ஜிஎஸ்டியின் கீழ், சில நபர்கள் தங்கள் வருவாயைப் பொருட்படுத்தாமல், கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இதன் பொருள் என்னவென்றால், அத்தகைய நபர்களுக்கு அவர்களின் ஆண்டு வருமானம் சிறப்பு வகை மாநிலங்களுக்கு ரூ. 10 லட்சம் மற்றும் இந்தியாவின் மீதமுள்ள மாநிலங்களுக்கு ரூ. 20 லட்சம் தொடக்க வரம்பை தாண்டாமல் இருந்தாலும் அவர்கள் பதிவு செய்ய வேண்டும். இந்த நபர்கள்:

நபர்கள் செயல்பாகளின் தன்மை
மாநிலங்களுக்கு இடையே வழங்கல்களை மேற்கொள்ளும் நபர்கள் மாநிலங்களுக்கு இடையே வெளிநோக்கிய வழங்களை மேற்கொள்ளும் அனைத்து நபர்களும் கட்டாயம் பதி செய்ய வேண்டும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளும் மாநிலங்களுக்கு இடையேயான வழங்கல்களாக கருதப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
பிற வரி செலுத்தக்கூடிய நபர்களின் சார்பாக வரி விதிப்புரிய வழங்கல்களை மேற்கொள்ளும் நபர்கள் எடுத்துக்காட்டு: பிற வரி செலுத்தக்கூடிய நபர்களின் சார்பாக வரி விதிப்புரிய வழங்கல்களை மேற்கொள்ளும் ஏஜெண்ட்கள், தரகர்கள், டீலர்கள் போன்றோர்.
பின்னோக்கிய கட்டணம் மீதான வரி செலுத்தும் பொறுப்புள்ள நபர்கள் பற்றி மேலும் அறிய இந்த வலைப்பதிவை வாசிக்கவும் பின்னோக்கிய கட்டணம் பொருந்தும் வழங்கல்கள்
முன்னேற்பாடில்லாத வரிக்குட்பட்ட நபர்கள் இவர்கள் ஒரு நிலையான வணிக இடம் இல்லாத ஒரு மாநிலத்தில் எப்போதாவது வரி விதிக்கக்கூடிய பரிவர்த்தனைகளைச் செய்யும் நபர்கள் ஆவார்கள். எடுத்துக்காட்டாக, கண்காட்சிகளில் உள்ள விற்பனையாளர்கள், வர்த்தகக் கண்காட்சிகள், சர்க்கஸ் வணிகம் முதலியன.

பற்றி மேலும் வாசிக்கவும் முன்னேற்பாடில்லாத வரிக்குட்பட்ட நபர்களைப்

குடியிருக்காத வரிக்குட்பட்ட நபர்கள் இவர்கள் இந்தியாவிற்கு வெளியில் வசிக்கும் ஒரு நிலையான வணிக இடம் அல்லது வசிப்பிடத்தை கொண்டுள்ள மற்றும் அவ்வப்போது இந்தியாவில் வரிக்குரிய பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் நபர்கள் ஆவார்கள்.

பற்றி மேலும் வாசிக்கவும் குடியிருக்காத வரிக்குட்பட்ட நபர்கள்

உள்ளீடு சேவை விநியோகிப்பாளர்கள் ஒரு உள்ளீட்டு சேவை விநியோகிப்பாளர் என்பது சேவைகளின் உள்நோக்கிய வழங்கலுக்கான வரி விலைவிவரப் பட்டியல்களைப் பெறும் மற்றும் ஒரே PAN (பேன் எண்) –ன் கீழ் பதிவு செய்துள்ள அலுவலகங்களுக்கு இந்த விலைவிவர பட்டியல்கள் மீதான உள்ளீட்டு பலனை விநியோகிக்கும் சரக்குகள் மற்றும் / அல்லது சேவைகளின் ஒரு வழங்குநரின் ஒரு அலுவலகமாகும்.

பற்றி மேலும் வாசிக்கவும் உள்ளீடு சேவை விநியோகிப்பாளர்கள்

TDS கழிக்க வேண்டிய பொறுப்புள்ள நபர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் துறைகள் அல்லது நிறுவனங்கள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் ஆகியவை உள்நோக்கிய வழங்கல்கள் மீது டீடிஎஸ்-ஐ கழிக்க வேண்டியிருக்கும்.
டிசிஎஸ் விதிகள் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், டிசிஎஸ் விதிகள் பொருந்தும் வரை இந்த நபர்களுக்கு கட்டாய பதிவு இல்லை.
மின்-வர்த்தக (ஈ- காமர்ஸ்) ஆபரேட்டர்கள் மூலம் வழங்கல்களை மேற்கொள்ளும் நபர்கள் மின்-வர்த்தக (ஈ- காமர்ஸ்) ஆப்பரேட்டர்கள் மூலம் வழங்கல்களை மேற்கொள்ளும் அனைத்து நபர்களும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
டிசிஎஸ் விதிகள் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், டிசிஎஸ் விதிகள் பொருந்தும் வரை இந்த நபர்களுக்கு கட்டாய பதிவு இல்லை.
மின்-வர்த்தக (ஈ- காமர்ஸ்) ஆபரேட்டர்கள் மின்-வர்த்தக (ஈ- காமர்ஸ்) ஆபரேட்டர் என்பவர் ஒரு டிஜிட்டல் அல்லது மின்னணு வசதி அல்லது மின்-வர்த்தகத்திற்கான தளத்தை சொந்தமாக கொண்டுள்ள, செயல்படுத்தும் அல்லது நிர்வகிக்கும் ஒரு நபர் ஆவார்.
டிசிஎஸ் விதிகள் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், டிசிஎஸ் விதிகள் பொருந்தும் வரை இந்த நபர்களுக்கு கட்டாய பதிவு இல்லை.
இந்தியாவிற்கு வெளியே உள்ள ஒரு இடத்திலிருந்து இந்தியாவில் உள்ள ஒரு நபருக்கு ஆன்லைனில் தகவல் வழங்கும் மற்றும் தகவல் அணுகல் அல்லது திரும்பப் பெறும் சேவைகளை வழங்கும் நபர்கள் உதாரணமாக: இந்தியாவிற்கு வெளியில் உள்ள ஒரு இடத்திலிருந்து இந்தியாவில் உள்ள ஒரு நபருக்கு, மின் புத்தகங்கள், கிளவுட் சேவைகள், மென்பொருளை பதிவிறக்கம் செய்த்ல், ஒரு வலைத்தளத்தின் விளம்பரம் செய்தல் இடம் போன்றவற்றை வழங்கும் நபர்கள்.

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

159,062 total views, 13 views today