ஜிஎஸ்டி என்றால் என்ன? அது எவ்வாறு வேலை செய்கிறது?

(English) Language

 • English
 • Hindi
 • Marathi
 • Kannada
 • Telugu
 • Tamil
 • Gujarati

சமீபத்திய மாற்றங்களை இணைத்துக்கொள்ள 2 டிசம்பர் 2016 அன்று இந்த பதிவு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் 122வது அரசியலமைப்பு மசோதா கிட்டத்தட்ட ஒருமித்தமாக நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 3, 2016 என்பது இந்திய வரிவிதிப்பு வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட நாளாக பதிவு செய்யப்படும். இது ஏப்ரல் 1, 2017 முதல் இந்தியாவில் ஜிஎஸ்டி (பொருட்கள் மற்றும் சேவைகள் வரி) நடைமுறைக்கு வர வழிவகுக்கிறது. பொருட்கள் மற்றும் சேவை வரி மசோதாவானது கடந்த தசாப்தத்தில் குறிப்பிடத்தக்க வகையில் பரிணமித்துள்ளது மற்றும் சுதந்திரம் அடைந்ததில் இருந்து இந்தியாவின் மிகப்பெரிய வரி சீர்திருத்தமாக கருதப்படுகிறது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியை 1.5 முதல் 2% வரை அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி-யானது பத்து மறைமுக வரிகளை உள்ளடக்கி, ‘ஒரே இந்தியா, ஒரே வரி’ என்ற புதிய யதார்த்தமாக உள்ளது மற்றும் இந்தியாவை ஒரு பொதுச் சந்தையாக ஆக்குகிறது. அடுக்குவீழ்ச்சி விளைவை நீக்கியது தவிர, எளிமைப்படுத்தப்பட்ட இணக்கத்தன்மை, தொழில்நுட்ப ஆதரவு மற்றும் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான செயல்பாடுகள் போன்ற நன்மைகளானது, ‘தொழில் புரிவதற்கு சுலபமானதாக’ ஆக்குவதற்கு பங்களிக்கிறது. எனினும், தற்போதுள்ள வணிக நடைமுறைகள் மாற்றத்திற்குள்ளாக வேண்டும் என்பதால், ஒரு வணிக வெற்றியானது, இந்த புதிய யதார்த்தத்தை புரிந்து ஏற்றுக்கொள்வதைப் பொறுத்தே இருக்கிறது.

பொருட்கள் மற்றும் சேவைகள் வரி என்பது இந்தியா முழுவதும் பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்கல் மீது விதிக்கப்படும் ஒரு விரிவான வரி ஆகும். ஜிஎஸ்டி (பொருட்கள் மற்றும் சேவைகள் வரி) என்பது ஒரு இலக்கு சார்ந்த நுகர்வு வரி ஆகும். தற்போதைய வரி செலுத்தும் நிகழ்வுகளான விற்பனை, உற்பத்தி அல்லது சேவை வழங்குதல் ஆகியவற்றுக்குப் பதிலாக பொருள்/சேவை வழங்கலுக்கு மட்டுமே வரி செலுத்த வேண்டும். வரைவு மாதிரி ஜிஎஸ்டி சட்டமானது முதலில் ஜூன் 2016-ல் பொது வெளியில் அறிமுகப்படுத்தப்பட்டது, அதன் பிறகு திருத்தப்பட்ட வரைவு சட்டமானது 26 நவம்பர், 2016-ல் பொது வெளியில் பகிரப்பட்டது. இது தொழில்கள், தொழிற்சாலை / வர்த்தக அமைப்புகள், தொழில் சங்கங்கள் ஆகியவை ஆரம்பகட்டத்திலேயே சரியான உள்ளீடுகளை வழங்குவதற்கும், மற்றும் இறுதி ஜிஎஸ்டி சட்டமானது எல்லா பிரச்சினைகளையும் களைந்து, மென்மையாக மாற்றம் அடைவதை உறுதிசெய்வதற்கும் சரியான நேரமாகும்

பின்னணி

இந்தியாவில் மறைமுக வரிவிதிப்பு முறையானது கடந்த 5 முதல் 6 தசாப்தங்களாக பல மாற்றங்களை பெற்றுவிட்டன. 1986-ல் மோட்வாட் திட்டம் அறிமுகம், கலால் வரி மற்றும் சேவை வரி இடையிலான கடன் கொடுக்கல்-வாங்கல் (2004), வாட் அறிமுகம் (2005 முதல்) ஆகியவை வரி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்துள்ளது, வரி செலுத்துவோருக்கான தடைகளைக் குறைத்துள்ளது மற்றும் அடுக்குவீழ்ச்சி விளைவை நீக்குகிறது, இதனால் நுகர்வோருக்கு பலனளிக்கிறது. இருப்பினும், இந்திய கூட்டாட்சி அமைப்பின் காரணமாக வரியானது மத்திய மற்றும் மாநில அரசு ஆகிய இருவர் மூலமும் நிர்வகிக்கப்படுகிறது. இந்த இரண்டு அமைப்புகளுக்கு இடையே வரவுகளை பயன்படுத்திக் கொள்ள வசதி இல்லாதிருப்பதால், இந்த அமைப்பில் பகுதி அடுக்குவீழ்ச்சி இன்னும் மீதமிருக்கிறது. இது போதாதென்று, பல முகவர்கள் ஈடுபடுவதன் காரணமாக இணங்கிச்செல்வதற்கான சுமையும் அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி-யானது இந்தியா முழுவதும் ஒரு ஒற்றை வரிவிதிப்பின்மூலம் இந்தப் பிரச்சினைகளுக்கு பதிலளிக்கிறது மற்றும் வரி கிரெடிட்டானது தங்குதடையில்லாமல் பாய்வதை உறுதி செய்கிறது. கருத்தியல் ரீதியாக, ஜிஎஸ்டி என்பது வாட் வரியை ஒத்ததாகும்; வரி என்பது விநியோகச் சங்கிலியின் ஒவ்வொரு புள்ளியிலும் மதிப்பு கூடுதலுக்கு மட்டுமே பொருந்தும் என்பது இதன் பொருளாகும்.

சிறப்பு அம்சங்கள்

ஜிஎஸ்டி-யின் (பொருட்கள் மற்றும் சேவைகள் வரி) சிறப்பம்சங்களில் சில:

பதிவு:

ஜிஎஸ்டி பதிவுக்கான தொடக்க நிலையானது வடகிழக்கு இந்தியா + சிக்கிம், ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகியவற்றுக்கு ரூ. 10 இலட்சம் ஆகும் மற்றும், இந்தியாவின் மீதமுள்ள பகுதிகளுக்கு ரூ.20 இலட்சம் ஆகும். தோராயமாக 7-8 மில்லியன் வணிக நிறுவனங்களானது ஜிஎஸ்டி-யின்கீழ் பதிவு செய்யப்படலாம். ரூ 50 லட்சத்திற்கு கீழே வருவாய் கொண்ட சிறு டீலர்களுக்கு தொகுப்புத் திட்டத்தை (கம்போஸிஷன் ஸ்கீம்) தேர்வு செய்யும் வாய்ப்புள்ளது; அவர்கள் தங்கள் வருவாயில் ~1 to 4% வரி செலுத்தலாம்.

அருணாசலப் பிரதேசம், அசாம், ஜம்மு-காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட்

ஜிஎஸ்டி பதிவு செயல்முறை பற்றிய மேலும் விவரங்களுக்கு, தயவு செய்து இதனை பார்க்கவும்-

Registered Dealer? Learn How to Transition to GST

How to Apply for a New GST Registration

How to Amend, Cancel, or Revoke GST Registration

இரட்டை ஜிஎஸ்டி (பொருட்கள் மற்றும் சேவைகள் வரி):

இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பை கருத்தில் கொண்டு, இரட்டை ஜிஎஸ்டி என்பது பொருத்தமான மாதிரியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இதில், பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்கலுக்காக மத்திய, மாநில அரசுகளால் கூட்டாக வரி விதிக்கப்படும்.

இரட்டை ஜிஎஸ்டி-யின் கூறுகள்:

  • சிஜிஎஸ்டி: மத்திய ஜிஎஸ்டி
  • எஸ்ஜிஎஸ்டி: மாநில ஜிஎஸ்டி
  • ஐஜிஎஸ்டி: ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி

மாநிலங்களுக்கு உள்ளே நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு, சிஜிஎஸ்டி+எஸ்ஜிஎஸ்டி பொருந்தும், மாநிலங்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகளுக்கு, ஐஜிஎஸ்டி பொருந்தும்.

ஜிஎஸ்டி விகிதங்கள்:

கீழுள்ளவாறு விகிதங்களின் 3 தொகுப்புகள் இருக்கலாம்:

   • மெரிட் விகிதம்
   • ஸ்டாண்டர்ட் விகிதம்
   • டீ-மெரிட் விகிதம்

மேலும் விலைமதிப்பற்ற உலோகங்களுக்கு குறைந்த விகிதமும், அத்தியாவசிய பொருட்களுக்கு பூஜ்ஜிய விகிதமும் இருக்க வாய்ப்பு உள்ளது.

உள்ளடக்கப்பட்ட வரிகள்:

ஜிஎஸ்டி-யின் கீழ் சேர்க்கப்படவுள்ள வரிகள்:

ஜிஎஸ்டியில் சேர்க்கப்பட்டவைஜிஎஸ்டியில் சேர்க்கப்படாதவை
மத்திய கலால்அடிப்படை சுங்கவரி
சேவை வரிமனித நுகர்வுக்கான மது
வாட்/ விற்பனை வரிபெட்ரோல்/ டீசல் / வானூர்தி எரிபொருள் / இயற்கை எரிவாயு*
பொழுதுபோக்கு வரிமுத்திரைத்தாள் வரி மற்றும் சொத்து வரி
ஆடம்பர வரிசுங்கச் சாவடி வரி
லாட்டரி மீதான வரிகள்மின்சார வரி
ஆக்ட்ராய் மற்றும் நுழைவு வரி
கொள்முதல் வரி

 

* பிற்காலத்தில் அறிவிக்கப்படும் தேதியில் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும்

ஐடீசி பயன்பாடு:

வரி பொறுப்பை அமைப்பதற்காக உள்ளீட்டு வரி கிரெடிட்டை பெறுவதற்கான முறைகள் கீழுள்ளவாறு வரையறுக்கப்பட்டுள்ளது:

உள்ளீட்டு வரி கிரெடிட் எதன் பொறுப்புக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ளது
சிஜிஎஸ்டி (மத்திய ஜிஎஸ்டி)சிஜிஎஸ்டி மற்றும் ஐஜிஎஸ்டி (அந்த வரிசையில்)
எஸ்ஜிஎஸ்டி (மாநில ஜிஎஸ்டி)எஸ்ஜிஎஸ்டி மற்றும் ஐஜிஎஸ்டி (அந்த வரிசையில்)
ஐஜிஎஸ்டி (ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி)ஐஜிஎஸ்டி, சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி (அந்த வரிசையில்)

சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டி-ஐ ஒன்றின்மீது ஒன்றாக அமைக்க முடியாது என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

ஜிஎஸ்டி முறையில் வரி பொறுப்புத்தன்மைக்கு எதிராக உள்ளீட்டு வரி கிரெடிட்டை அமைப்பது எப்படி

தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு:

பொருட்கள் மற்றும் சேவை வரி நெட்வொர்க் அல்லது ஜிஎஸ்டிஎன் என்பது ஜிஎஸ்டி-யின் மின்-தாக்கல் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக, தகவல் தொழில்நுட்ப முதுகெலும்பு (பின்னணியில் இருந்து மற்றும் நேரடியாக) மற்றும் போர்ட்டல் ஆகியவற்றுக்கான பொது-தனியார் கூட்டின்கீழ் (தனியார் நிறுவனங்கள், மத்திய, மாநில அரசுகள் ஆகியோர் பங்குதாரர்கள்) இணைக்கப்பட்டுள்ள இலாப நோக்கில்லாத பிரிவு 25 / பகுதி 8 நிறுவனம் ஆகும். இது அனைத்து செயல்முறைகள், படிவங்கள், மற்றும் நாட்டில் நடக்கும் அனைத்து வர்த்தகம் குறித்த தரவுகள் ஆகியவற்றைக் கட்டுப்பாட்டிற்குள் கொள்ளவிருக்கும் ஒரு முகமையாக இருக்கும்.

ஜிஎஸ்டி கவுன்சில்:

ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்ற 60 நாட்களுக்குள் கவுன்சில் அமைக்கப்பட வேண்டும்; இதில் மாநிலங்களின் மூன்றில் 2 பங்கு பிரதிநிதித்துவமும், மத்திய அரசின் மூன்றில் 1 பங்கு பிரதிநிதித்துவமும் இருக்க வேண்டும். வரி விகிதங்கள், முரண்பாடுகளுக்கான தீர்வு, விலக்குகள் மற்றும் பல ஆகியவை தொடர்பான அனைத்து முடிவுகளையும் ஜிஎஸ்டி கவுன்சில் எடுக்கும். ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகளுக்கு (75% வாக்குகள்) மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பட வேண்டும்.

வணிக செயல்முறை

பதிவுசெய்தல்:

தற்போதுள்ள டீலர்கள் தானாகவே மாற்றப்படுவார்கள். அவர்களுக்கு பின்வரும் அமைப்பில் ஒரு 15 இலக்க நிரந்தர கணக்கு எண் அடிப்படையிலான ஜிஎஸ்டிஐஎன் கொடுக்கப்படும்.

மாநில குறியீடுநிரந்தர கணக்கு எண்நிறுவன குறியீடுகாலியிடம்சரிபார்ப்பு இலக்கம்
123456789101112131415

ஒரே மாநிலத்திற்குள் பல வணிக அமைப்புகளைக் கொண்டுள்ள வரி செலுத்துபவர்களுக்கு நிறுவனக் குறியீடு பொருந்தும்.

ரிட்டர்ன்கள்:

ஜிஎஸ்டி (பொருட்கள் மற்றும் சேவைகள் வரி) முறையானது பின்வரும் மாற்றங்களை அறிமுகப்படுத்துகிறது:

   • ஜிஎஸ்டி முறையின்படி, அவசியமான காலாண்டு அல்லது ஆண்டு ரிட்டர்ன்களுடன், அனைத்து வணிக அமைப்புகளும் மாதாந்திர ரிட்டர்ன்களை கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும். தற்பொழுது காலாண்டு அல்லது அரையாண்டில் ரிட்டர்ன்கள் (சேவை வரிக்கான ரிட்டர்ன் போன்றவை) தாக்கல் செய்யும் நிறுவனங்கள்கூட, இப்பொழுது ஒவ்வொரு மாதமும் ரிட்டர்ன்கள் தாக்கல் செய்ய வேண்டும்.
   • இப்பொழுதுள்ள 1 நிகழ்வுடன் ஒப்பிடும்பொழுது, ‘ஒரு மாதத்திற்கு 3 இணக்க நிகழ்வுகள்’ இனி இருக்கும். அதாவது, இப்பொழுது 1 ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்குப் பதிலாக, வணிக நிறுவனங்கள் இனி தாக்கல் படிவம் ஜிஎஸ்டிஆர்-1, படிவம் ஜிஎஸ்டிஆர்-2 மற்றும் படிவம் ஜிஎஸ்டிஆர்-3 (கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு) ஆகியவற்றின் தேவைக்கு இணங்க வேண்டியிருக்கும்.
   • தற்போதைய வாட் முறையில் அடுத்த மாதத்தின் 20ஆம் தேதி என்று இருப்பதுபோல், முதல் இணக்க நிகழ்வுக்கு (ஜிஎஸ்டிஆர்-1 படிவத்தை தாக்கல் செய்தல்) அடுத்த மாதத்தின் 10ஆம் தேதி என்பது கெடு தேதியாக இருக்கும்.
   • ரிட்டர்ன்களை காலாண்டு வாரியாக தாக்கல் செய்ய வேண்டும் என்பதாலும், விற்பனையானது முன்பைப்போல் மொத்தமாக இருந்தாலும், கொள்முதல் தொடர்பாக அந்த ரிட்டர்ன்களில் உள்ள விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பதாலும், தொகுப்புத் திட்டம் என்பது இனி ஒரு விருப்பமான வாய்ப்பாக இருக்க முடியாது. வணிக சங்கிலிக்கு உள்ளீட்டு கிரெடிட் கிடைக்காமல் இருப்பது இந்த திட்டத்தின் மற்றொரு பெரிய தடை ஆகும். இது பலதரப்பட்ட டீலர்களின் விற்பனை விலையை அதிகரிக்கும். அத்தகைய டீலர்களிடம் இருந்து தங்களின் கொள்முதல்களை வணிக நிறுவனங்கள் குறைத்துக்கொள்ளும் என்பது இதன் அர்த்தம் ஆகும்.

வழக்கமான டீலர்: மாதாந்திர தாக்கல் செய்தல்

   • படிவம் ஜிஎஸ்டிஆர்-1: அனைத்து விற்பனை விலைப்பட்டியல்களையும் பதிவேற்றுதல் (10ஆம் தேதிக்குள்)
   • படிவம் ஜிஎஸ்டிஆர் -2ஏ: சப்ளையரால் அளிக்கப்பட்டுள்ள படிவம் ஜிஎஸ்டிஆர்-1-ன் அடிப்படையில்,பெறுபவருக்கு கிடைக்கப்பெற்ற உள்வரும் பொருட்களின் தானாக-தயாரான விவரங்கள் (11ஆம் தேதியன்று)
   • படிவம் ஜிஎஸ்டிஆர் -2: படிவம் ஜிஎஸ்டிஆர் -2ஏ-ல் சேர்க்கைகள் (கிளைம்கள்) அல்லது மாறுதல்கள் ஆகியவை படிவம் ஜிஎஸ்டிஆர் -2-ல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்(15ஆம் தேதியன்று)
   • படிவம் ஜிஎஸ்டிஆர் -1ஏ: படிவம் ஜிஎஸ்டிஆர் -2-ல் பெறுபவரால் சேர்க்கப்பட்ட, திருத்தப்பட்ட அல்லது நீக்கப்பட்ட வெளிசெல்லும் பொருட்கள் குறித்த விவரங்கள், சப்ளையருக்கு அளிக்கப்பட வேண்டும் (20ஆம் தேதியன்று)
   • படிவம் ஜிஎஸ்டிஆர் -3: தானாக நிரப்பப்பட்ட ஜிஎஸ்டிஆர் -3 20ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்/li>
   • படிவம் ஜிஎஸ்டிஆர் -9: வருடாந்திர ரிட்டர்ன் – பெறப்பட்ட ஐடீசி மற்றும் உள்ளூர், மாநிலத்திற்கு இடையேயான மற்றும் இறக்குமதி/ ஏற்றுமதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி-யின் விவரங்களைக் குறிப்பிடவும். (அடுத்த நிதியாண்டின் டிசம்பர் 31-க்குள் )

தொகுப்பு (கம்போஸிஷன்) டீலர்: காலாண்டு தாக்கல் செய்தல்

   • படிவம் ஜிஎஸ்டிஆர் -4ஏ: சப்ளையரால் அளிக்கப்பட்டுள்ள படிவம் ஜிஎஸ்டிஆர்-1-ன் அடிப்படையில், தொகுப்பு திட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ள பெறுபவருக்கு கிடைக்கப்பெற்ற உள்வரும் பொருட்களின் விவரங்கள் (காலாண்டு ரீதியாக).
   • படிவம் ஜிஎஸ்டிஆர் -4: வெளிசெல்லும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளைக் குறிப்பிடவும். இதில் படிவம் ஜிஎஸ்டிஆர்-4ஏ-ன் தானாக நிரப்பப்பட்ட விவரங்கள், செலுத்தவேண்டிய வரி மற்றும் வரி செலுத்துதல் (காலாண்டு முடிந்த அடுத்த மாதத்தின் 18-ஆம் தேதிக்குள்) ஆகியவை உள்ளடங்கியவை ஆகும்
   • படிவம் ஜிஎஸ்டிஆர் -9A: வரி செலுத்திய விவரங்களுடன் காலாண்டு தாக்கல்களின் தொகுப்பு விவரங்களை குறிப்பிடவும் (அடுத்த நிதியாண்டின் டிசம்பர் 31-க்குள் ).

ஜிஎஸ்டி ரிட்டர்னஸ் பற்றிய மேலும் விவரங்களுக்கு இந்த வலைப்பதிவை அணுகவும் –
What are the Types of Returns Under GST?

How to File Your GST Returns

பணம் செலுத்தல்கள்:

   • ரூ. 10,000-க்கு மேற்பட்ட தொகைக்கு மின்னணு முறையில் பணம் செலுத்துதல் கட்டாயம்
   • ஆன்லைன்: நெஃப்ட்/ஆர்டீஜிஎஸ்/ஐஎம்பீஎஸ்
   • ஆஃப்லைன்: பணம்/காசோலை/வரைவோலை/ நெஃப்ட்/ஆர்டீஜிஎஸ் முதலியவை.
   • சலான் தானாக உருவாக்கப்படும், அதை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

பணம் திரும்பப்பெறுதல்:

பணம் திரும்ப அளிக்கும் செயல்முறையானது தானியங்கி முறையாகும். பொருந்தும் சூழல்களுக்கு,விண்ணப்பிக்கப்பட்டவுடன் எந்தவித விசாரணையும் இல்லாமல் 90% தொகையானது தற்காலிக அடிப்படையில் திரும்ப அளிக்கப்படும்.

முக்கிய தாக்கம் செலுத்தும் பகுதிகள்

வணிகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் முக்கிய பகுதிகளாக இருப்பவை:

   • தொழில்நுட்பத்தை பின்பற்றுவது அவசியம்: அனைத்து செயல்முறைகளும் ஆன்லைன் முறையில் இருப்பதால், ரிட்டர்ன் தாக்கல் செய்வது நுண்ணிய இயல்புடையது (விலைப்பட்டியல் ரீதியாக) என்பதாலும், வரி செலுத்துபவர் திறனையும், பயனையும் உறுதிசெய்ய பொருத்தமான தொழில்நுட்பத்தை தேர்வு செய்ய வேண்டும். முன்புபோல இல்லாமல், காகிதத்தில் தாக்கல் செய்வது ஒரு தேர்வாக இருக்காது.
   • அனைத்து-இந்திய சந்தையை அணுகுதல்: மாநிலத்துக்கு உள்ளே மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான வணிகங்களானது வரி- நடுநிலை கொண்டதாக இருக்கும். மேலும், இணங்குதலுக்கான எந்தவித தடையும் இல்லாமல் விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான சந்தையாக இந்தியா முழுவதும் திறக்கப்படும்.
   • பணப் புழக்கம் திட்டமிடல்: ரிட்டர்ன் தாக்கல் செய்யும்பொழுது, கொள்முதல் தொடர்பான உள்ளீட்டு வரி கிரெடிட் என்பது தற்காலிக அடிப்படையில் வழங்கப்படும். அதற்குரிய விற்பனை பதிவேற்றப்பட்டு, சப்ளையரால் பொறுப்பு நிறைவேற்றப்பட்டால் மட்டுமே அது உறுதிசெய்யப்படும். எனவே,பணப்புழக்கமானது பொருந்தாத சூழலில் தாக்கம் செலுத்தும். ஏதாவது பொருள் வரிவிதிக்கக்கூடியதாக இருந்தால், கிளைப் பரிமாற்றங்களால் வரிப் பொறுப்பு ஏற்பட்டு பணம் முடக்கப்படுவதற்கு வழிவகுக்கும். ஜிஎஸ்டி என்பது பெறப்பட்ட முன்பணத்திற்கும் பொருந்தும் மற்றும் திருப்புதல் கட்டணமானது பொருட்களுக்கும் நீட்டிக்கப்படும். வணிகத்தை எப்படி சிறப்பாக மேற்கொள்வது என வணிக நிறுவனங்கள் சிந்திக்க வேண்டும்.
   • எளிதான இணக்கம்: ஜிஎஸ்டி-யின்படி வணிக நிறுவனங்கள் தரவுகளை நுணுக்கமாக (விலைப்பட்டியல்-ரீதியாக) அளிக்க வேண்டும், அவை ஹெச்.எஸ்.என் குறியீட்டுடன் தெரிவிக்கப்பட வேண்டும். தற்போதுள்ள மறைமுக வரிகளை நீக்குவதாலும், தொழில்நுட்பத்தின் உதவியாலும், ஜிஎஸ்டி-யுடன் இணங்குவது எளிதாகப் போகிறது என்பது நல்ல செய்தியாகும். ஜிஎஸ்டி-யின் மூலமாக, தங்களின் ரிட்டர்ன்களை பதிவேற்றாத வணிகர்களை அவர்களின் உள்ளீட்டு கிரெடிட்டை குறைப்பதன்மூலம், வணிகர்களைப் பின்தொடரும் அரசின் சுமை குறையப் போகிறது.
   • கிளை/ வழங்கல் சங்கிலியை மறு-நிர்மாணம் செய்தல்:வரிச் சலுகைகள் (சலுகையில் சிஎஸ்டி விகிதம் பெற),தங்களின் சேமிப்புக்கிடங்குகள் மற்றும் கிளை நெட்வொர்க்குகளை மறுதிட்டமிட வேண்டிய தேவை மற்றும் மாநில வாரியாக அல்லாமல் சந்தைக்கு அருகில் அவற்றை அமைக்க வேண்டிய தேவை ஆகிய காரணங்களால் வணிக நிறுவனங்களானது பல மாநிலங்களில் கிளைபரப்பி இருக்கின்றன.
   • விலை நிர்ணயம் செய்யும் தந்திரம்: அடுக்குவீழ்ச்சி விளைவை நீக்குவதால், பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. எனவே, கொள்முதல் மற்றும் விற்பனையில் புதிய யதார்த்தத்தின் அடிப்படையில் வணிக நிறுவனங்கள் ஒழுங்கமைத்துக்கொள்ள வேண்டும்.
   • ஒப்பந்தங்கள் குறித்து மறு-பேச்சுவார்த்தை: பணி ஒப்பந்தங்கள் மற்றும் பிற பல-ஆண்டு விநியோக டீல்கள் ஆகியவை ஜிஎஸ்டி விகிதங்களுக்கு ஏற்ப மறு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். வரியை முன்பே செலுத்த வேண்டியிருப்பதால், அத்தகைய சூழலை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

அடுத்து என்ன?

மாநிலங்களவையில் 122வது அரசியலமைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பின்வருபவை அடுத்தகட்ட உடனடி நடவடிக்கைகள் ஆகும்:

   • இது ஒரு அரசியல் சட்ட திருத்தம் என்பதால், குறைந்தபட்சம் 15 மாநிலத்தின் சட்டமன்றங்கள் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
   • மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் மற்றும் ஒப்புதல் பெற்ற தேதியில் இருந்து அடுத்த 60 நாட்களுக்குள் ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட வேண்டும்.
   • பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில், சிஜிஎஸ்டி மற்றும் ஐஜிஎஸ்டி மசோதாக்களை (பண மசோதாவாக இருக்கலாம்) நிறைவேற்றுதல் மற்றும் எஸ்ஜிஎஸ்டி மசோதாவை 29 மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றுதல்.
   • ஜிஎஸ்டி வலையமைப்பை ஜனவரி 2017-க்குள் பரவச்செய்தல்.

இந்தப் பணி கடினமானதாகத் தோன்றலாம், ஆனால் அடையக்கூடியவையே ஆகும்.

நம் அனைவருக்கும் அடுத்தது என்ன

ஏப்ரல் 1, 2017 என்பது ஜிஎஸ்டி (பொருட்கள் மற்றும் சேவைகள் வரி) தொடங்கப்படுவதற்கு வாய்ப்புள்ள தேதியாக இருப்பதால், இது தொடர்பாக வரிசெலுத்துபவர்கள் பல்வேறு தயார்நிலை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு தெளிவான ஆரம்பநிலை மீதத் தொகையைக் கொண்டிருப்பது மாற்றத்துக்கான சாவியாக இருக்கும்.

   1. தற்போதைய முறையின் (சென்வாட், வாட்) உள்ளீட்டு வரி கிரெடிட்டானது, (ரிட்டர்ன்கள்/உள்ளீடுகள்/ மூலதனப் பொருட்கள் ஆகியவைகளில்) ஜிஎஸ்டிக்கு (சிஜிஎஸ்டி,எஸ்ஜிஎஸ்டி) எடுத்துக்கொண்டு செல்லப்படும். எனவே, புத்தகங்களை மேம்படுத்தி வைத்துக்கொள்வது முக்கியமாகும். இது மதிப்பீட்டின்பொழுது எண் மட்டுமே எடுக்கப்படுவதால், அந்த நேரத்தில் நிறுவனங்களுக்கு உதவும். மேலும், சோதனை/ தெளிவானவை கிடைக்கவில்லையெனில், வணிக நிறுவனங்களானது எண்ணற்ற நிதி சார்ந்த மற்றும் நிதி சாராத துன்பங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
   2. ஈஆர்பீ-யில் உள்ள அனைத்து அக்கவுண்டிங் மற்றும் பார்ட்டி மாஸ்டர்கள், ஜிஎஸ்டிக்கு பிரச்சினையில்லாமல் மாறுவதற்கு தேவையான வகையில் நிரப்பப்பட வேண்டிய சட்டப்பூர்வ விவரங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

சட்டரீதியான மாற்றங்களைப் புரிந்துகொண்டு, பின்பற்றுவதில் டேலி எப்பொழுதும் ஒரு முன்னோடியாக இருந்து வணிக நிறுவனங்களுக்கு உதவுகிறது. டேலி ஈஆர்பீ 9-யில் உள்ள எளிதாக்கப்பட்ட தீர்வானது எளிதாக மாறுவதையும், ஜிஎஸ்டி-யின் சட்டப்பூர்வமான தேவைகளை எளிதாகக் கையாள்வதையும் உறுதி செய்கிறது.

பொதுவாக கிடைக்கப்பெற்ற தகவல்களில் அடிப்படையில் இந்தக் குறிப்பு தயார் செய்யப்பட்டுள்ளது,எனினும் உண்மையான ஜிஎஸ்டி விகிதங்கள் மற்றும் வணிக செயல்முறைகளானது அறிமுகப்படுத்தப்படும் நேரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உள்ளாகலாம்.

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

333,827 total views, 222 views today

Santosh HR

Author: Santosh HR

Product leader and GST expert with keen focus on the ever changing indirect taxation landscape of India.