தொழில்நுட்ப உதவியுடன் இணங்குவது என்பது இந்தியாவில் முற்றிலும் ஒரு புதிய கருத்து அல்ல. 1990களில், வரி விதிக்கும் துறையானது வரி நிர்வாகத்திற்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது. இருப்பினும், இது பின்னிருந்து இயங்கும் முறையாக இருந்தது. ஆன்லைன் மூலம் வரித்தாக்கல் அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது, இந்த அணுகுமுறையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. இது பெரும்பாலும் பல்வேறு கணினி அமைப்புகள் இணைக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்டது, இதனால் வரி செலுத்துவோர் நேரடியாக வரித்துறையுடன் தொடர்புகொள்வதற்கு உதவியது.

தற்போதைய வரிவிதிப்பு முறையின்கீழ், தரவுகள் அல்லது தகவல்களானது அரசாங்கத்திற்கு ஒரே திசையில் செல்கிறது, இதை B-ல் இருந்து G-க்கு அல்லது வணிக நிறுவனத்தில் இருந்து அரசுக்கான தரவுகள் ஓட்டம் என்று விவரிக்க முடியும்.தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நேரம் மற்றும் செலவு கணிசமாக குறைந்துள்ளது, அதேநேரம் இணக்கத்தின் துல்லியம் பெரிதும் அதிகரித்துள்ளது.

ஜிஎஸ்டீ இணக்கத்திற்கான தொழில்நுட்பம் – இந்த முறை என்ன வித்தியாசமாக உள்ளது?

தொழில்நுட்பம் என்பது இணக்கமாக இருப்பதற்கான ஒரு உந்து சக்தியாக இருக்கும் இன்றைய காலகட்டத்தில், ஜிஎஸ்டீ-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான மற்றும் இணக்கமாக இருப்பதற்கான சரியான தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை என்ன? அரசாங்கம் மற்றும் வணிக நிறுவனம் ஆகிய இருதரப்பில் இருந்தும் ஜிஎஸ்டீ-ஐ நடைமுறைப்படுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில், தொழில்நுட்பம் ஏன் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது?
ஜிஎஸ்டீ உடன், அரசாங்கம் அடைய விரும்பும் இரண்டு முக்கிய இலக்குகள்:

வரி ஏய்ப்பைக் குறைத்தல்
• வரி செலுத்துவோர் பின்பற்ற வேண்டியதை எளிதாக்குதல்
நடைமுறையில் உள்ள வரி முறைகளில், அரசாங்கத்தால் வரி ஏய்ப்பைக் கண்டறிய முடியாத மற்றும் வரி வருவாய் இழப்பைக் கண்டறிய முடியாத
ஏராளமான சூழல்கள் உள்ளன. இதன் விளைவாக, விற்பனையாளரின் பொறுப்புக்கு எதிரான உள்ளீட்டு கிளைம்களைக் கண்காணிப்பது என்பது சம்பந்தப்பட்ட துறைக்கு ஒரு சவாலாக உள்ளது. உள்ளீட்டு வரி மீதான கிளைம்கள், மோசடியான கிளைம்கள், விற்பனையாளரால் அறிவிக்கப்பட்ட வரி பொறுப்புடன் தொடர்பில்லாத உள்ளீட்டு வரி மீதான கிளைம்கள், அல்லது தனது வரிப் பொறுப்பை செலுத்தாத விற்பனையாளர் என்று மோசடி செய்யும் ஏராளமான சூழல்கள் உள்ளன.
இதை சரிசெய்யும் பொருட்டு, ஜிஎஸ்டீ என்பது வாங்குபவர் மற்றும் விற்பனையாளர் ஆகியோரின் விலைப்பட்டியலைப் பொருத்திப்பார்க்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

It has been estimated that the taxpayer base under #GST is around 8 million Click To Tweetஜிஎஸ்டீ-ன்கீழ் வரிசெலுத்துவோர் சுமார் 8 மில்லியன் என்று கணிக்கப்பட்டுள்ளது. மாதாமாதம் பில்லியன் கணக்கான விலைப்பட்டியல்களை பொருத்திப் பார்க்க வேண்டியிருப்பதால், ஒரு வலுவான தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பின் உதவியுடன் இயங்கும் ஒரு நிகழ்நேர விலைப்பட்டியல் பொருத்தும் திறன் என்பது அவசியமாகிறது.
இந்த அளவிலான விலைப்பட்டியல்களை கைமுறையாக பொருத்திப்பார்ப்பது என்பது நிச்சயமாக முடியாது.

வரி செலுத்துவோர் பின்பற்ற வேண்டியதை எளிதாக்குவதில் ஜிஎஸ்டீஎன்-ன் பங்கு என்ன?

ஜிஎஸ்டீஎன் என்பது தற்போதைய அமைப்பில் இருந்து குறிப்பிடத்தகுந்த அளவிற்கு மாறுட்ட மாற்றங்களை அறிமுகப்படுத்துவதற்கான உலகத் தரம்வாய்ந்த தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒரு திறந்த ஏபிஐ (அப்ளிகேஷன் புரோகிராம் இன்டர்ஃபேஸ்) உடன் பொருத்தப்பட்டிருக்கும் ஜிஎஸ்டீஎன் சர்வர் என்பது வரி செலுத்துவோரால் பயன்படுத்தப்படும் மூன்றாம் தரப்பினரின் செயலிகளுடன் இணைக்கப்படும், இதன்மூலம் அனைத்து பயனருக்கான இடைமுகத்தையும் மற்றும் டெஸ்க்டாப், மொபைல்கள் மற்றும் டேப்லட்கள் வழியாக இணைக்கும் வசதியையும் வழங்குகிறது. இது போர்டலில் உள்நுழைவதற்குப் பதிலாக, தங்கள் மென்பொருளில் இருந்து தங்களின் விலைப்பட்டியலை தானாகவே பொருத்துவதற்கு வரி செலுத்துவோருக்கு உதவுகிறது. இது நேரத்தைச் மிச்சப்படுத்துகிறது, மற்றும் இணக்க நடைமுறைகளை எளிமையாக்குகிறது. ஜிஎஸ்டீ என்பது வழக்கமான இடைவெளியில் வருமானத்தை தாக்கல் செய்வதில் ஒரு ஒழுங்குமுறையை ஏற்படுத்துகிறது, மேலும் ஆட்டோமேஷன் என்பது வணிக நிறுவனங்கள் குறைந்த சிரமத்துடன் இதை அடைய உதவுகிறது.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன்மூலம், குறைந்த அளவிலான மனிதத் தலையீட்டுடன் அல்லது மனிதத் தலையீடு இல்லாமல், பதிவு செய்தல், ரிட்டர்ன் தாக்கல் செய்தல், தரவு பரிமாற்றம், மற்றும் பயனுள்ள விசாரணை, கண்காணிப்பு, தணிக்கை மற்றும் செயல்திறன் ஆய்வு ஆகியவற்றில் திறமையான வரி நிர்வாகம் செய்ய உதவுகிறது. இது ஆஃப்லைன் திறன்கள், திறன்கள் குறித்து எச்சரிக்கை செய்தல், மொபைல் / டேப்லெட் இடைமுகம் மற்றும் தரவுகளின் போலித்தன்மையைத் தவிர்ப்பதற்கான கூடுதல் வழிமுறைகள் போன்ற பல பயனருக்கு-உகந்த அம்சங்களை வழங்குகிறது.
இந்த வரி முறையானது இந்தியாவில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதால், ஆரம்பகட்ட நிலைகளின் போது தொழில் நிறுவனங்களானது பல சவால்களை எதிர்கொள்ளும். இருப்பினும், முறைமைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட பின்னர், இரண்டு முக்கிய குறிக்கோள்கள் உள்ளன- வரி ஏய்ப்புகளை கட்டுப்படுத்துதல் மற்றும் வரி வருவாயை அதிகரித்தல் மற்றும் வரி செலுத்துவோர் இணங்குவதற்கான முறைகளை எளிமைப்படுத்துதல் ஆகியவை அடையப்பட வேண்டும்.
இந்த மாற்றத்தின் வெற்றி என்பது ஜிஎஸ்டீ இணக்கத்தின் உலகில் நம் நாடு வரலாறு படைக்க உதவுகிறது.

ஜூலை 1, 2017-ல் தொடங்கும் ஜிஎஸ்டீ என்பது, ஜிஎஸ்டீஎன் சர்வருடன் இசைவான இடைமுகம் கொண்ட தொழில்நுட்பத்தின் வலிமையில் பயணிக்கும். வணிக நிறுவனங்களானது அவற்றின் கையேடு முறைகளை தானியங்கு முறையாக மாற்ற வேண்டும், மற்றும் ஜிஎஸ்டீஎன் கணினியுடன் தொடர்பு கொள்ளும் வகையிலான, மற்றும் உடனடியாக, துல்லியமாக, மற்றும் நம்பகமான இணக்கத்திற்கு உதவும் வகையிலான மென்பொருளை நிறுவ வேண்டும்.

விலைப்பட்டியல் பொருத்திப் பார்த்தல் என்பது ஜிஎஸ்டீயின் மிக முக்கியமான தேவையாகும். ஜிஎஸ்டீ-யால் குறிப்பிடப்படும் தெளிவான காலக்கெடுவின் காரணமாக, இணக்கம் என்பது இனி ஒரு மாத இறுதி அல்லது காலாண்டு-இறுதிக்கான செயல்பாடாக இருக்காது. ஆகையால், கைமுறையாக அல்லது குறைவான-தொழில்நுட்பம் கொண்ட சிஸ்டத்தைப் பயன்படுத்தி விலைப்பட்டியல் பொருத்திப் பார்த்தல் மற்றும் பிற இணக்கம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை அடைய முடியாது. வேகம் மற்றும் துல்லியம் ஆகிய இரண்டும் முக்கியமானவை ஆகும்.
வணிக நிறுவனங்களானது ஜிஎஸ்டீஎன் அமைப்புடன் அடிக்கடி தொடர்பு கொள்ளத் தொடங்க வேண்டும். இதற்கு ஒரு ஜிஎஸ்டீஎன்- செயலாக்கப்பட்ட வணிக செயலி அல்லது கணக்கியல் மென்பொருள் தேவைப்படுகிறது, இதன் மூலம் பணியானது எளிதாகவும், செயல்திறன்மிக்கதாகவும் ஆகும்.
ஒரு வணிக நிறுவனமாக, நீங்கள்:

    • ஜிஎஸ்டீ-ல் தொழில்நுட்பத்தின் தாக்கத்தையும், மற்றும் உங்கள் வணிகத்தில் தொழில்நுட்பத்தின் தாக்கத்தையும் புரிந்து கொள்ள முயற்சிக்கவும்
    • இணங்கும் ஒழுக்கத்திற்கான தேவைக்கு மதிப்பளிக்க வேண்டும்
    • இணக்கத்தை அடைய உதவும் மென்பொருளின் சரியான தேர்வில் கவனம் செலுத்தவும்

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

85,946 total views, 414 views today

Yarab A

Author: Yarab A

Yarab is associated with Tally since 2012. In his 7+ years of experience, he has built his expertise in the field of Accounting, Inventory, Compliance and software product for the diverse industry segment. Being a member of ‘Centre of Excellence’ team, he has conducted several knowledge sharing sessions on GST and has written 200+ blogs and articles on GST, UAE VAT, Saudi VAT, Bahrain VAT, iTax in Kenya and Business efficiency.