலாது.

8. மோட்டார் வாகனம் மற்றும் பிற பயணப்படிகள் மீது

பின்வரும் சூழ்நிலைகள் இல்லாதவரை மோட்டார் வாகனங்கள் மீது உள்ளீட்டு வரி வரவு அனுமதிக்கப்படாது:

• மேலும் வழங்கப்படாதவரை அல்லது
• பயணிகள் அல்லது சரக்குகளை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தாதவரை அல்லது
• ஓட்டுதல், பறத்தல் அல்லது அத்தகைய வாகனங்களைச் செலுத்துவதற்குப் பயிற்சியளிக்க அல்லது போக்குவரத்துக்காகப் பயன்படுத்தாதவரை

உதாரணம்: கார் உற்பத்தியாளரான சூப்பர் கார்ஸ் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலை வளாகத்திற்குள் பணியாளர்களை அழைத்துச் செல்ல டெம்போ டிராவலரை வாங்கினார்கள். மேலே கூறப்பட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படாத காரணத்தால் சூப்பர் கார்ஸ் பிரைவேட் லிமிடெட் டெம்போ டிராவலர் மீது உள்ளீட்டு வரி வரவைப் பெற இயலாது.

நாம் மற்றொரு சூழ்நிலையைப் பரிசீலிப்போம். டூர் ஆப்பரேட்டரான முகேஷ் டிராவல்ஸ், தங்களுடைய பேக்கேஜ் டூர்களின்போது பயணிகளின் போக்குவரத்துக்காக ஒரு டெம்போ டிராவலரை வாங்கினார்கள். இங்கு முகேஷ் டிராவல்ஸ் டெம்போ டிராவலருக்கு உள்ளீட்டு வரி வரவைப் பெற இயலும், ஏனெனில் அது முகேஷ் டிராவல்ஸின் ஒரு தொழில் நடவடிக்கையான பயணிகளின் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது.

9. உணவு மற்றும் பானங்கள், வெளிப்புற உணவுச் சேவை, அழகுச் சிகிச்சை, உடல்நலச் சேவைகள், ஒப்பனை மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி மீது

உணவு மற்றும் பானங்கள், வெளிப்புற உணவுச் சேவை, அழகுச் சிகிச்சை, உடல் நலச் சேவைகள், ஒப்பனை மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி மீது உள்ளீட்டு வரி வரவைப் பெற இயலாது, ஒரே வகை சரக்குகள் அல்லது சேவைகளை வெளிப்புறத்தில் வழங்க அவை பயன்படுத்தப்பட்ட இடங்களைத் தவிர்த்து
உதாரணம்-1: சூப்பர் கார்ஸ் பிரைவேட் லிமிடெட், தனது பணியாளர்களுக்கு தீபாவளி கொண்டாட்டத்துக்காக ராகேஷ் கேட்டரிங் அவர்களின் சேவையைப் பெற்றது. கேட்டரிங் சேவை மீதான உள்ளீட்டு வரி வரவை சூப்பர் கார்ஸ் பிரைவேட் லிமிடெட் பெற இயலாது, ஏனெனில் அவர்களது தொழில் நடவடிக்கை கேட்டரிங் கிடையாது.

உதாரணம்-2: சூப்பர் கார்ஸ் பிரைவேட் லிமிடெட் அவர்களுக்கான கேட்டரிங் சேவையை வழங்கும் சமயத்தில் ராகேஷ் கேட்டரர்ஸ் சாமியான அமைப்பாளர் ஒருவரின் சேவையைப் பயன்படுத்துகிறார்கள். இங்கு ராகேஷ் கேட்டரர்ஸ் சாமியான சேவை மீதான உள்ளீட்டு வரி வரவைப் பெற இயலும், ஏனெனில் அவை ஒரே வகையான சேவையை வெளிப்புறத்தில் வழங்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

10.கிளப்கள் மற்றும் ஹெல்த் & ஃபிட்னெஸ் மையங்களின் உறுப்பான்மை, வாடகைக் கார் சேவைகள் மற்றும் பணியாளர்களுக்காக எடுக்கப்படும் ஆயுள் மருத்துவக் காப்பீடு மீது, பணியாளர்களுக்காகக் கட்டாயம் வழங்கப்பட வேண்டிய அறிவிக்கப்பட்ட சேவைகள் தவிர்த்து

உதாரணம்: டூர் ஆப்பரேட்டரான முகேஷ் டிராவல்ஸ், ப்ராதம் ஃபிட்னெஸ் மையம் என்னும் ஃபிட்னெஸ் மையத்தில் தனது பணியாளர்களின் பயன்பாட்டுக்காக வருடாந்திர உறுப்பான்மையை எடுக்கிறார். இங்கு முகேஷ் டிராவல்ஸ் உறுப்பான்மைக் கட்டணங்களுக்காகச் செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி மீதான உள்ளீட்டு வரி வரவைப் பெற இயலாது.

11.விடுமுறை அல்லது ஹோம் டிராவல் சலுகை போன்று விடுப்பில் செல்லும் பணியாளர்களுக்காக பயணச் சலுகைகள் மீது

உதாரணம்: சூப்பர் கார்ஸ் பிரைவேட் லிமிடெட் எல்டிஏ-ன் (விடுமுறை பயணச் சலுகை) ஒரு பகுதியாகத் தனது மூத்த பணியாளர்களின் பயணச் செலவுகளைத் திரும்ப வழங்குகிறது. திரும்ப வழங்கப்பட்ட பயணக் கட்டணத்துக்கான ஜிஎஸ்டி மீதான உள்ளீட்டு வரி வரவை சூப்பர் கார்ஸ் பிரைவேட் லிமிடெட் பெற இயலாது.

12.மூலதனச் சரக்குகளின் விலையின் வரிப் பகுதி மீது, வரிப் பகுதி மீது தேய்மானம்கோ ரப்பட்டிருந்தால்

வருமான வரி தாக்கலின் போது தேய்மானம் கோரப்பட்டிருந்தால், மூலதனச் சரக்குகளின் விலையின் வரிப்பகுதி மீது முதலீட்டு வரி வரவைப் பெற இயலாது.

உதாரணம்: சூப்பர் கார்ஸ் பிரைவேட் லிமிடெட் கார்களின் உற்பத்திக்குப் பயன்படுத்துவதற்காக ரூ.50,00,000க்கு இயந்திரங்களைக் கொள்முதல் செய்கிறது. இயந்திரங்கள் மீது செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி ரூ.9,00,000 ஆகும். சூப்பர் கார்ஸ் பிரைவேட் லிமிடெட் வருமான வரியின் கீழ் இயந்திரங்களுக்கு ரூ.59,00,000 தேய்மானம் கோருகிறது, அது ஜிஎஸ்டி பகுதியையும் உள்ளடக்குகிறது. இதில் சூப்பர் கார்ஸ் பிரைவேட் லிமிடெட் இயந்திரம் மீதான உள்ளீட்டு வரி வரவான ரூ.9,00,000-ஐ பெற இயலாது.

விதிவிலக்கான சூழ் நிலைகளில் ஏற்கனவே பெறப்பட்ட உள்ளீட்டு வரி வரவைக் கையாளுதல்

உள்ளீட்டு வரி வரவைப் பெற்ற சாதாரண முகவர் தொகுப்புத் திட்டத்துக்கு மாறும் போது

உள்ளீட்டு வரி வரவைப் பெற்ற சாதாரண முகவர் தொகுப்புத் திட்டத்துக்கு மாறும்போது, அந்த நபர் இருப்பு மீதான உள்ளீடுகள், பகுதி நிறைவடைந்த நிலையில் உள்ள உள்ளீடுகள், இருப்பில் உள்ள நிறைவடைந்த சரக்குகள் மற்றும் மூலதனச் சரக்குகள் (பரிந்துரைக்கப்பட்ட சதவீதப் புள்ளிகளால் குறைக்கப்பட்டது) ஆகியவற்றின் மீது பெறப்பட்ட உள்ளீட்டு வரி வரவை, தொகுப்புத் திட்டத்துக்கு மாறும் நாளுக்கு முந்தைய நாளன்று கட்டாயம் திருப்பிச் செலுத்த வேண்டும்

உதாரணம்: நீங்கள் சாதாரண முகவராகப் பதிவு செய்துள்ளீர்கள். உங்களின் விற்றுமுதல் ரூ.50 இலட்சங்களைத் தாண்டாததால் 1 செப்டம்பர் 2017 அன்று நீங்கள் தொகுப்புத் திட்டத்துக்கு மாறுகிறீர்கள். 31 ஆகஸ்டு 2017 அன்று நீங்கள் பின்வரும் உள்ளீடுகளை இருப்பில் பெற்றுள்ளீர்கள், அவற்றுக்கான உள்ளீட்டு வரி வரவு ஏற்கனவே பெறப்பட்டுவிட்டது-

இறுதி இருப்பு – 31.08.2017
உள்ளீடுகள்மதிப்பு (ரூ)@18%ல் உள்ளீடுகள் மீது செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி
மூலப்பொருள் A1,50,00027,000
மூலப்பொருள் B20,000  3,600
மொத்தம்1,70,00030,600

தொகுப்புத் திட்டத்துக்கு மாறும் சமயத்தில், இருப்பில் உள்ள உள்ளீடுகள் மீது பெறப்பட்ட உள்ளீட்டு வரி வரவான ரூ.30,600-ஐ நீங்கள் திரும்பச் செலுத்த வேண்டும்.

வரி விதிக்கத்தக்க சரக்குகள் மற்றும்/அல்லது சேவைகள் விலக்களிக்கப்படும் சமயத்தில்

ஒரு நபரால் வழங்கப்படும் சரக்குகள் மற்றும் அல்லது சேவைகள் விலக்களிக்கப்பட்டவையாக அறிவிக்கப்படும் சமயத்தில், அந்த நபர் இருப்பு மீதான உள்ளீடுகள், பகுதி நிறைவடைந்த நிலையில் உள்ள உள்ளீடுகள், இருப்பில் உள்ள நிறைவடைந்த சரக்குகள் மற்றும் மூலதனச் சரக்குகள் (பரிந்துரைக்கப்பட்ட சதவீதப் புள்ளிகளால் குறைக்கப்பட்டது) ஆகியவற்றின் மீது பெறப்பட்ட உள்ளீட்டு வரி வரவை தொகுப்புத் திட்டத்துக்கு மாறும் நாளுக்கு முந்தைய நாளன்று கட்டாயம் திருப்பிச் செலுத்த வேண்டும்

உதாரணம்: நீங்கள் வரிவிதிக்கத்தக்க ஒரு சரக்கை உற்பத்தி செய்கிறீர்கள், அதற்கு 15 செப்டம்பர் 2017 முதல் ஜிஎஸ்டி-இலிருந்து விலக்களிக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. 14 செப்டம்பர் 2017 அன்று நீங்கள் பின்வரும் உள்ளீடுகளை இருப்பில் பெற்றுள்ளீர்கள், அவற்றுக்கான உள்ளீட்டு வரி வரவு ஏற்கனவே பெறப்பட்டுவிட்டது-

இறுதி இருப்பு – 14.09.2017
உள்ளீடுகள்மதிப்பு (ரூ)@18%ல் உள்ளீடுகள் மீது செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி
மூலப் பொருட்கள்1,00,00018,000
பகுதி நிறைவடைந்த சரக்குகளில் உள்ள உள்ளீடுகள்50,000 9,000
மொத்த1,50,00027,000

இருப்பில் உள்ள உள்ளீடுகள் மீது பெறப்பட்ட உள்ளீட்டு வரி வரவு, அதாவது ரூ.27,000 திரும்பச் செலுத்தப்பட வேண்டும்.

குறிப்பு:ஜிஎஸ்டி விகிதங்கள் இதுவரையிலும் இறுதி செய்யப்படவில்லை, உதாரணத்தில் கூறப்பட்டுள்ள விகிதங்கள் விளக்கும் நோக்கத்துக்காக மட்டுமே தரப்பட்டுள்ளது.

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

129,664 total views, 3 views today