(English) Language

  • English
  • Hindi
  • Marathi
  • Kannada
  • Telugu
  • Tamil
  • Gujarati

சமீபத்திய இடுகைகளை இணைத்துக்கொள்ள இந்த இடுகை 25 வது அக்டோபர் 2016 அன்று புதுப்பிக்கப்பட்டது.

ஒன்றிணைவே சரக்கு மற்றும் சேவை வரியின் முக்கிய அம்சமாகும்; மாநில மற்றும் மத்திய வரிகளின் ஒன்றிணைவாகும்.

இன்று என்ன நடைபெறுகின்றது என்பதனை கருத்தில் கொள்ளவும். மத்திய சுங்க வரி, சேவை வரி மற்றும் மதிப்பு கூட்டு வரிகளுக்குட்பட்ட ஒரு தயாரிப்பாளர் ஒவ்வொரு மாநிலமும் குறிப்பிடும் வகையினில் வரி தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. தயாரிப்பாளர், வரி தாக்கல், இணைப்புகள் மற்றும் சுங்க வரிக்கான பதிவேடுகள், சேவை வரி மதிப்பு கூட்டு வரி போன்றவற்றுடன் மாதந்தோறும், காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு தோறும் அவ்வப்போது கையாள வேண்டியுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரியினை இருத்துவதன் மூலம், நீங்கள் ஒரு வியாபாரியோ, தயாரிப்பாளரோ, மறு விற்பனையாளரோ அல்லது சேவை அளிப்பவரோ என்பது ஒரு பொருட்டல்ல, நீங்கள் சரக்கு மற்றும் சேவை வரியினை தாக்கல் செய்தால் மட்டுமே போதுமானது.

ஓ அப்படியா ! இது நன்றாக படுகின்றதே. பல வகையான சரக்கு மற்றும் சேவை வரி குறித்து நாம் புரிந்துகொள்வோம்.
சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் வரிசெலுத்துபவருக்கு, 19 வகையான படிவங்கள் உள்ளன. ஒவ்வொரு படிவத்திலும் உள்ள விவரங்களை ஈஃபைலிங் எனும் மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும். ஒவ்வொரு படிவத்தின் விவரங்களும் அதன் பயன்பாடு மற்றும் கால இடைவெளியுடன் கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

வழக்கமான வணிகர்

படிவவகைகால இடைவெளிஇறுதிதேதிஅளிக்கப்படவேண்டிய விவரங்கள்
படிவம் GSTR-1மாதந்தோறும்அடுத்து வரும் மாதத்தின் 10 -ம் நாள்வெளியே விநியோகிக்கப்பட்ட வரி பாதிப்பிற்க்குட்பட்ட சரக்கு மற்றும்/அல்லது சேவை குறித்த விவரங்களை அளிக்கவும்.
படிவம் GSTR-2Aமாதந்தோறும்அடுத்து வரும் மாதத்தின் 11 -ம் நாள்விநியோகிஸ்தரால் அளிக்கப்பட்ட படிவம் GSTR -1-ன் அடிப்படையில் உள் வாங்கப்பட்ட சரக்குகளின் விவரங்கள் பெறுபவருக்கு தானியக்க விரிவாக்க விவரங்கள் கிடைக்கப்பெறுகின்றது.
படிவம் GSTR-2மாதந்தோறும்அடுத்து வரும் மாதத்தின் 15 -ம் நாள்உள்ளீடு சரக்கின் மீதான வரிக்கடன், வரிக்குட்பட்ட உள்வாங்கிய சரக்கு மற்றும்/அல்லது சேவை குறித்த விவரங்கள். படிவம் GSTR-2A -ல் சேர்க்கை (கோரிக்கைகள்) அல்லது திருத்தங்கள் இருப்பின் அவற்றை படிவம் GSTR-2 -ல் சமர்ப்பிக்க வேண்டும்.
படிவம் GSTR-1Aமாதந்தோறும்அடுத்து வரும் மாதத்தின் 17 -ம் நாள்சேர்க்கை, திருத்தம் அல்லது நீக்கம் போன்ற வெளி விநியோக விவரங்கள் பெறுபவரால், படிவம் GSTR-2 -ல் விநியோகிஸ்தருக்கு அளிக்கப்படவேண்டும்.
படிவம் GSTR-3மாதந்தோறும்அடுத்து வரும் மாதத்தின் 20 -ம் நாள்வெளி விநியோக மற்றும் உள் விநியோக விவரங்களை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தொகையுடன் மாதாந்திர வரி தாக்கல் செய்ய வேண்டும்.
படிவம் GST MIS-1மாதந்தோறும்உள்ளீடு வரிக்கான கடன் கோரிக்கை மீதான ஒப்புகை, முரண்பாடு அல்லது இரட்டிப்பான நிலை குறித்த தொடர்பு
படிவம் GSTR-3Aபிரிவு 27 மற்றும் 31 -ன் கீழ் வரி தாக்கல் செய்ய தவறிய வரிக்குட்பட்ட நபருக்கு அறிவிப்பு
படிவம் GSTR-9வருடந்தோறும்அடுத்த நிதியாண்டு டிசம்பர் 31வருடாந்திர தாக்கல் – பெறப்பட்ட ITC மற்றும் செலுத்தப்பட்ட உள்ளூர் வெளிமாநில மற்றும் ஏற்றுமதி/இறக்குமதி உள்ளடக்கிய சரக்கு மற்றும் சேவைவரி விவரங்கள் அளிக்கவும்

 

கலப்பு வரி செலுத்துபவர்

செலுத்தும் வகைகால இடைவெளிஇறுதிதேதிஅளிக்கப்படவேண்டிய விவரங்கள்
படிவம் GSTR-4Aகாலாண்டுவிநியோகிஸ்தரால் அளிக்கப்பட்ட படிவம் GSTR -1 அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட கலப்பு திட்டத்தின் கீழ், பெறுபவருக்கு கிடைக்கப்பெற்ற உள்ளீடு சரக்குகளின் விவரங்கள்
படிவம் GSTR-4காலாண்டுஅடுத்து வரும் மாதத்தின் 18 -ம் நாள்அனைத்து வெளி விநியோக சரக்கு மற்றும் சேவைகள் விவரங்களை அளிக்கவும். இது படிவம் GSTR -4A-விலிருந்து தானியக்க விரிவாக்க விவரங்கள், செலுத்த வேண்டிய வரி மற்றும் செலுத்திய வரி உள்ளடக்கியது.
படிவம் GSTR-9Aவருடந்தோறும்அடுத்த நிதியாண்டு டிசம்பர் 31ஒருங்கிணைக்கப்பட்ட காலாண்டு வரி தாக்கல் விவரங்களை செலுத்தவேண்டிய வரித்தொகை விவரங்களுடன் அளிக்கவும்.

 

வெளிநாடு வாழ் வரி செலுத்துபவர்

செலுத்தும் வகைகால இடைவெளிஇறுதிதேதிஅளிக்கப்படவேண்டிய விவரங்கள்
படிவம் GSTR-5மாதந்தோறும்அடுத்து வரும் மாதத்தின் 20 -ம் நாள் அல்லது பதிவு காலாவதியான 7 நாட்கள் பிறகுஇறக்குமதி, வெளி விநியோகங்கள், பிரயோகிக்கப்பட்ட ITC, செலுத்தப்பட்ட வரி மற்றும் முடிவுறு சரக்குகள் விவரங்களினை அளிக்கவும்

 

உள்ளீடு சேவை விநியோகிஸ்தர்

செலுத்தும் வகைகால இடைவெளிஇறுதிதேதிஅளிக்கப்படவேண்டிய விவரங்கள்
படிவம் GSTR-6Aமாதந்தோறும்அடுத்து வரும் மாதத்தின் 11 -ம் நாள்உள்ளீடு விநியோக விவரங்கள் ISD பெறுநருக்கு விநியோகிஸ்தரால் அளிக்கப்பட்ட படிவம் GSTR-1 அடிப்படையில் அளிக்கப்படுதல்
படிவம் GSTR-6மாதந்தோறும்அடுத்து வரும் மாதத்தின் 13 -ம் நாள்விநியோகிக்கப்பட்ட உள்ளீடு கடன் விவரங்களை அளிக்கவும்

 

வரி பிடிப்பவர்

செலுத்தும் வகைகால இடைவெளிஇறுதிதேதிஅளிக்கப்படவேண்டிய விவரங்கள்
படிவம் GSTR-7மாதந்தோறும்அடுத்து வரும் மாதத்தின் 10 -ம் நாள்வரி பிடிமான விவரங்களை அளிக்கவும்
படிவம் GSTR-7Aமாதந்தோறும்வரி பிடிமான சான்றிதழ் தரவிறக்கம் செய்ய தயார் செய்யப்படவேண்டும்.வரி பிடிமான சான்றிதழ் –எந்த தொகையின் மீது வரி பிடிமானம் செய்யப்பட்டதோ அந்த தொகையினை குறித்துக்கொண்டு, பிடிமான தொகையினை உரிய அரசாங்கத்திடம் சேர்ப்பிக்கவும்.

 

ஈ-வணிகம்

செலுத்தும் வகைகால இடைவெளிஇறுதிதேதிஅளிக்கப்படவேண்டிய விவரங்கள்
படிவம் GSTR-8மாதந்தோறும்அடுத்து வரும் மாதத்தின் 10 -ம் நாள்ஈ-வணிக செயலர் மூலம் ஏற்படுத்தப்பட்ட விநியோக விவரங்கள் மற்றும் விநியோகம் மூலம் வசூலிக்கப்பட்ட வரிப்பணம் விவரங்கள்

 

மொத்த வருவாய் 2 கோடியாக அதிகரித்துள்ளது

செலுத்தும் வகைகால இடைவெளிஇறுதிதேதிஅளிக்கப்படவேண்டிய விவரங்கள்
படிவம் GSTR-9Cவருடந்தோறும்ஆண்டிற்கு, அடுத்த நிதியாண்டு 31 டிசம்பர்ஒப்புரவு அறிக்கை – முறையாக சான்றளிக்கப்பட்ட தணிக்கை செய்யப்பட்ட ஆண்டு கணக்கு மற்றும் ஒப்புரவு.

 

இறுதி தாக்கல்

பதிவு ஒப்படைக்கப்பட்ட அல்லது இரத்து செய்யப்பட்ட வரிக்குட்பட்ட நபருக்காக

செலுத்தும் வகைகால இடைவெளிஇறுதிதேதிஅளிக்கப்படவேண்டிய விவரங்கள்
படிவம் GSTR-10மாதந்தோறும்பதிவு செய்த 3 மாதங்களுக்குள் இரத்து செய்யப்பட்டிருப்பின்உள்ளீடு மற்றும் இருப்பிலுள்ள மூலதன பொருட்கள், செலுத்தப்பட்ட மற்றும் செலுத்த வேண்டிய வரி விவரங்களை அளிக்கவும்.

 

அரசு துறைகள் மற்றும் ஐக்கிய நாடு உறுப்புகள்

செலுத்தும் வகைகால இடைவெளிஇறுதிதேதிஅளிக்கப்படவேண்டிய விவரங்கள்
படிவம் GSTR-11மாதந்தோறும்அடுத்து வரும் மாதத்தின் 28 -ம் நாள்UIN எனப்படும் தனி அடையாள எண் கொண்டுள்ள நபரால் உள்ளீடு விநியோக விவரங்கள் அளிக்கப்படவேண்டும்.

 

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

148,295 total views, 5 views today

Yarab A

Author: Yarab A

Yarab is associated with Tally since 2012. In his 7+ years of experience, he has built his expertise in the field of Accounting, Inventory, Compliance and software product for the diverse industry segment. Being a member of ‘Centre of Excellence’ team, he has conducted several knowledge sharing sessions on GST and has written 200+ blogs and articles on GST, UAE VAT, Saudi VAT, Bahrain VAT, iTax in Kenya and Business efficiency.